ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனின் நண்பனின் தங்கை ஒருவனைக்காதலிக்கிறாள் . காதலனுடன் டூர் போகிறாள் . போன இடத்தில் ஆள் மிஸ்ஸிங் அவள் காதலனால் 2 மாத கர்ப்பிணி ஆக வேறு இருக்கிறாள் . அதனால் காதலன் தான் அவளைப்போட்டுத்தள்ளி இருப்பானோ? என ஒரு டவுட் நாயகன் - ன் நண்பன் வெளி நாட்டில் இருப்பதால் நண்பனுக்காக நாயகன் அந்த மர்மத்தை துப்பு துலக்க களம் இறங்குகிறான்
நண்பனின் தங்கை டூர் போன இடத்துக்கு நாயகன் வருகிறான் .
நண்பனின் தங்கைக்கு தான் பரிசாகக்கொடுத்த நெக்லஸை ஒரு பெண் அணிந்து கொண்டு ஸ்கூட்டியில் போவதைப்பார்க்கிறான் . அந்தப்பெண்ணை பின் தொடர்ந்து செல்கிறான் . அந்தப்பெண் தான் படத்தின் நாயகி . நாயகன் நாயகி மீது காதல் வசப்படுகிறான் . நாயகி எஸ் ஆர் , நோ எதுவும் சொல்லாமல் தனது பெற்றோரைப்பார்த்துப்பேசச்சொல்கிறாள்
நாயகன் வந்த வேலையை விட்டு விட்டு தன சொந்த வேலையைப்பார்த்துக்கொண்டிருக்கிறானே என அவன் நண்பனுக்குக் காண்டு .இதற்குப்பின் நடக்கும் திருப்பங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகன் -நாயகி ஆக விஜய ராகவேந்திரா + தேஜஸ்வினி நடித்திருக்கிறார்கள் . இதில் நாயகன் வழக்கமான ஆக்சன் ஹீரோ செய்யும் எல்லா வேலைகளையும் செய்கிறான்
நாயகி ஆக வரும் தேஜஸ்வினி கொஞ்சம் கீர்த்தி சுரேஷ் சாயல் , கொஞ்சம் மீரா ஜாஸ்மின் சாயல் என காக்ட்டெய்ல் தேவதை ஆக வருகிறார் . அவரது கண்ணியமான கிளாமர் ரசிக்க வைக்கிறது
சபாஷ் டைரக்டர்
1 முதல் பாதி கதை லவ் ஸ்டோரி போல செல்வதால் நேரம் போவதே தெரியவில்லை
2 ஜோக் அருவி யை பல கேமரா கோணங்களில் காட்டிய விதம் கொள்ளை அழகு
3 க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்
ரசித்த வசனங்கள்
1 இந்த அம்மன் ரொம்ப சக்தி உள்ளது . திருமணம் ஆகாத ஜோடி இங்கே வந்தா திருமணம் ஆகும் , திருமணம் ஆன ஜோடி இங்கே வந்தா மீண்டும் ஒரு முறை திருமணம் ஆகும் ,
2 இவன் வாட்ச் மேனா ? எமனோட கீப்போட பையன் மாதிரி இருக்கிறான்
3 பொதுவா டூரிஸ்ட்டா வர்றவங்க ஊருக்குபோய்ச்சேர்ந்தா போதும்னுதான் நினைப்பாங்க , போலீஸ் கிட்டே போக மாட்டாங்க
4 இந்த ஊரைப்பிடிச்ச முதல் தரித்திரம் இவன் தான்னு சொல்றீங்களே? அப்போ இன்னும் இதே மாதிரி பல தரித்திரங்கள் இங்கே இருக்கா?
5 என்ன ? விதி இங்கே டபுள்காட் போட்டு படுத்திருக்கு ?
6 நீ சாப்ட்வெர் தான் , என் அண்டர்வேர் கதை தெரியுமா?
7 சுவரை உடைக்கும் அளவு உங்க தலை பலமா இருக்கலாம் ,ஆனா உங்க தலை உடையாம இருக்கணுமே?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஒரு குடும்பத்தில் பாட்டி , அம்மா,அப்பா மூவரும் சேர்ந்து 100 கொலைகள் , கொள்ளைகள் செய்து விட்டு அந்த வீட்டுக்கு வாரிசாக இருக்கும் நபர் பார்வைக்கு எதுவுமே தெரியாமல் வாழ முடியுமா?
2 டூரிஸ்ட் ஸ்பாட்டில் போலீஸ் , பாரஸ்ட் ஆபிசர்ஸ் யாரும் விசிட் அடிக்க மாட்டார்களா?
3 கொள்ளை அடிக்கும் நகையை உருக்கி தங்கமாக விற்று புது டிசைனில் நகை செய்து போடுவது பாதுகாப்பா? அப்படியே அதே நகையை அணிவது பாதுகாப்பா?
4 வில்லனின் [பிளாஷ்பேக் கேவலம் .தன செய்கையை நியாயப்படுத்த ஒரு சோகக்கதை சொல்வது கொடுமை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஒளிப்பதிவு , அருவி , நாயகியின் அழகு இந்த மூன்றையும் ரசிக்க விரும்புபவர்கள் பார்க்கலாம் . ரேட்டிங்க் 2.5 / 5
0 comments:
Post a Comment