Wednesday, June 26, 2024

ஹரா (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் )


பாலுமகேந்திரா  இயக்கிய  முதல்  படமான  கோகிலா (1977) - கன்னடம்  தான்  மோகன்  நடிகர்  ஆக  அறிமுகம்  ஆன  முதல்  படம். மூடுபனி (1960) தமிழில்  அவர்  நடித்த  முதல்  படம். ஆனால்  கதாநாயகன்  ஆக  நடித்த  முதல்  படம்  நெஞ்சத்தைக்கிள்ளாதே (1980) . தொடர்ந்து  வெள்ளி  விழாப்படங்களில்  நடித்த  அவர்  உருவம் (1991)  படத்தில்  கோரமாக  நடித்து தோல்வி  கண்டார். சுட்ட  பழம் (2006) அவர் நடித்த  கடைசிப்படம். நீண்ட  இடைவெளிக்குப்பின்  தன்  68 வது  வயதில்  கதையின்  நாயகன்  ஆக  இதில்  நடித்திருக்கிறார்.


 ராமராஜனின்  கம்  பேக்  படமான  சாமான்யன்  உடன்  ஒப்பிடுகையில் இது  ஓரளவு  பரவாயில்லை  என்றே  சொல்லலாம்.ராமராஜனுக்கு  பாடி  ஃபிட்னெஸ்  இல்லை . விபத்தின்  காரணமாக உடல்  அமைப்பு  மாறி  விட்டது. முகமும்  மாறிவிட்டது . ஆனால்  மோகன்  அப்படியே  இருக்கிறார். சுறு சுறுப்பாக சண்டை போடுகிறார். எஸ்  என்  சுரேந்தர்  குரலை  ரசித்தவர்களுக்கு  அவரது  சொந்தக்குரல்  ஜீரணிக்கக்கொஞ்சம்  கஷ்டம்  தான்                 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனுக்கு  திருமணம்  ஆகி  மனைவி  , மகள்  உடன்  சந்தோஷமாக  இருக்கிறார். டீன்  ஏஜ்  வயதான  மகள்  திடீர்  என  ரயில்  முன்  விழுந்து  தற்கொலை  செய்து  கொண்டதாகத்தகவல்  வருகிறது . தன்  மகள்  சாவில்  இருக்கும்  மர்மத்தைக்கண்டறிய , அதற்குக்காரணமானவர்களைப்பழி  வாங்க  நாயகன்  எடுக்கும்  முயற்சிகள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  மோகன் . நல்ல  நடிப்பு .  சண்டைக்காட்சிகளில்  துடிப்பு .   தாடி  அவரது  முகத்துக்குப்பொருந்தவே  இல்லை . அந்தக்கேரக்டருக்கு  அது  தேவையும்  இல்லை , ஆனால்  வயோதிகத்தை  மறைக்க   தேவைப்பட்டிருக்கலாம். பலவீனமான  திரைக்கதையை  ஒற்றை  ஆளாகத்தோளில்  சுமந்து  செல்வதில்  அவருக்கு  வெற்றியே 


 நாயகி  ஆக  அனுமோள்   கச்சிதமாக  நடித்து  மோகனுக்கு  துணையாக  வருகிறார். அவரது    நெற்றியை  வெறும்  நெற்றியாகப்பார்க்க  நேர்வது  சோகம்  தான் 


 மகள்  ஆக  ஸ்வாதி  அதிக  வாய்ப்பில்லை  என்றாலும்  வந்தவரை  பரவாயில்லை 

  நாயகனுக்கு  உதவி  ஆக  வரும் அனிதா  நாயர்  ஆக்சன்  காட்சிகளில்  அசத்துகிறார்

  வில்லன்  ஆக  இயக்குநர்  சுரேஷ்மேணன்  சுமார்  ரகம் . 20  எம் எல் ஏக்களை  கைவசம்  வைத்திருந்து  முதல்வரையே  மிரட்டும்  ஆளாக  வனிதா  விஜய்குமார்  நல்ல  வில்லித்தனம் . முதல்வராக  வரும்  பழ  கருப்பையா  ஒரே  மாதிரியான  நடிப்பை  தொடர்ந்து  பல  படங்களில்  தந்து  வருகிறார்


ரசாந்த் அர்விந்த்  தான்  இசை . இரண்டு  பாடல்கள்  சுமார்  ரகம் . பிஜிஎம்   பரவாயில்லை  குணா வின்  எடிட்டிங்கில்  படம் இரண்டே  கால்  மணி  நேரம்  ஓடுகிறது 


மனோ  தினகரன் , பிரகத் முனுசாமி ,., மோகன்  மூவரும்  ஒளிப்பதிவு ஓக்கே  ரகம். மோகனை  அழகாகாட்டி  இருக்கிறார்கள் 


 திரைக்கதை எழுதி  இயக்கி  இருப்பவர்  ஜி  விஜய் ஸ்ரீ. அரதப்பழசான  கதை. திரைக்கதையிலும்  புதுமை  இல்லை . மோகன்  மட்டுமே  ஒரே  பிளஸ் 




சபாஷ்  டைரக்டர்


1  மோகன்  கையில்  ஒரு  மைக்கைக்கொடுத்து  ஒரு  பாடல்  காட்சியில்  செண்ட்டிமெண்ட்  ஆக  எடுக்காமல்  விட்டது 


2 வனிதா  விஜய்  குமார்  ஒரு  பிரபல  அரசியல்  தலைவரை  நினைவு  படுத்தும்  விதமாய்  உடல்  மொழியை  வெளிப்படுத்தி  நையாண்டி  செய்த விதம்



  ரசித்த  வசனங்கள் 


1  போலீஸ்காரன்  யூனிஃபார்ம்  இல்லாமல்  இருப்பது  மரணத்தைவிடக்கொடியது 


2  போற  வழி  தெரியலைன்னா  வழி  தெரிஞ்சவங்களை  விசாரித்து   தெரிந்து  கொள்வதைப்போல  பரீட்சைல  கேள்விக்குப்பதில்  தெரியலைன்னா  பக்கத்துல  இருக்கறவங்களைப்பார்த்து   எழுதலாம் 


3   பேருதான்  வளர்பிறை  ஆனா  தேய் பிறை  தான்  கொடுத்தது  சட்டம்  ஒழுங்கு  துறை , ஆனா  சட்டம்  தான்  இருக்கு , ஆனா  ஒழுங்கு  இல்லை 


4   எதிரி  யாருன்னு   நமக்குத்தெரியாது , ஆனா  நாம  யாரு?ன்னு  இப்போ  எதிரிக்குத்தெரிஞ்சிருக்கும், நம்மைத்தேடி  வருவான் 


5  இப்போ  இருக்கும்  வலியை  விட  உண்மை   தெரிஞ்ச  பின்  ஏற்படும் வலி  அதிகமா  இருக்கும் 


6  நமக்கு  சம்பந்தம்  இல்லைனு  எந்த  அநியாயத்தையும்  கடந்து  போகக்கூடாது ,மக்களூக்கு  அதை  அடையாளம்  காட்டனும் 


7  கைல  பணீயாரம்  சுடறதை  விட்டுட்டு   வாய்ல  வடை  சுட்டுட்டு  இருக்கே? 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  யோகி பாபுவிடம்  கால்ஷீட்  வாங்கியதற்காக  கதைக்கு  சம்பந்தமே  இல்லாமல்  ஒரு  கோர்ட்  ரூம்  காட்சி  மகா  மொக்கை . ஜட்ஜ்ங்க  பார்த்தா  வேலையை  ரிசைன்  பண்ணிடுவாங்க 


2  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  என்ற  பெயரில்  அவர்கள்  வைத்த  ஒரு  காட்சி  மொத்தப்படத்தின்  சீரியஸ்னெசை  போக்கி  விட்டது 


3  மகளின்  டெட் பாடியைப்பார்க்க்காமலேயே  நாயகன்  மகள்  இறந்ததை  நம்புவது  எப்படி ? 


4   சிங்கம்  புலி  என்ற  அற்புதமான  மகாராஜா  நடிகரை  வீணாக்கியது 


5  முக்கியமான  சில  காட்சிகளில்  பாட்ஷா  பிஜிஎம்மை  சுட்டது 


6  இல்லீகலாக  கன்  விற்கும்  மொட்டை  ராஜேந்திரன்  அதற்கு  பேமண்ட்டை  ஜி பே  வில்  வாங்குவது  (  அந்த  ட்ரான்செக்சனை  வைத்து  போலீஸ்  பிடிக்காதா? ) 


7  நாயகன் அந்தப்பெண்ணுடன்  வண்டியில்  வரும்போது  அந்த  செல்  ஃபோனில்  கூகுள்  லொக்கேஷனை  ஷேர்  செய்திருப்பதால்  யாரும்  ஃபாலோ  பண்ணி  விடக்கூடாது  என  செல்  ஃபோனை  தூக்கி  வெளியில்  ஏன்  வீசனும்? ஸ்விட்ச்  ஆஃப்  பண்ணினா  போதுமே? 


8 போலி  மருந்து  தயாரிப்பது , பெண்களை  வைத்து  வியாபாரம்  செய்வது . பெண்ணின்  காதலைப்பெற  பாலியல்  வல்லுறவு  கொள்ளலாம்  என  இளைஞன்  நினைப்பது  என  ஒரே  கதையில்  எகப்பட்ட  கிளைக்கதைகள், எதுவும்  மனதில்  ஒட்டவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  யூ /ஏ




சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மோகன்  ரசிகைகள் மட்டும்  பார்க்கலாம். பொது  ரசிகர்கள்  தவிர்க்கலாம் . ரேட்டிங் 2 / 5 


Haraa
Theatrical release poster
Directed byVijay Sri G
Written byVijay Sri G
Produced byKovai SP Mohanraj
StarringMohan
Anumol
CinematographyMano Dinakarn
Prakath Munusamy
Mohan
Edited byGuna
Music byRashaanth Arwin
Production
company
JM Productions Private Limited
Release date
  • 7 June 2024
CountryIndia
LanguageTamil

0 comments: