Wednesday, July 03, 2024

GURUVAYOOR AMBALANADAIYIL (2024) -குருவாயூர் அம்பல நடையில் மலையாளம் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா )@ டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்

 


  குருவாயூர் கோயில்  முன்புறம்   என்பதுதான்  டைட்டிலுக்கான  தமிழ்  அர்த்தம் ஒரு சீரியஸான  கதைக்கருவை காமெடியாக எப்படி சொல்வது  என்பதில்  விற்பன்னர்கள் மலையாளிகள் .90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான  இப்படம் ரிலீஸ்  ஆன  முதல்  வாரத்திலேயே 50 கோடி வசூலித்தது  


16/5/2024      அன்று திரை அரங்குகளில் ரிலீஸ்  ஆன  இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி யில்  8/6/2024 முதல் காணக்கிடைக்கிறது                 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனுக்கு ஒரு காதல் தோல்வி  உண்டு . 5 வருடங்களாக முன்னாள் காதலி நினைவாகவே இருந்தவன் இப்போது பெற்றோர் பார்த்த பெண்ணை மணக்கத்தயார் ஆகி விட்டான் . வருங்கால மனைவியின் அண்ணன் நாயகனுக்கு  நல்ல நண்பன்  ஆகி விடுகிறான் . இருவரும் அலைபேசி மூலம் பேசி தங்கள் நட்பை வளர்த்துக்கொள்கிறார்கள் . மாப்பிள்ளை , மச்சினன் இருவரது ஒற்றுமையைப்பார்த்து அனைவரும் வியக்கிறார்கள் 


 தன வருங்காலக்கணவன் தன்னை விட தன  அண்ணனிடம் தான் அதிகம் பேசுகிறான் என  மணப்பெண்ணுக்கு செம காண்டு .அண்ணனின்  திருமண  வாழ்க்கை சுமுகமாக இல்லை . யாரோ எழுதிய மொட்டைக்கடுதாசியை வைத்து அண்ணன் மனைவியுடன் சண்டை போட்டு அவளை அவள் அம்மா  வீட்டுக்கு அனுப்பி விடுகிறான் 


மாப்பிள்ளை -மச்சினன் இருவரும்  நேரில் சந்திக்கும்போதுதான் ஒரு  உண்மை தெரிய வருகிறது ,நாயகனின் முன்னாள் காதலி தான் நாயகன் கட்டிக்கொள்ள இருக்கும் மணப்பெண்ணின் அண்ணி .இதற்குப்பிறகு நடக்கும் காமெடி களேபரங்கள் தான் மீதி திரைக்கதை 


நாயகன்  ஆக பஷில் ஜோசப் கலக்கி இருக்கிறார் .பாள்தூ  ஜான்வர் , கட்டா குஸ்தி ஆகிய  படங்கள் மூலம் நம்  மனம் கவர்ந்தவர் .முதல் பாதி முழுக்க இவர்  ராஜ்ஜியம் தான் 


நாயகனின் ,மச்சினன் ஆக பிருத்விராஜ் சுகுமாறன் .முரட்டுத்தனம் , முட்டாள் தனம் , சமாளிப்பு என  பல  பரிமாணங்களில் ,கோணங்களில்  நடிக்க வாய்ப்பு 


நாயகி  ஆக  அனஸ்வரா ராஜன்  மீரா ஜாஸ்மின் சாயலில் அழகாக  இருக்கிறார் .புன்னகையும், கண்களும் இவரது பிளஸ்  . நாயகியின் அண்ணியாக நாயகனின்   முன்னாள் காதலி ஆக நிகிலா விமல் பண்பட்ட   நடிப்பு 


யோகிபாபு காமெடிக்கு , ஆனால் வழக்கம்  போல் அவருக்கு  காமெடி  வரவில்லை . கடுப்பு தான் வருகிறது 


இவர்கள் போக  ஏகப்படட   நட்சத்திர பட்டாளம் .கடலோரக்கவிதைகள் ரேகா கூட ஓவர்  மேக்கப்ஓமனா வாக வருகிறார்  

தீப பிரதீப் எழுதிய   திரைக்கதைக்கு உயிர்  கொடுத்து இயக்கி இருப்பவர்  விபின் தாஸ் 


இயக்குநர் சுந்தர் சி  யின் ரசிகராக விபின் தாஸ்   இருப்பார் போல . திரைக்கதை பாணி , க்ளைமாக்சில் கூட்டத்தைவைத்துக்காமெடி  என பல இன்ஸ்பிரேஷன்கள் 


ஜான் குட்டியின் எடிட்டிங்கில் படம் இரண்டேகால் மணி நேரம் ஓடுகிறது . முதல் பாதி கலகல காமெடி. பின் பாதி கொஞ்ச்ம இழுவை . நீரஜ் ரேவி யின் ஒளிப்பதிவில் இரு நாயகிகளும் க்ளோசப் காடசிகளில் அழகு .


இசை அங்கித் மேனன் , தப்ஸி .கச்சிதம் பின்னணி இசை அருமை 


சபாஷ்  டைரக்டர்


 1   ஜி வி பிரகாஷ்  , சித்தார்த் நடித்த சிவப்பு மஞ்சள்  , பச்சை படம் போல  மாப்பிள்ளை - மச்சினன் உறவு பற்றி சொல்லும் படம்  ஆக  ஆரம்பித்து   வேறு  ஒரு  கோணத்தில் , காமெடி  களத்தில்  திரைக்கதை பயணிப்பது  அருமை 


2  நாயகன் ,நாயகனின் ,மச்சினன்  இருவரது கேரக்டர் டிசைன் , நடிப்பு அட்டகாசம் 


3   இரு  நாயகிகளின் ஆடை வடிவமைப்பு அசத்தல் , கண்ணியம் 


4 கல்யாண மாப்பிள்ளை  ஆன  நாயகனே தன்   திருமணத்தை நிறுத்த  போடும் திட்டங்கள்  சொதப்பல் ஆவது கலக்கல் காமெடி 


  ரசித்த  வசனங்கள் 


1  பொண்ணுங்க உங்களுக்கு  மொழி தெரியுதோ இல்லையோ யாராவது நக்கல் அடிச்சா  சிரிச்சிட வேண்டியது 


2 இந்த உலகத்துலயே  உன்னதமான உறவு என்ன தெரியுமா? மச்சினன் - மாப்பிள்ளை  பந்தம் தான் 


3  பழைய அன்பை எல்லாம்  அவ்வளவு ஈஸியா மறந்துட முடியாது 


4   என்னோட பட்டப்பெயரை  அவள் கிட்டே போட்டுக்கொடுத்தது யாரு?


நான் இல்லை .என் பட்டப்பெயரைதான் அவ கிட்டே  சொன்னேன் 


அப்படி என்ன பேரு உனக்கு ?


பருப்பு சாதத்தோட தம்பி 


5  சபரிமலைக்குப்போறப்பப்பொய் சொன்னா  புலி புடிச்சிடும் 


புலிக்குப்பல வேலை இருக்கும் 


6  பொய் சொல்லி கல்யாணத்தை நிறுத்தும் அளவு அந்தப்பொண்ணு அவளோ ஒர்த் இல்லை 


7  சில  நேரங்களில்   மனசுக்குப்பிடிச்ச  விஷயத்தை  விட வேண்டி வரும் 


8 சாரி டாடி , ஒரு அப்பாவோட முகத்தைப்பார்த்து  அந்த விஷயத்தை  சொல்ல முடியாது 


அப்போ அம்மா முகத்தைப்பார்த்து  சொல்லு 



9  என்ன என்ன பேஷியல் இங்கே இருக்கு ?


பப்பாயா , சாத்துக்குடி ....


 இது  என்ன சலூன் கடையா? ஜூஸ் கடையா?  


10  உள்ளே வரும் முன் கதவைத்தட்டிட்டு  உள்ளே வரணும், அதுதான்  மரியாதை 


சாரி எனக்கு அந்த  மூட் இல்லை 


11  இவன் முகத்த்துல ஒரு  திருட்டுக்களை இருக்கு 

உங்க முகத்துல  கூட தான் இருக்கு 


12  இந்த கல்யாணம் நிக்க ஒரு வழி இருக்கு 


என்ன?


 நாளை நாம இரண்டு பெரும் குருவாயூர் கோயில் போய் சாமி கிட்டே இந்தக்கல்யாணம்  தானா நிக்கனும் னு வேண்டிக்குவோம் 


13  நான் ஒரு சினிமாட்டோ கிராபர் இல்லைனு  யார் கிட்டயும் சொல்லிடாதீங்க 


நீங்க தான் சினிமாட்டோ கிராபர் இல்லயே 


அதைத்தான்  யார் கிட்டயும் சொல்லிடாதீங்க  அப்டினேன் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மெகா  ஹிட் பாட்டான அழகிய லைலா   வின் தீம் மியூசிக் அவ்வப்போது  வந்து செல்வது ஏனோ ?


2   5  வருட காதல் தோல்வியில் சோகமாக இருக்கும் நாயகன் பேசும் படம் கமல் போல க்ளீன் ஷேவ் முகத்துடன்  இருப்பது . மேரேஜ் நடக்கும்போது வாழ்வே மாயம் கமல் போல  தாடி மீசை கெட்டப்லயும் இருப்பது எனோ? 


3   முதல் பாதி திரைக்கதை ராக்கெட் மாதிரி வேகமாகப்போவதும் , பின்பாதி திரைக்கதை சுத்தி அடிப்பதும் ஏனோ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- க்ளீன்  யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  காமெடிப்படங்களை ரசிப்பவர்கள் , கல கலப்பை  விரும்புபவர்கள் அவசியம் காணலாம்  ரேட்டிங்  3/ 5 


குருவாயூர் அம்பலநடையில்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்விபின் தாஸ்
எழுதியவர்தீபு பிரதீப்
உற்பத்தி
  • சுப்ரியா மேனன்
  • முகேஷ் ஆர். மேத்தா
  • சி.வி.சாரதி
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுநீரஜ் ரேவி
திருத்தியவர்ஜான்குட்டி
இசைஅங்கித் மேனன்
தப்ஸி
உற்பத்தி
நிறுவனங்கள்
மூலம் விநியோகிக்கப்பட்டதுஏபி இன்டர்நேஷனல்
வெளிவரும் தேதி
  • 16 மே 2024
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
திரைப்பட நுழைவு சீீட்டு விற்பனையகம்மதிப்பீடு ₹90 கோடி [

0 comments: