அறிமுக இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து தனது முதல் படத்துலயே தரமான கருத்துள்ள , சமூக விழிப்புணர்வுப்படத்தைக்கமர்ஷியலாக தந்துள்ளார்..29/3/2024 முதல் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம் இப்போது அமேசான் பிரைம் ஓ டி டி யில் காணக்கிடைக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் , நாயகி இருவருக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்கிறது , வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் மணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகியும் தம்பதிக்குக்குழந்தை பாக்கியம் இல்லை .
மாமியார் , ஊரார் நாயகியை மலடி என கிண்டல் செய்கிறார்கள் . டாக்டரிடம் போய் செக் பண்ணலாம் எனில் நாயகன் அதற்குத்தயார் இல்லை . ஒருவழியாக செக்கப் செய்ததில் நாயகனுக்குத்தான் குறை இருக்கிறது என்பது தெரிய வருகிறது . நாயகன் மனம் வருந்தக்கூடாது என்று உண்மையை நாயகி மறைக்கிறாள்
டாக்டர் ஆலோசனைப்படி தன் கணவருக்குத்தெரியாமல் செயற்கை முறையில் கருத்தரிக்கிறா:ள். குழந்தை பிறக்கிறது . ஐந்து வருடங்கள் கழித்து குற்ற உணர்ச்சி தாங்காமல் இந்தக்குழந்தை உங்க குழந்தை அல்ல என நாயகி சொல்கிறாள் . இதற்குப்பின் நாயகன் எடுத்த முடிவு என்ன? என்பதுதான் க்ளைமாக்ஸ்
சின்ன சின்ன ரோல்களில் நடித்த இஸ்மத் பானு முதல் முறையாக நாயகி ஆக அறிமுகம் ஆகி இருக்கிறார். அட்டகாசமான நடிப்பு , அருமையான முக பாவனைகள் , கிளாமரை நம்பாமல் திறமையை நம்பிய நடிகை. வாய்ப்பும் , அதிர்ஷடமும் அமைந்தால் ரேவதி , சுஹாசினி ரேஞ்சுக்கு வளர முடியும்
நாயகன் ஆக திரவ் இயல்பான நடிப்பு . ஆனால் எதற்காக பிச்சைக்காரன் மாதிரி தாடி கெட்டப் என தெரியவில்லை . அக்னி நட்சத்திரம் கார்த்திக் மாதிரி லைட் ஸ்டைலிஷ் தாடி எனில் ரசிக்கலாம்., ஆனால் பஞ்சப்பரதேசி மாதிரி தாடி கெட்டப் சகிக்கவில்லை.லவ் ஃபெய்லியர் , கஞ்சா கேஸ் , பொறுக்கிகள் தான் இந்த மாதிரி தாடி வைப்பார்கள் , கவுரவமான குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் இப்படி இருப்பதில்லை
மாமியார் ஆக வரும் ரமா பிரமாதமான நடிப்பு . மாமனார் ஆக வரும் எம் எஸ் பாஸ்கர் நடிப்புக்குத்தீனி போடும் கேரகடர் இல்லை . ஏதோ வந்தவரை ஓக்கே ரகம்
சங்கர் ரங்கராஜன் இசையில் இரண்டு பாடல்கள் அருமை , பிஜிஎம்மும் குட்
தயாரிப்பாளர் , நடிகர் , எடிட்டர் என மூன்று அவதாரம் எடுத்துள்ளார் திரவ்
2 மணி நேரம் 10 நிமிடங்கள் ஓடும்படி ட்ரிம் பண்ணி இருக்கிறார். கடைசி 17 நிமிடங்கள் டெட் ஸ்லோ
பிரித்திவ் ராஜேந்திரனின் ஒளிப்பதிவில் கிராமத்துக்காட்சிகள் கண்ணுக்குக்குளுமை
திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் பாஸ்கல் வேடமுத்து
சபாஷ் டைரக்டர்
1 நாயகன், நாயகி அறிமுகக்காட்சிக்கு முன்பே ஓப்பனிங் சீன்லயே கதையின் மையக்கருவை உணர்த்தும் விதமாக காளை மாடு - பசு மாடு காட்சியை வைத்த விதம், கே பாக்யராஜின் இது நம்ம ஆளு படத்தை நினைவுபடுத்தினாலும் கரெக்ட் ஆன ப்ளேஸ்மெண்ட்
2 மருமகளைக்கரித்துக்கொட்டும் மாமியார் க்ளைமாக்ஸ்க்கு 20 நிமிடங்கள் முன்பு ஆறுதல் கூறும் காட்சி அருமை
3 நாயகியின் அற்புதமான நடிப்பு , கண்ணியமான உடை வடிவமைப்பு
4 நாயகன் தன் மகனை அம்போ என விட்டு விட்டுச்செல்லும் காட்சியில் பிரமாதமான பிஜிஎம்
செம ஹிட் சாங்க்ஸ்
1 எப்போ எப்போ என் இடுப்புல சரிஞ்சே? (
2 எங்க ஊரு இது , எங்க சொந்தம் இது
ரசித்த வசனங்கள்
1 வழக்கத்தை மாத்தறேன்னு பேசறியே? உன் பொண்டாட்டி கழுத்துல நீ தாலி கட்டுனியா? உன் கழுத்துல உன் பொண்டாட்டி தாலி கட்டுனாளா?
3 திருப்பி அடிக்கறது வீரம் இல்லை , பொறுமையா இருப்பதும் வீரம் தான்
3 குழந்தை பிறக்கும் முன்பு குழந்தைக்குன்னு டிரெஸ் எடுக்கக்கூடாது
4 என்னம்மா?ஒண்ணும் சொல்லாம போறான்?
அதனால என்ன? வேண்டாம்னு மறுக்கலையே?
5 என்ன எட்டிப்பார்க்கறே? இது வீடா?கிணறா?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வீட்டுக்கு விலக்கான நாளிலிருந்து 14 வது நாள் தம்பதி கூடினால் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் என நர்ஸ் கூறுவது ஓக்கே , ஆனால் அதற்காக 13 நாட்கள் சேராமல் 14 வது நாள் தான் கரெக்ட் ஆக சேர வேண்டும் என நாயகி கூறுவது சரியா?
2 எப்போதும் மருமகளைக்கரித்துக்கொட்டும் மாமியார் நாயகியின் அம்மா இறந்த செய்தியை சொல்லும்போது ஓவராக வருத்தப்படுவது ஒட்டவில்லை
3 நாயகன் , நாயகி இருவரும் டாக்டரைப்பார்க்க ஹாஸ்பிடல் வரும்போது அவர்களுக்கு ,முன்பே பலர் வெயிட்டிங்க்ல இருக்காங்க.ஆனா அப்போதான் பேர் கொடுத்த அவங்களை உடனே டாக்டர் பார்க்கிறரே? எப்படி ?
4 குழந்தைப்பேறு சம்பந்தமாக தம்பதி ஹாஸ்பிடல் போவது நாயகனின் அம்மாவுக்குத்தெரியக்கூடாது என நினைப்பது ஓக்கே , ஆனால் சினிமாக்கு போறேன், ஃபிரண்ட்டைப்பார்க்கப்போறேன்னு சாதாரணமா பொய் சொல்ல வாய்ப்பிருந்தும் , அதை பெரிய பிரச்சனை ஆக்குவது ஏன் ?
5 புருசனும், மாமியாரும் , ஊரும் நாயகியை மலடி மலடி என சொல்லும்போது எப்பேர்பட்ட தங்கமான பொண்ணாக இருந்தாலும் என் கிட்டே குறை இல்லை , புருசன் கிட்டே தான் குறை என சொல்வார், ஆனால் நாயகி எதுவும் சொல்லாமல் தியாகி ஆவது எந்த கிரகத்தில் இருக்கிறார்? இப்பேர்ப்பட்ட அபூர்வப்பெண்?
6 நாயகி நாயகனிடம் உண்மையை வலிய வந்து சொல்லி மாட்டிக்கொள்ளும் காட்சி நம்பும்படி இல்லை . குற்ற உணர்ச்சி என சப்பைக்கட்டு கட்டினாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+ காட்சிகள் இல்லை , ஆனால் 17 வயதுக்குள்ளானவர்கள் இந்தப்படத்தின் கண்டெண்ட் பார்க்கத்தேவை இல்லை
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - 300 கோடி பட்ஜெட்டில் டப்பா மசாலாப்படங்கள் எடுத்து வன்முறையுடன் அரைச்ச மாவையே அரைக்கும் படங்களுக்கு நடுவே தரமான லோ பட்ஜெட் படம் என்ற அளவில் பார்க்கலாம் ,. ரேட்டிங் 2.75 / 5
Veppam Kulir Mazhai | |
---|---|
Directed by | Pascal Vedamuthu |
Written by | Pascal Vedamuthu |
Produced by | Dhirav |
Starring |
|
Cinematography | Prithvi Rajendran |
Edited by | Dhirav |
Music by | Shankar Rangarajan |
Production company | Hashtag FDFS Productions |
Distributed by | Sri Subbulakshmi Movies |
Release date |
|
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment