தமிழ் ஒரு நுணுக்கமான மொழி . பகடி என்றால் கிண்டல் , கேலி என்றும் பொருள் உண்டு . சதுரங்கம் என்ற பொருளும் உண்டு . படத்தின் டைட்டிலுக்கு சதுரங்க ஆட்டம் என்று பொருள். 2010 ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஸ்பானிஷ் படத்தின் கருவை இன்ஸ்பிரேஷன் ஆகக்கொண்டு உருவான படம். துருவங்கள் 16 படம் ஹிட் ஆனதும் அதே ரகுமான் நடிக்க க்ரைம் த்ரில்லர் எடுத்தால் கல்லா கட்டி விடலாம் என்ற எண்ணத்தில் உருவான படம்
இயக்குநர் மகேந்திரனிடம் உதவி இயக்குநர் ஆக இருந்த ராம் கே சந்திரன் தான் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு மிடில் கிளாஸ் பெண். காலேஜில் படிக்கிறாள். அக்கா ஒரு ஆட்டோ டிரைவர். அம்மா ஹவுஸ் ஒயிஃப், அப்பா இல்லை , அக்கா தான் அப்பாவாக இருந்து நாயகியைக்கவனித்துக்கொள்கிராள்
வில்லன் ஒரு பொம்பளைப்பொறுக்கி. காலேஜ் மாணவிகளைக்காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அவர்களை உபயோகப்படுத்திக்கொள்பவன். நாயகியுடன் வில்லன் அந்தரங்கமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்து நாயகியை மிரட்டுகிறான்
நாயகி வில்லனின் பட்டியலில் பத்தோடு பதினொன்று , அத்தோடு இதுவும் ஒன்று. ஆனால் நாயகிக்கு அப்படி அல்ல . அவமானத்துக்குப்பயந்து தற்கொலை செய்து கொள்கிறாள் . நாயகியின் அக்கா வில்லனைப்பழி வாங்க அவனைக்கடத்தி ஒரு பெட்டியில் அடைத்து வைக்கிறாள்
நாயகன் ஒரு போலீஸ் ஆஃபிசர். வில்லன் காணாமல் போன தகவலைப்புகாராக வில்லனின் பெற்றோர் போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்ய விசாரிக்கிறார்
இதற்குப்பின் நிகழும் சம்பவங்களே மீதி திரைக்கதை
நாயகி ஆக கவுரி நாந்தா கண்ணியம் ஆன கிராமத்துப்பெண்ணாக வலம் வருகிறார். வில்லன் ஆக சுரேந்தர் கச்சிதம் .
நாயகன் ஆக ரகுமான் இளமைப்பொலிவுடன் நடித்திருக்கிறார்
நிழல்கள் ரவி வில்லனின் அப்பாவாக வருகிறார்
கார்த்திக் ராஜா வின் பின்னணி இசை குட் . ஒரே ஒரு பாட்டு சுமாராக இருக்கிறது
ஒளிப்பதிவு , எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் ஓக்கே ரகம். 2 மணி நேரம் படம் ஓடுகிறது
சபாஷ் டைரக்டர்
1 என் பையன் எப்போதும் மொபைல் ஃபோனை சைலண்ட் மோடுல வைப்ரேஷன் மோடு லதான் வெச்சிருப்பான் அதுல 360 டிகிரி செக்யூரிட்டி ஆப் டவுன் லோடு பண்ணி வெச்சிருப்பான் என்று நிழல்கள் ரவி சொன்னதும் நாயகன் ஓ 360 டிகிரி ஆப்பா? என்று கேட்டு அலெர்ட்#150821 என்று டைப் பண்ணி அந்த ஃபோனை டிராக் பண்ணும் ஐடியா பார்க்க நன்றாக இருந்தது
2 வில்லனின் போர்ஷன் முதல் பாதி நாயகன் துப்பறியும் போர்சன் பின் பாதி என சரியாகப்பிரித்து தெளிவாகக்கதை சொன்ன விதம்
செம ஹிட் சாங்க்ஸ்
1 வெட்ட வெளியிலே பட்டாம்பூச்சி பறக்குதே
ரசித்த வசனங்கள்
1 இந்தப்பொம்பளைப்புள்ளைங்களைப்பெத்துட்டு வயித்துல நெருப்பைக்கட்டி வெச்ச மாதிரி இருக்கு
ஏம்மா, பையனைப்பெத்திருக்கலாமில்ல? ஐஸ் கட்டியை வயித்துல கட்டுன மாதிரி இருக்கும்
2 அவனை என் டெம்ப்ரவரி டிரைவரா வெச்சிருக்கேன்
3 எனக்கு ஆளும் கட்சியையும் தெரியாது , எதிர்க்கட்சியையும் தெரியாது , எனக்கு அக்யூஸ்ட்டை மட்டும் தான் தெரியும்
4 என்ன பொண்ணுங்கம்மா நீங்க எல்லாம், உங்க அம்மா , அப்பாவையும் ஏமாத்தி இருக்கீங்க . உங்க பாய் ஃபிரண்ட்ஸையும் ஏமாத்தி இருக்கீங்க
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் ஒரு போலீஸ் ஆஃபிசர். மஃப்டியில் ஒரு ஏரியாவுக்கு அவரும் அவர் ஆட்கள் ஐந்து பேரும் போறாங்க , நாம போலீஸ் என்பது யாருக்கும் தெரியக்கூடாது , ஜாக்கிரதையா நடந்துக்கனும் என்கிறார். ஆனால் எல்லோரும் போலீஸ் பூட்ஸ் , காக்கி சாக்ஸ் போட்டிருக்காங்க . இதான் அந்த ரகசிய நடவடிக்கையா?
2 பொதுவாக நெட் யூஸ் பண்ணும் ஆண்ட்ராய்டு ஃபோன் அதிக பட்சம் 24 மணி நேரம் தான் பேட்டரி நிற்கும், ஆனால் வில்லனின் ஃபோன் 36 மணி நேரம் தாண்டி ஆன் லயே இருக்கு . பவர் பேங்க் கோடு ஆல்வேஸ் கனெக்டில் இருக்கும் ஃபோன் தான் அபப்டி இருக்கும்
3 வில்லனின் ஃபோனில் இருந்து நாயகன் ஒரு நெம்பருக்குக்கால் பண்ணியதும் காலை அட்டெண்ட் பண்ணிய பெண் எதிர் முனையில் குரல் கேட்காமல் அவர் பாட்டுக்கு தியேட்டருக்குப்போலாமா? என கேட்டுக்கொண்டே இருக்கிறார். யார் பேசறாங்கனு குரல் கேட்க மாட்டாரா?
4 வேறு ஒரு பாய் ஃபிரண்டுடன் பேசிக்கொண்டிருக்கும் பெண் வில்லனின் கால் வந்ததும் கட் பண்ணாமல் அவனைப்பக்கத்தில் வைத்துக்கொண்டே கொஞ்சம் தள்ளி வந்து தியேட்டருக்குப்போலாமா? என கேட்கிறாரே? பெண்கள் அவ்ளோ அசால்ட் ஆகவா மாட்டிக்கொள்வார்கள் ?
5 வில்லன் தன் கேர்ள் ஃபிரண்ட்சின் ஃபோன் நெம்பர்சை நூடுல்ஸ் , சாக்லெட் , ஐஸ் க்ரீம் ,டைம் பாஸ் , லெமன் இந்த மாதிரி பெயரில் சேவ் பண்ணி வெச்சிருக்கான், அவன் கூடவே சுத்தும் பெண்களுக்கு தங்கள் நெம்பரை என்ன பெயரில் சேவ் பண்ணி இருந்தான் என்பதே தெரியாதா? பார்க்க மாட்டார்களா? நாயகன் சொல்லித்தான் தெரிகிறது
6 வில்லனை பெட்டியில் அடைத்து வைக்கும் ஆள் எதற்காக ஒரு ஃபோனை விட்டுச்செல்ல வேண்டும் ? அதை வைத்து 100ம் எண்ணுக்கு கால் பண்ணி போலீசை வரவழைக்க வாய்ப்பு இருக்கே? அது ரிஸ்க் ஆச்சே?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ/ ஏ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ரகுமான் ரசிகர்கள் யாராவது இருந்தால் அவருக்காகப்பார்க்கலாம் . ரேட்டிங் 2.25 / 5
Pagadi Aattam | |
---|---|
Directed by | Ram K. Chandran |
Produced by | T. S. Kumar K. Ramaraj D. Subas Chandrabose A. Gunasekar |
Starring | Rahman Gowri Nandha Surendar Monica Akhil |
Cinematography | Krishnasamy |
Edited by | K. Sreenivas |
Music by | Karthik Raja |
Production companies | Marram Movies Bharani Movies |
Release date |
|
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment