நடிகை பார்வதி திருவோத்து , , ஊர்வசி இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கும் படம் . இருவரில் ஒருவருக்கு இந்த வருடத்தின் தேசிய விருது நிச்சயம் என பல மீடியாக்கள் விமர்சித்து இருக்கின்றன்
பூவே பூச்சூடவா (1985) தமிழில் வெளி வந்த முதல் பாட்டி - பேத்தி பாசக்கதை . அது போல மாமியார் - மருமகள் இருவருக்குமிடையேயான பாண்டிங்கை அற்புதமாகச்சொன்ன படம் இது க்ரைம் ட்ராமா மாதிரி கொண்டு போய் , இல்லீகல் ரொமாண்டிக் டிராமாவோ என எண்ண வைத்து கடைசியில் எமோஷனல் டிராமாவாக முடித்திருக்கிறார்கள்
இந்தப்படத்துக்கான மார்க்கெட்டிங்கை வித்தியாசமாக செய்திருந்தார்கள் . மோகன் லால் நடத்தும் பிக் பாஸ் செசன் 6 ல் ஊர்வசி போட்டியாளர்களை சந்தித்து படத்தைப்பற்றி சிலாகித்துப்பேசுவது போல விளம்பரப்படுத்தினார்கள் . மக்களின் மவுத்டாக் மூலமாகவே படம் அதிரி புதிரி ஹிட் ஆனது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி வேலைக்குப்போகாத வெட்டாஃபீஸ் ஒருவனைக்காதலிக்கிறாள் .அவன் ஒரு தண்டக்கடன். அதனால் பெற்றோர் அவர்கள் காதலுக்கு சம்மதிக்கவில்லை . அவர்கள் வேறு மாப்பிள்ளையைப்பேசி நாயகிக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்
நாயகி தன் கணவனோடு வேண்டா வெறுப்பாக வேறு வழி இல்லாமல் வாழ்கிறாள் . திடீர் என கணவன் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுகிறான். நாயகி , மற்றும், நாயகியின் மாமியார் இருவரும் அவனுக்குப்பணி விடை செய்கிறார்கள்
இப்போது நாயகிக்கு முன்னாள் காதலன் உடன் மீண்டும் தொடர்பு ஏற்படுகிறது. கர்ப்பம் ஆகிறாள் . இது கணவன் , மாமியார் உட்பட யாருக்கும் தெரியாது
திடீர் என கணவன் இறந்து விடுகிறான். நாயகியின் வயிற்றில் வளரும் கரு தன் மகனுடையது என்ற நினைப்பில் இருக்கும் மாமியார் மருமகள் மீது பாசமாக இருக்கிறார். இனி தன் வாழ்க்கைக்கு ஆதாரமாக அந்த பிறக்கப்போகும் குழந்தைதான் என நினைக்கிறாள்
கணவன் இறந்த பின் தன்னுடனே தங்கிக்கொள்ளுமாறு மாமியார் நிர்ப்பந்திக்கிறாள் . இதனால் வேறு வழி இல்லாத நாயகி அந்தக்கரு உங்கள் மகனுடையது அல்ல. என் காதலன் உடையது என்ற உண்மையை நாயகி உடைக்கிறாள்
இதற்குப்பின் நிகழும் பாசப்போராட்டங்கள் தான் கதை . இது போக க்ளைமாக்சில் இரண்டு ட்விஸ்ட்கள் இருக்கின்றன
நாயகி ஆக பார்வதி திருவோத்து பிரமாதமாக நடித்திருக்கிறார் . ஒரு இடத்தில் கூட ஓவர் ஆக்டிங்க் இல்லை . ஒரு சீன் கூட அண்டர்ப்ளே ஆக்டிங் இல்லை , கனகச்சிதமாக நடித்திருக்கிறார்
தன் காதலை ஏற்காமல் வேறு திருமணம் செய்து வைத்த பெற்றோரிடம் வாக்குவாதம் செய்யும் காட்சி , மாமியாரிடம் பொங்கி எழும் காட்சி , க்ளைமாக்சில் தன் காதலன் சாட்டையால் அடித்தாற்போல ஒரு கேள்வி கேட்டதும் எடுக்கும் முக்கிய முடிவு என மொத்தப்படத்தையும் அவர் தான் தாங்கி நிற்கிறார்
மருமகளாக நாயகி ஒரு பக்கம் சிக்சர்களாக விளாசித்தள்ள மாமியார் ஆக அவ்வப்போது ஃபோர் அடிக்கிறார் ஊர்வசி . முந்தானை முடிச்சு , மகளிர் மட்டும் ஆகிய படங்களில் துடுக்குத்தனமான கேரக்டர்களிலும் , மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் பாந்தமான பெண்ணாகவும், ஜெ பேபி படத்தில் குணச்சித்திர வேடத்திலும் பரிமளித்தவர் இதில் இன்னொரு பரிமாணத்தைக்காட்டி இருக்கிறார் . வசனம் பேசும்போது கூட வயோதிகத்தை உடல் மொழியில் , குரலில் ஒருங்கே கொண்டு வந்திருக்கிறார். சபாஷ் நடிப்பு
தண்டக்காதலன் ஆக அர்ஜூன் ராதாகிருஷ்ணன் . சோனி லைவ் எடுத்த ராக்கெட் பாய்ஸ் வெப் சீரிசில் அப்துல் கலாம் ஆக நடித்தவர் தான் இவர் . அதிக நேரம் வராவிட்டாலும் வந்த வரை கச்சிதமான நடிப்பு
நாயகியின் அம்மாவாக ஜெயா க்ரூப் அடக்கி வாசித்திருக்கும் அருமையான நடிப்பு . கணவன் ஆக வரும் பிரசன்ன முரளி சில காட்சிகளே வந்தாலும் நினைவில் நிற்கும் நடிப்பு
ஷெனாடு ஜலால் தான் ஒளிப்பதிவு . படம் முழுக்க வீட்டில் வெள்ளம் சூழ்ந்து இருப்பது போல சூழலை நேர்த்தியாகப்படம் பிடித்து இருக்கிறார். படத்தில் அந்த மழை நீர் ஒரு கேரக்டர் ஆகவே பயணிக்கிறது
சுசின் ஷ்யாம் இசையில் பல இடங்களில் சபாஷ் போட வைக்கிறது . பின்னணி இசை கச்சிதம்
கிரண் தாஸ் எடிட்டிங்கில் படம் 112 நிமிடங்கள் ஓடுகிறது
திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் கிறிஸ்டோ டாமி
சபாஷ் டைரக்டர்
1 திருமணம் நிச்சயிக்கும் முன் மணமகள் சம்மதம் வேண்டும் என்ற கருத்தையும் , மாப்பிள்ளையின் உடல் ஆரோக்கியம் பற்றிய தெளிவு , புரிதல் பெண் வீட்டாருக்கு அவசியம் தேவை என்ற கருத்தையும் சொன்ன விதம்
2 அம்மா - மகள் பிணைப்பை விட மாமியார் - மருமகள் பிணைப்பு அருமையாக உருவாக வாய்ப்பு உண்டு என்பதை க்ளைமாக்சில் காட்டிய விதம்
3 சம்பாத்யம் புருச லட்சணம் என்ற பழமொழியைப்பொய்யாக்கினாலும் சந்தேகப்படுதல் , சொல்லால் காயப்படுத்துதல் இதைத்தான் புருச லட்சணம் ஆக சிலர் வைத்திருக்கிறார்கள் என்பதைக்காட்சிப்படுத்திய விதம்
4 மாமியார் , அம்மா இருவரும் தனக்கு அநீதி இழைத்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்ததும் நாயகியின் உடல் மொழியில் ஏற்படும் மாற்றம் செம
ரசித்த வசனங்கள்
1 குடும்பப்பாரம்பரியத்தைக்காப்பாற்றனும் என்பதில் கவனமாக இருக்கும் நீங்க ஒரு பொண்ணோட மனசு எவ்ளோ காயப்பட்டிருக்கு என்பதை உணரலையே?
2 என் மகனுக்கு பல வரன்கள் வந்தும் எதுவும் சரியா அமையலையே என்ற வருத்தத்தில் தான் அந்த உண்மையை மறைத்தேன், ஆனா ஒரு பொண்ணோட வாழ்க்கையைக்கெடுக்கனும்னு நினைச்சதில்லை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பொதுவாக ஒரு பெண் தன் அம்மாவிடம் தான் எல்லா உண்மைகளையும், ரகசியங்களையும் முதலில் சொல்வாள் . ஆனால் நாயகி தன் அம்மாவிடம் சொல்லாத ரகசியங்களை எல்லாம் சர்வ சாதாரணமாக மாமியாரிடம் சொல்வது எப்படி ?
2 முதல் பாதி திரைக்கதையில் நாயகி தன் கணவனை திட்டமிட்டுக்கொலை செய்திருப்பாளோ என்ற எண்ணம் ஏற்படும்படி காட்சிகள் வைத்தது தேவை இல்லாதது
3 க்ளைமாக்ஸ் ல இரன்டு ட்விஸ்ட் இருக்கு ம், ஆனா முறையான பிஜிஎம் இல்லாதது , காட்சிப்படுத்திய விதம் ஆகியவற்றில் போதிய கவனம் இல்லாததால் அவை மெருகேற்றப்படாமல் இருக்கின்றன
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் காட்சி அமைப்புகள் கொண்ட படம் . ஸ்லோ டிராமா , ஆண்களுக்குப்பொறுமை அவசியம் . ரேட்டிங் 3.5 / 5
Ullozhukku | |
---|---|
Directed by | Christo Tomy |
Written by | Christo Tomy |
Produced by | Ronnie Screwvala |
Starring | Urvashi Parvathy Thiruvothu Arjun Radhakrishnan |
Cinematography | Shehnad Jalal |
Edited by | Kiran Das |
Music by | Sushin Shyam |
Release date |
|
Country | India |
Language | Malayalam |
0 comments:
Post a Comment