Tuesday, July 09, 2024

PARADISE (2024) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா )

                 


       2  சுவராஸ்ய தகவல்கள் இப்படத்தைப்பார்க்கத்தூண்டியது . இது மணி ரத்னத்தின் சொந்தப்படம் . 2023 ஆம் ஆண்டு நடந்த 28 வது புஷன்  இண்ட்டர் நேசனல்  பிலிம் பெஸ்டிவலில் கலந்து கொண்டு   கிம் ஜூஸோக் விருது பெற்ற படம் இது இது போக ஏராளமான திரைபபட விருது விழாக்களில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்ற படம் . இப்பொது  தியேட்டர்களில் 28/6/2024 முதல் திரை இடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது . ஓடி டி  யில் வர இன்னும் ஒரு மா தம் ஆகும் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


2022 ஆம் ஆண்டு இலங்கையில் பொருளாதார நெருக்கடி காலகட்டம் . அப்பொது நடக்கும் கதை . இலங்கை பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருந்ததால் இந்தியாவில் இருந்து இலங்கை வரும்  சுற்றுலாப்பயணிகளுக்கு  பல சலுகைகளை அறிவிக்கிறது . ஒரு இந்திய  தம்பதி ஆன நாயகன் - நாயகி    இருவரும்  இலங்கை டூர் வருகிறார்கள் . ராமாயண கதையில்  சொல்லப்பட்ட இடங்களுக்கு அவர்கள் பயணம் செய்கிறார்கள் 



பயணத்த்தின் நடுவே ஒரு     விடுதி யில் தங்குகிறார்கள் . அன்று இரவு அவர்கள் உடமை ஆன லேப்டாப்  மற்றும் சில பொருட்கள் திருடப்படுகிறது .போலீசில் புகார் கொடுக்கிறார்கள் , ஆனால் அவர்கள் பெரிதாகக்கண்டுகொள்ளவில்லை . நாயகன் தனக்கு மேலிட  செல்வாக்கு உண்டு / மேலதிகாரிகளைத்தொடர்பு கொள்ளவா ?  என்று மிரட்டியதும்   போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது 


 குற்றவாளிகள்  என சிலரைக்கைது   செய்து  விசாரிக்கிறார்கள் . கைது செய்யப்பட்ட ஆட்களின் உறவினர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் . இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள்  தான் மீதி திரைக்கதை 


நாயகன் ஆக ரோஷன் மேத்யூ சிறப்பாக நடித்தருக்கிறார் நாயகி ஆக தர்சனா  ராஜேந்திரன் அழகாக  வந்து போகிறார். மெயின் கதைக்கு சம்பந்தமே இல்லை என்றாலும்  இது சர்வதேச விழாக்களில்  கலக்க இருப்பதால்  லிப் லாக் காட்சிகளை  வலுக்கட்டாயமாக திணித்திருக்கிறார்கள் 


ஷியாம் பெர்னாண்டோ என்ற இலங்கை  நடிகர் டூரிஸ்ட்  கைடாக அருமையாக நடித்திருக்கிறார் .காவல் அதிகாரி ஆக மகேந்திரா பெரேரா  பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் 


கே  என்பவர் தான் இசை .பின்னணி இசை பரபரப்பு . ஸ்ரீகர் பிரசாத் தான் எடிட்டிங்க்  மொத்தப்படமே 95  நிமிடங்கள் தான் . ராஜிவ்  ரவியின் ஒளிப்பதிவு இலங்கையின் அழகை படம் பிடித்து கண் முன் நிறுத்துகிறது 


அனுஸ்கா சேனாநாயகே  என்பவர் தான்  திரைக்கதை அமைத்து இருக்கிறார் பிரசஅண்ணா விதானகே  தான் இயக்கம் 


சபாஷ்  டைரக்டர்


 1 ராமாயணக்கத்தை நிகழும் இடங்களை  மையமாக வைத்து கதை  எழுகினால் போணி  பண்ணி விடலாம் என்ற  ஐடியா 



2  பிரமாதமான ஒளிப்பதிவு 


3   நாயகன் , நாயகி , டூரிஸ்ட் கைது , போலீஸ் ஆபிஸர்  போன்ற முக்கிய நடிகர்களின் நடிப்பு 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

  1  மெயின் கண்டடென்ட்  30 நிமிடங்கள் தான் .இருவரும் காரில் போவது , ஹோட்டலில் சாப்பிடுவது , ,  தம் அடிப்பது , தண்ணி அடிப்பது போன்ற தேவையற்ற காட்ச்சிகளை கேட் செய்தால் படமே ஒரு  குறும்படமாகத்தான்  வரும் 


2  நெருக்கடியான  கால கட்டங்களில் மனித மன உணர்வுகள் எப்படி வித்தியாசமாக சி ந்திக்கும் என்பதுதான்  கதைக்கரு   என  இயக்குனர்  ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார் . அதைப்படித்த பின் தான் , ஓஹோ அதுதான்  மேட்டரா ? என என்ன வைத்தது 


3   க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்  படு செயற்கை . நம்பவே முடியவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கமர்ஷியல் பட பார்க்கும் ஜெனரல் ஆடியன்ஸுக்கு இப்படம் பிடிக்காது . ஆனால் விருதுப்படங்கள் ,உலகப்படங்கள் பார்ப்பவருக்குப்பிடிக்கும்,. மீடியாக்கள் , ரைட்டர்கள் இப்படத்தை ஆஹா ஓஹோ அபாரம் பரிமளா ரேஞ்ச்சுக்குக்கொண்டாடுகிறார்கள் , ஆனால் எனக்குப்படம் பிடிக்கவில்லை . ரேட்டிங் 2.25 / 5 

0 comments: