Thursday, August 01, 2024

ராயன் (2024) - சினிமா விமர்சனம் ( ஆக்சன் வயலன்ஸ் மசாலா ) 18+

                        

 


ராயன் (2024) - சினிமா விமர்சனம் ( ஆக்சன் வயலன்ஸ் மசாலா ) 18+
--
முன்னணி ஹீரோக்களின் 50 வது பட,ம் யாருக்கெல்லாம் வெற்றியைக்கொடுத்தது ? யாருக்கெல்லாம் தோல்வியைக்கொடுத்தது? என்பதைப்பார்ப்போம் எம் ஜி ஆர் -ன் 50 வது படம் நல்லவன் வாழ்வான் (1961) சுமார் , சிவாஜி யின் சபாஷ் மீனா ஹிட் , ரஜினியின் நான் வாழ வைப்பேன் மீடியம் கமல் -ன் மூன்று முடிச்சு அதிரி புதிரி ஹிட் . (கமல் கெஸ்ட் ரோல் )கேப்டனின் நீதியின் மறுபக்கம் ஹிட் .சரத் குமாரின் வேடன் சுமார் , அஜித்தின் மங்காத்தா மெகா ஹிட் , விஜய் -ன் சுறா அட்டர் ஃபிளாப் , விக்ரம் -ன் ஐ மீடியம் ஹிட் , மாதவன் -ன் வேட்டை சுமார் , விஜய் சேதுபதியின் மகாராஜா மெகா ஹிட்
இயக்குநர் ஆக தனுஷ் அவதாரம் எடுத்த முதல் படமான பவர் பாண்டி (2017) ஹிட் ஆனதால் அவருக்கு இரண்டாவது படம் எடுக்கும் தைரியம் வந்ததில் ஆச்சரியம் இல்லை .வெற்றி மாறன் , செல்வராகவன் ஆகிய இயக்குநனர்களிடம் தான் கற்ற வித்தையை இறக்கி உள்ளார்
இந்தப்படத்தின் பிரமோ வில் இயக்குனர் செல்வராகவன் கொடுத்த பில்டப் தான் படத்தைப்பார்க்க வைத்தது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனுக்கு 2 தம்பிகள் , ஒரு தங்கை , பெற்றோர் இல்லை . அவர்கள் விபத்தில் இறந்தார்களா? வேண்டும் என்றே விட்டு விட்டுப்போனார்களா? அல்லது வேண்டாம் என விட்டு விட்டார்களா? தெரியாது .
நாயகன் ஒரு ரோட்டோரக்கடை , ரெஸ்ட்டாரண்ட் மாதிரி நடத்துகிறார். தம்பிகளில் ஒருவன் தறுதலை . ஒருவன் காலேஜ் ஸ்டூடண்ட்
அந்த ஏரியாவில் இரு கேங்க்ஸ்டர்கள் இருக்கிறார்கள் . இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி. நாயகனின் தறுதலை தம்பி ஒரு கேங்க்ஸ்டரின் மகனுடன் வம்பு வளர்த்தி ஒரு பிரச்சனையில் சிக்குகிறான் . தம்பியைக்காப்பாற்ற நாயகன் ஒரு கேங்க்ஸ்டரை போட்டுத்தள்ளுகிறான் .
இன்னொரு கேங்க்ஸ்டர் இப்போது தனக்கு எதிரி யாரும் இல்லை என நிம்மதியாக இருக்கும்போது நாயகன் தான் கொலையாளி என்பது தெரியவர தன்னுடன் கை கோர்க்குமாறு அழைப்பு விடுக்கிறான். நாயகன் மறுக்கவே மோதல் .
நாயகனின் தங்கைக்கு விடிந்தால் திருமணம் . இரவில் நடக்கும் சில சம்பவங்கள் தான் நாயகனின் வாழ்க்கையைப்புரட்டிப்போடுகிறது . அவை என்ன ? என்பதுதான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக தென்னக ப்ரூஸ்லீ தனுஷ் . ஜெயிலர் ரஜினியின் பாதிப்பு பல இடங்களில் தெரிகிறது . அதிக வசனம் பேசாமல் உடல் மொழி மூலம் மட்டுமே மிரட்டும் கேரக்டர். அருமையாகச்செய்திருக்கிறார்
தம்பிகளாக சந்தீப் கிசன் , காளிதாஸ் ஜெயராம் நடித்திருந்தாலும் சந்தீப் கிசன் க்கு அதிக வாய்ப்பு
தங்கையாக துஷாரா விஜயன் அருமையான குணச்சித்திர நடிப்பு
சந்தீப் கிசன் காதலியாக அபர்ணா பாலமுரளி அதிக வாய்ப்பில்லை என்றாலும் வந்தவரை ஓக்கே
வில்லன் ஆக எஸ் ஜே சூர்யா வழக்கம் போல ஆர்ப்பாட்டம் ஆன நடிப்பு . ஆனாலும் அவருக்கான போர்சன் குறைவு
இன்னொரு கேங்க்ஸ்டர் ஆக வரும் பருத்தி வீரன் சித்தப்புன் சரவணன் சில காட்சிகளே வந்தாலும் முத்திரை பதிக்கிறார்
போலீஸ் ஆஃபீசர் ஆக பிரகாஷ் ராஜ் , நாயகனின் கார்டியன் ஆக செல்வராகவன் , வில்லனின் மனைவி ஆக வரலட்சுமி சரத் குமார் ஆகியோர் குறை சொல்ல முடியாத பங்களிப்பை வழங்கி உள்ளனர்
ஏ ஆர் ரஹ்மான் தான் இசை . இரண்டு பாடல்கள் செம ஹிட்டு . பிஜிஎம்மில் பின்னிப்பெடல் எடுக்கிறார். படத்தைத்தாங்கி நிற்பதே பிஜிஎம் தான்
ஒளிப்பதிவு ஓம் பிரமாஷ் கச்சிதம் , எடிட்டிங்க் ஜி கே பிரசன்னா. 145 நிமிடங்கள் ஓடுகிறது . முதல் பாதி குட் , பின் பாதி ஒரே ரத்தம் , அடிதடி , வெட்டு குத்து , வன்முறை
சபாஷ் டைரக்டர்
1 ரஜினி நடித்த தர்மதுரை (1991) , படிக்காதவன் (1985)ஆகிய படங்களில் இருந்து முதல் பாதி கதையை ரெடி செய்தது , ரஜினி யின் ஜெயிலர் , பாட்ஷா , சிவாஜி யின் தங்கப்பதக்கம் , சத்யராஜின் வால்டர் வெற்றி வேல் ஆகிய படங்களில் இருந்து பின் பாதி கதையை ரெடி செய்தது ,
2 நீ இருக்கறியே ஓலைக்கொட்டாயா பாட்டு சீனில் அபர்ணா பால முரளியின் செமயான குத்தாட்டம் , செம ஹிட் ஆன பாட்டு மெட்டு
3 நாயகன் , வில்லன் முதன் முதலாக சந்திக்கும் காட்சியில் குரலை உயர்த்தாமல் நாயகன் வில்லனை மிரட்டும் மாஸ் சீன்
4 இண்ட்டர்வெல் பிளாக் சீன்
ரசித்த வசனங்கள்
1 என்னப்பா? ராயன் . என்ன சொன்னே? அவன் கிட்டே? டக்னு கேசை வாபஸ் வாங்கிட்டான் ?
கெஞ்சிக்கேட்டேன் சார்
யாரு ? நீ ? கெஞ்சிக்கேட்டே? நம்பிட்டேன்
2 அரசியல் , ரவுடிசம் இதெல்லாம் பெரிய சுழல், அதில் எல்லாம் நாம சிக்கிக்காம இருப்பதே நல்லது
3 அண்ணா , எனக்கு மாப்ளை பார்க்கறதுதான் பார்க்கறே. நல்லா வாட்டசாட்டமான ஆளா பாரு. பத்துப்பேரை அடிச்சுப்போடறவனா இருக்கனும், சும்மா அல்ப சொல்பையான சப்பையான ஆளைப்பார்த்துடாத
4 அங்கே தான் எனக்கு நிம்மதி கிடைக்குது , அதனால தான் அங்கே அடிக்கடி போறேன்
அப்போ நானும் உன்னை மாதிரியே நிம்மதி கிடைக்கும் இடத்துக்குப்போகவா?
5 நான் உனக்காக எவ்வளவோ பண்ணி இருக்கேன், அதுக்காக என்னை உயிரோட விட்டுடக்க்கூடாதா?
என் இடத்துல நீ இருந்தா என்ன செய்வே?
6 நீ மட்டும் என் ரத்தமா இல்லாம இருந்திருந்தா அவங்களோட சேர்த்து உன்னையும் போட்டிருப்பேன்
7 துரையை நீ தான் போட்டுத்தள்ளுனியா?
நோ
என் கிட்டே வேலைக்கு சேர்ந்துக்கோ
நீங்க சொன்னபடி துரையைப்போட்டுத்தள்ளுனது நான் தான் என்பது உண்மையா இருந்தா அவனை முடிச்ச மாதிரி உங்களை போட்டுத்தள்ள எனக்கு எவ்ளோ நேரம் ஆகும் ? ஆனா நான் அபப்டி செய்ய மாட்டேன்
8 அண்ணே , ஒண்ணு கேட்கவா? ஏன் எப்போப்பாரு மொட்டைத்தலையோட சுத்திட்டு இருக்கே?
ஸ்டைலு
9 காட்டுல வலிமையானவை புலி , சிங்கம் தான் என்றாலும் ஆபத்தானது ஓநாய் தான்
10 அவன் ஒரு பெண்ணை ரேப் பண்ணி இருக்கான், தப்புத்தானே?
அதை ரெண்டு சம்சாரம் வெச்சிருக்கற நீ பேசலாமா?
11 உன் உயிர் இப்போப்போகப்போகுது , ஏன் சிரிக்கறே?
உன்னை ராயன் என்ன எல்லாம் செய்யப்போறான்னு நினைச்சா சிரிப்பா வருது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகனின் பெற்றோருக்கு என்ன நடந்தது என்பதை டீடெய்லாகக்காட்டவே இல்லை .பிறந்து சில மாதங்களே ஆன கைக்குழந்தையை விட்டு விட்டு ஊருக்கு ஒரு அம்மா போகுமா?
2 வேலை தேடும் ஒரு இளைஞன் தன் படிப்பு , அனுபவம், திறமை சொல்லி வேலை கேட்பானா? எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா, செலவு இருக்கு , வேலை வேணும் என்று கேட்பானா? பிச்சை எடுப்பது போல இருக்கு
3 வேலை வெட்டி இல்லாதவனை ஒரு பெண் லவ் பண்ணுவது பெரிய விஷயம் இல்லை , ஆனால் பொறுப்பே இல்லாமல், வருமானத்துக்கு வழியே இல்லாதவனை நம்பி திருமணத்துக்கு முன்பே உறவு வைத்து குழந்தை பெற்றுக்கொள்ளும் தைரியம் ஒரு பெண்ணுக்கு வருமா?
4 நாயகனுக்கும் , வில்லனுக்கும் இடையே இவ்ளோ பகை பாராட்டும் அளவு எதுவுமே நடக்கவில்லை . வலு இல்லாத பகை உயிரைக்காவு வாங்கும் அளவு செல்வதை நம்ப முடியவில்லை
5 ஒரு கேங்க்ஸ்டர் ஆன சரவணன் சேரில் அமர்ந்திருக்க அவன் கண் முன் நாயகன் வில்லனின் அடியாட்களை வரிசையாகக்கொன்று போட்டுக்கொண்டே இருக்கிறான். அதை என்னமோ ரோடு ஷோ பார்ப்பது போல வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் வில்லன் 10 நிமிசம் கழித்து என்னை உயிரோட விட்டுடு என்கிறான் . முதல்லியே ஓடி இருக்கலாமே? முயற்சிக்கவே இல்லை
6 பின் பாதி திரைக்கதை ஒட்டவே இல்லை . வில்லனை துரத்தாமல் அண்ணன் , தம்பிகள் அடித்துக்கொள்வதும், தங்கையே அண்ணனைக்கொல்வதும் சகிக்கவில்லை
7 நாயகனின் தம்பி வயிற்றில் கத்திக்குத்து வாங்கிப்படுத்திருக்க ஹாஸ்பிடல் போகாமல் என்னமோ தங்கச்சி முடி சிங்கிள் போடுவது போல ஊசியில் தையல் போடுவது காமெடி
8 படம் முழுக்க நாயகன் உம்மணாம்முகமாக இருப்பது , அவருக்கு ஜோடி இல்லாதது , காமெடி மருந்துக்குக்கூட இல்லாதது கமர்ஷியல் படத்தின் பலவீனங்கள்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- 18+ ஓவர் வன்முறை , சிறுவர் சிறுமியர் , கர்ப்பிணிப்பெண்கள் , மென்மையான மனம் கொண்டோர் பார்க்கத்தகுதி அற்ற ரத்தக்களறிப்படம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - தனுஷ் ரசிகர்கள் , ஏ ஆர் ரஹ்மான் ரசிகர்கள் பார்க்கலாம் . ஆனந்த விகடன் மார்க் ( யூகம் ) 41 , குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே . ரேட்டிங்க் 2.5 / 5
விகடன் ஆக்சுவல் மார்க் - 42
சென்னிமலை சி.பி. செந்தில்குமார்,


ராயன்
Theatrical release poster
இயக்கம்தனுஷ்
தயாரிப்புகலாநிதி மாறன்
கதைதனுஷ்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்பு
ஒளிப்பதிவுஓம் பிரகாஷ்
படத்தொகுப்புபிரசன்னா ஜி. கே.
கலையகம்சன் படங்கள்
விநியோகம்see below
வெளியீடு26 சூலை 2024
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு100 கோடி[1][2]

0 comments: