Wednesday, June 26, 2024

ஹரா (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் )


பாலுமகேந்திரா  இயக்கிய  முதல்  படமான  கோகிலா (1977) - கன்னடம்  தான்  மோகன்  நடிகர்  ஆக  அறிமுகம்  ஆன  முதல்  படம். மூடுபனி (1960) தமிழில்  அவர்  நடித்த  முதல்  படம். ஆனால்  கதாநாயகன்  ஆக  நடித்த  முதல்  படம்  நெஞ்சத்தைக்கிள்ளாதே (1980) . தொடர்ந்து  வெள்ளி  விழாப்படங்களில்  நடித்த  அவர்  உருவம் (1991)  படத்தில்  கோரமாக  நடித்து தோல்வி  கண்டார். சுட்ட  பழம் (2006) அவர் நடித்த  கடைசிப்படம். நீண்ட  இடைவெளிக்குப்பின்  தன்  68 வது  வயதில்  கதையின்  நாயகன்  ஆக  இதில்  நடித்திருக்கிறார்.


 ராமராஜனின்  கம்  பேக்  படமான  சாமான்யன்  உடன்  ஒப்பிடுகையில் இது  ஓரளவு  பரவாயில்லை  என்றே  சொல்லலாம்.ராமராஜனுக்கு  பாடி  ஃபிட்னெஸ்  இல்லை . விபத்தின்  காரணமாக உடல்  அமைப்பு  மாறி  விட்டது. முகமும்  மாறிவிட்டது . ஆனால்  மோகன்  அப்படியே  இருக்கிறார். சுறு சுறுப்பாக சண்டை போடுகிறார். எஸ்  என்  சுரேந்தர்  குரலை  ரசித்தவர்களுக்கு  அவரது  சொந்தக்குரல்  ஜீரணிக்கக்கொஞ்சம்  கஷ்டம்  தான்                 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனுக்கு  திருமணம்  ஆகி  மனைவி  , மகள்  உடன்  சந்தோஷமாக  இருக்கிறார். டீன்  ஏஜ்  வயதான  மகள்  திடீர்  என  ரயில்  முன்  விழுந்து  தற்கொலை  செய்து  கொண்டதாகத்தகவல்  வருகிறது . தன்  மகள்  சாவில்  இருக்கும்  மர்மத்தைக்கண்டறிய , அதற்குக்காரணமானவர்களைப்பழி  வாங்க  நாயகன்  எடுக்கும்  முயற்சிகள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  மோகன் . நல்ல  நடிப்பு .  சண்டைக்காட்சிகளில்  துடிப்பு .   தாடி  அவரது  முகத்துக்குப்பொருந்தவே  இல்லை . அந்தக்கேரக்டருக்கு  அது  தேவையும்  இல்லை , ஆனால்  வயோதிகத்தை  மறைக்க   தேவைப்பட்டிருக்கலாம். பலவீனமான  திரைக்கதையை  ஒற்றை  ஆளாகத்தோளில்  சுமந்து  செல்வதில்  அவருக்கு  வெற்றியே 


 நாயகி  ஆக  அனுமோள்   கச்சிதமாக  நடித்து  மோகனுக்கு  துணையாக  வருகிறார். அவரது    நெற்றியை  வெறும்  நெற்றியாகப்பார்க்க  நேர்வது  சோகம்  தான் 


 மகள்  ஆக  ஸ்வாதி  அதிக  வாய்ப்பில்லை  என்றாலும்  வந்தவரை  பரவாயில்லை 

  நாயகனுக்கு  உதவி  ஆக  வரும் அனிதா  நாயர்  ஆக்சன்  காட்சிகளில்  அசத்துகிறார்

  வில்லன்  ஆக  இயக்குநர்  சுரேஷ்மேணன்  சுமார்  ரகம் . 20  எம் எல் ஏக்களை  கைவசம்  வைத்திருந்து  முதல்வரையே  மிரட்டும்  ஆளாக  வனிதா  விஜய்குமார்  நல்ல  வில்லித்தனம் . முதல்வராக  வரும்  பழ  கருப்பையா  ஒரே  மாதிரியான  நடிப்பை  தொடர்ந்து  பல  படங்களில்  தந்து  வருகிறார்


ரசாந்த் அர்விந்த்  தான்  இசை . இரண்டு  பாடல்கள்  சுமார்  ரகம் . பிஜிஎம்   பரவாயில்லை  குணா வின்  எடிட்டிங்கில்  படம் இரண்டே  கால்  மணி  நேரம்  ஓடுகிறது 


மனோ  தினகரன் , பிரகத் முனுசாமி ,., மோகன்  மூவரும்  ஒளிப்பதிவு ஓக்கே  ரகம். மோகனை  அழகாகாட்டி  இருக்கிறார்கள் 


 திரைக்கதை எழுதி  இயக்கி  இருப்பவர்  ஜி  விஜய் ஸ்ரீ. அரதப்பழசான  கதை. திரைக்கதையிலும்  புதுமை  இல்லை . மோகன்  மட்டுமே  ஒரே  பிளஸ் 




சபாஷ்  டைரக்டர்


1  மோகன்  கையில்  ஒரு  மைக்கைக்கொடுத்து  ஒரு  பாடல்  காட்சியில்  செண்ட்டிமெண்ட்  ஆக  எடுக்காமல்  விட்டது 


2 வனிதா  விஜய்  குமார்  ஒரு  பிரபல  அரசியல்  தலைவரை  நினைவு  படுத்தும்  விதமாய்  உடல்  மொழியை  வெளிப்படுத்தி  நையாண்டி  செய்த விதம்



  ரசித்த  வசனங்கள் 


1  போலீஸ்காரன்  யூனிஃபார்ம்  இல்லாமல்  இருப்பது  மரணத்தைவிடக்கொடியது 


2  போற  வழி  தெரியலைன்னா  வழி  தெரிஞ்சவங்களை  விசாரித்து   தெரிந்து  கொள்வதைப்போல  பரீட்சைல  கேள்விக்குப்பதில்  தெரியலைன்னா  பக்கத்துல  இருக்கறவங்களைப்பார்த்து   எழுதலாம் 


3   பேருதான்  வளர்பிறை  ஆனா  தேய் பிறை  தான்  கொடுத்தது  சட்டம்  ஒழுங்கு  துறை , ஆனா  சட்டம்  தான்  இருக்கு , ஆனா  ஒழுங்கு  இல்லை 


4   எதிரி  யாருன்னு   நமக்குத்தெரியாது , ஆனா  நாம  யாரு?ன்னு  இப்போ  எதிரிக்குத்தெரிஞ்சிருக்கும், நம்மைத்தேடி  வருவான் 


5  இப்போ  இருக்கும்  வலியை  விட  உண்மை   தெரிஞ்ச  பின்  ஏற்படும் வலி  அதிகமா  இருக்கும் 


6  நமக்கு  சம்பந்தம்  இல்லைனு  எந்த  அநியாயத்தையும்  கடந்து  போகக்கூடாது ,மக்களூக்கு  அதை  அடையாளம்  காட்டனும் 


7  கைல  பணீயாரம்  சுடறதை  விட்டுட்டு   வாய்ல  வடை  சுட்டுட்டு  இருக்கே? 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  யோகி பாபுவிடம்  கால்ஷீட்  வாங்கியதற்காக  கதைக்கு  சம்பந்தமே  இல்லாமல்  ஒரு  கோர்ட்  ரூம்  காட்சி  மகா  மொக்கை . ஜட்ஜ்ங்க  பார்த்தா  வேலையை  ரிசைன்  பண்ணிடுவாங்க 


2  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  என்ற  பெயரில்  அவர்கள்  வைத்த  ஒரு  காட்சி  மொத்தப்படத்தின்  சீரியஸ்னெசை  போக்கி  விட்டது 


3  மகளின்  டெட் பாடியைப்பார்க்க்காமலேயே  நாயகன்  மகள்  இறந்ததை  நம்புவது  எப்படி ? 


4   சிங்கம்  புலி  என்ற  அற்புதமான  மகாராஜா  நடிகரை  வீணாக்கியது 


5  முக்கியமான  சில  காட்சிகளில்  பாட்ஷா  பிஜிஎம்மை  சுட்டது 


6  இல்லீகலாக  கன்  விற்கும்  மொட்டை  ராஜேந்திரன்  அதற்கு  பேமண்ட்டை  ஜி பே  வில்  வாங்குவது  (  அந்த  ட்ரான்செக்சனை  வைத்து  போலீஸ்  பிடிக்காதா? ) 


7  நாயகன் அந்தப்பெண்ணுடன்  வண்டியில்  வரும்போது  அந்த  செல்  ஃபோனில்  கூகுள்  லொக்கேஷனை  ஷேர்  செய்திருப்பதால்  யாரும்  ஃபாலோ  பண்ணி  விடக்கூடாது  என  செல்  ஃபோனை  தூக்கி  வெளியில்  ஏன்  வீசனும்? ஸ்விட்ச்  ஆஃப்  பண்ணினா  போதுமே? 


8 போலி  மருந்து  தயாரிப்பது , பெண்களை  வைத்து  வியாபாரம்  செய்வது . பெண்ணின்  காதலைப்பெற  பாலியல்  வல்லுறவு  கொள்ளலாம்  என  இளைஞன்  நினைப்பது  என  ஒரே  கதையில்  எகப்பட்ட  கிளைக்கதைகள், எதுவும்  மனதில்  ஒட்டவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  யூ /ஏ




சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மோகன்  ரசிகைகள் மட்டும்  பார்க்கலாம். பொது  ரசிகர்கள்  தவிர்க்கலாம் . ரேட்டிங் 2 / 5 


Haraa
Theatrical release poster
Directed byVijay Sri G
Written byVijay Sri G
Produced byKovai SP Mohanraj
StarringMohan
Anumol
CinematographyMano Dinakarn
Prakath Munusamy
Mohan
Edited byGuna
Music byRashaanth Arwin
Production
company
JM Productions Private Limited
Release date
  • 7 June 2024
CountryIndia
LanguageTamil

Tuesday, June 25, 2024

NADANNA SAMBHAVAM (2024) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்)

     

NADANNA SAMBHAVAM (2024) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்)
ஒரு சின்னப்பிரச்சனையை எப்படி ஊதிப்பெரிதாக்க முடியும் என்பது அரசியல்வாதிகளுக்குக்கை வந்த கலை , அது போல ஒரு சாதாரண ஒன் லைன் ஸ்டோரியை எப்படி சுவராஸ்யமான திரைக்கதை ஆக்க முடியும் என்பதில் விற்பன்னர்கள் கேரள வாசிகள்
அக்னி நட்சத்திரம் (1988) , டிரைவிங்க் லைசென்ஸ் (2019) , அய்யப்பனும் கோஷியும் (2020) ஆகிய படங்கள் இரு நாயகர்களுக்கு இடையேயான ஈகோ கிளாஸ் என்ற கதைக்கருவை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு பிரம்மாண்ட வெற்றி பெற்ற படங்கள் . அதே பாணீயில் பொறாமையால் ஒருவன் இன்னொருவனை எப்படி அழிக்க நினைக்கிறான் என்பதுதான் இந்தப்படத்தின் கதைக்கரு
ஸ்பாய்லர் அலெர்ட்
ஒரு அபார்ட்மெண்ட்டில் வில்லன் தன் மனைவி , குழந்தையுடன் வசித்து வருகிறான் . இவன் ஒரு ஆணாதிக்கவாதி . அங்கே குடி இருக்கும் பலரும் அவரவர் மனைவியை மதிக்காதவர்கள் . திமிர் பிடித்தவர்கள் . அங்கே புதிதாகக்குடி வருகிறான் நாயகன் . நாயகனுக்கு மனைவி , ஒரு பெண் குழந்தை உண்டு . மனைவி காலேஜ் லெக்சரர். நாயகன் வீட்டு வேலைகளைப்பார்த்துக்கொள்கிறான். எல்லோருடனும் சகஜமாகப்பழகக்கூடியவன்
நாயகன் தன் மனைவியுடன் அன்னியோன்யமாக இருப்பது , சகஜமாகப்பேசுவது இவை எல்லாம் அனைத்துப்பெண்களையும் கவர்கிறது
நாயகனின் இந்த நல்ல குணத்தைக்கண்டு அபார்ட்மெண்ட்டில் இருக்கும் பல பெண்களும் நாயகனைப்பற்றி சிலாகிக்கிறார்கள் . அவனுடன் பேச ஆசைப்படுகிறார்கள் . வில்லனுடைய மனைவியும் நாயகனுடன் நட்பு ரீதியாகப்பேசுகிறாள் . இது வில்லனுக்குப்பொறுக்கவில்லை
எப்போ ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்? நாயகனைப்பழி தீர்க்கலாம் என காத்திருக்கிறான் . வில்லனின் நண்பன் அவ்வப்போது நாயகன் பெண்களுடன் பேசுவது , சிரித்தபடி நடந்து வருவது இவற்றை எல்லாம் வீடியோக்கள் எடுத்து வைக்கிறான்
ஒரு நாள் ஒரு சேல்ஸ் கேர்ள் புத்தகம் விற்க நாயகன் வீட்டு வாசலில் நிற்கிறாள் . நாயகனும் புக் வாங்குகிறான். அப்போது அந்த சேல்ஸ் கேர்ள் உங்க வீட்டு பாத்ரூமை யூஸ் பண்ணிக்கலாமா? என கேட்க நாயகனும் அவளை வீட்டுக்குள் அனுமதிக்கிறான்
இதை வில்லனின் நண்பன் பார்த்து வில்லனிடம் போட்டுக்கொடுக்க வில்லன் நாயகனை சிக்க வைக்கத்திட்டம் இடுகிறான், விஷயம் போலீஸ் ஸ்டேஷன் வரை செல்கிறது
இந்த களேபரத்தில் வில்லனின் மனைவி அவள் தோழியுடன் பேசிய அந்தரங்க விஷயம் ஒன்று வெளிவருகிறது . மேலும் சிக்கல் ஆகிறது . இவற்றை எல்லாம் நாயகன் , வில்லன் இருவரும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக பிஜூ மேனன் அடக்கி வாசித்து இருக்கிறார். இதில் அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புக்குறைவே. ஆனால் நிறைவாக செய்திருக்கிறார்
வில்லன் ஆக சுராஜ் வெஞ்சார மூடு பின்னிப்பெடல் எடுத்திருக்கிறார். அவரது முகத்தில் பொறாமைத்தீ கொழுந்து விட்டு எரிகிறது . பாடி ஃபிட்னெஸ் , உடல் மொழி அனைத்தும் அற்புதம்
நாயகனின் மனைவி ஆக , வில்லனின் மனைவி ஆக முறையே ஸ்ருதி ராமச்சந்திரன் , லிஜோ மோல் ஜோஸ் நடித்திருக்கிறார்கள் . நிறைவான நடிப்பு
ஜாபர் இடுக்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்
விஷ்ணு நாராயணன் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் அங்கித் மேனண் தான் இசை . பின்னணி இசையில் முத்திரை பதிக்கிறார்
சைஜூ ஸ்ரீதரன் எடிட்டிங்கில் படம் 112 நிமிடங்கள் ஓடுகின்றன. முதல் பாதி ஸ்லோவாகவும் பின் பாதி ஸ்பீடாகவும் திரைக்கதை நகர்கிறது
சபாஷ் டைரக்டர்
1 வில்லன் திடீர் என நாயகன் வீட்டுக்குள் புகுந்து தாக்க என்ன காரணம் என எல்லோரும் குழம்பி இருக்கும்போது அதற்கான ஃபிளாஸ்பேக்கை வெளிப்படுத்தும் இடம் வாவ்
2 வில்லனின் மனைவி , அவள் தோழி இருவரும் அந்தரங்கமாகப்பேசும்போது அதை அவர்களுக்கே தெரியாமல் செல் ஃபோனில் வில்லன் ரெக்கார்டு பண்ணுவது , அந்த உரையாடலை போலீஸ் ஸ்டேஷனில் அவுட் ஆக்குவது திக் திக் இடங்கள்
3 சேல்ஸ் கேர்ள் நாயகனின் வீட்டுக்கு உள்ளே நுழைந்ததும் வில்லன் க்ரூப் செய்யும் சம்பவங்கள் மிக யதார்த்தம் , ஈறைப்பேனாக்கி பேனைப்பெருமாள் ஆக்கும் வித்தையை மக்கள் எப்படிக்கற்றார்கள் என்பதை விளக்கும் இடம்
ரசித்த வசனங்கள்
1 இன்ஸ்பெக்டர் , என்னை ஒருத்தன் வீடு புகுந்து தாக்கிட்டான்
அவன் ஃபோன் நெம்பர் இருக்கா?
இல்லை , ஆனா அவன் சம்சாரம் ஃபோன் நெம்பர் வேணா இருக்கு
ரைட்டு
2 முன் பின் அறிமுகம் இல்லாத ஆட்களால் நமக்குத்தொந்தரவு வருவதில்லை . நெருக்கமான உறவுகளால் தான் ஆபத்து வருகிறது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் வில்லனை விட ஆஜானுபாகவமான உடல் வலிமை கொண்டவன். ஆனால் வில்லன் அடிக்கும்போது அவன் ஏன் திருப்பி அடிக்கவில்லை , அல்லது அடியைத்தடுக்க முற்படவில்லை > க்ளைமாக்ஸில் நாயகன் வில்லனை அசால்ட் ஆக அடிப்பது எபப்டி ?
2 இவ்ளோ பிரச்சனை நடந்த பின்னும் நாயகனின் மனைவி போலீஸ் ஸ்டேஷன் வராதது ஏன் ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ /ஏ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பரபரப்பான த்ரில்லர் மூவி காண விரும்புபவர்கள் அவசியம் காண வேண்டிய படம் ரேட்டிங் 3/ 5
--
சென்னிமலை சி.பி. செந்தில்குமார்,
      

Monday, June 24, 2024

GAM GAM GANESHA (2024) - தெலுங்கு - சினிமா விமர்சனம் ( காமெடி க்ரைம் டிராமா ) @ அமேசான் பிரைம்

              31/5/2024   அன்று  திரை அரங்குகளில்  ரிலீஸ்  ஆன  இப்படம் 20/6/2024 முதல்       அமேசான் பிரைம்  ஓடி டி  தளத்தில் காணக்கிடைக்கிறது . பல  ஹிட் படங்களில்  இருந்து  காட்சிகளை    உருவி  இருந்தாலும் டைம் பாஸ்  படமாக  இருக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்

வில்லன் ஒரு  அரசியல்வாதி. தேர்தல் நேரம், ஓட்டுக்குப்பணம் கொடுக்க ரூ 100 கோடி ரூபாய்  ஹாட்  கேஷ் ஆக  ஒரு  இடத்தில்  இருந்து இன்னொரு  இடத்துக்குக்கொண்டு  வர  வேண்டிய  தேவை  இருக்கிறது . வில்லனின்  அடியாள் ஒரு  யோசனை சொல்கிறான். அதன்படி  வினாயகர்  சதுர்த்தி  ஆர்டர்  என  சொல்லி  பிரம்மாண்டமான  ஒரு  வினாயகர்  சிலைக்குள் பணக்கட்டுக்களை  அடைத்து  லாரியில்  சிலையை  ஓப்பனாகவே  கொண்டு  வரலாம். யாரும்  செக்  செய்ய  மாட்டார்கள்  என்கிறான். அதனபடி  சிலை  வருகிறது 


  நாயகன்  ஒரு  வெட்டாஃபீஸ் . சின்னச்சின்ன திருட்டுகளை  செய்பவன். அவனுக்கு  ஒரு  காதலி . லைஃபில்  நல்லா  செட்டில்  ஆகு, அதன்  பின்  தான்  நம்ம  மேரேஜ்  என்று  சொன்னவள்  ஒரு  கட்டத்தில்   பெற்றோர்  பார்த்த  பணக்கார  மாப்பிள்ளையைக்கல்யாணம்  பண்ண  சம்மதிக்கிறாள் . இதனால்  கடுப்பான  நாயகன்  மேரேஜ்க்கு  இன்னும்  ஒரு  மாதம்  இருக்கு , அதுக்குள்  நான்  லட்சாதிபதி  ஆகிறேன்  பார்  என  சவால்   விட்டு  வருகிறான் 


நாயகனுக்கு  ஒரு  ஆஃபர்  வருகிறது. பிரபல நகைக்கடையின்  ஓனர்  மகன்  தன்  அப்பாவிடம்  கொண்ட  கருத்து  வேறுபாட்டால்    தன்  கடையில்  தானே  கொள்ளை  அடிக்க  திட்டம்  போடுகிறான். அப்பாவிடம்  ரூ 7  கோடி  மதிப்புள்ள  ஒரு  வைரக்கல்  இருக்கிறது . அதைக்கொள்ளை  அடித்து  வர  நாயகனுக்கு  ரூட்  போட்டுத்தருகிறான். இந்த வேலையைச்செய்தால்  நாயகனுக்கு  ரூ  40  லட்சம்  சம்பளம்


  அதற்கு  ஓக்கே  சொன்ன  நாயகன்  திட்டப்படி வைரத்தைக்கொள்ளை  அடித்த  பின்  அதை  ஆட்டையைப்போட  திட்டம்  போடுகிறான். காரில் வரும்போது  செக்  போஸ்ட் . முன்னால்  100 கோடி  மதிப்புள்ள பணம்  உள்ள  வினாயகர்  சிலை  இருக்கும்  லாரி. போலீஸ்  செக்கிங்க் நடக்கிறது . அப்போதைக்குத்தப்பிக்க  நாயகன்  தன்னிடம்  இருந்த  வைரக்கல்லை  வினாயகர்  சிலைக்குள்  போட்டு  விடுகிறான் . அந்த  சிலைக்குள் 100  கோடி  ரூ  பணம்  இருப்பது  நாயகனுக்குத்தெரியாது 


இதற்குப்பின்  நடக்கும்  ஆடு புலி  ஆட்டம்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  ஆனந்த்  தேவர்கொண்டா  கச்சிதம். காமெடி , காதல் , புலம்பல் ,  ஆக்சன்  என  எல்லாமும்  சராசரி  ஹீரோ  போல்  சமாளிக்கிறார் 

நாயகி  ஆக  நயன்  சரிகா . நயன்  தாரா  போலவும்  இல்லை , சரிகா  கமல்  போலவும்  இல்லை . காரணப்பெயர்  வேறாக  இருக்கலாம், ஆனாலும்  ரசிக்க  வைக்கும்  அழகு 


வெண்ணிலா  கிஷோர்  காமெடிக்கு , ஆனால்  அவருக்கான  போர்சன்  மிகக்குறைவே 


 சைதன்  பரத்வாஜ்  தான்  இசை , 5  பாடல்கள்  சுமார்  ரகம் ., பின்னணி  இசை  சராசரி 


ஆதித்யா  ஜவ்வாடி  தான்  ஒளிப்பதிவு . நாயகிக்கான  க்ளோசப்  ஷாட்கள்  இன்னும்  நிறைய  வைத்திருக்கலாம் 


ஆதித்யா சீனிவாஸ்  எடிட்டிங்கில்  படம்  இரண்டே  கால்  மணி  நேரம்  ஓடுகிறது . பின்  பாதி   ரொம்ப  இழுவை 


 திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்   உதய்  பொம்மி செல்லி 


சபாஷ்  டைரக்டர்


1  சீரியஸ்  ஆன  கதையை  காமெடி  ஆன  திரைக்கதையால்  வேகமாகக்கொண்டு  போனவிதம் 


2  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லை  என்றாலும்  உடல்  உறுப்புக்களை  திருடும்  காமெடியன்  டாக்டர்  கேரக்டர்  செம 


3  பின்  பாதி  திரைக்கதையை    இழுப்பதற்காக  இரண்டாவது  நாயகி , நான்காவது  வில்லன் சாமியார்  கேரக்டர்  ஆகிய  புது  கேரக்டர்களை  திணித்த  லாவகம், 


  ரசித்த  வசனங்கள் 


1  டைட்டானிக்  நாயகி  ரோஸ்  கூட  நம்ம  கலாச்சாரத்தால்  இன்ஸ்பயர் ஆகி  பேரை  ரோஜானு  மாத்திக்கிட்டாங்க 


2  பொண்ணூங்களை  நாம  டீஸ்  பண்ணும்போது  அவங்க  உதட்டில்  இருந்து  சிரிப்பு  வரனும், கண்களீல்  இருந்து  கண்ணீர்  வரக்கூடாது 


3   வீட்டுக்கு  சாப்பிட  வாங்க 


 உன்  வீட்டுக்கா  இன்வைட்  பண்றே?


 இல்லை, இது  லைஃப்க்கான  இன்விட்டேசன்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகனை  தன்  அடியாட்கள்  இருவருடன்  காரில்  துரத்தும்  வில்லன்  சில ஷாட்களில் தனியாக  இருக்கிறார். பின்  சீட்  காலி. பல  ஷாட்களில்  பின்  சீட்டில்  ஆட்கள்  இருக்கிறார்கள் . எடிட்டிங்க்  ஃபால்ட்டா? 


2  நாயகனோ, அவன்  நண்பனோ  வைரத்தை  நேர்ல்  பார்த்ததில்லை . ஃபோட்டோவிம் இல்லை . சைஸ்  , கலர்  எதுவும்  தெரியாது . அப்படி  இருக்கும்போது  நகைக்கடை  ஓனர்  எக்சாக்ட்  ஆக  அந்த  வைரத்தைத்தர  வேண்டிய அவசியம்  என்ன?  எதையோ  ஒரு  ட்ம்மிப்பீசை  தந்தாலும்  அவர்களுக்கு  அதை  அடையாளம்  தெரியாது .  வாங்கிக்கொள்வார்கள் .


3   அவ்ளோ  பிரம்மாண்டமான  வினாயகர்  சிலையை  சும்மா  பைப்பில்  தண்ணீர் பீய்ச்சி  அடித்தே உருக்குகிறார்கள் . அவ்ளோ  பலவீனமான  சிலையை  ஓப்பன்  ஆக  லாரியில்  கொண்டு  வருகிறார்களே?  மழை  பெய்தால் கரையாதா? கவர்  பண்ணி  தானே  கொண்டு  வரனும் ? 


4  நாயகன்  ஒரு  அவசரத்தில்  வினாயகர்  சிலையின்  தும்பிக்கையில்  வைரத்தை  வைக்கிறான். பல  100 கிமீ  பயணத்தில்  அது  இடம்  மாறாதா? அதாவது  உள்ளே  போகாதா?  நாயகன்  மீண்டும்  வந்து  எடுக்க  முயல்கையில்  கை  பட்டு  உள்ளே  போகிறது 

5  சிலை  மாறாட்டம்  நடந்ததை  விஷூவலாகக்காட்டாமல்  சும்மா  வசனத்திலேயே  வடை    சுட்டு  சமாளிக்கிறார்கள் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மொக்கைக்காமெடி  ரசிகர்கள்  பார்க்கலாம் .ரேட்டிங்  2.25 / 5 


Gam Gam Ganesha
Theatrical release poster
Directed byUday Bommisetty
Written byUday Bommisetty
Produced by
  • Vamsi Krishna Karumanchi
  • Kedar Selagamsetty
StarringAnand Devarakonda
CinematographyAditya Javvadi
Edited byKarthika Srinivas
Music byChaitan Bharadwaj
Release date
  • 31 May 2024
Running time
132 minutes
CountryIndia
LanguageTelugu

Wednesday, June 19, 2024

THE TEARSMITH (2024) -இத்தாலி /ஆங்கிலம் -- FABBRICANTE DI LACRIME- சினிமா விமர்சனம் (டீன் ரொமாண்டிக் டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ் 18+

   


    2021 ஆ ம்  ஆண்டு   ரைட்டர்  எரின் டூம்  எழுதிய THE TEARSMITH நாவல்  இத்தாலியில் பெஸ்ட் செல்லர் வரிசையில் 2022ம் ஆண்டு இடம்  பிடித்தது உடனே கொலராடா நிறுவனம் அதன்  ரைட்ஸ் வாங்கி படம் ஆக்கியது . இன்  படப்பிடிப்பு ரோம் , இத்தாலி ஆகிய இடங்களில் நடந்தது .4/4/2024 முதல் நெட் பிளிக்சில்   ரிலீஸ்  ஆன  இப்படம்  7/4/2024 அன்றே , அதாவது ரிலீஸ் ஆன  மூன்றாம் நாளிலேயே  உலக  அளவில் அதிக பார்வையாளர்களைப்பெற்ற படம் ஆனது                


ஸ்பாய்லர்  அலெர்ட்

வில்லி ஒரு  அநாதை விடுதி நடத்துபவள் .அங்கு ஏராளமான சிறுவர் , சிறுமிகள்  இருக்கிறார்கள் நாயகி எட்டு வயது சிறுமியாக இருக்குமபோது  அவள் பெற்றோர்  விபத்தில் மரணம் அடைந்ததால் அநாதை விடுதியில்  சேர்க்கப்படுகிறாள் வில்லி மிகவும் கறாராகவும் , கண்டிப்பாகவும் அனைவரையும் அணுகுபவள் .தான்  வைத்தது தான் சட்டம் , யாரும் அதை மீற க்கூடாது , எதிர்த்துப் பேசக் கூடாது  என நினைப்பவள் .தன பேச்சை மீறுபவர்களைக் கண்டிக்கத்தயங்குவதில்லை . மன ரீதியாக , உடல் ரீதியாக சித்ரவதை செய்பவள் 


நாயகன்  நாயகிக்கு முன்பே அங்கேயே தங்கி இருப்பவன் . அவனும்  அநாதை தான் எல்லோரையும் கரித்துக்கொட்டும் வில்லி  நாயகனை மட்டும் பாசமாக தன  மகன் போல பார்த்துக்கொள்கிறாள் . அதற்கான காரணம்  யாருக்கும் தெரியவில்லை . ஒருவேளை அவன் வில்லியின் உண்மையான மகனின் சாயலாக இருக்கலாம், யாருக்குத்தெரியும்? வில்லிக்குப்பிறந்த மகனாகவும் இருக்கலாம் 



நாயகன் மிகவும் முரட்டுத்தனமாக அவ்வப்போது  நாயகியிடம்  நடந்து கொள்வான்  .இதனால் நாயகிக்கு  ஆரம்பத்தில் இருந்து நாயகன்  மீது  கொஞ்சம பயம் . ஆனால் நாயகனுக்கு  நாயகி  மீது  அளவற்ற  அன்பு  இருப்பது  நாயகிக்குத்தெரியாது , நாயகியின்  தோழிக்கு  மட்டும்  தெரியும் 


ஒரு செல்வந்தர் குடும்பம்     நாயகன் , நாயகி இருவரையும் தத்து எடுக்கிறது . அவர்கள் வீட்டுக்கு  இருவரும்  அனுப்பப்படுகிறார்கள் இப்போது  இருவரும் டீன்  ஏஜ் . ஒரே பள்ளியில் படிக்கிறார்கள் 


அக்கம் ,பக்கம் இருப்பவர்களுக்கு ,ஸ்கூல்  ஸ்டுடன்ட்ஸ்க்கு  நாயகன், நாயகி  இருவரும்  அண்ணன் , தங்கை  என  நினைப்பு 


 நாயகன் , நாயகி இருவரும் படிக்கும் பள்ளியில்  வில்லன் படிக்கிறான் .நாயகிக்கு ஒரு நாள்  வில்லன் பிரபோஸ் செய்கிறான் .நாயகிக்கு அதை ஏற்றுக்கொள்ள தயக்கம் . நாயகன் மனதில் தனக்கான  இடம்  என்ன? என்பது  அவளுக்கு  தெரியவில்லை  மர்மம்  ஆக  இருக்கிறது .


நாயகி என்ன முடிவு எடுத்தாள் ? நாயகி வில்லனுடன் சேர்ந்தாளா? நாயகனுடன் சேர்ந்தாளா?   என்பது க்ளைமாக்ஸ் 


நாயகி ஆக  கேத்ரினா பெரியோலி  பால் அல்வா மாதிரி  அப்பாவி முகத்துடன் மனம் கவர்கிறார்.அவரது இளமையும்  அழகும் தான் படத்தின்  பெரிய  பிளஸ் .அவரது ஆடை வடிவமைப்பு செம .நடிப்பு,துடிப்பு எல்லாம்  வாவ்   ரகம் 


நாயகன் , வில்லன் இரண்டும் தண்டக்கடன் . பெரிதாக மனதில் ஒடடவில்லை .வில்லி தோற்றம் , நடிப்பு  இரண்டும்  மிரட்டல்  ரகம் 

அநாதை விடுதி  யில் நாயகிக்குத்தோழி ஆக வருபவர் , பள்ளித்தோழி ஆக வருபவர் யாரும்  ஒட் டவில்லை 


அலெசான்ட்ரா  ஜெனோவசி  இயக்கி இருக்கிறார் 

சபாஷ்  டைரக்டர்


1  சாதா லவ் ஸ்டோ ரியை  நான் லீனியர் கடடில்  இன்ட்ரஸ்ட்  ஆக்கிய  விதம் 


2  நாயகன் ஒரு  சைக்கோ வா? புரியாத புதிரா?   என நாயகி குழம்பும் காடசிகள் 


3 வில்லி நாயகியை தண்டிக்க வரும்போது அவர் கவனத்தை  திசை திருப்ப  நாயகன் தன  கையைக்காயப்படுத்திக்கொள்ளும்  காடசி 


4  மெயின் கதைக்கு சம்பந்தம்  இல்லை என்றாலும்  நாயகியின் தோழியின் காதல் கிளைக்கதை  கவிதை 


ரசித்த  வசனங்கள் 


1 நம்ம மனசுக்கு யாரைப்பிடிச்சிருக்கோ  அவங்க தான்  நம்மை  அழ வைக்கவும்  முடியும் 


2 என் அன்பு அவளுக்குத்தெரியனும்னு  அவசியம் இல்லை .அன்பை தம்பட்டமடிச்சா அதுக்குப்பேரு அன்பு இல்லை 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 வில்லியின் கேரக்ட்டர்  டிசைனில் குழப்பம் 

2 வில்லனுக்குப்போதிய  அளவு போர்ஷன் ஒதுக்கப்படாதது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+  காட்சிகள் உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - டீன்  லவ்  ஸ்டோரி  ரசிப்பவர்கள் பார்க்கலாம் .ரேட்டிங்  2.5 / 5 


The Tearsmith
Italian Netflix poster
ItalianFabbricante di lacrime
Directed byAlessandro Genovesi
Written by
  • Eleonora Fiorini
  • Alessandro Genovesi
Based onThe Tearsmith
by Erin Doom
Produced by
Starring
  • Simone Baldasseroni
  • Caterina Ferioli
  • Sabrina Paravicini
  • Alessandro Bedetti
  • Roberta Rovelli
  • Orlando Cinque
  • Eco Andriolo
  • Nicky Passarella
  • Sveva Romana Candelletta
CinematographyLuca Esposito
Edited by
  • Claudio Di Mauro
  • Simone Rosati
Music byAndrea Farri
Production
company
Distributed byNetflix
Release date
  • 4 April 2024
Running time
105 minutes
CountryItaly
LanguageItalian

Tuesday, June 18, 2024

MAIDAAN (2024) -- ஹிந்தி - சினிமா விமர்சனம் ( ஸ்போர்ட்ஸ் டிராமா+ மோட்டிவேஷனல் டிராமா +பயோகிராபிக்கல் டிராமா ) @ அமேசான் பிரைம்


235 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெறும் 65 கோடி மட்டுமே வசூல் செய்த தோல்விப்படம்தான் ஆனால் தரமான படம் .  கால்பந்து விளையாட்டுன்னா என்ன?னு கூடத்தெரியாத ஆட்களையும் கவரும் வண்ணம் கமர்ஷியல் படம் போல விறுவிறுப்பான திரைக்கதை எழுதப்பட் ட  படம் . அமீர்கான் நடித்த லகான் (2001) ஷாரூ கான்  நடித்த சக் தே  இந்தியா ( 2007) ஆகிய படங்களைப்போல அஜய் தேவ்  கான் க்கு ஒரு மைதான் 

பொதுவாகவே  ஸ்போர்ட்ஸ்  டிராமா , மோட்டிவேஷனல்    டிராமா ,பயோகிராபிக்கல் டிராமா .என்றாலே திரைக்கதை டெட் ஸ்லோவாகத்தான்  நகரும், ஆனால் இது  விதிவிலக்காக  செம ஸ்பீ டாக நகர்கிறது                     


ஸ்பாய்லர்  அலெர்ட்


1952ல் நடந்த ஹெ ல்சிங்க்கி  ஒலிம்பிக்கில் யூகோஸ்லாவியா   அணி  10 கோல் போட்ட்து இந்தியா  ஒரே ஒரு கோல் போட்டு படு தோல்வி அடைந்தது 1952 டூ  1962  இந்திய கால்பந்து அணியின் கோச்  ஆக  செயல்படட ஸையத்  அப்துல் ரஹிம்  என்பவரின் 10 வருட போராட் டம் தான் மெயின் கதை 


ஹெ ல்சிங்க்கி  ஒலிம்பிக்கில்  இந்தியாவின் தோல்விக்கு இரண்டு  காரணங்கள் சொல்லபபடடன . 1 காலில் ஷு போடாமல் இந்திய வீரர்கள் விளையாடியது 2 வீரர்கள் தேர்வில் அரசியல் தலையீடுகள் 


சுதந்திரமாக தன்னை செயல்பட  அனுமதிக்க வேண்டும் என  அவர் கேட்டுக்கொண்டு வீரர்கள் தேர்வுக்காக இந்தியா முழுக்க சுற்றி பல மாநிலங்களில் இருந்து வீரர்களைத்தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கிறார். அவர் பட் ட  பாடுகள் தான்  திரைக்கதை 

நாயகன் ஆக அஜய் தேவ் கான் வாழ்ந்திருக்கிறார் என்பதே சரி . உடல் மொழி , பார்வை , வசன உச்சரிப்பு எல்லாம்  அடடகாசம் . அவரது மனைவி ஆக பிரியாமணி கனகச் சித்தம் . , வீரர்களாக வரும் அனைவருமே கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடித்திருக்கிறார்கள் 


ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஐந்து பாடல்கள் .பின்னணி  இசை  கச் சிதம் 


துஷா காந்தி ரே தான் ஒளிப்பதிவு கலக்கல் ரகம். மேட்ச்சை நேரில் பார்ப்பது போல இருந்தது . தேவ ராவ் எடிட்டிங்கில்  படம் 3 மணி நேரம் ஓடுகிறது , ஆனால் ஒரு நிமிடம் கூட போர் அடிக்கவில்லை 




சபாஷ்  டைரக்டர்


1 தனக்கு கேன்சர் என்பதை  அறிந்த பின்  இந்தியன் கோச் ஆக வாய்ப்பு கேட்டு நாயகன் அனைவர் முன்னும்  அவமானப்படும் காடசி கலக்கல்  ராகம்  


2 நாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நபர்களைப்பார்த்து  வில்லன் பிரமித்து நிற்க  அப்போது ஒலிக்கும் பிஜிஎம் 


3 பிரான்ஸ் அணியுடன்  ஆன  கேமில் இந்தியா பிரமாதமாக  விளையாடி வெற்றிக்கு மிக  அருகில் சென்று  டிரா  செய்தபின்  மொத்த  மைதானமும்  எழுந்து  நின்று  வெல் ப்ளே  இந்தியா   என குரல்  எழுப்புவது  அபாரம் 


4  எதிர் அணி வீரர் ஒருவர்  இநதியா வீரரை தன ஷு லேஸ்  கட்டி விட  சொல்லி லந்து பண்ணும்போது நாயகன் காட்டும் ரீ  ஆக்சன்  செம 


5  செலவை மிச்சம் பண்ண மேட் ச்சில்  இந்தியா விளையாட பாரின் போகாது என பைனான்ஸ் மினிஸ்ட்டர் முடிவு எடுப்பதும் நாயகன் போய் வாதாடும் காடசியும் 


6 இந்திய அணியின் கோல் கீப்பர் கோல் போஸ்ட் உயரத்துக்கு இருப்பதும் எதிர் அணியினர் திகைப்பதும் 

7  ஒவ்வொரு மேட் ச்  நடக்கும்  முன்பும்  நாயகன் நிகழ்த்தும் வீர உரை 

8 படத்தில் காட்டப்ப டும்   ஆறு மேட் ச் களும் செம  விறுவிறுப்பு 


  ரசித்த  வசனங்கள் 


1  வீடு பலவீனமா இருக்குனு  அதன் கூரைய  மட்டும்  மாத்துனா  அது  சரி  ஆகிடுமா? 


2  ஒரு சாதா பிளேயரை  ஸ்பெசல் பிளேயரா மாற்றுவது எது ? 


திறமை 


போக்கஸ் இருந்தா மட்டும் தான் டேலண்ட் யூஸ் ஆகும் 


3   யார் காத்திருக்காங்களோ  அவங்களுக்கு நல்லது நடக்கும் 

4   DON'T CRITICISE WHAT YOU DON'T UNDERSTAND .YOU NEVER WALKED WITH THAT MAN'S SHOE


5 ஒரு  ஆளை அவமானப்படுத்துனதுக்கே ஒரு கோல் போட்டுட்டாங்க .மொத்த டீமையே அவமானப்படுத்துனா  என்ன  ஆகப்போகுதோ  ?


6  மரத்தை நாம நடறோம் , யாரோ பழம் சாப்பிடறாங்க 

7  பலவீனத்தை உணர்ந்தவன் தான்  பலசாலி  ஆக முடியும் 

8  தம் அடிக்கும்  கேட்ட பழக்கத்தால்தான்  உங்களுக்கு லாங்க்ஸ் கேன்சர் வந்தது இப்போ மீ ண்டும் தம்  அடிச்சா  எப்படி? 

இப்போ இதை நான் விட்டா  குணம்  ஆகிடுவேனா? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு ஸ்போ ர்ட்ஸ் மே னுக்கு முக்கியத்தேவை  பாடி  பிட்னஸ் தான் , ஆனால் கோச் ஆக  வரும்  நாயகன்  தம் பார்ட்டியாக இருப்பது , கேன்சர் வருவது  இவை  நெருடுகின்றன. ஆனால்  உண்மை  சம்பவம்  


2  வில்லன் க்ளைமாக்சில் திடீர் என மனம் மாறுவது 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  விளையாட்டில் ஆர்வம்  உள்ளவர்கள் , இல்லாதவர்கள் , அனைவரும் காண வேண்டிய   அற்புதமான படம்  ரேட்டிங்  3.75 / 5 


மைதானம்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்அமித் சர்மா
மூலம் திரைக்கதைசைவின் குவாட்ராஸ்
அமன் ராய்
அதுல் ஷாஹி
அமித் சர்மா
மூலம் உரையாடல்கள்
மூலம் கதைசைவின் குவாட்ராஸ்
ஆகாஷ் சாவ்லா
அருணாவா ஜாய் சென்குப்தா
உற்பத்திஜீ ஸ்டுடியோஸ்
ஃப்ரெஷ் லைம் பிலிம்ஸ்
ஆகாஷ் சாவ்லா
அருணாவா ஜாய் சென்குப்தா
போனி கபூர்
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுதுஷார் காந்தி ரே
ஃபியோடர் லியாஸ் (விளையாட்டு)
திருத்தியவர்தேவ் ராவ் ஜாதவ்
ஷாநவாஸ் மொசானி (விளையாட்டு)
இசைஏஆர் ரஹ்மான்
உற்பத்தி
நிறுவனங்கள்
மூலம் விநியோகிக்கப்பட்டதுஜீ ஸ்டுடியோஸ்
வெளிவரும் தேதி
  • 10 ஏப்ரல் 2024 [1]
நேரம் இயங்கும்
181 நிமிடங்கள் [2]
நாடுஇந்தியா
மொழிஹிந்தி
பட்ஜெட்₹235 கோடி [3]
திரைப்பட நுழைவு சீீட்டு விற்பனையகம்மதிப்பீடு ₹68.09 கோடி [4]

Monday, June 17, 2024

மகாராஜா (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் த்ரில்லர் )

 


    விஜய் சேதுபதியின் 50 வது படம்  ,  குரங்கு பொம்மை (2017)  இயக்குனர்   நித்திலன் சுவாமிநாதன் உடைய இரண்டாவது படம் , 15/6/2024 அன்று திரை அரங்குகளில் வெளியாகி   மெகா ஹிட்  ஆகி  உள்ளது , சாதாரண பழி வாங்கல் கதையை அடடகாசமான  திரைக்கதை உத்தி  மூலம்  மிரட்டி  இருக்கிறார்கள்             


ஸ்பாய்லர்  அலெர்ட்


  வில்லனுக்கு அன்பான மனைவியும் அழகான  ஒரு  பெண்  குழந்தையும் உண்டு. மகள் மீது  அளவற்ற  பாசம் வைத்திருக்கிறான். வில்லன் ஊரார்  பார்வைக்கும் , மனைவி   பார்வைக்கும் சாதாரண எலக்ட்ரிக்கல் கடை  ஓனர் . ஆனால்  நிஜத்தில் அவன் ஒரு கொடூரமான கொள்ளைக்காரன்  கம்  கொலைகாரன் . அவனுக்கு இரு  கூட்டாளிகள்  உண்டு .மூவரும் சேர்ந்து இரவு நேரங்களில்  வீட்டில் புகுந்து நகைகளைக்கொள்ளை அடிப்பது , வீட்டில் பெண்கள் இருந்தால் ரேப் செய்து கொலை செய்வது இவைதான் பார்ட்  டைம்  ஜாப் 

நாயகன்  சலூன் கடை வைத்திருக்கிறான் .அவன் கடையில் தாடி ட்ரிம் பண்ண வந்த வில்லன் தன மகளுக்காக  வாங்கி வைத்திருக்கும் பிறந்த நாள் பரிசான தங்கச்செயினை  மறந்து வைத்து விட்டு  வந்துவிடுகிறான் .நாயகனின் கடையில் இருக்குபோது  வில்லனின்  கூட்டாளியுடன்  கொள்ளை சம்பவம்  பற்றி போனில் பேசுவதை நாயகன் கேட்டு  விட்டதாக  வில்லன்  நினைக்கிறான் .

வில்லன் தன கடையில் மறந்து வைத்து விட்டு சென்ற தங்கசெயினை  வில்லனிடம் ஒப்படைக்க நாயகன் வில்லனின் வீட்டுக்கு  வரும்போது  கச்சிதமாக போலீஸ்  வில்லனைக்கைது செய்ய அங்கே வருகிறது . நாயகன்  தான்  தகவல் கொடுத்து  போலிஸில்  தன்னை மாட்டி விட்டதாக வில்லன் தவறாக நினைக்கிறான் 

13 வருட சிறை தண்டனைக்குப்பின் வில்லன் வெளியில் வருகிறான் . இதற்குப்பின்  நிகழும்  அதிரி புதிரி சம்பவங்கள் தான்  மீதி  திரைக்கதை  

நாயகன்  ஆக  விஜய் சேதுபதி  கலக்கி இருக்கிறார் . முதல் பாதியில்  மனநலன் பாதிக்கப்பட்டவர்  போல  நடப்பது  பின் பாதியில்  ஆக்ரோஷம்  என மாறுபட் ட நடிப்பை வழங்கி இருக்கிறார் 

வில்லன் ஆக அனுராக் காஷ்யாப் நாயகனுக்கு இணையான வேடம் .சிறப்பான நடிப்பு 

போலீஸ்  ஆபிஸர்  ஆக   நட்டி கச்சிதம் முனீஸ்காந்த்தும் ஓகே  ரகம் .சிங்கம் புலி மிரட்டி இருக்கிறார்   

திரைக்கதை எழுதி  இயக்கி     இருப்பவர்  நித்திலன் சுவாமிநாதன்  குரங்கு பொம்மை (2017)  இயக்குனர் 

பிலோமின் ராஜ்   எடிட்டிங்  அட்டகாசம் .நான் லீனியர்  காட்டில் திரைக்கதை ஜாலவித்தை புரிகிறது தினேஷ் புருஷோத் தமன்  ஒளிப்பதிவு  அருமை 

வில்லனின் மனைவியாக அபிராமி  கச்சிதம் . மம்தா மோகன் தாஸ் , திவ்ய பாரதி ,பாரதி  ராஜா என  எல்லாருமே அருமையான  நடிப்பு

சபாஷ்  டைரக்டர்


1குப்பைத்தொட்டிக்கு  லட்சுமி  என  பெயர்  வைத்த  தைர்யம் . மூதேவியைக்குறிக்கும்  சொல் அது 

2  என் பொண்ணு தப்பு  பண்ணி  இருக்க மாடடான்னுசொன்னனே? திட்டிட்டீங்க, மன்னிப்புக்கேளுங்க  என நாயகன்  அ டம்  பிடிக்கும் காடசி 

3  இடைவேளை பிளாக்குக்கு  முன்  வரும்  அந்த சண்டைக்காடசி  ஓவர்  வயலன்ஸ்  என்றாலும் அந்த  ஆக்சன் ஸீக்வன்ஸ் வடிவமைத்த சண்டைப்பயிற்சி இயக்குனர்  உழைப்பு  அபாரம் 

4  OLD BOY  (2013) ரெட்ட (2024) ஆகிய இரு படங்களின் க்ளைமாக்ஸை நினைவு படுத்தினாலும் சாமார்த்தியமாக  அதை  திரைக்கதைக்குள்  நுழைத்த  நுட்பம் பிரமாதம் 

 5   சிங்கம் புலி  திருடியதாக நடித்துக்காட் டும் காடசி  மிரட் டல் ரகம் 


  ரசித்த  வசனங்கள் 


1  உனக்கு மகாராஜான்னு பேரு வெச்சதுக்குப்பதிலா உம்மணாம்மூஞ்சி  ராஜான்னு  பேரு வெச்சிருக்கலாம் , இப்படி  முகததை  வெச்சிருந்தா  எந்த  நாய்  கடைக்கு வரும்?  ஐயோ  சார் , நான் உங்களைச் சொல்லலை 


2   யாருய்யா அவன் ? 


போலீ ஸ்  சார் 


 போலீ சா?


பேரு போலீ ஸ்  சார் , ஆனா ஆக்சுவலா  அவன்  ஒரு திருடன் சார் 


3  ஒருத்தன்  லட்சத்துல  லஞ்சம்  தர்றான்னா கோடில  ஏதோ பதுக்கறான்னு  அர்த்தம் 


4  பழனி இஞ்சி நீர் ஒர்க்ஸ் அப்படினு  எழுதி வெச்சிருக்கான். இஞ்சினியர்னு கூட எழுதத்தெரியல 



இப்பவெல்லாம் எழுதப்படிக்கத்தெரியாதவன்  தான்  பெரிய  ஆள் ஆகிறான் 


5  இந்த வலி  எல்லாம்  எனக்கு சாதாரணம் , ஆனா நா ன்   உனக்குக்கொடுத்த வலி இருக்கே  அது காலத்துக்கும்  இருக்கும் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  82 பவுன் நகையை  அசால்ட்  ஆக ஆட்டையைப்போடும் போலீஸ் ஆபிஸர் வெறும் 5   லட்ச ரூபாய்க்கு ஆசைப்படுவது நம்ப முடியவில்லை 


2 வீடு புகுந்து திருடும் கொள்ளையர்கள்  முதலில் வீட்டு  ஆட்கள்  சத்தம் போடாமல் வாயை அடைக்க  வேண்டாமா? அக்கம் , பக்கம் வீடுகள் இருக்கே?

3  சலூனில்  ட்ரிம்மர் எக்ஸ்ட்ரா  வெச்சிருக்க மாட்டாங்களா?  அல்லது அட்லீ ஸ்ட்  பேட்டரி  எக்ஸ்ட்ரா  வெச்சிருக்க மாட்டாங்களா?

4  பல கொள்ளை ,கொலை, ,ரேப்  செய்த கொடுரனைக்கைது  செய்ய வரும் போலிஸ்  கை விலங்கு எடுத்து வர  மாட்டார்களா? 

  அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - மகாராஜா(2024)- அட்டகாசமான திரைக்கதை. அனைவரது உயிரோட்டமான நடிப்பு +. விஜய் சேதுபதி க்கு செம ஹிட் படம்.விகடன் மார்க் 45.குமுதம் ரேங்க்கிங் நன்று.ரேட்டிங் 3.5 /5.க்ளைமாக்ஸ் மட்டும் கொரியன் மூவி OLD BOY(2017)+ரெட்ட(2024)மலையாளம். சாயல்