Friday, July 12, 2024

அஞ்சாமை (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் (மெலோ டிராமா )

 


  நீட் விலக்கு ரகசியம் எனக்குத்தெரியும்  என்று சொன்ன அரசியல்வாதிகள்  கடைசி வரை அந்த ரகசியத்தை வெளியிடாமலேயே  கமுக்கமாக இருக்கும் சூழலில் ஒரு அறிமுக இயக்குநர்  அவரளவில் நீட் பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டுள்ளார் . சொல்ல வந்த கருத்தை   சிறப்பாக  காட்சிப்படுத்திய விதத்தில் கவனம் ஈர்க்கிறது  ஒரு டாக்டர்தான்  படத்தின் தயாரிப்பாளர்  என்பது கூடுதல் சுவராஸ்யம் 


7/6/2024  முதல் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இபபடம் நல்ல வரவேற்பைப்பெற்றது .இந்த வாரக்கடைசியில் ஓடிடியில் வெளி வர வாய்ப்பிருக்கிறது 

                     


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் ஒரு சிறுவன் ,அவனது அப்பா  ஒரு பூ வியாபாரி , அம்மா,தங்கை என ஒரு அழகிய குடும்பம் . நாயகனுக்கு  நீட் தேர்வில்  பங்கு பெற ஆசை .விண்ணப்பிக்கிறான் . தமிழ் நாட்டில் இருக்கும்  அவனுக்கு வட மாநிலம் ஆன ஜெய்ப்பூரில் தேர்வு மையம்  ஒதுக்கப்படுகிறது . அப்பாவுடன்  கிளம்புகிறான் .போகும் வழியில் பல டென்ஷன்களுடன்  கடந்தவன்  எப்படியோ  ஒரு வழியாகத்தேர்வு  எழுதி விடுகிறான் .ஆனால் அதீத மன அழுத்தத்தின் காரணமாக  அவனது அப்பா மாரடைப்பில் மரணம் அடைகிறார் 


தன அப்பாவின்  மரணத்துக்குக் காரணம்  இவர்கள் தான்  என சிலரின் மீது போலீசில் புகார் கொடுக்கிறான் கோர்ட்டில் கேஸ் நடக்கிறது . பின் என்ன ஆனது ?அவனுக்கு நீதி கிடைத்ததா? என்பது மீதி  கதை 


நாயகன் ஆக கிருத்திக் மோகன் நடித்திருக்கிறார். உணர்ச்சிகரமான நடிப்பு . அப்பாவாக  விதார்த் அருமையான  குணச்சித்திர நடிப்பு இவருடையது . திறமை இருந்தும்  , நல்ல கதைத்தேர்வு அறிவு இருந்தும் ஏனோ அந்த  அளவு சோபிக்காமல் போன  நல்ல  நடிகர்களில் விதார்த்தும் ஒருவர்.( இன்னொருவர்  அருண் விஜய்) 


அம்மாவாக வாணி போஜன் கச்சிதம் . நாயகனுக்கு உதவும் போலீஸ்  ஆஃபீசராக , பின்  வக்கீலாக  மாறும்  ரகுமான் பொருத்தமான  தேர்வு 


நீதிபதி ஆக வரும்  பாலச்சந்திரன்  பல இடங்களில்  சபாஷ் போட வைக்கிறார் .


ராம் சுதர்சனின்  எடிட்டிங்கில் படம் 121  நிமிடங்கள்  ஓடுகின்றது , ஆனால்  பின்  பாதியில் காட்சிகள்  நீளம் /


கார்த்திக்கின்  ஒளிப்பதிவில்  காட்சிகள்  கண்ணைக்கவர்கின்றன


பாடலக்ளுக்கான  இசை  ராகவ் பிரசாத் .பரவாயில்லை . பின்னணி இசை கலாசந்திரன் . குட் 


கதை , வசனம், இயக்கம்  சுப்புராமன். சமூகத்தின் மேல்  அக்கறை  கொண்ட ஒருவரால் தான்  இது போன்ற  படம்  இயக்க  முடியும்    


சபாஷ்  டைரக்டர்


1  நாயகன்  தன்  அப்பாவுடன்  ரயிலில்  பயணிக்கும்  காட்சிகள்  நாமே  அவர்களுடன்  பயணிப்பது  போல  ஒரு  உணர்வு  உருவாவது  இயக்கத்திற்க்குக்கிடைத்த  வெற்றி 


2  விதார்த்தின்  கேரக்டர்   டிசைன்  அருமை . அவர்  மன அழுத்தத்துக்கு ஆளாவது, மிகக்களைப்பாக உணர்வது  அனைத்தையும்  மனதுக்கு  நெருக்கமாக படமாக்கி  இருப்பது  அருமை 


3  வசனம்  பல  இடங்களில்  சமூக சீர்திருத்தப்பார்வையில்  அமைந்திருக்கிறது 



  ரசித்த  வசனங்கள் 


1   ஒரு அப்பா 100 வாத்தியார்களுக்கு சமம் 


2 செடி வளரும்போது ஆடு , மாடு மேயும் ,அதே செடி வளர்ந்து மரம் ஆன பின்  அதன் நிழலில் அதே ஆடு மாடு வந்து இளைப்பாறும் 


3 பணம்  இருப்பவர்களுக்கு ஒரு சட்டம்,இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம்


4  சில விஷயங்களில்  தரப்படும் இழப்பீடு என்பது நடந்த தப்பை  மறைப்பதற்கான லஞ்சம் 



5  கல்வியைகஷ்டப்பட்டு தான் படிக்கணுமா? 


6 இந்த மீடியாக்காரங்க முக்கியமான  செய்தியை சின்னதாதான் போடுவாங்க 


7“சிலம்பம் கத்துட்டு வந்து கத்தி சண்ட போன சொன்னா எப்டி?”, “தகுதித் தேர்வுதான் முடிவென்றால், எதற்கு பள்ளிப் படிப்பு


8  ரயிலில் எதற்கு ரிசர்வேஷன், அன்ரிசர்வேஷன், ஏசி என பாகுபாடு? தகுதித் தேர்வை போல எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான சீட்டை ஒதுக்க வேண்டியது தானே


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   அவ்ளோ  செலவு  பண்ணி  தேர்வுக்குத்தயார்  ஆகிறவர்கள்  ரயிலில் போகும்போது  ரிசர்வ்  பண்ணியோ , தட்காலில்  புக்  செய்தோ  போகாமல்  அன் ரிசர்வ்டு  கம்பார்ட்மெண்ட்டில்  பயணிப்பது ஏன்?


2   தேர்வு  நடக்கும்  நாள்  அன்று  தான்  போய்ச்செருவது  போல  கிளம்பனுமா? ஒரு  நாள்  முன்பே  போகலாமே?  லாட்ஜில்  தங்க  பணம்  இல்லை   எனில்  அரசாங்க பூங்காவில் , ரயில்  நிலையத்தில்  தங்கி  சாவகாசமாக  போகலாமே? கடைசி  கட்ட  நெருக்கடியில்  ஏன்  போக  வேண்டும் ?


3   ஒரு  எக்சாம்  நடக்கிறது ,  அதற்கான  ரூல்ஸ்  என்ன  என்பது  அறிவிக்கப்பட்டிருக்கிறது , அதை  ஃபாலோ  பண்ண  வேணாமா? சிவப்பு  சட்டை  அணிந்து  வந்து   அதை  அணியுக்கூடாது  என்பது  தெரியாது  என  ஒரு  மாணவன்  குறை  சொல்வது  சரி  இல்லை . படிச்சவன்  தானே?  ரூல்ஸ்  தெரியாம  ஏன்  வர்றே? என  கேட்கத்தோன்றுகிறது 


4  எக்சாம்  நடக்கும்போது  லேட்டாக  வந்த  விதார்த்  ஒருவர்  காலில்  விழுவது  எல்லாம்  டிராமா  பார்ப்பது  போல்  உள்ளது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சில  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  இருந்தாலும்  தரமான  படம்  தான் , பார்க்கலாம்  ரேட்டிங்  3 . 5 


அஞ்சாமை
Anjaamai
இயக்கம்எஸ். பி. சுப்புராமன்
தயாரிப்புஎம். திருநாவுக்கரசு எம்டி
கதைஎஸ். பி. சுப்புராமன்
இசை
  • பாடல்கள்:
  • இராகவ் பிரசாத்
  • பின்னணி இசை:
  • கலாசந்திரன்
நடிப்புவிதார்த்
வாணி போஜன்
ரகுமான்
கார்த்திக் மோகன்
ஒளிப்பதிவுகார்த்திக்
படத்தொகுப்புஇராம் சுதர்சன்
கலையகம்திருச்சித்திரம் புரொடக்சன்சு
விநியோகம்டிரீம் வாரியர் பிக்சர்சு
வெளியீடு7 சூன் 2024
ஓட்டம்121 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: