Sunday, July 07, 2024

MANTHRIKA KUTHIRA (1996) -மேஜிக் குதிரை - மலையாளம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ யு ட்யூப்

       


         முகநூலில்  நண்பர் ஒருவர் இப்படத்தைப்பரிந்துரைத்தபோது அசால்ட் ஆக விட்டு விட்டேன் , காரணம் டைட்டில் பிடிக்கவில்லை . அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்ன பாலா  வில் வரும் வாண்டுமாமா கதை போல் தோன்றியது . ஆனால் இது ஒரு  க்ரைம் த்ரில்லர் என்பது அப்போது தெரியாது 


பரமேஸ்வரன் என்பவர் தன நாடகம்  ஆன  "ஸ்வப்னம் பக்கம் என் 32 " கதையில் இருந்து சுடப்பட்டது  என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார் . ஆனால் தீர்ப்பு அவருக்கு சாதகம் ஆக வரவில்லை . ரிலீஸ் ஆன கால கட்டத்த்தில் இப்படம் ஹிட் தான் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

வில்லன் ஒரு கொலைக்குற்றவாளி . நான்கு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவன் . கோர்ட்டில் கேஸ் நடக்கிறது .நாயகன் ஒரு வக்கீல் . திறமையாக வாதாடி வில்லனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை  தீர்ப்பு வர வைக்கிறார் . இதில் செம காண்டான வில்லன் கோர்ட்டிலேயே  சவால் விடுகிறான் . உன்  குடும்பத்தைக்கொல்லாமல்  விடமாட்டேன் என்கிறான் 


நாயகன் ஒரு கிரிமினல் லாயர் மட்டும் அல்ல .க்ரைம் கதை ஆசிரியர் கூட .பார்ட் டைம் ஜாப் ஆக நாவல்கள் எழுதி வெளியிடுவார் நாயகனின்  மனைவி நாயகனுக்கு நாவல் எழுதுவதில் துணை ஆக இருக்கிறார் . அதாவது நாயகன் கதை , திரைக்கதையை சொல்லச்சொல்ல மனைவி எழுதித்தருவார் 



இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு அவள் 10 வயது சிறுமி . ஹாஸ்ட்டலில் தங்கி படிக்கிறாள் நாயகனுக்கு ஒரு  தம்பி உண்டு . அவன் சினிமா இயக்குநர் ஆகும் கனவில் இருப்பவன் . நாயகனின் மனைவிக்கு ஒரு  தங்கை உண்டு .காலேஜில் படிக்கிறாள் . அவ்வப்போது தன அக்காவைக்காண  இங்கே வருவாள் . நாயகனின் தம்பிக்கு அவள் மேல் காதல் உண்டு , ஆனால் வெளிப்படுத்தாக காதல் 



நாயகன் ஒரு  ரைட்டர் என்பதால் அவருக்கு பல ரசிகைகள் உண்டு . அடிக்கடி போன் பண்ணி பேசுவார்கள் . இது நாயகனின்  மனைவிக்குப்பிடிப்பதில்லை 


ஒரு நாள் ஒரு  சாலை  விபத்தில் நாயகனின் மனைவி மாட்டிக்கொள்கிறார் . 3 மாதங்கள் ஓய்வு    எடுக்க  வேண்டும்  , தாம்பத்ய உறவு தவிர்க்க வேண்டும் என  டாக்டர் அட்வைஸ் . அந்த அட்வைஸை மீறி நாயகன் நெருங்கும்போது  மனைவி  அதை தவிர்க்கிறார் .இதனால் நாயகனுக்கு தன  மனைவி மீது கொஞ்சம்  கோபம் 


இப்படி இருக்கும்  தருணத்தில்  வில்லன் சிறையில் இருந்து தப்பி விட்டதாக தகவல் வருகிறது நாயகனின்  வீட்டுக்குப்போலிஸ் காவல் போடப்படுகிறது . வில்லன்  தப்பித்த  அடுத்த  நாள் இரவு நாயகனின் மனைவி  தற்கொலை செய்து இறந்து விடுகிறாள் 



போஸ்ட்  மார்ட்டம் ரிப்போர்ட்டில் அளவுக்கு அதிகமாக  தூக்க மாத்திரை உட்கொண்டு  பின் துப்பாக்கியால் தன்னைத்தானே  சுட்டுக்கொண்டதால்  மரணம்  என வருகிறது .இதில் போலீசுக்கு குழப்பம் . தற்கொலை செய்பவர்  எதற்காக இரண்டு வழிகளை  மேற்கொண்டார் ? வில்லன் தான் வந்து சுட்டிருப்பாரோ? என சந்தேகப்படுகிறார்  


நாயகனின் மனைவி சாகும் முன் எழுதி வைத்த கடிதம் போலீஸ் கையில் சிக்குகிறது . அதில்  தன தங்கையை   நாயகன் திருமணம் செய்து கொள்ள வேண்டும், தன குழந்தையை தன தங்கை  தான்  கவனித்துக்கொள்ள வேண்டும்  என எழுதி இருக்கிறார்   


நாயகனுக்கும் ,  நாயகனின் முதல் மனைவியின் தங்கைக்கும்  திருமணம் நடக்கிறது .


திருமணத்துக்குப்பின்  தான்  நாயகிக்கு  தன்    அக்கா எழுதி வைத்த  டைரி கிடைக்கிறது . சில மர்ம  முடிச்சுகள் அவிழ்கின்றன . இதற்குப்பின்  நடக்கும்  திருப்பங்கள் தான்  திரைக்கதை 

நாயகன் ஆக மனோஜ் கே ஜெயன் பிரமாதமாக நடித்திருக்கிறார் .கோர்ட்டில் வாதிடும்போதும் , வில்லனுடன் வாக்குவாதம் செய்யும்போதும் உணர்ச்சிகரமான  நடிப்பு . மனைவியுடன் கொஞ்சும் நேரத்தில் காதல் இளவரசன் . 


வில்லன் ஆக பாபுராஜ் .அதிக காட்சிகள் இல்லை . வந்தவரை ஓகே .நாயகனின் மனைவியாக  வாணி விஸ்வநாத் கச்சிதம் . கணவனின் ரசிகைகள் போனில் பேசும்போது பொஸசிவ்னெஸ்   காட்டுவது அருமை 



நாயகி ஆக நாயகனின் மச்சினியாக  மோகினி . ஈரமான ரோஜாவே அறிமுக நாயகி . அழகுப்பதுமை 


நாயகி மீது ஒருதலைக்காதல் கொண்டவராக திலீப் . அப்பாவித்தனமான நடிப்பு 


நாயகனின் உதவியாளராக கலாபவன் மணி  அதிக வாய்ப்புகள் இல்லை . இயக்குநர் ஆனா விஜி தம்பி வக்கீல்  கேரக்டரில்  கெஸ்ட் ரோல் பண்ணி இருக்கிறார் 


சலு  ஜார்ஜின் ஒளிப்பதிவு கச்சிதம் மோகினி, வாணி விஸ்வநாத் இருவருக்குமான க்ளோசப் ஷாட்கள் குட் 


ஸ்ரீகர் பிரஸாத்தின்  எடிட்டிங்கில்  படம் இரண்டேகால் மணி நேரம் ஓடுகிறது 


கும்மாளம் கூறினார்    என்பவர் எழுதிய கதைக்கு  சுலூர் டென்னிஸ்   என்பவர் திரைக்கதை எழுதி இருக்கிறார் .


டொமேன் ஜெ  தச்சங்கரி   என்பவர் தான்  இசை .இரண்டு பாடல்கள் சுமார்  ரகம், பின்னணி இசை குட் 

 விஜி தம்பி என்பவர் இயக்கி இருக்கிறார் 

சபாஷ்  டைரக்டர்


1  பரபரப்பான கோர்ட் சீனுடன்  டேக் ஆப் ஆகும் கதை மனைவி இறப்புக்குப்பின் இன்னும் சூடு பிடிக்கிறது 


2   நாயகன் எழுதிய நாவலின் டைட்டில் தான் படத்தின் டைட்டில் என்பதால் டைட்டிலுக்கான விளக்கம்  தேவைப்படாதது 


3  பின் பாதியில் வெளியாகும் டிவிஸ்ட் 


4  ஆசை , வாலி . உயிர் போன்ற தமிழ் ஹிட் படங்களுக்கு  முன்னோடியாக அமைந்த விதம் 


  ரசித்த  வசனங்கள் 

 1  என்னங்க ? உங்களுக்கு  நேரம் , காலம் எல்லாம் இல்லையா? 

டைம் டேபிள் போட்டு தம்பதிகள் லவ்  பண்ண முடியுமா? 

2  மனுஷன் கண்டுபிடிக்க முடியாததை ஒரு  நாய் கண்டுபிடிச்சிடும்னு நினைக்கிறீங்களா? 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   வில்லன் 40 வருடங்கள் தண்டனை பெற்ற குற்றவாளி .அவனைப்பிடிக்காமல் போலீஸ் அசால்ட் ஆக இருப்பது எப்படி? அவன் பாட்டுக்கு அடிக்கடி நாயகன் வீட்டுக்கு கெஸ்ட் மாதிரி வந்துட்டுப்போறான் , ஆனால் செக்யூரிட்டி ஆக வேலை பார்க்கும் இரு போலீசுக்கும்  அது தெரியவில்லை  

2  மந்திரிகா குதிரை என்ற நாவலில் தான் டிவிஸ்ட் இருக்கிறது .அந்த நாவலை நாயகன் பதிப்பகத்திடம் தருகிறான் . அது ஆபத்து என்பது  தெரியாதா? 

3  மந்திரிகா குதிரை என்ற நாவலில்  நாயகனின் குயுக்தி க்ரைம்  மூளை  வெளிப்படுகிறது . அதை டிக்டேட் செய்யும்போது மனைவிக்கு சந்தேகம் வரவில்லையா? 

4  நாயகி தன  அக்காவின் உடையை அணிந்து முதல் இரவுக்கு வரும்போது பேயைக்கண்டவன் போல நாயகன்  அலறுகிறான் . க்ளைமாக்சில் நாயகி தன்னை நாயகன் நெருங்காமல் இருக்க அதே யுக்தியைக்கடைப்பிடித்திருக்கலாமே? அக்காவின் உடையை அணிந்தால் அருகில் வரமாட்டார் அல்லவா? 


5  க்ளைமாக்சில் நாயகன் நாயகியை அடைய மிகவும் தீவிரமாக முனைப்பு காட்டுகிறான் . ஆனால் திருமணம் ஆகி முதல்  இரண்டு நாட்கள் பொன்னான வாய்ப்பு .தவற விடுகிறான் 


6 வில்லன் கொடூரமானவன் . ஆல்ரெடி பல ரேப் கேசில் சிக்கியவன் . ஆனால் நாயகனின் பெட்ரும்  வரை வந்தும்   நாயகனின் மனைவியையோ , மச்சினியையோ எதுவும் செய்யவில்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  A

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  க்ரைம் த்ரில்லர்  ரசிகர்கள் பார்க்கலாம் . ரேட்டிங்  2.75 / 5 


மந்திரிகா குதிரை
திரைப்பட விசிடி கவர்
இயக்கம்விஜி தம்பி
எழுதியவர்கலூர் டென்னிஸ்
மூலம் கதைகும்மனம் கூறினார்
உற்பத்திபி.டி.ஆபிரகாம், ஜோஸ் மேத்யூ
நடித்துள்ளார்மனோஜ் கே. ஜெயன்
வாணி விஸ்வநாத்
மோகினி
லாலு அலெக்ஸ்
பாபுராஜ்
திலீப்
ஒளிப்பதிவுசலூ ஜார்ஜ்
திருத்தியவர்ஸ்ரீகர் பிரசாத்.
இசைடோமின் ஜே தச்சங்கரி
வெளிவரும் தேதி
  • 1996
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

0 comments: