Tuesday, June 25, 2024

NADANNA SAMBHAVAM (2024) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்)

     

NADANNA SAMBHAVAM (2024) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்)
ஒரு சின்னப்பிரச்சனையை எப்படி ஊதிப்பெரிதாக்க முடியும் என்பது அரசியல்வாதிகளுக்குக்கை வந்த கலை , அது போல ஒரு சாதாரண ஒன் லைன் ஸ்டோரியை எப்படி சுவராஸ்யமான திரைக்கதை ஆக்க முடியும் என்பதில் விற்பன்னர்கள் கேரள வாசிகள்
அக்னி நட்சத்திரம் (1988) , டிரைவிங்க் லைசென்ஸ் (2019) , அய்யப்பனும் கோஷியும் (2020) ஆகிய படங்கள் இரு நாயகர்களுக்கு இடையேயான ஈகோ கிளாஸ் என்ற கதைக்கருவை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு பிரம்மாண்ட வெற்றி பெற்ற படங்கள் . அதே பாணீயில் பொறாமையால் ஒருவன் இன்னொருவனை எப்படி அழிக்க நினைக்கிறான் என்பதுதான் இந்தப்படத்தின் கதைக்கரு
ஸ்பாய்லர் அலெர்ட்
ஒரு அபார்ட்மெண்ட்டில் வில்லன் தன் மனைவி , குழந்தையுடன் வசித்து வருகிறான் . இவன் ஒரு ஆணாதிக்கவாதி . அங்கே குடி இருக்கும் பலரும் அவரவர் மனைவியை மதிக்காதவர்கள் . திமிர் பிடித்தவர்கள் . அங்கே புதிதாகக்குடி வருகிறான் நாயகன் . நாயகனுக்கு மனைவி , ஒரு பெண் குழந்தை உண்டு . மனைவி காலேஜ் லெக்சரர். நாயகன் வீட்டு வேலைகளைப்பார்த்துக்கொள்கிறான். எல்லோருடனும் சகஜமாகப்பழகக்கூடியவன்
நாயகன் தன் மனைவியுடன் அன்னியோன்யமாக இருப்பது , சகஜமாகப்பேசுவது இவை எல்லாம் அனைத்துப்பெண்களையும் கவர்கிறது
நாயகனின் இந்த நல்ல குணத்தைக்கண்டு அபார்ட்மெண்ட்டில் இருக்கும் பல பெண்களும் நாயகனைப்பற்றி சிலாகிக்கிறார்கள் . அவனுடன் பேச ஆசைப்படுகிறார்கள் . வில்லனுடைய மனைவியும் நாயகனுடன் நட்பு ரீதியாகப்பேசுகிறாள் . இது வில்லனுக்குப்பொறுக்கவில்லை
எப்போ ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்? நாயகனைப்பழி தீர்க்கலாம் என காத்திருக்கிறான் . வில்லனின் நண்பன் அவ்வப்போது நாயகன் பெண்களுடன் பேசுவது , சிரித்தபடி நடந்து வருவது இவற்றை எல்லாம் வீடியோக்கள் எடுத்து வைக்கிறான்
ஒரு நாள் ஒரு சேல்ஸ் கேர்ள் புத்தகம் விற்க நாயகன் வீட்டு வாசலில் நிற்கிறாள் . நாயகனும் புக் வாங்குகிறான். அப்போது அந்த சேல்ஸ் கேர்ள் உங்க வீட்டு பாத்ரூமை யூஸ் பண்ணிக்கலாமா? என கேட்க நாயகனும் அவளை வீட்டுக்குள் அனுமதிக்கிறான்
இதை வில்லனின் நண்பன் பார்த்து வில்லனிடம் போட்டுக்கொடுக்க வில்லன் நாயகனை சிக்க வைக்கத்திட்டம் இடுகிறான், விஷயம் போலீஸ் ஸ்டேஷன் வரை செல்கிறது
இந்த களேபரத்தில் வில்லனின் மனைவி அவள் தோழியுடன் பேசிய அந்தரங்க விஷயம் ஒன்று வெளிவருகிறது . மேலும் சிக்கல் ஆகிறது . இவற்றை எல்லாம் நாயகன் , வில்லன் இருவரும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக பிஜூ மேனன் அடக்கி வாசித்து இருக்கிறார். இதில் அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புக்குறைவே. ஆனால் நிறைவாக செய்திருக்கிறார்
வில்லன் ஆக சுராஜ் வெஞ்சார மூடு பின்னிப்பெடல் எடுத்திருக்கிறார். அவரது முகத்தில் பொறாமைத்தீ கொழுந்து விட்டு எரிகிறது . பாடி ஃபிட்னெஸ் , உடல் மொழி அனைத்தும் அற்புதம்
நாயகனின் மனைவி ஆக , வில்லனின் மனைவி ஆக முறையே ஸ்ருதி ராமச்சந்திரன் , லிஜோ மோல் ஜோஸ் நடித்திருக்கிறார்கள் . நிறைவான நடிப்பு
ஜாபர் இடுக்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்
விஷ்ணு நாராயணன் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் அங்கித் மேனண் தான் இசை . பின்னணி இசையில் முத்திரை பதிக்கிறார்
சைஜூ ஸ்ரீதரன் எடிட்டிங்கில் படம் 112 நிமிடங்கள் ஓடுகின்றன. முதல் பாதி ஸ்லோவாகவும் பின் பாதி ஸ்பீடாகவும் திரைக்கதை நகர்கிறது
சபாஷ் டைரக்டர்
1 வில்லன் திடீர் என நாயகன் வீட்டுக்குள் புகுந்து தாக்க என்ன காரணம் என எல்லோரும் குழம்பி இருக்கும்போது அதற்கான ஃபிளாஸ்பேக்கை வெளிப்படுத்தும் இடம் வாவ்
2 வில்லனின் மனைவி , அவள் தோழி இருவரும் அந்தரங்கமாகப்பேசும்போது அதை அவர்களுக்கே தெரியாமல் செல் ஃபோனில் வில்லன் ரெக்கார்டு பண்ணுவது , அந்த உரையாடலை போலீஸ் ஸ்டேஷனில் அவுட் ஆக்குவது திக் திக் இடங்கள்
3 சேல்ஸ் கேர்ள் நாயகனின் வீட்டுக்கு உள்ளே நுழைந்ததும் வில்லன் க்ரூப் செய்யும் சம்பவங்கள் மிக யதார்த்தம் , ஈறைப்பேனாக்கி பேனைப்பெருமாள் ஆக்கும் வித்தையை மக்கள் எப்படிக்கற்றார்கள் என்பதை விளக்கும் இடம்
ரசித்த வசனங்கள்
1 இன்ஸ்பெக்டர் , என்னை ஒருத்தன் வீடு புகுந்து தாக்கிட்டான்
அவன் ஃபோன் நெம்பர் இருக்கா?
இல்லை , ஆனா அவன் சம்சாரம் ஃபோன் நெம்பர் வேணா இருக்கு
ரைட்டு
2 முன் பின் அறிமுகம் இல்லாத ஆட்களால் நமக்குத்தொந்தரவு வருவதில்லை . நெருக்கமான உறவுகளால் தான் ஆபத்து வருகிறது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் வில்லனை விட ஆஜானுபாகவமான உடல் வலிமை கொண்டவன். ஆனால் வில்லன் அடிக்கும்போது அவன் ஏன் திருப்பி அடிக்கவில்லை , அல்லது அடியைத்தடுக்க முற்படவில்லை > க்ளைமாக்ஸில் நாயகன் வில்லனை அசால்ட் ஆக அடிப்பது எபப்டி ?
2 இவ்ளோ பிரச்சனை நடந்த பின்னும் நாயகனின் மனைவி போலீஸ் ஸ்டேஷன் வராதது ஏன் ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ /ஏ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பரபரப்பான த்ரில்லர் மூவி காண விரும்புபவர்கள் அவசியம் காண வேண்டிய படம் ரேட்டிங் 3/ 5
--
சென்னிமலை சி.பி. செந்தில்குமார்,
      

0 comments: