விஜய் மல்லய்யா , நீரவ் மோடி ஆகிய இரு தொழில் அதிபர்களின் பெயர்களில் இருந்து பாதிப்பாதி உருவி விஜய் மோடி என்ற கேரக்டரை உருவாக்கி தொழில் அதிபர்களை டேமேஜ் செய்வதற்கென்றே எழுதப்பட்ட திரைக்கதை இது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் மிகப்பெரிய கோடீஸ்வரன். வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு கோபித்துக்கொண்டு நண்பரின் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ரூம் எடுத்துத்தங்குகிறார். இவர் ஒரு எம் பி யின் பினாமியும் கூட . எம் பி யின் பிளாக் மணி ரூ 200 கோடி ஹாட் கேஷ் ஆக இவருடன் ரூமில் இருக்கிறது
ஹோட்டலில் ஒரு அழகான பெண்ணைப்பார்க்கிறார். அவள் தன் காதலனுக்காக காத்திருப்பவள் . பின் அலைபேசியில் அவள் காதலனுடன் ஏதோ வாக்கு வாதம் செய்கிறாள் இதைக்கண்ட நாயகன் என் கூட ஒரு நைட் தங்கு. தப்பாக நினக்க வேண்டாம். மனம் விட்டு சில விஷயங்கள் பேச வேண்டும், நான் சொல்வதை காது கொடுத்துக்கேட்க ஒரு ஆள் வேண்டும் , அவ்வளவு தான். நான் இந்த கட்டிலில் இருப்பேன் , நீ அந்த சோபாவில் இருக்கலாம். தொட மாட்டேன் ., காலையில் எழுந்ததும் நீ ஒரு கோடி ரூபாய் சன்மானம் வாங்கிக்கொண்டு போயிடலாம் . டீலா? என்கிறார்.
இந்த டீலுக்கு அந்தப்பெண் ஒத்துக்கொள்கிறாள். அடுத்த நாள் காலை அந்தப்பெண் எழுந்து கிளம்பி விடுகிறாள் . ஒரு கோடி வாங்கிக்கொள்ள வில்லை
அந்த ரூம் கதவு நீண்ட நேரம் திறக்காமல் இருப்பதால் போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஓப்பன் செய்து பார்த்தால் கோடீஸ்வரன் கொடூரமாகக்கொலை செய்யப்பட்டு இருக்கிறான்.200 கோடி பணமும் காணோம்
எம் பி தரப்பில் இருந்து பயங்கர பிரஷர்
போலீஸ் விசாரிக்கிறது . நாயகனுக்கு பேங்க்கில் 2500 கோடி ரூபாய் அடைக்க வேண்டிய கடன் இருக்கிறது அவர் பங்களா , சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்றாலும் கடனை அ டைக்க முடியாது
ஆனால் அவர் பல இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து வைத்திருக்கிறார். அதன் மதிப்பு ரூ 500 கோடி
இப்போது போலீசின் சந்தேகம் அந்த இன்சூரன்ஸ் பணத்தை பெற கொலை செய்யப்பட்டாரா? ரூமில் இருந்த எம் பி யின் கறுப்புப்பணம் ஆன 200 கோடியைக்கைப்பற்றக்கொலை செய்யப்பட்டாரா? என்பதில் இருக்கிறது
இவை போக அந்தப்பெண் ஏன் ஒரு கோடி வாங்கிக்கொள்ளாமல் சென்றாள் ? அந்தப்பெண் யார்? என்பதையும் துப்பு துலக்குகிறது
இந்தக்கேஸ் எப்படி முடிகிறது என்பது தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக தெலுங்கின் மூத்த நடிகர் ராஜேந்திரப்பிரசாத் அசால்ட்டாக நடித்திருக்கிறார். அவரது , கெட்டப் , உடல் மொழி , வசன உச்சரிப்பு அனித்தும் அருமை
நாயகி ஆக அந்த ஒன் நைட் ஸ்டேண்ட் நைட்டிங்கேல் ஆக சாஷா சிங் கச்சிதமான நடிப்பு , முக அழகு , இளமை , சிரிப்பு அனைத்தும் அருமை
மீதி பெரும்பாலும் புதுமுகங்கள் , கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக ஏற்று நடித்திருக்கிறார்கள்
ராஜேஷ் நித்வானா இசையில் ஒரு த்ரில்லர் படத்துக்கு எந்த மாதிரி பிஜிஎம் வேண்டும் என்பதை உணர்ந்து வெளிப்படுத்தி இருக்கிறார்
ராய் குமார் நீலா வின் எடிட்டிங்க் ஷார்ப் ஆக இருக்கிறது
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் பவானி சங்கர்
சபாஷ் டைரக்டர்
1 நாயகன் தான் ஒரு தனிக்கட்சி ஆரம்பித்தால் என்ன மாதிரி எல்லாம் திட்டங்கள் செயலபடுத்துவேன் என்று சொல்லும் காட்சி மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் ரசிக்கத்தக்க காட்சி .அடடே. இப்படி இருந்தாக்கூட நல்லாதான் இருக்கும் என்று சொல்ல வைக்கும் அந்த 8 பாய்ண்ட்ஸ்
2 ஒரு த்ரில்லர் படத்தில் கருத்தாழம் மிக்க வசனங்களை அட்டகாசமாக எழுதிய வசனகர்த்தா
3 க்ளை,மாக்ஸ் ட்விஸ்ட்
ரசித்த வசனங்கள்
1 நேர்மை சினிமாவைத்தவிர வேறு எங்கும் ஜெயித்ததே இல்லை
2 அப்பாவியா வாழ்வது பெரிய சாபம்
3 எனக்கு வயசாகிடுச்சு , நிம்மதியாப்போய்ச்சேரலாம்னு யாராவது நினைக்கிறார்களா? சாவின் விளிம்பில் இருப்பவர்கள் கூட இன்னும் கொஞ்சம் நாள் வாழத்தான் ஆசைப்படுகிறார்கள்
6 பிள்ளைகள் மேல் பெற்றவர்கள் வைக்கும் அன்பு போல பெற்றவர்கள் மீது பிள்ளை கள் அன்பு வைப்பதில்லை
7 உன்னை பிளான் பண்ணி பெத்துக்கலை , அது ஒரு சைடு எஃப்ஃபக்ட்
8 எல்லா ஆண்களும் பொசசிவ்னெஸ் உடன் தான் இருப்பார்கள் , அதில் என்ன தப்பு ?/
9 பிச்சைக்காரன் ஆக இருந்தாலும், பில்கேட்ஸ் ஆக இருந்தாலும் சந்தோஷம் , துக்கம் இரண்டும் பொது
10 எந்த கிரிமினலா இருந்தாலும் ஏதாவது ஒரு தடயத்தை விட்டுட்டுத்தான் போவான்
11 பாப்புலாரிட்டி இருப்பவனுக்குப்ப்ணம் கிடைக்குது , ஆனா பணம் வெச்சிருக்கும் எல்லாருக்கும் பாப்புலாரிட்டி கிடைக்காது / அதுக்கு எந்த கேரண்டியும் இல்லை
12 வேலை நடக்கனும்னா நம்ம கைல பவர் இருக்கனும்
13 சாமான்யன் பார்வைல ஐ க்யூ அதிகமா இருப்பவன் , ஐ க்யூ கம்மியா இருப்பவன் எல்லாம் ஒண்ணுதான்
14 இந்த உலகத்துல 49 % பேர் பெஸ்ட் ஆக இருக்காங்க 51 % பேர் சராசரி ஆளுங்களா இருக்காங்க
15 வாழ்க்கைல நம்மைப்பின் தொடர்பவர்கள் ரெண்டே பேரு தான் 1 நம்ம வாரிசுகள் 2 நம்மிடம் பணிபுரிபவர்கள்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன லாக்கரைத்திறக்கும்போது ரகசிய எண்ணை பிரஸ் பண்ன வேண்டும், நாயகியை அந்தப்பக்கம் திரும்பு என்று சொல்லும்போது நாயகி ஃபோனைப்பார்ப்பது போல வீடியோ எடுக்கிறார். அது கூடவா நாயகனுக்குத்தெரியாது ?
2 சொந்த மகன் பணம் கேட்கும்போது அவ்ளோ பணம் இல்லை என்று சொல்லி ஒரு லட்சம் வேணா தர்றேன் என்பவர் முன் பின் தெரியாத பெண்ணுக்கு தண்டமாய் ஒரு கோடி கொடுக்க முன் வருவது
3 இவ்ளோ கடன்கள் , பிரச்சனைகள் உள்ள நபரையா ஒரு எம் பி தன் பினாமியாக தேர்ந்தெடுப்பார் ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஜாலியான த்ரில்லர் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம் , போர் அடிக்கவில்லை ., ரேட்டிங் 2.5 / 5
0 comments:
Post a Comment