Wednesday, July 10, 2024

VIDYA VASULA AHAM (2024) -தெலுங்கு - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி மெலோ டிராமா) @ ஆஹா தமிழ்

     


    வித்யா மற்றும் வாசு இருவரின் ஈகோ  என்பது தான் டைட்டிலுக்கான அர்த்தம்  இப்படம்  17/5/2024  முதல் ஆஹா தமிழ் ஓடி டி தளத்தில் காணக்கிடைக்கிறது தியேட்டர்களில்   ரிலீஸ் ஆகாமல் நேரடியாக ஓடிடி யில் வெளியான படம் இது குஷி , நீதானே என் பொன் வசந்தம்  மாதிரி காதலர்களுக்கு இடையேயான ஈகோ கிளாஸ் பற்றி கதை பேசுகிறது 




  ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன் ஒரு எஞ்சினியர் , நாயகி ஐ டி டிபார்ட்மெண்ட்டில்  பனி புரிபவர் . இருவருக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்கிறது . இருவருக்கும் பொதுவான ஒற்றுமை குணங்கள் எதுவும் இல்லை . ஆனால் இருவருக்கும் ஈகோ  இருக்கிறது 


நாயகன்  தான்  பணி  புரியும் இடத்தில்  ஹையர் ஆபிசருடன்  உண்டான வாக்குவாதத்தில்  தன   பணியை  ராஜினாமா செய்கிறான் .இதனால் இவன்  கையில் காசு இல்லை .மனைவிக்கு  விஷயம் தெரியாது .பல விஷயங்களில் இவர்கள் இருவருக்கிடையே  கருத்து மோதல்  இருக்கிறது . அதனால்  எலியும், பூனையுமாக வாழ்கிறார்கள் 


 ஒரு நாள் இருவரின் பெற்றோரும் திடீர்  விசிட் அடிக்கிறார்கள் . அவர்கள் முன் இருவரும் ஒற்றுமையாக இருப்பது போல் நடிக்கிறார்கள் . அவர்கள் எப்படி பெற்றோரை  சமாளித்தார்கள் ? எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பது  மீதி திரைக்கதை 


நாயகன் ஆக ராகுல் விஜய் , நாயகி ஆக ஷிவானி ராஜசேகர் .இவர்  இதுதாண்டா போலீஸ் புகழ் டாகடர் ராஜசேகர்  + ஹலோ யார் பேசறது புகழ் ஜீவிதா  தம்பதியினரின் மகள் . இது இவரது 9 வது படம்


 நாயகன், நாயகி இருவருக்கும் சமமான ரோல் . படம் முழுக்க இவர்கள் இருவரும் தான்  ஆக்ரமிப்பு செய்கிறார்கள் 


 கல்யானி மாலிக்கின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்  பின்னணி  இசை அதை விட சுமார் ஒளி[பதிவு   அகில் வல்லூரி 

சத்யா கிடுதூறி   என்பவர் தன  எடிட்டிங்க் . இரண்டு மணி நேரம் படம் ஓடுகிறது 


 வெங்கடேஷ் ரவுது எழுதிய கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர்  மானிகாந்த்கெல்லி 


சபாஷ்  டைரக்டர்


  1  நாயகி நடத்தும் சுயம்வரப்படலம் கலகலப்பு . அவர் வரிசையாக ரிஜெக்ட் செய்யும்  மாப்பிள்ளைகள் கொடுக்கும் பதில்கள் , பெறும் பல்புகள் காமெடி ரகம் 


2  வசனம் பல இடங்களில் கவனிக்க வைக்கிறது . சில இடங்களில் ஒரே தத்துவ மழையாய் பொழிகிறது 



3  நாயகன் - நாயகி கெமிஸ்ட்ரி , இருவரது தரமான நடிப்பு 

ரசித்த  வசனங்கள் 


1   பரஸ்பரம் மரியாதை கொடுப்பதே திருமண வாழ்வின்  அடிப்படை 


2 நீ கர்ப்பமா இருக்கியா? எத்தனையாவது மாசம் ? 


 12வது 


 வாட் ?


 இபபோ  நடப்பது டிசம்பர் .அது 12 வது மாசம் தானே? 


3  ஒவ்வொருவருக்கும்   அவருக்கான காலம் வரும், ஆனால் அதற்காக அவர்  காத்திருக்க வேண்டும் 



4 ஹேப்பி ஒயிப் மீன்ஸ்  ஹேப்பி லைப் 


5  ஹெல்மட் போடலையா? 


 நான்தான் மேரேஜ் ஆனவன் ஆச்சே ? எதுக்கு ஹெல்மட்? 


6 நீ கோபமா இருக்கும்போதும் உன் முகத்த்துல காதலை நான் பார்த்தேன் 


7  ஒரே மாதிரி சிந்திக்கும் இருவர்  கல்யாணம் பண்ணிக்க முடியாது , வாழ்க்கை போர் அடிச்சிடும் 


8  நீ சரக்கு  அடிக்க மாட்டியா?  ஆச்சர்யமா இருக்கே? 


 ஆமா , லஞ்ச் டைம் இப்போ , அடிக்க மாட்டேன் 



9 பக்கத்துல இருக்கும் ஒரு ஊருக்குப்போனா  அதுக்குப்பேரு அவுட்டிங், ஹனிமூன் அல்ல 


10   கேர்ள் பிரண்ட்ஸ் இல்லைனு ஒருத்தன்   சொன்னா அது முழுப்பொய் .அது  உண்மையா  இருந்தாக்கூட  யாருமே ரசிக்காத  ஒரு ஆளை நான்  என் கல்யாணம் பண்ணிக்கணும் ? 




11  மேரேஜ் ஈஸ் காம்ப்ரமைஸ் ஆப் லைஃப் 


12  சரக்கு பார்ட்டியா  இருந்தாக்கூட ஓகே  ஆனா  அவனுக்கு சமைக்கத்தெரிஞ்சிரு க்கணும் 



13   மேரேஜ் அப்டின்னா  என்ன?  ஹனிமூன்க்கு  முன்  நடப்பது 


13   நாம தெரிஞ்சே  செய்யும்  தப்புக்குப்பேரு தான் கல்யாணம் 


14  நாம்  ஆரத்தி எடுத்து வரவேற்கும்  ஒரு  ஆபத்துதான்  கல்யாணம் 



15   சார் , மேரேஜ் பற்றி என்ன  நினைக்கறீங்க? 


நீ ரெடின்னா  நானும் ரெடி 


 சார் , கருத்துதான் கேட்டேன் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கதை , திரைக்கதையில் ஒரு  அழுத்தம் இல்லை , எனோ தானோ  என காட்சிகள் நகர்கின்றன  


2  நாயகன் வேலைக்குப் போகாமல் வீட்டில் வெட்டியாகத்தான்  இருக்கிறான் என்பது நாயகிக்குக்கடைசி வரை தெரியவே இல்லை , அது எப்படி ? சம்சாரம் என்றாலே கழுகு மாதிரி மூக்கில் வியர்க்குமே ?


2  மாதம் ஒரு  லட்சம் சம்பளம் வாங்கும் நாயகி சமையலுக்கு ஆள் கூட வைக்க மாட்டாரா? இருவரும் டைம் டேபிள் போட்டு சமைப்பது , அதுக்காக சண்டை இடுவது ஏன்? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஷிவானி ராஜசேகரை ரசிப்பவர்கள் , மெலோ டிராமாவை பார்க்க விரும்புகிறவர்கள் போகலாம் . ரேட்டிங்  2/ 5 


வித்யா வஸுல அஹம்
இயக்கம்மணிகாந்த் கெல்லி
எழுதியவர்வெங்கடேஷ் ரவுது
மூலம் திரைக்கதைமணிகாந்த் கெல்லி
உற்பத்திநவ்யா மகேஷ் எம்.
ரஞ்சித் குமார் கோடாலி
சந்தன கட்டா
நடிக்கிறார்கள்
ஒளிப்பதிவுஅகில் வல்லூரி
திருத்தியவர்சத்யா கிடுதூரி
இசைகல்யாணி மாலிக்
உற்பத்தி
நிறுவனங்கள்
எடர்னிட்டி என்டர்டெயின்மென்ட்
தன்விகா ஜாஷ்விகா கிரியேஷன்ஸ்
மூலம் விநியோகிக்கப்பட்டதுஆஹா
வெளிவரும் தேதி
  • 17 மே 2024
நேரம் இயங்கும்
103 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

0 comments: