Monday, May 20, 2024

LAAPATAA LADIES (2024) - ஹிந்தி - சினிமா விமர்சனம் (காமெடி டிராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்


  லாபட்டா  லேடீஸ்  என்ற  ஹிந்தி  சொல்லுக்கு  தொலைந்த பெண்கள்  என்று  பொருள்.5  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட  இப்படம்  ரூ 200 கோடி  வசூலை  பாக்ஸ்  ஆஃபீசில்  வாரிக்குவித்தது . காமெடி  டிராமா  என்ற  ஜனரில்  ரிலீஸ்  ஆனாலும்  இது  ஒரு  ஃபீல்  குட்  மூவி . கூடவே  பெண்  கல்வி , பெண்  சுதந்திரம்  போன்ற முக்கிய  விஷயங்களைப்போகிற  போக்கில் அசால்ட்டாக  சொல்லும்  படம் . டோரண்ட்டோ  ஃபிலிம்  ஃபெஸ்ட்டிவலில்  2023 ஆம்  ஆண்டே  திரை  இடப்பட்டாலும்  திரை  அரங்குகளில்  1/3/2024  முதல்  ரிலீஸ்  ஆகி  அமோக  வரவேற்பைப்பெற்றது . இப்போது  26/4/2024  முதல்  நெட்  ஃபிளிக்ஸ்  ஓடிடி  யில்  காணக்கிடைக்கிறது 


ஸ்க்ரிப்ட்  ரைட்டிங்க்  காம்ப்பெட்டிஷனில்  “ டூ  பிரைட்ஸ்  ( இரு  மணப்பெண்கள் )  என்ற  கதையை  இணைத்தயாரிப்பாளர்  ஆன  அமீர்கான்  தான்  இதை  முதலில்  கண்டறிந்தார் . படம்  எடுக்க  முனைந்ததும்  அவர்  தான்/ இதன் இயக்குநர்  கிரண்  ராவ்க்கு  இது இரண்டாவது  படம் , முதல்  படம்  2010ல்  ரிலீஸ்  ஆன  DHOBI GUTS ( MUMBAI  DIARIES). இதன்  படப்பிடிப்பு  மத்தியப்பிரதேச  மாநிலத்தில் சில  கிராமங்களில்  படமாக்கப்பட்டது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


  நாயகி  வசதியான  குடும்பத்தில்  பிறந்தவர்.இவர்  படிக்கும்  பள்ளியில் 900  பேர்  படித்தாலும்  இவர்  தான்  முதல்  ரேங்க் . எனவே  நாயகியின் கனவு  மேல்  படிப்புப்படிக்க  வேண்டும்  , மேலும்  இயற்கை  முறையில்  விவசாயம்  செய்ய  வேண்டும்  என்பதே , ஆனால்  அவளது  பெற்றோர் அவள்  விருப்பத்துக்கு  முட்டுக்கட்டை  போடுகிறார்கள் .  திருமணம்  செய்து  வைக்கிறோம், கணவன்  அனுமதித்தால்  படி  என்கிறார்க:ள்’’


  நாயகிக்குப்பார்த்த  மாப்பிள்ளை  ஆல்ரெடி  திருமணம்  ஆனவன்  .அவன்  மனைவி மர்மமான  முறையில்  இறந்தவள்  , அது  இயற்கை  மரணமா? கொலையா?  என்பதே   தெரியாது . அதனால்  நாயகிக்கு  விருப்பமே  இல்லை . வேறு  வழி  இல்லாமல்  திருமணம்  நடக்கிறது. திருமணம்  முடிந்ததும்  நாயகி  தன்  கணவனுடன்  ரயிலில்  போகிறாள் 

இதே  ரயிலில்  புதுசாகத்திருமணம்  ஆன  நாயகனும்  தன்  மனைவியுடன்  ரயிலில்  போகிறான்

அந்தக்காலத்தில்  எல்லாம்  மணப்பெண்கள்  முக்காடு  போட்டிருப்பார்கள் . பெரும்பாலும்  சிகப்பு  நிற  சேலை  தான்  மணப்பெண்ணுக்கு 

அதே  கம்ப்பார்ட்மெண்ட்டில்  மூன்று  சிவப்பு  சேலை  முக்காடு  அணிந்த  மணப்பெண்கள்  , மாப்பிள்ளைகள்  பயணிக்கிறார்கள் 

 நாயகன்  தூங்கி  விட்டான் , திடீர்  என  கண்  விழித்தால்  அவன்  இறங்க  வேண்டிய  ஸ்டேஷன் 

டக்  என  தன்  மனைவியை  அழைப்பதாக  நினைத்து  தவறுதலாக  நாயகியை  வா  போலாம்  என  அழைக்கிறான்

நாயகியின் கணவன்  தூங்கிக்கொண்டிருக்கிறான் . நாயகிக்கு  தப்பிக்க  இது ஒரு  நல்ல    வாய்ப்பு . அவள்  நாயகனுடன்  கிளம்பி  விடுகிறாள்  

நாயகன்  வீட்டுக்கு  வந்து  மணப்பெண்ணுக்கு ஆரத்தி  எடுக்கும்போது   மணமகள்  மாறியது  தெரிய  வருகிறது 

அந்த  ஊர்  போலீஸ்  ஸ்டெஷனில்  புகார்  கொடுக்கிறார்கள் போலீஸ்  ஆஃபீசர்   மணப்பெண்ணின்  நகைகளை  ஆட்டையைப்போடலாம்  என  திட்டம்  போடுகிறார் . இதற்குப்பின்  நடக்கும்  சம்பவங்களே  மீதி  திரைக்கதை 


நாயகி  ஆக பிரதிபா  ரந்தா  பிரமாதமாக  நடித்திருக்ககிறார். புரட்சிகரமான  வசனங்களை  சாதார்ணமாகப்பேசும்  கேரக்டர் .  சிரித்த  முகம், கண்ணிய  உடை . கச்சிதமான  உடல்  மொழி 


நாயகன்  ஆக  ஸ்பார்ஷ் ஸ்ரீ வஸ்தவ்  அடக்கி  வாசித்திருக்கிறார். காதல்  கோட்டை  அஜித்  முகச்சாயலில்  இருக்கிறார் , நிறைவான  நடிப்பு 


நாயகனின்  மனைவியாக  நிதான்சி  கோயல் அப்பாவித்தனமான  கேரக்டரில்  வருகிறார். கண்கள்  இவரது  பிளஸ்  பாயிண்ட் 


ரவி  கிஷன்  போலீஸ்  இன்ஸ்பெக்டர்  ஆக  ஆரம்பத்தில்  வில்லத்தனம்  காட்டி  பின் நல்லவர்  ஆகிறார். நல்ல  நடிப்பு 


முக்கியமான  பாத்திரங்கள்  போக  நாயகனின்  மனைவிக்கு  அடைக்கலம்  கொடுக்கும்  டீக்கடை  ஓனர்  அம்மாவாக  வரும்  பாட்டி  , அந்த  சிறுவன்  என  எல்லோர்  நடிப்பும்  நிறைவு 


ஜபீன்  மர்ச்செண்ட்  எடிட்டிங்  அருமை . 120  நிமிடங்கள்  தான்  படம் ,  ஷார்ப்  ட்ரிம்மிங் 


ராம்  சம்பத்  இசையில்  நான்கு  பாடல்கள்  அருமை . பின்னணி  இசையும்  குட் 


சினேகா  தெசாயின்  திரைக்கதைக்கு  உயிர்  கொடுத்து  இயக்கி  இருப்பவர்  கிரண்  ராவ்


சபாஷ்  டைரக்டர்


1  கல்யாணப்பெண் கள்  மிஸ்  ஆகும்  சீரியசான  கதையில்  ஆஙகாங்கே  காமெடி  கலந்து  எழுதியது 


2    பெண்ணியம்  பெசும்  வசனங்கள்  அதிகம்  என்பதால்  வசனத்திற்கு  இரண்டு  பெண்களை  நியமித்தது 


3   நாயகியின் கேரக்டரை  சஸ்பென்சாக  காட்டியது 


4  பெண்  கல்வி , பெண்  விடுதலை , பெண்  உரிமை  போன்றவற்றை  பிரச்சார  நெடி  இல்லாமல்  யதார்த்தமாக   காட்டிய  விதம் 



ரசித்த  வசனங்கள்   (  சினேகா  தேசாய்  + திவ்ய  நிதி  ஷர்மா  ) 


1    உன்  பேர்  என்னம்மா?

 புஷ்பா 


உன்  புருசன்  பேரு ?


 சும்மா  இரேம்மா , கவுரவமான  குடும்பத்தைச்சேர்ந்த  எந்தப்பெண்ணாவது  தன்  புருசன்  பேரைச்சொல்லுமா? 


பங்கஜ் .. அதான்  புருசன்  பேரு 


2   மணப்பெண்  மிஸ்  ஆனா  என்ன?வரதட்சணையா  தந்த  பைக்  ஆல்ரெடி  டெலிவரி  ஆகிடுச்சே? 


3   நீ  எங்கிருந்தம்மா  வர்றே?


 எங்க  வீட்ல  இருந்து 

  சுத்தம்  , உன்  ஊர்  பேரு  என்ன? 


கங்காபூர் 


4   உனக்கு  அறிவு  இருக்கா? போலீஸ்  ஸ்டேஷன்  போகும்போது  இப்படித்தான்  புது டிரஸ் , புது  வாட்ச்  எல்லாம்  போட்டுட்டுப்போவாங்களா?  போலீஸ்  எல்லாத்தையும்  உருவிட  மாட்டாங்களா ?


5   மேடம் , உங்க  குரல்  அருமை , உங்க  பாட்டுக்காக  மாமூல் ல  ஒரு  பத்தாயிரம்  ரூபா  குறைச்சுக்கறேன் 

  அப்டியா? அப்போ  இன்னொரு  பாட்டு  பாடிடறேன், இன்னும் ஒரு  பத்தாயிரம்  குறைச்சுக்குங்க 


6    இன்ஸ்பெக்டர் , என்  சம்சாரம்  காணாமப்போயிட்டா 


  அது  எப்டிடா? நான்  கூட  15  வருசமா    என சம்சாரத்தை  தொலைக்க  முயற்சி  பண்றேன், என்னாலயே  முடியலை , நீ  மட்டும்  எப்டி ? 


7    நான்  உன்  கிட்டே  லஞ்சமா  15,000  ரூபா  கேட்டேன் , நீ  வெறும்  5000  தான்  கொடுத்திருக்கே?  மீதி  ரூ  10,000  எங்கே? 


8    நீ  சொல்றதைப்பார்த்தா  நீ  உன்  சம்சாரத்தை  மட்டும்  தொலைக்கலை ,  அடுத்தவன்  சம்சாரம்  அதுவும்  புதுப்பொண்ணு   கிடைச்சிருக்கு  லக்கி  தான் 


9    யோவ் , ரெண்டு  சமோசா வாங்கிட்டு  நாலு  தடவை  சாம்பார்  வாங்கறியே? அது  சும்மா  தொட்டுக்கத்தான் , குடிச்சிடுவே  போலயே? 


10  அவன்  இதுவரை  சல்மான்  கான்  வீட்டுக்குப்போனது இல்லை , ஆனா  சல்மான்  கான்  வீட்டு  அட்ரஸ்  தெரியும் , ஆனா  பல  வருசமா  குடி  இருந்த  உன்  வீட்டு  அட்ரஸ்  தெரியாதுங்கறியே?


11  முட்டாளா  இருப்பது  அவமானகரமான  விஷயம்  இல்லை , ஆனால்  அதைக்கூட  பெருமையா  நினைக்கறதுதான்  அவமானம் 


12   உன்  பெற்றோர்  உன்னை  ஒழுங்கா  வளர்க்கலை

 இல்லையே?  நல்லா  சமைக்கச்சொல்லிக்கொடுத்தாங்க , வீட்டைக்கிளீன்  பண்ணுவென்


 ஆனா    உன் ஊருக்கு  எப்படிப்போகனும்னே  உனக்குத்தெரியலையே?


13    எங்க  குடும்பத்துலயே  நான்  தான்  அதிகம்  படிச்சிருக்கேன் ., இங்க்லீஷ்ல  ஒரு  ஃபுல்  லைன்  சொல்லவா?


 சொல்லுங்க 


 ஐ லவ்  யூ 


14   இந்த  உலகம்  ரொம்பப்புதுமயானது . எப்படி  நீ  அதைப்பார்க்கறியோ  அப்படி  அது  இருக்காது 


15   உன் புருசன்  ஒரு  தியாகி , ஒரு  ஊமையைக்கல்யாணம்  பண்ணிக்கிட்டானே?


 நான்  ஒண்ணும் ஊமை  இல்லை 


  அப்புறம்  ஏன்  அமைதியாவே  இருக்கே?


16 புருசன்  பேரை  சத்தம்  போட்டு  சொன்னா  பொண்ணோட  பேரு  கெடும் 


நல்ல   பேரு  வைப்பதே  கூப்பிடத்தானே?


17    என்ன? உன்  ஊர்  பேரைக்கேட்டா  மாத்தி  மாத்தி  சொல்ரே?


 நான்  என்ன  செய்ய ?  கவர்மெண்ட்  அடிக்கடி  மாறும்போது  ஊர்  பேரையும்  அடிக்கடி  மாத்திடுது 


18  உன்னை  யார்  லவ்  பண்றாங்களோ  அவங்களுக்கு  உன்னை  அடிக்க  உரிமை  இருக்குனு  சொன்னாங்க , அப்ப  இருந்து  பொண்ணான  நானும்  அடிக்க  ஆரம்பிச்ட்டேன் 


19   பர்தா  போட்டிருக்கும்  பெண்ணோட  ஃபோட்டோ  காட்டி  பார்த்திருக்கியா?னு  கேட்கறியெ? முகம் தானே  பொண்ணோட  ஐடெண்ட்டிட்டி?


 அது  சரி , உங்க  சம்சாரம்  ஏன்  முக்காடு  போட்டு  இருக்கு ? 


20 இந்திய  விவசாயிகளிடம்  இரண்டே  குணங்கள்  தான்  1  உண்மை /நேர்மை   2  கடின  உழைப்பு 


21  இரண்டு  பொண்ணுங்க  தொழிகளா  இருப்பதே  அபூர்வம்  தான் 


22   எளிமையான  உண்மையை  யாரும்  விரும்புவதில்லை , ஆனால்  அலங்காரமான  பொய்யை  விரும்புகிறார்கள் 


23  நான்  சொல்றேன் , ஞாபகம்  வெச்சுக்கோ , இந்தப்பொண்ணு  வாழ்க்கைல  ரொம்ப  தூரம்  ப்[ஓகப்போகுது 


 ஆமா  , ஊருக்குப்போக  800  கிமீ  இருக்காம் 


 யோவ்  நான்  அந்த  அர்த்தத்துல  சொல்லலை .அவ  எங்கெயோ  போயிடுவானு  உயர்வு  நவிர்சிஅ  சொன்னேன் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வசதியான  குடும்பத்தில்  பிறந்த  நாயகியை  ஏன்  இரண்டாம்  தாரமாகக்கட்டிக்கொடுக்க  பெற்றோர்  முன்  வரனும் ?


2   தன்  லொக்கேஷனை  யாரும்  மொபைல்  ஃபோன்  வைத்துக்கண்டு  பிடிக்கக்கூடாது  என  நாயகி  சிம்  கார்டை  எரிக்கிறாள் . இது  தேவையே  இல்லை. சிம் கார்டு  ஃபோனில் இருந்தால்  தான்  அது  ஆன்  பண்ணினால்  தான்  லொக்கேஷனை  சைபர்  க்ரைமால்  கண்டு  பிடிக்க  முடியும், வெறும்  சிம்  கார்டை  வைத்துக்கண்டு  பிடிக்க  முடியாது 


3  நாயகியின் நகைக்கு  ஆசைப்படும்  போலீஸ்  ஆஃபீசர்  அதை  ஆட்டையைப்போட  திட்டம்  போடும்  ஆஃபீசர்  திடீர்  என  நல்லவன்  ஆக  மாறுவது  ஏன் ? 


4  முக்காடு  போட்டால்  வேறு  யாரும்  முகம் பார்க்க  முடியாதபடி  பர்தா  போட்டிருக்கும்  மணப்பெண்கள்   சொந்தக்காரங்களோடு  இருக்கும்போது  அப்படி  பர்தாவோடு  இருப்பது  ஓக்கே . ஆனால்  ரயிலில்  த்னிமையில்  இருக்கும்போது  முக்காடு  எதற்கு ? 


5 நாயகன்  மிடில்  கிளாஸ் , நாயகி  செம  வசதி . நாயகனின்  மனைவியும்  ஓரளவு  வசதி . நாயகியின்  கணவன்  செம  வசதி . யாரும்  ஏழை  இல்லை . ஏன்  எல்லோரும்  அன்  ரிசர்வ்ட்  கம்ப்பார்ட்மெண்ட்டில்  வரனும் ?>  அதுவும்  திருமணம்  ஆன  புது  ஜோடி  கூட்ட  நெரிசலில்  பயணம்  செய்ய  விரும்புவார்களா? 


6   இரு  நாயகிகளும்   தலா  100  பவுன்  நகையுடன்  இருக்கிறார்கள் . இப்படித்தான்  மடத்தனமாக   அன்  ரிசர்வ்ட்  கம்ப்பார்ட்மெண்ட்டில்  பயணிப்பார்களா? 


7  நாயகி  தப்பிப்பதாக  இருந்தால்  தூங்கும்  கணவனை விட்டு  அவள்  பாட்டுக்கு  தனியாக  சென்றிருக்கலாம் /. நாயகன்  கூட  செல்வதால்  நாயகனின்  மனைவி  மிஸ்  ஆக  அவளும்  ஒரு  காரணம்  ஆகிறாளே?  அந்த  குற்ற  உணர்ச்சி  அவர்க்கு  இருக்காதா?   


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   அனைவருக்கும்  பிடிக்கும்  ஒரு அருமையான  ஃபீல்  குட்  மூவி . பார்க்கலாம் , ரசிக்கலாம்  ரேட்டிங்  3.5 / 5 


Laapataa Ladies
Theatrical release poster
Directed byKiran Rao
Written by
  • Original Story:
  • Biplab Goswami[1]
  • Screenplay and Dialogues:
  • Sneha Desai
  • Additional Dialogues:
  • Divyanidhi Sharma
Produced by
Starring
CinematographyVikash Nowlakha
Edited byJabeen Merchant
Music byRam Sampath
Production
companies
Distributed byYash Raj Films
Release dates
  • 8 September 2023 (TIFF)[2]
  • 1 March 2024
Running time
124 minutes[3]
CountryIndia
LanguageHindi
Budgetest.₹4−5 crore[4]
Box office₹200.10crore[5]

0 comments: