Monday, May 27, 2024

எலெக்சன் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( பொலிடிக்கல் டிராமா )

       


         2022 ஆம்  ஆண்டு  வெளியான  சேத்து  மான்  என்ற  தரமான  படத்தை  இயக்கிய இயக்குநர்  தமிழ்  +  உறியடி  பாகம் 1  , பாகம்2, ஃபைட்  கிளப்  ஆகிய  படங்களின்  நாயகன்  விஜய்  குமார்  இவர்களது  காம்போவில்  வந்திருக்கும்  ,மாறுபட்ட  பொலிடிக்கல்  டிராமா  இது. தமிழ்  சினிமாவில்  முழுக்க  முழுக்க அரசியல்  அங்கத  படமாக  வந்த  அமைதிப்படை  போல  உள்ளூர்  பஞ்சாயத்துத்தேர்தலை  மிக  விபரமாக காட்டிய  முதல்  படம்  என்ற  பெருமையையும்  இது  பெறுகிறது  


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அப்பா   60  வருடங்களாக  ஒரு  கட்சியில்  அடிமட்டத்தொண்டராக  வேலை  பார்த்தவர் . எந்த  விதமான  பதவிக்கும்  ஆசைப்படாதவர் . கடைசி  வரை  கட்சிப்பணியை  மட்டுமே  கவனித்து  வந்தவர் .நாயகனின்  அப்பாவுக்கு  ஒரு  நண்பர்  உண்டு. அவரும்  அரசியல்  கட்சியிலே  தொண்டர்  தான். அவருக்கு  தேர்தலில்  சீட்  கிடைக்காததால்  சுயேச்சையாக  தேர்தலில்  நின்று  தோற்கிறார். நாயகனின்  அப்பா  நண்பருக்கு  ஆதரவு  தெரிவிக்காமல்  கட்சி  அறிவித்த  வேட்பாளருக்கு  ஆதரவாக  பிரச்சாரம்  செய்ததால்  நண்பர்கள்  இருவருக்குள்ளும் பகை


  நாயகன்  தன்  அப்பாவின்  நண்பரின்  மகளைக்காதலிக்கிறார். ஏற்கனவே  இந்த  அரசியல்  பகையாலும் , ஜாதிப்பிரச்சனையாலும்  காதலுக்கு  பெண்ணின்  அப்பா  ஒத்துக்கொள்ளவில்லை. தன்  மகளுக்கு  வெளிநாட்டு  மாப்பிள்ளையைப்பார்த்து  மணம்  முடிக்கிறார். ஆனால்  அவர்  மகள் அங்கே  போய்  தற்கொலை  செய்து  கொள்கிறாள் ., இந்த  விஷயம்  நாயகனுக்குத்தெரியாது .


நாயகனுக்கு  வேறு  ஒரு  பெண்ணுடன்  திருமணம்  நடக்கிறது. நாயகன் - நாயகி  இருவருக்கும் ஒரு  குழந்தையும்  பிறக்கிறது . நாயகனின்  முன்னாள்  காதலியின்  அப்பா   அரசியல்  தோல்வி , மகள்  இறப்பு  இதனால்  பாதிக்கப்பட்டு உடல் நலம்  குன்றி  பக்கவாதத்தால்  பாதிக்கப்பாட்டு  படுத்த  படுக்கை  ஆகிறார்


 நாயகனின்  முன்னாள்  காதலியின்  அண்ணன்  நாயகனைப்பழி  வாங்கத்திட்டம்  போடுகிறார். நாயகனை  தேர்தலில்  நிற்க  வைத்துத்தோற்கடித்து  அவமானப்படுத்துவதும் ,  கடனாளி  ஆக்குவதும்  தான்  வில்லனின்  திட்டம் 


நாயகனுக்கு    முன்னாள்  காதலி  இறந்ததும்  தெரியாது .  முன்னாள்  காதலியின்  அண்ணன்  தான்  வில்லன் , கூட  இருந்தே  குழி  பறிப்பவன்  என்பதும்  தெரியாது . அரசியல்  ஆர்வமே  இல்லாத  நாயகன்  எப்படி  அரசியலுக்கு  வருகிறார்? பின்  என்ன  நடந்தது  என்பதே  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  விஜய்  குமார் . கோபமான  காட்சிகளில்  ஸ்கோர்  செய்கிறார்.காதல்  காட்சிகளில்   சுமார்  நடிப்பு  தான் . சோகக்காட்சிகளில்  ஓக்கே  ரகம் 


நாயகி  ஆக  , மனைவி  ஆக  அயோத்தி  நாயகி  ப்ரீத்தி  அஸ்ராணி  குடும்பப்பாங்கான  முகத்துடன் , கண்ணியமான  உடைகளுடன்  அக்மார்க்  தமிழகப்பெண்ணாக  நடித்து  மனம்  கவர்கிறார்.இவர்  சும்மா  ஒரு  புன்னகை  புரிந்தாலே  அழகாக  இருக்கிறது 


நாயகனின்  முன்னாள்  காதலி  ஆக   ரிச்சா  ஜோஷி , அதிக  வாய்ப்பில்லை ., ஒரு  டூயட்டும், சில  காட்சிகளும்  தான் . வந்தவரை  ஓக்கே 


நாயகனின்  அப்பாவாக  ஜார்ஜ்  மரியம்  சிறந்த  குணச்சித்திர  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்.ஆனால்  இவருக்கான  போர்சன்  குறைவு , இன்னும்  அதிக  காட்சி களில் வர  விட்டிருக்கலா,ம் 


வில்லன்  ஆக  , கூட  இருந்தே  குழி  பறிப்பவர்  அக  வத்திக்குச்சி  ( 2013)  படத்தின்  நாயகன்  திலீபன்  அருமையான  நடிப்பு , நயவஞ்சக  வில்லத்தனத்தை  நன்கு  வெளிப்படுத்துகிறார்


நாயகனின்  அம்மாவாக  நாச்சியாள்  சுகந்தி  கச்சிதமான  நடிப்பு. இவர்  ஃபேஸ்புக்கில்  நண்பர்  பட்டியலில் இருக்கிறார். 


மகேந்திரன்  ஜெயராஜூ  தான்  ஒளிப்பதிவு .லோ  பட்ஜெட்  படம்  என்பது  தெரியாத  வண்ணம்  சாமார்த்தியமாக  படம்  பிடித்த  விதம்  குட் 


கோவிந்த  வ்சந்தாவின்  இசையில்  இரு  பாடல்கள்  அருமை .ஆனால்  பொலிடிக்கல்  த்ரில்லர்  என்பதால்  மெலோடி  சாங் எடுபடவில்லை 


சி எஸ்  பிரேம்  குமாரின்  எடிட்டிங்கில்  படம்  ஷார்ப்  ஆக  2  மணி  நேரம்  ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்


1  ஒவ்வொரு  ரவுண்டிலும்  லீடிங்  எப்படி  சொல்கிறார்கள்  என்பதை , செல்லாத  ஓட்டு  எப்படி  கணக்கிடப்படுகிறது  என்பதை  இவ்வளவு  டீட்டெய்லிங்காக  எந்த  ஒரு  தமிழ்ப்படத்திலும்  இதுவரை  காட்டப்படவில்லை  என்ற  அளவில்  இது  முக்கியத்துவம்  வாய்ந்த  படமாக  அமைகிறது 


2   பதவி பலத்துக்கு  ஆசைப்பட்டால்  கை  வசம் இருக்கும்  காசெல்லாம்  கரையும் என்ற  நீதி  மனதில்  அழுத்தமாகப்பதியும்  அளவு  அமைந்த  திரைக்கதை 


3   நாயகன் , நாயகி ,நாயகனின்  அம்மா, அப்பா , வில்லன்  என  பெரும்பாலான  நடிகர்  நடிகைகளின்  நடிப்பு  கன  கச்சிதம் 



  ரசித்த  வசனங்கள்  ( அழகிய  பெரியவன் + இயக்குநர்  தமிழ் +  நாயகன்  விஜய்குமார்) 

1  ஒரு  காரியத்தைக்கையில்  எடுக்கும்  முன்பே  இது  ஆகாதுனு  சொல்றவன்  உருப்பட  மாட்டான் 


2  குட்டையைக்குழப்பி  மீன்  பிடிக்க  நினைக்காதே , குட்டைல  மீன்  மட்டுமில்லை , முதலையும்  இருக்கும் 

3   ஓட்டு  தான் நம்ம  ஆயுதம்


4  அரசியலில்  தோற்பதும் ,  ஜெயிப்பதும்  சகஜம்  தான் , ஒரு  தடவை  தோத்ததுக்கே  ஒதுங்கிட்டா  எப்படி ? 


5 வாழ்க்கைல  எல்லாருக்கும்  செகண்ட்  சான்ஸ்  கிடைக்காது , உனக்கு  அது  கிடைச்சிருக்கு . மிஸ்  பண்ணிடாத 


6   உண்மையான  கட்சிக்காரனை  பணத்தால  எடை போடாதீங்க 


7  இல்லாதவன்  கடைசி  வரை  உழைப்பான் , இருப்பவன்  அதை  அறுவடை  செய்வான் 


8  நான்  செய்யலை , நான்  செஞ்சா  பிசிறு  இல்லாம  செய்வேன் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   ஓட்டுக்கு  பணம்  தர  நாயகன்  கந்து  வட்டிக்கு  பணம்  கடன்  வாங்குவது  எல்லாம்  ஓவர் .எம் எல்  ஏ  எலெக்சன்  என்றால்  கூட  சம்பாதித்து  விடலாம் , கவுன்சிலர்  ஆகி  அவ்ளோ  சம்பாதிக்க  முடியுமா? 


2  கவுன்சிலர்  தேர்தலுக்கு  இரண்டாம்  முறையாக  நிற்கும்  நாயகனுக்கு  வேட்பு  மனு  தாக்கல்  செய்யும்போது  வீட்டு  வரி  ரசீது  இருக்க  வேண்டும்  என்பது  தெரியாதா? இன்னொருவர்  சொல்லி  மீண்டும்  வீட்டுக்குப்போய்  எடுத்து  வருகிறார்

3   நாயகனின்  முன்னாள்  காதலி  தற்கொலை  விஷயத்தை  சஸ்பென்சாக  க்ளைமாக்சில்  சொல்லி  இருப்பதற்குப்பதிலாக  கதை  ஓட்டத்திலேயே  சொல்லி  இருக்கலாம்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  வன்முறை  அதிகம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தேர்தல் ஸ்பெஷல்  படம்  என்பதால்  ஆண்களை  மட்டுமே  கவரும். ரேட்டிங் 2.75 / 5


தேர்தல்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்தமிழ்
மூலம் திரைக்கதைதமிழ்
மூலம் கதைதமிழ்
மூலம் உரையாடல்கள்அழகிய பெரியவன்
விஜய் குமார்
தமிழ்
உற்பத்திஆதித்யா
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுமகேந்திரன் ஜெயராஜூ
திருத்தியவர்சிஎஸ் பிரேம் குமார்
இசைகோவிந்த் வசந்தா
தயாரிப்பு
நிறுவனம்
ரீல் நல்ல படங்கள்
மூலம் விநியோகிக்கப்பட்டதுசக்தி திரைப்பட தொழிற்சாலை
வெளிவரும் தேதி
  • 17 மே 2024
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: