KALKI 2898 AD (2024) -கி பி 2898 -ல் கல்கி - தெலுங்கு /தமிழ் /ஹிந்தி - சினிமா விமர்சனம் ( ஹிஸ்டாரிக்கல் சயின்ஸ் பிக்சன் ஆக்சன் த்ரில்லர் )
பட்டி டிங்கரிங் மன்னன் அட்லி இடம் ஹாலிவுட் படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்தால் என்ன செய்வார் ? ஏற்கனவே மெகா ஹிட் ஆகிய ஹாலிவுட் படங்கள் பத்திலிருந்து 25 காடசிகள் உருவி இணைத்து கதம்பம் ஆக்கி ஒரு ஹிட் படம் கொடுப்பார் . அது மாதிரி தான் கீர்த்தி சுரேஷை சாவித்திரி ஆக நடிக்க வைத்து மகாநடி ( நடிகையர் திலகம்) என்னும் தெலுங்குப்படம் கொடுத்த இயக்குனர் நாக் அஸ்வின் மகாபாரதம் , ராமாயணம் , த டெர்மினேட்டர் ,அவெஞ்ச்சர்ஸ் ,டிரான்ஸபார்மெர்ஸ் ,ALITA ,BATTLE ANGEL (2019) , அம்புலிமாமா ,பாலமித்ரா, ரத்னபாலா கதைகள் எல்லாவற்றையும் ஒரு குடுவையில் போட்டு குலுக்கி ஒரு பிரம்மாண்டமான வெற்றிப்படம் தந்திருக்கிறார்
ஸ்பாய்லர் அலெர்ட்
மகாபாரதத்தில் குருக்ஷேத்திரப்போர் நடக்கும் தருணம் .துரோணாச்சாரியார் மகனாகிய அசுவத்தாமா கர்ப்பவதியான உத்திராவின் கருவை பிரம்மாஸ்திரா மூலம் அழிக்கிறார். இதனால் வெகுண்ட கிருஷ்ணர் ஒரு சாபம் இடுகிறார். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு உனக்கு மரணமே கிடையாது . இது வரம் அல்ல, சாபம் என்கிறார் . இதற்கு விமோசனமே இல்லையா? என கேட்ட்தும் கிருஷ்ணர் சொல்கிறார் " கலி யுகத்தில் கடவுள் ஆகிய நான் கல்கி அவதாரம் ஆக பூமியில் பிறப்பேன் .அதற்கு நீ தான் உதவி செய்வாய், என்னைக்கொல்ல நினைப்பவரிடம் இருந்து என்னைக்காப்பாற்றுவாய் , விமோசனம் பெறுவாய் என்கிறார்
அப்டியே அந்த காடசி கட் ஆகி 6000 ஆண்டுகள் கழித்து இப்போ கி பி 2898 ..உலகின் கடைசி நகரம் ஆன காசியில் கதை நடக்கிறது கங்கை ஆறு வற்றி விட்ட்து . தண்ணீர் பஞ்சம .வில்லன் கொடுங்கோல் ஆட்சி நடத்தி வருகிறான் நகரத்தில் உள்ள கர்ப்பவதிப்பெண்களின் கருவை சீரமாக தன உடம்பில் ஏற்றிக்கொண்டு ஒரு ஆராய்ச்சி செய்து வருகிறான்.
நாயகி கர்ப்பவதி . தான் கர்ப்பம் என்பது வெளியே தெரிஞ்சா ஆபத்து என மறைந்து வாழ்கிறார் . நாயகியின் வயிற்றில் வளர்வதுதான் தெய்வீகக்குழந்தை
அந்த தெய்வீகக்குழந்தைகாப்பாற்ற மகாபாரத கால அசுவத்தாமா , கர்ணன் ஆகிய இருவரும முயற்சிக்கிறார்கள் .அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக , கர்ணன் ஆக பாகுபலி புகழ் பிரபாஸ் நடித்திருக்கிறார் பாகுபலிக்குப்பின் தொடர் தோல்விகளை சந்தித்த இவருக்கு இந்தப்படமாவது கை கொடுத்தால் தேவலை முதல் பாதியில் டம்மி ரோலில் வரும் இவர் பின் பாதியில் கவனிக்க வைக்கிறார் ,இவருக்கு ஜோடியாக வரும் திஷா படடானியோ சுண்டலோ மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாத கேரக்ட்டர்
அசுவத்தாமா ஆக அமிதாப்பச்சன் கலக்கி இருக்கிறார் . ஆறே கால் அடி உயரம் கொண்ட அவரை எட்டு அடி உயரம் கொண்ட வராக காட்டினாலும் நம்ப முடிகிறது
வில்லன் ஆக கமல் ஹாசன் இரண்டே காடசிகளில் வருகிறார் .பூ விழி வாசலிலே ரகுவரன் , கேப்டன் பிரபாகரன் மன்சூர் அலிகான் , மாதிரி பயமுறுத்தும் வில்லன் எல்லாம் இல்லை .பார்க்கவே பரிதாபமாக இருக்கிறார் அடுத்த பாகத்தில் சம்பவம் இருக்கும் என கமல் ரசிகர்கள் ஆறுதல் சொல்கிறார்கள்
தெய்வீகக்குழந்தையை கருவில் சுமக்கும் அம்மா ஆக தீபிகா படுகோனே கச்சிதம் ஆன நடிப்பு
சில காட்சிகளே வந்தாலும் அன்னா பென் மனதில் பதியும் நடிப்பு
பசுபதி , துல்கர் சல்மான் ,பிரம்மானந்தம் , ஷோபனா ஆகிய பிரபலங்களும் உண்டு. ஆனால் அதிக வேலை இல்லை
இசை சந்தோஷ் நாராயணன் .பின்னணி இசையில் முத்திரை பதிக்க வாய்ப்பு
. கோத்தகிரி வெங்கடேஸ்வரா வின் எடிட்டிங்கில் படம் 3 மணி நேரம் ஓடுகிறது . முதல் பாதி ஜவ்வு ,பின் பாதி செம வேகம் .ஒளிப்பதிவு டுஜோர்ட்ஜெ ஸ்டொஜ்ஜில் கோவிச் .ஆங்கிலபபடங்களுக்கு இணையான பிரம்மாண்டம் , சி ஜி ஒர்க்ஸ் VFஎக்ஸ் ஒர்க்ஸ் பல இடங்களில் குட் , சில இடங்களில் சுமார் ரகம்
சபாஷ் டைரக்டர்
1 நீங்க படம் முழுக்க வர்றிங்க, அப்போ நீங்க தானே ஹீரோ ? என சொல்லி பிரயாசை நம்பவைத்தது
2 ரெண்டே ஸீனில் வந்தாலும் மிரட்டல் ரக வில்லன் நீங்க என கமலை நம்ப வைத்தது
3 அசுவத்தாமா கேரக்ட்டருக்கு அமிதாப்பச்சன் சரியாக இருப்பர் என்பதைக்கணித்து அவரை புக் செய்தது
4 ,ALITA ,BATTLE ANGEL (2019) , படத்தைத்தான் உல்டா பண்றோம் என்பது தெரியாமல் இருக்க பல ஹாலிவுட் பட காடசிகளை இணைத்தது
5 கர்ப்பவதி ரோலுக்கு நிஜ கர்ப்பவதியான தீபிகா படுகோனேவை புக் செய்தது
6 அமிதாப் பச்சன் சண்டை இடும்போது பறந்து விழு ம் அடியாட்களை அந்த சிறுவன் டாட்டா சொல்லும் இடம்
ரசித்த வசனங்கள்
1 சந்தோஷம் என்பது உள்ளே இருந்து வரணும் .நாம இருக்கற இடத்துல இருந்து வர்றது அல்ல
2 மறுபடியும் யுத்தம் ஆரம்பிச்சிடுச்சுனு நினைக்கிறேன்
இது யுத்தம் அல்ல , ஆயுத பூஜை
3 எங்கிருந்துடா வந்திங்க , முடியலடா சாமி என பிரபாஸ் பஞ்ச் டயலாக் பேசுகிறார். இது ஆடியன்ஸை நக்கல் பண்ணும் குறியீடா?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 மழை பெய்து எத்தனை வருடங்கள் ஆச்சு என ஒரு இடத்தில டயலாக் வருது .தண்ணீரே இல்லை என ஒரு இடத்தில டயலாக் வருது ஆனா சாப்பிட மட்டும் பழங்கள் கிடைப்பது எப்படி ?
2 வில்லன் கமல் கெட்டப் க்கு இயக்குனர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை இந்தியன் கமல் கெட்டப் + ஆளவந்தான் நந்தா மொட்டைக்கமல் கெட்டப் அட்டாச் பண்ணிட்டார் . இன்னும் புதிதாக யோசித்து இருக்கலாம்
3 காட்சி பிரம்மாண்டமாக இருந்தால் போதும் என நினைத்து திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார்கள் . எந்த கேரக்ட்ர் கூடவும் கனெக்ட் ஆகமுடிய வில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U/A
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சிறுவர் , சிறுமிகள் ரசிக்கலாம் தியேட்டரில் போய் பார்க்கும் அளவு ஒர்த் இல்லாத படம் . விகடன் மார்க் 50 குமுதம் ரேட்டிங் ஓகே . அட்ரா சக்க ரேட்டிங் 3 / 5
Kalki 2898 AD | |
---|---|
Directed by | Nag Ashwin |
Written by | Nag Ashwin |
Produced by | C. Ashwin Dutt |
Starring | Kamal Hassan Amitabh Bachchan Prabhas Deepika Padukone Disha Patani |
Cinematography | Djordje Stojiljkovic |
Edited by | Kotagiri Venkateswara Rao |
Music by | Santosh Narayanan |
Production company | |
Release date | 27 june 2024 |
Running time | 199 Minutes |
Country | India |
Languages | Telugu Hindi English |
Budget | ₹600 crore[2] |
0 comments:
Post a Comment