Wednesday, July 24, 2024

MALAYALEE FROM INDIA (2024) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா ) @ சோனி லைவ்

                   

    

2022 ம் ஆண்டு ஜனகனமன   என்ற லீகல் த்ரில்லர் படத்தை இயக்கிய  டி  ஜோ ஜோஸ்  ஆண்ட்டணி இந்த முறை காமெடி டிராமாவை கொடுத்திருக்கிறார் லோ பட்ஜெட்டில் உருவான இப்படம் 19  கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடித்துள்ளது .1/5/2024 ஆர்  திரை அரங்குகளில்  ரிலீஸ் ஆன இப்படம்  இப்போது சோனி லைவ்  ஓடிடி  யில்  5/7/24 முதல் காணக்கிடைக்கிறது .தமிழ் டப்பிங்கில் ஒளிபரப்பாகிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்



நாயகன் ஒரு வெட்டித்தண்டம்  . படிச்சுட்டு சும்மா வீட்டில் உக்கார்ந்து அம்மா உழைப்பில் சொகுசாக வாழ்பவன் .எப்போப்பாரு கிரிக்கெட்டு , கட் சி , அரசியல் , வெட்டி அரட்டை என  வாழ்பவன் . இது பத்தாதுன்னு  இவன் கெட்ட கேட்டுக்கு ஒரு தலைக்காதல் வேற .இவன் கூடவே ஒரு நண்பன் சுத்திட்டு இருக்கான் .என்னால நீ  கெட்டே , உன்னால நான் கெட்டேன்  என இருவரும்  தண்டமாக வாழ்ந்து வருகிறார்கள் 



இப்படி  ஜாலியாகபோய்க்கொண்டிருக்கும்  இவனது   வாழ்க்கையில் ஒரு  திருப்பம்   நிகழ்கிறது .இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கட்  மேட்சில்  இந்தியா தோற்ற போது முஸ்லீம்  சிறுவர்கள் பட்டாசு வெடிக்க  நாயகன் அங்கே  தலையிட்டு  பெரிய மதக்கலவரம்  வெடிக்கிறது 


 இனி இவன் இங்கே  இருந்தால் இவன்  உயிருக்கே  ஆபத்து என அவசரம் அவசரமாக  நாயகனை  அவனது மாமா  பாரின்  அனுப்பி விடுகிறார் சொந்த மண்ணில் ஜெயிக்காதவனா  வெளிநாட்டில் போய் ஜெயிக்கப்போகிறான்   என  நாம் நினைக்கும்போது  நாயகனின் வெளிநாட்டு வாழ்க்கையில்  ஒரு திருப்பம் நிகழ்கிறது . அதற்குப்பின் நிகழும் சம்பவங்கள்தான்  மீதி திரைக்கதை 


நாயகன் ஆக  நிவின் பாலி  முதல்  பாதியில் காமெடியாகவும் , கடைசி 30 நிமிடங்களில்  சென்ட்டிமென்ட் டச் உடனும்  நடித்திருக்கிறார் . அறிமுகம் ஆகும்போது  ஒல்லியாக இருந்தவர் இப்போது செம வெயிட்  போட்டு இருக்கிறார் . தமிழ் நாட்டில்  இதே  போல  வடிவேலு , விஜய் சேதுபதி உட்பட பலரை சொல்லலாம் . நல்ல மார்க்கெட் , சம்பளம்  கிடைத்ததும்  உடல் ஆரோக்கியத்தில்  கவனம் செலுத்தாமல் கண்டபடி புல் கட்டு  , ட[புள் கட்டு கட்டுவது  ஓவராக  தண்ணி அடிப்பது   என தோற்றப்பொலிவை இழக்கிறார்கள் 


நண்பன் ஆக  தயான் சீனிவாசன்  கலகலப்பான காமெடி  நடிப்பு .நாயகி ஆக அனஸ்வரா ராஜன் அழகாக வந்து போகிறார் . இவருக்கு அதிகக்காட்சிகள் இல்லை 


பாரினில் நாயகனுக்கு ஹையர்   ஆபிஸராக தீபக் ஜதி ஆரம்பத்தில்  வில்லன்  போலவும்  , பின்  உணர்ச்சி மிக்க நடிப்பிலும்  கலக்குகிறார் 


ஜேக்ஸ் பிஜோய் இசையில் எட்டு பாடல்கள் . அவற்றில் ஐந்து பாடல்கள் இனிமை .பின்னணி இசை கச்சிதம் ஸ்ரீ ஜித்  சாரங்கின் எடிட்டிங்கில்  படம் 158  நிமிடங்கள் ஓடுகின்றன 


சுதீப் எல்மோன் ஒளிப்பதிவு அருமை .குறிப்பாக பாலைவனக்காட்சிகள் அழகு 

சாறிஸ் முகமதுவின் திரைக்கதைக்கு உயிர் கொடுத்து இயக்கி இருப்பவர் டி  ஜோ ஜோஸ்  ஆண்ட்டணி


சபாஷ்  டைரக்டர்

1   படத்தின் முதல் பாதியை வேலை கிடைச்சிடுச்சு (1990)  பாணியில்  காமெடியாகக்கொண்டு போனது ,பின் பாதியை ஆடு ஜீவிதம் (2024)  கதையை பட்டி டிங்கரிங் செய்த லாவகம்  அருமை . வர  வர எல்லா  மாநிலங்களிலும்  அட்லிகள் பெருகி வருகிறார்கள் 


2   சீரியஸ் ஆக போன ஆடுஜீவிதம்  கதையை  காமெடியாக மாற்றிய விதம் அருமை 


3   நாயகன் - வில்லன்  இருவருக்குமான புரிதல் ஏற்பட்ட பின்   இந்து முஸ்லீம் ஒற்றுமை , இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமை குறித்த  காட்சிகள்  மனதைத்தொ ட்டன 

  ரசித்த  வசனங்கள் 

1   சங்கு பீச்  கடல் ஆகிடுச்சு 


ஆல்ரெடி  அது கடல் தானே ?


ஐ மீன் மக்கள் கடல்  


2  ஒய் ஆர் யு லேட்? 


 ஒரு  பொண்ணுக்கு 1008 பிரச்சனைகள் ,இருக்கும். அதை எல்லாம்  கேட்கக்கூடாது 


சாரி , இனி கேட்கலை 


 என்னடி பிரச்சனை ?


 சும்மாடி 


3    எனக்கு உங்கள்ல  பாதி வயசு தான்  இருக்கும்,என்னை விட்டுங்க  அண்ணா .லவ் எல்லாம்  வேண்டாம் 


4  தேன் , நெய்  இரண்டும்  நல்லதுதான் ஆனால் இரண்டும் சேர்ந்தால் விஷம் , அதுபோலத்தான்  மதமும்  அரசியலும் . அபாயம் 


5  நம்ம கேரளா மாநிலத்தை கடவுளின்  தேசம்னு     எதனால கொண்டாடறாங்க ? சாத்தான்கள் இங்கே இல்லையா? இருக்காங்க, ஆனால் அவங்களை எங்கே வைக்கணுமோ   அங்கே வெச்சிருக்கோம் அதனால 


6 பாலைவனத்தில் விவசாயமா? யாருமே இல்லாத  கடைல யாருக்குடா  டீ  ஆத்தறே ?


7  அவன்  கொடுமை தாங்க முடியலைன்னா சாப்பாட்டில்  விஷம் வெச்சு கொன்னுடு 


 விஷம்  கிடைச்சா நானே சாப்பிட்டு  செத்துடுவேன் 


8  நரகத்தில் வாழ்ந்து என்னபிரயோஜனம் ?


9   நான் ஊருக்கு திரும்பி வரும்போது எனக்கு ஒரு பரம்வீர சக்ரா விருது ரெடி பண்ணி வை 


 அது செத்துப்போனவங்களுக்குத்தர்றது 


 அப்போ  அசோக சக்ரா விருது ?


 அதுவும் தான் 


10  குரானின் முதல்  வார்த்தை என்ன  தெரியுமா? படிங்க . என்பதுதான் . ஆயுகத்தை எடுங்க  என்பதல்ல 


11  மதம் ஒரு  ராஜ்ஜியத்தை  ஆளும் சக்தியா  மாறினா அந்த ராஜ்ஜியம்  அழிநது  விடும் 


12 ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்  அவரது  வாழ்க்கையை  மாற்றி  அமைக்கக்கூடிய  ஒருவர்  வருவார் 


13   படி , உணர் , நீ  வெற்றி பெறுவாய் - இதுதான்  தாரக  மந்திரம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 பாஸ்போர்ட் விசா எடுக்க எவ்ளோ டைம் தேவைப்படும்? ஆனா     வெட்டியா சுத்திட்டு இருக்கும் நாயகன் ஒரு  கட்டத்தில் தலைமறைவான வாழ்க்கை வாழும்போது  அவரது உறவினர்  ஒரே நாளில் எல்லாம்  ரெடி பண்ணிடறார் . இது எப்படி ? அவர் சைன் எல்லாம்  பண்ணத்தேவை இல்லையா? 


2  நாயகன் - வில்லன்  இருவருக்கும் எப்படி புரிதல்  வருகிறது  என்பதை விளக்கமாகக்காட்டவில்லை 


3 நாயகனை போலீஸ்  தேடிக்கொண்டிருக்கிறது . தலைமறைவாக  இருக்கும் நாயகனுக்கு பாஸ்போர்ட்  ரெடி ஆகிறது .பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் போலீஸ் தானே செய்யணும்? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - முதல் பாதி கலகலப்பு , பின் பாதி லேடிஸ்க்கு  பிடித்த சென்ட்டிமெண்ட்  காட்சிகள் . பார்க்கலாம் . ரேட்டிங் 2.75 / 


Malayalee from India
Directed byDijo Jose Antony
Written bySharis Mohammed
Produced byListin Stephen
Starring
CinematographySudeep Elamon
Edited bySreejith Sarang
Music byJakes Bejoy
Production
company
Distributed byMagic Frames
Release date
  • 1 May 2024
Running time
158 minutes
CountryIndia
LanguageMalayalam
Box officeest.₹18.37 crore[1]

0 comments: