இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் ஒரு ஃபாரீன் படம் இயக்கினால் எப்படி இருக்கும்? வழக்கமாக உறவுச்சிக்கலை வைத்துப்படம் எடுக்கும் அதே பாணியில் தான் இதன் திரைக்கதையும் அமைந்திருக்கும்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி 40 வயது ஆன சிங்கிள் மதர் . டீன் ஏஜ் ல ஒரு மகள் உண்டு . நாயகியின் கணவர் அவர் ஆஃபீசில் பணி புரியும் ஒரு இளம் வக்கீல் உடன் காதல் கொண்டதால் நாயகி அவரைப்பிரிந்து வாழ்கிறார்
ஒரு நாள் ஒரு பார்ட்டி நடக்கும் இடத்துக்கு மகளை ட்ராப் பண்ண வந்த நாயகி அங்கே நாயகனை சந்திக்கிறார். நாயகனுக்கு 25 வயது . இவர் புகழ் பெற்ற பாப் சிங்கர் . ஏகப்பட்ட ரசிகைகள் .பலரும் கொண்டாடும் நபர் மீது ஒரு அட்ராக்சன் வருவது இயல்பு தானே? நாயகி நாயகனைக்கண்டு பிரம்மிக்கிறாள்
அதே சமயம் நாயகி நடத்தும் ஆர்ட் கேலரிக்கு விசிட் அடிக்கும் நாயகன் எல்லாமே பிடிச்சிருக்கு , எல்லாத்தையும் வாங்கிக்கறேன் என்கிறான்
இவர்கள் நட்பு தொடர்கிறது , அது காதலாக மலர்கிறது . நாயகன் உலகப்புகழ் பெற்ற பாப் சிங்கர் என்பதால் உலகம் முழுக்க ரவுண்ட்ஸ்லயே இருக்கிறார். நாயகி அவனுடன் சேர்ந்து உலகம் சுற்றும் வாலிபி ஆகிறார்
நாயகன் பிரபலம் என்பதால் மீடியாக்கள் நாயகன் - நாயகி இருவரும் இணைந்து இருக்கும் ஃபோட்டோக்களை வெளியிட்டு இருவருக்கும் இடையே ஆன வயது வித்தியாசம் பற்றிக்கமெண்ட் அடிக்கின்றன
இதில் நாயகிக்கு டிப்ரசன் உண்டாகிறது . நாயகனின் நண்பர்கள் ஒரு முறை நாயகனின் முன்னாள் காதலிக்கும் 33 வயசுதான் அவன் ஒரு ஆண்ட்டி லவ்வர் என கிண்டல் செய்கின்றனர்
அது கேட்டு அதிர்ச்சி அடைந்த நாயகி நாயகன் உடனான காதலை பிரேக்கப் செய்கிறார்
நாயகியின் டீன் ஏஜ் மகளூக்கு தன் அம்மாவின் காதல் தெரிய வருகிறது. அதைத்தன்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டதாக குற்றம் சாட்டுகிறார். இதே சமயம் நாயகியின் கணவனின் கள்ள்க்காதலி அவரை விட்டுப்பிரிகிறார்
நாயகியின் கணவனுக்கு நாயகியின் காதல் பற்றித்தேரிய வருகிறது. அவர் அதை எதிர்க்கிறார்
இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை . காதலர்கள் மீண்டும் இணைந்தார்களா? என்பது க்ளைமாக்ஸ்
நாயகி ஆக அன்னா ஹெத்தாவே பிரமாதமாக நடித்திருக்கிறார். சின்னச்சின்ன உணர்வுகளைக்கூட அழகாக வெளிப்படுத்துகிறார்.40 வயது ஆனாலும் தொப்பை போடாத அவர் பாடி மெயின்ண்டனன்ஸ் அருமை
நாயகன் ஆக நிக்கோலஸ் கேலிட்சன் நடித்திருக்கிறார். கச்சிதமான நடிப்பு சிங்கர் கம் டான்சர் ஆக இவர் வரும் காட்சிகளில் இளைஞிகளை ஈர்க்கிறார்
மகளாக வருபவர் சோ க்யூட் , ஆனால் அவருக்கு அதிக வாய்ப்பில்லை
படத்தில் வில்லன் என யாரும் இல்லை ,சந்தர்ப்ப சூழ்நிலைகள் , மீடியாக்கள் தான் வில்லன்கள்
115 நிமிடங்கள் படம் ஓடுகிறது
சபாஷ் டைரக்டர்
1 நீச்சல் குளத்தில் டீன் ஏஜ் பெண்கள் டூ பீஸ் டிரசில் இருக்கும்போது தானும் அதே போல் டிரஸ் செய்ய மனதுக்குள் ஆசைஇருந்தாலும் அவர்கள் கிண்டல் செய்வார்களோ என தயக்கத்தில் நாயகி ஸ்விம் சூட் போட்டு அதன் மேல் ஓவர் கோட் போட்டு அங்கே செல்லும் இடம் அருமை , அப்போது அவர்கள் அடிக்கும் கமெண்ட்டும் அழகு
2 நாயகன் தன்னைக்கவர்ந்த ஓவியத்தை நாயகிக்குப்பரிசாக அளிக்க அது நாயகி மனதில் ஏற்படுத்தும் வர்ண ஜாலங்கள் அழகு
3 நாயகன் நாயகியிடம் நம்ம காதலை உன் மகளிடம் சொல்லி விட்டாயா? எனக்கேட்கும்போது நாயகி அதைச்சொல்ல சங்கடமாக இருக்கிறது என பம்முவது அருமை
ரசித்த வசனங்கள்
1 40 வயசு என்பது ஒரு மைல் ஸ்டோன். 30 வயசு ஆகற வரை நீ ஒரு ஆளே இல்லை
2 உலகத்துல இதுவரை நான் பார்க்காத , கேள்விப்படாத ப்ளேஸ் தான் என் ஃபேவரைட் பிளேஸ்
3 ஒருத்தரு கிட்டே ஓப்பனாப்பேசும்போது என்னவெல்லாம் பிரச்சனை வரும்னு உனக்குத்தெரியுமா?
4 ஒரு இடத்துக்குப்போகும்போது கல கலப்பா பேசிட்டு இருக்கறவங்க திடீர்னு பேச்சை நிறுத்துனா நம்மைப்பற்றித்தான் ஏதோ பேசிட்டு இருந்தாங்கனு அர்த்தம்
5 நான் சந்தோஷமா இருப்பது நிறையப்பேருக்கு பிடிக்காம போகும்னு நான் நினைச்சுக்கூடப்பார்க்கலை
சந்தோஷமா இருக்கும் பெண்களை பலருக்கும் பிடிக்காதுனு நான் ஏற்கனவே சொன்னேனே ?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் நாயகியுடன் காரில் போகும்போது மீடியாக்கள் கண்ணில் படாமல் இருக்க காருக்குள் ஒளிந்து கொண்டு வருகிறான் அவ்ளோ ஜாக்கிரதை ஆக இருக்கும் நாயகன் அடுத்தடுத்த காட்சிகளில் நாயகியுடன் ஒப்பன் ஸ்பேசில் ஸ்விம் சூட் உடன் சுற்றுவது எப்படி > மீடியாக்கள் கவர் செய்வார்கள் என்பது தெரியாதா?
2 நாயகி தன் கணவன் செய்த துரோகத்தையும், நாயகன் எப்போதோ செய்த தப்பையும் ஒப்புமைப்படுத்தி இருவரும் ஒன்று என வெறுப்பது ஏற்புடையது அல்ல , கணவன் தப்பு செய்தது நாயகியுடன் வாழும்போது , ஆனால் நாயகன் தப்பு செய்தது நாயகியுடன் பழகும் முன்பு , இர்ண்டும் ஒன்றல்ல
3 வாரம் ஒரு முறை தன் மகளை சந்திப்பதாக சொல்லும் நாயகி பல மாதங்களாக நாயகனுடன் உலகம் சுற்றிக்கொண்டு இருக்கிறார். அப்போது மகளுக்கு டவுட் வரவில்லையா? அல்லது நாயகி சமயம் பார்த்து மகளிடம் காதலை சொல்லி இருக்கலாமே?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+ காட்சிகள் உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - உண்மையில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவலை படமாக்கி இருப்பதால் சுவராஸ்யம் தான், பார்க்கலாம் ., ரேட்டிங் 2.75 / 5
The Idea of You | |
---|---|
Directed by | Michael Showalter |
Screenplay by |
|
Based on | The Idea of You by Robinne Lee |
Produced by |
|
Starring |
|
Cinematography | Jim Frohna |
Edited by | Peter Teschner |
Music by | Siddhartha Khosla |
Production companies |
|
Distributed by | Amazon Prime Video |
Release dates |
|
Running time | 116 minutes[1] |
Country | United States |
Language | English |
0 comments:
Post a Comment