வெறும் 13 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு 260 மில்லியன் டாலர் வசூல் செய்த சூப்பர் ஹிட் மூவி இது இன் கன்சீவபிள் என்ற சொல்லுக்கு கர்ப்பம் ஆக முடியாத என்ற பொருளும் உண்டு , நம்ப முடியாத, நினைத்துப்பார்க்க முடியாத , புத்திக்கு எட்டாத என்ற பொருளும் உண்டு.
இது த்ரில்லர் மூவியாக இருந்தாலும் பெண்களுக்குப்பிடிக்கும் விதத்தில் அமையக்காரணம் கதைக்கரு வாடகைத்தாய் பற்றிய அம்சம் என்பதால் தான்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் , நாயகி இருவரும் தம்பதிகள். இருவருமே டாக்டர்கள் . நாயகிக்கு கர்ப்பம் ஆக முடியாத குறைபாடு உண்டு. அதனால் வாடகைத்தாய் மூலம் ஒரு குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் . அதாவது நாயகனின் விந்து அணு வை வாடகைத்தாயின் கருமுட்டையுடன் சேர வைத்து பிறந்த குழந்தையை வளர்க்கிறார்கள் அவர்களுக்கு மீண்டும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை .ஆனால் இரண்டு முறை நாயகி கர்ப்பம் ஆகியும் பின் கரு தங்காமல் கலைந்து போகிறது
நாயகியின் தோழி ஒருத்தி நாயகிக்கு வில்லியை அறிமுகப்படுத்துகிறாள். வில்லி கணவனைப்பிரிந்து வாழும் சிங்கிள் மதர் . ஒரு பெண் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறாள்
இப்போது வில்லி நாயகியின் வீட்டில் நாயகியின் குழந்தையைப்பார்த்துக்கொள்ளும் பணிப்பெண்ணாக சேர்கிறாள் .நாயகியின் குழந்தை , வில்லியின் குழந்தை இருவரையும் வில்லி நன்கு கவனித்துக்கொள்கிறாள்
நாயகனுக்கோ , நாயகிக்கோ தெரியாத ஒரு ரகசியம் ஆடியன்சான நமக்கு மட்டும் சொல்லப்படுகிறது
அதாவது நாயகியின் குழந்தைக்கு பயலாஜிக்கல் மதர் வில்லி தான். வில்லி திட்டமிட்டு தான் நாயகி வீட்டில் பணியில் சேர்கிறாள்
நாயகி இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டு தன் தோழியின் கரு முட்டையை தானமாகப்பெற இருக்கிறாள் . இந்த விஷயம் நாயகியின் தோழி மூலம் வில்லிக்குத்தெரிய வருகிறது
வில்லி அது பிடிக்காமல் நாயகியின் தோழியைக்கொலை செய்து விடுகிறாள் . இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியாது
இப்போது வில்லி கர்ப்பம் ஆக இருக்கிறாள் . நாயகனின் விந்து அணுவை நாயகி யின் உடம்பில் செலுத்தி செயற்கை முறையில் கரு உருவாகி வளர்கிறது
ஒரு கட்டத்தில் நாயகிக்கு வில்லி மீது சந்தேகம் வருகிறது . தன் மீது நாயகி சந்தேகப்படுவதை அறிந்த வில்லி நாயகியைக்கொலை செய்ய முயற்சிக்கிறாள்
இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் தான் மீதி திரைக்கதை
நிக்கோலஸ் கேஜ் தான் நாயகன் ஆக நடித்திருக்கிறார். அமெரிக்காவில் வாழும் கலியுக ராமன் ஆக வருகிறார். அருமையான நடிப்பு . இந்தக்காலத்தில் இந்த நாட்டில் இப்படி ஒரு ஆண் மகனா?என வியக்க வைக்கிறார்
நாயகி ஆக ஜினா ஜெர்சன் கலக்கி இருக்கிறார் .அவரது அனாயசமான ஹேர் ஸ்டைல் , அப்பாவித்தனமான சிரிப்பு இரண்டும் பிளஸ் பாயிண்ட்ஸ் . நாயகி வில்லி இருவருக்குமான மோதலில் இவரது நடிப்பு டாப்
வில்லி ஆக நிக்கி வேலன் பிரமாதப்படுத்தி இருக்கிறார். ஓப்பனிங் ஷாட்டிலேயே தன் கணவனைக்கொலை செய்யும் காட்சி நாயகியின் தோழியை பின் பாதியில் கொலை ,செய்யும் காட்சிகளில் அதிர வைக்கும் நடிப்பு
ரிச்சர்டு பியர்டு தான் எடிட்டர் /106 நிமிடங்கள் படம் ஓடுகிறது .ஷார்ப் ஆன ட்ரிம்மிங்
பிராண்டன் காட்ஜ் தான் ஒளிப்பதிவு . நேர்த்தியான படப்பிடிப்பு . நாயகி , நாயகியின் தோழி இருவரையும் அழகாகக்காட்டிய விதம் அருமை
கெவின் கினர் தான் இசை . பிஜிஎம் மில் த்ரில்லர் படங்களுக்கே உரித்தான் வேகம் குட் ஒன்
க்ளோ கிங் தான் திரைக்கதை ஜோனாதான் பேக்கர் தான் இயக்கம்
சபாஷ் டைரக்டர்
1 இந்த மாதிரி கதைகளில் வில்லியுடன் நாயகன் உறவு கொள்வது போலக்காட்சிகள் அவசியம் வைப்பார்கள் , ஆனால் நாயகனை ராமர் போல சித்தரித்து திரைக்கதையில் கண்ணியம் காத்த விதம் குட்
2 வில்லி செய்யும் இரண்டு கொலைகளையும் பரபரப்பாகப்படம் ஆக்கிய விதம்
3 நாயகி - வில்லி இருவருக்குமான மோதல் காட்சி
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லிக்கும் அவள் கணவனுக்கும் என்ன பிரச்சனை ? என்பது சொல்லப்படவே இல்லை . வில்லி அவள் கணவனைத்தாக்கி காயப்படுத்திக்கொலை செய்கிறாள் . ஆனால் போலீசால் அது ஒரு விபத்து என கேசை க்ளோஸ் செய்வது எப்படி ?
2 க்ளைமாக்சில் நாயகன் வில்லியிடம் நாயகி இறந்து விட்டாள் என ஏன் பொய் சொல்கிறார்? அடுத்த நிமிடத்திலேயே நாயகி உயிருடன் வில்லி முன் வந்து விடுகிறார். பின் ஏன் அந்தக்காட்சி ?
3 வில்லி நாயகனை வீழ்த்த பல டெக்னிக்குகளை உபயோகப்படுத்தியும் நாயகன் ராமன் ஆக இருப்பது ஆச்சரியமான கேரக்டர் டிசைன்
ரசித்த வசனங்கள்
1 டியர் , எங்க அம்மாவுக்கு புதுசா சேர்ந்திருக்கும் நம்ம வீட்டு வேலைக்காரியைப்பிடிக்கலை
உங்கம்மாவுக்கு உங்களைத்தவிர யாரையுமே பிடிக்காதே?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+ காட்சி உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பெண்களைக்கவரக்கூடிய ஃபேமிலி க்ரைம் ட்ராமா இது .பார்க்கலாம் . ரேட்டிங் 3 / 5
Inconceivable | |
---|---|
Directed by | Jonathan Baker |
Written by | Chloe King |
Produced by |
|
Starring | |
Cinematography | Brandon Cox |
Edited by | Richard Byard |
Music by | Kevin Kiner |
Production companies |
|
Distributed by | Lionsgate Premiere |
Release date |
|
Running time | 106 minutes |
Country | United States |
Language | English |
Budget | $12.8 million[2] |
Box office | $259,635[3] |
0 comments:
Post a Comment