Monday, July 15, 2024

TEENZ (2024) - டீன்ஸ் - தமிழ் - சினிமா விமர்சனம் ( சயின்ஸ் ஃபிக்சன் ஹாரர் த்ரில்லர் )

                        


எதிர்பார்ப்புடன் போய்  ஏமாறும் படங்களை  விட  எந்த வித  எதிர்பார்ப்பும்  இல்லாமல்  போய்  சுமாராக  இருந்தாலும்  ஆறுதல் அளிக்கும்  படங்கள்  சில  உண்டு. அது  மாதிரி தான்   இரா  பார்த்திபனின்  இந்தப்படமும் .   கமல் ஹாஸன் - இரா  பார்த்திபன்   காம்பினேஷனே  புதுசா  இருக்கே? என  யோசித்தால்   ஆல்ரெடி  ஒரு  மோதல்  நடந்திருக்கிறது . 1989 ல்   அபூர்வ  சகோதரர்கள் , புதிய  பாதை  இரண்டுமே  ஒரே  நாளில்  ரிலீஸ்  ஆகி  பிரம்மாண்ட  வெற்றியைப்பெற்றிருக்கின்றன  அந்த  செண்ட்டிமெண்ட்  காரணமாகத்தான்  இந்தப்படத்தை  இந்தியன் 2   உடன்  வெளீயிடும்  எண்ணத்தைத்தந்திருக்க  வேண்டும், 

ஸ்பாய்லர்  அலெர்ட்


 ஸ்கூல்  படிக்கும்  மாணவ  மாணவிகள்   ஒரே  கிளாசில்  ஒன்றாகப்படிப்பவர்கள்   ஒரு  நாள்  ஸ்கூலுக்குக்கட்  அடித்து  விட்டு  ஒருவனின்  பாட்டி  ஊருக்கு   செல்ல  முடிவெடுக்கிறார்கள் . போகும்  வழியில் ஒருவர்  பின்  ஒருவராக  ஐந்து  பேர்  காணாமல்  போகிறார்கள் 


பிள்ளை  பிடிப்பவர்கள்  வேலையா?  பேய்  செய்த  வேலையா? என்று  நாம்  யோசிக்கும்போது   ஏலியன்சின்  வேலை  என்பதை  ட்விஸ்ட்  ஆக  பின்  பாதியில்  சொல்லி  இருக்கிறார்கள் 


  பின்  பாதியில்   வானவியல்  ஆராய்ச்சியாளராக   அல்லது  விஞ்ஞானி ஆக   ஆர்  பார்த்திபன்  வருகிறார். அதிக  வேலை  இல்லை . ஒரே  ஆறுதல்  தொண  தொண  என  பேசாமல்  அடக்கி  வாசித்தது 


13  சிறுவர்  சிறுமிகளாக  நிஜ  மாணவர்களே  நடித்திருப்பதால்  யதார்த்தம்  கொப்புளிக்கிறது 


யோகி  பாபு  மெயின்  கதைக்கு  சம்பந்தமே  இல்லாமல்  வந்து 10  நிமிஷம்  மொக்கை  போடுகிறார் (இப்போதெல்லாம்  இவர்  வரும்போது  சிரிப்பு  வருவதில்லை  எரிச்சல்  தான்  வருகிறது ) 


டி  இமானின்  இசையில்  இரு  பாடல்கள்  சுமார்  ரகம் ,  பின்னணி  இசை  பரவாயில்லை 


கேவ்மிக்  ஆரியின்  ஒளிப்பதிவு  குட் , குறிப்பாக இன்ட்டர்வெல்  பிளாக்  சீன்  அழகு 

  2  மணி  நேரம்  படம்  ஓடும்படி  ட்ரிம்  செய்து  இருக்கிறார்  எடிட்டர் 



சபாஷ்  டைரக்டர்


 1  நாளை  உனது  நாள் (1984)  படத்தின்  திரைக்கதையை   சாமார்த்தியமாக   அஞ்சலி (1990)  ஓப்பனிங்  காட்சியுடன்  அட்லி  வேலை  செய்து  திரைக்கதை  அமைத்த  விதம் 


2    இண்டர்வெல்  பிளாக்  காட்சியின்  போது  ஆயிரக்கணக்கான  ஆடுகள் மாடுகள் பறவைகள் கிராஃபிக்சில்  அணீவகுக்கும்  காட்சி 


4    மலைப்பாம்பிடம்  இருந்து  ஆட்டை  விடுவிக்கும்  காட்சி 


  ரசித்த  வசனங்கள் 


1    அந்த    அணுவைக்கூட  இரண்டாகப்பிரித்துவிடலாம்,  ஆனால்  இந்த  அனுவை    என்னிடம்  இருந்து பிரிக்க  முடியாது 


2  காலண்டர்லயே  மண்டை  காயற  டே  மண்டே


3  எறா  மீன்  சாப்பிடாத  பிராமின்  யாராவது  இருக்காங்களா? 


4   எடுத்துக்காட்டு  , எடுத்துக்காட்டு    ஐ  மீன்  நீ ஒரு  நல்ல  எடுத்துக்காட்டு  


5  மேஜிக்மேன்  எல்லாவற்றையும்  மறைய  வைக்கிறார், ஆனால்  என் சம்சாரத்தை  அப்படி  மறைய  வைக்க  முடியலையே? ( வெ  சீதாரமன் 1978ல்  கல்கியில்  எழுதிய  ஜோக் ) 


6   காலைல  சாப்பிட்டு  எனக்குப்பழக்கமே  இல்லை . காரணம்  வறுமை 


7  சாண்ட்விச்சுக்கு  ஏன்  ரெண்டு பக்கம்  இருக்குன்னு  தெரியுமா? இப்படி  ரெண்டு  பேரும்  பகிர்ந்து  சாப்பிடத்தான் 


8  அப்பா , அம்மாவை  நான்  பார்த்ததில்லை, அவர்  உருவில் கடவுளையே  பார்த்தேன் 


9  இவன்  என்ன  கடவுளுக்கே  பவுன்சர்  மாதிரி  கூடவே  வர்றான் ?


10  மிஸ்  கிட்டே  இருந்து   தப்பிச்சுட்டான், ஆனா  பிஸ்  அடிக்கறதுல  மாட்டிக்கிட்டான் 


11  லெமன்     மாலை  போட்ட எமன்  மாதிரி  துரத்திட்டு வர்றா னே? 


12   நீ  யாரு ?


 ஆஸ்ட்ரோ  பிசிஸ்ட்

 என்னது ? ஆஸ்ட்ரே  பிஸ்னெஸ்சா?  


13  வண்டியை  விட்டு   இறங்கு 


 மப்பு  இறங்குனதாலதானே  கேட்கறேன் ? 


14   சைலண்ட்டா  வரனும் 


 ஆஆஆ   சைலன்சர்ல  கால்  வெச்சுட்டேன் 


15  பைக்கிற்கே  கிக்  தேவைப்படும்போது  லைஃப்க்கு  தேவைப்படாதா? 


16  என்னுடைய  153  வருட  ஆராய்ச்சியில்.... \


 அய்யய்யோ  நீங்க  பேயா? 


 என்  அப்பாவோட 82  வயது  ஆராய்ச்சி , என்னோட  71  வருட  ஆராய்ச்சி  ஆக  மொத்தம் 153  வருடம் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  க்ளைமாக்சில்   ஏலியன்  ஆல்ரெடி  ஐந்து  மாணவர்களை  கபளீகரம்  செய்திருக்கிறது . யாராவது  ஒரு  நபர்  ஏலியன்சிடம்  போக  சம்மதம்  தெரிவித்தால்   அந்த  5  பேரை  விடுவிப்பதாக  சொல்வது  என்ன  லாஜிக்? அதற்கு   ஐவரில்  ஒருவரை  எடுத்துக்கொண்டு  மீதி  நால்வரை  விடுவிக்கலாமே? 


2   வயிற்று  வலியால்  துடிக்கும்  ஒரு  ஆள்  தற்கொலை  செய்யும்  முன்  தற்கொலை  விளக்கக்கடிதம்  எல்லாம்  எழுதிட்டு  இருக்க  முடியுமா? 


3  இடைவேளை  வரை  ஒவ்வொரு  மாணவனும்  காணாமல்  போகும்போது  எல்லோரும் போடும்  அலறல்  ஒரு  கட்டத்தில் கடுப்பாகுது 


4  ரணகளத்துல  என்ன  கிளுகிளுப்பு  வேண்டிக்கிடக்கு  என்பது போல   இந்தக்கதைக்கு  அந்த   டீன் ஏஜ்  லவ்  போர்சன்  தேவை  இல்லை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   சிறுவர்களுக்கான  ஒரு  சயின்ஸ்  ஃபிக்சன்  படம். 600  கோடி  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்ட  படத்திலேயெ ரசித்த  வசனங்கள்  15  தான் , இதில் 16  இருக்கு , அதுக்காகவே  பார்க்கலாம், ரேட்டிங்    2. 5 / 5 

0 comments: