மாற்றுத்திறனாளி ஆக வில்லன் அமைந்த படங்கள் எல்லாம் மெகா ஹிட் தான் .பூ விழி வாசலிலே (1987) படத்தில் ரகுவரன் ஒரு கால் ஊனம் ஆன மாற்றுத்திறனாளி ஆக கலக்கி இருப்பார் .
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி படிப்பறிவு அதிகம் இல்லாத ஏழ்மையான குடும்பத்தைச்சேர்ந்தவர் . திருமணம் ஆனவர் . ஒரு குழந்தை உண்டு .நாயகியின் கணவன் திக்குவாய் , ஆனால் வில்லன் . சமீபகாலமாக தன கணவனின் நடவடிக்கையில் சில மாறுதல்கள் இருப்பதை நாயகி கவனிக்கிறார்
ஸ்மார்ட் போன் வைத்திருந்த தன கணவன் திடீர் என அதை தூக்கிப்போட்டு விட்டு பேசிக் மாடல் போன் வைக்கிறான் . தினசரி வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் போன் பேட்டரி கழற்றி சிம்மை தனியாகக்கழற்றி வைக்கிறான் .தாடி வைத்து பஞ்சப்பரதேசி மாதிரி இருந்தவன் க்ளீன் ஷேவ் செய்து ட்ரிம் ஆக இருக்கிறான் . கேள்வி கேட்டால் எரிந்து விழுகிறான்
தன கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக நாயகி சந்தேகப்படுகிறாள் . தன் தோழியின் உதவியுடன் அவள் ஒரு துப்பறிவாளரின் மூளை உடன் கணவனை சிக்க வைப்பதுதான் மீதி திரைக்கதை
நாயகி ஆக ஸ்ரிஸ்மா சந்திரன் பிரமாதமாக நடித்திருக்கிறார் . இன்ஸ்டாகிராமில் மாடர்ன் ஆக இருக்கும் அவர் படத்தில் கிராமியப்பெண் ஆக பட்டாஸாக நடித்திருக்கிறார் .
வில்லன் ஆக , நாயகியின் கணவன் ஆக சஜித் யாக்கியா பொருத்தமான நடிப்பு . எரிச்சல் ஏற்படுத்தும் கேரக்டர் டிசைன்
வில்லி ஆக ட்வீங்க்கில் ஜுபி அமர்க்களம் ஆன நடிப்பு . வில்லியின் தோழியாக வருபவர் நல்ல முக லடசணம்
நாயகிக்கு தோழி ஆக வரும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் ரோலில் ஷில்பா அணில் கச்சிதம்
ஒலிப்பகிவு , ஒளிப்பதிவு , பின்னணி இசை அனைத்தும் அருமை . டெக்னீஷியன்கள் பெயர் தெரியவில்லை
சபாஷ் டைரக்டர்
1 40 நிமிடங்களில் முடிக்க வேண்டிய குறும்படத்துக்கான கண்டடெண்டடை 2 மணி நேரப் படமாக தந்த சாமர்த்தியம்
2 வில்லி , வில்லி யின் தோழி இருவரையும் வைத்து சொல்லப்படட க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்
3 நேரடியாகக்கதை சொன்னால் ஒரு மணி நேரத்தில் முடித்து விடக்கூடிய கதை யை நான் லீனியர் கட்டில் சொன்ன விதம்
4 பிரமாதமான ஒளிப்பதிவு , த்ரில்லர் படத்துக்குண்டான பிஜிஎம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
சில குறைகள் உண்டு , ஆனால் லோ பட்ஜெட்டில் பிரமாதமாக எடுத்திருப்பதால் குறைகளைக்கண்டுகொள்ள வேண்டாம் என விட்டு விட்டேன்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் . த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம், பொறுமை தேவை .ரேட்டிங் 3 / 5
0 comments:
Post a Comment