10/5/2024 முதல் திரை அரங்குகளில் வெளியான இப்படம் இப்போது அமேசான் பிரைம் + ஆஹா தமிழ் ஓடிடி ஆகிய தளங்களில் காணக்கிடைக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் சின்ன வயதில் இருந்தே பல கொடுமைகளைக்கண்முன் கண்டவன் . அப்பா சரி இல்லை .அம்மாவை அவன் கண் முன் அப்பா கொடுமைப்படுத்துவார் .அம்மாவின் கொடூர மரணத்துக்கு அவனது அப்பாதான் காரணம் . இந்த வடு அவன் மனதில் பெரிய பாதிப்பை உண்டு பண்ணி அவனை சைக்கோ ஆக்குகிறது . பெரியவன் ஆனதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிறான். அவனுக்குக்கீழ் பணியாற்றும் ஆட்களைக்கொடுமைப்படுத்துகிறான் . இப்படி வில்லனின் கேரக்டர் டிசைன் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு எக்சிக்யூட் செய்யப்பட்டுள்ளது
நாயகன் ஒரு சித்த மருத்துவர் . இயற்கை நல விரும்பி . மிக அமைதியானவர் .நாயகி ரிசார்ட் ஒன்றில் மேலாளராகப்பணி புரிகிறார் . இருவரும் சில சந்திப்புகளில் பரஸ்பரம் விரும்புகிறார்கள் .மற்றவர்கள் சந்தோஷமாக இருந்தாலே வில்லனுக்குப்பிடிக்காது,அதுவும் நாயகன் , நாயகி இருவரும் காதலிப்பது அவனுக்கு அறவே பிடிக்கவில்லை . நாயகன் இதற்கு முன் வில்லனைக்கண்டதில்லை . ஆனால் வில்லனுக்கு நாயகனைத்தெரிந்திருக்கிறது .ஒரு பகையும் இருக்கிறது .வில்லனுக்கும், நாயகனுக்கும் இருக்கும் முன் பகை என்ன? முன் பின் கண்டிராத வில்லனுக்கு நாயகன் எப்படிப்பகையாளி ஆனான் என்பது க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்
வில்லன் ஆக சுஜித் சங்கர் அற்புதமாக நடித்திருக்கிறார் . ஒரு ரகுவரானோ , பிரகாஷ் ராஜோ செய்ய வேண்டிய ரோல் . சர்வ சாதாரணமாக இவர் அந்த ரோலில் கலக்கி இருக்கிறார்.
நாயகன் ஆக அர்ஜுன் தாஸ் . மிக அமைதியான ரோலில் படம் முழுக்க வருபவர் பிளாஷ்பேக்கில் ஆக்சன் காட்டுவது குட்
நாயகி ஆக தான்யா ரவிச்சந்திரன் குடும்பப்பாங்கான தோற்றம் . கண்ணிய உடை அழகு. ஆனால் அவரை தம் அடிப்பவராக , போதைப்பழக்கம் உள்ளபவராக காட்டியது தேவை அற்றது
வில்லனின் மனைவி ஆக ரேஷ் மா வெங்கடேஷ் .பாவமான தோற்றம் . பரிதாபம் வர வைக்கும் நடிப்பு
சைக்கலாஜிக்கல் டாக்டர் ஆக ரம்யா சுப்ரமணியம் கச்சிதம்
இசை எஸ் தமன் . இரண்டு பாடல்கள் ஓக்கே ரகம் .பின்னணி இசை கச்சிதம் .ஒளிப்பதிவை நான்கு பேர் கவனித்து இருக்கிறார்கள் . கொள்ளை அழகு லொகேஷன்கள் .,இயற்கைக்காட்சிகளை ரசிப்பவர்களுக்கு மிகவும் பிடிக்கும்
விஜே சாபு , ஜோசப் இருவரும் எடிட் செய்து இருக்கிறார்கள் . இரண்டு மணி நேரம் 15 நிமிடங்கள் படம் ஓடுகிறது . பிளாஷ்பேக் காட்சி கொஞ்ச்ம ஸ்பீடு பிரேக்கர்
கதை , திரைக்கதை எழுதி , இயக்கி தயாரித்து இருப்பவர் இயக்குனர் சாந்த குமார்
சபாஷ் டைரக்டர்
1 இயக்குனர் ஹரி மாதிரி காமெராவை ஆட்டாமல் அமைதியாகக்கதை சொல்லிய பாங்கு
2 வில்லனின் கேரக்ட்டர் டிசைனை வடிவமைத்த விதம் , அதை எக்சிக்யூட் செய்த விதம்
3 முதல் பாதி திரைக்கதை சுவராஸ்யம்
4 வில்லன் வரும் இடங்களில் பகிரும் பீதி ஊட்டும் பிஜிஎம்
ரசித்த வசனங்கள்
1 பாத ரசத்தை ஏன் அரசன் என சொல்கிறார்கள் ? அனைத்து கேரக்ட்டர்களையும் அரசன் உள் வாங்கிக்கொள்வது போல பாத ரசமும் செயல்படுவதால்
2 நம்ம வீட்டுப்பெண்கள் லவ் மேட்டர்ல வீட்ல மாட்டிக்கிட்டா உடனே கல்யாண சம்பந்தம் சொந்தத்துல பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க
3 கற்பனை பண்ணின வாழ்க்கைக்கும், வாழும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை , இருக்காது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லன் ஒரு சைக்கோ பேஷண்ட் , அவனுக்கு எப்படி போலீஸ் வேலை கிடைத்தது ? டிபார்ட்மெண்ட்டில் பலரும் அவனால் பாதிக்கப்பட்டிருக்கும்போது யாருமே புகார் தர்லையா?
2 வில்லன் தன ஹையர் ஆபிசரைக்கோலை செய்தது யாருக்குமே தெரியாமல் போவது எப்படி? சந்தேகம் கூட வராதது எப்படி ?
3 திருமனம் ஆகி தன கணவன் வீ ட்டுக்குப்போகும் பெண் தன சூட்கேசில் முன்னாள் காதலனுடன் ஜோடியாக இருக்கும் போட்டோ வைக்கொண்டு போகுமா?
4 வில்லன் ஒரு சைக்கோ என ஊரே பேசுகிறது , ஆனால் பெண் வீட்டாருக்கு அது தெரியாமல் இருக்கு. விசாரிக்க மாட்டார்களா?
5 வில்லன் மீது மனைவியைத்தற்கொலைக்கு தூண்டிய வழக்கு பதியாதது ஏன்?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U/A
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ரொமாண்டிக் மூவி ரசிகர்கள் , த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம் . பொறுமை அவசியம் .ரேட்டிங் 2.75 / 5
Rasavathi | |
---|---|
Directed by | Santhakumar |
Written by | Santhakumar |
Produced by | Santhakumar |
Starring | Arjun Das Tanya Ravichandran Reshma Venkatesh Sujith Shankar |
Cinematography | Saravanan Ilavarasu Shiva GRN |
Edited by | V. J. Sabu Joseph |
Music by | S. Thaman |
Production companies | DNA Mechanic Company Saraswathi Cine Creations |
Distributed by | Sakthi Film Factory |
Release date |
|
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment