ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகியின் லட்சியம் சினிமா நடிகை ஆக வேண்டும் என்பதே. இந்த உயர்ந்த லட்சியத்துக்காக ஐ டி கம்பெனியில் வேலை செய்வதாக நாயகி வீட்டில் பொய் சொல்லி விட்டு நகரத்தில் சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறார். சினிமாக்கனவில் இருக்கும் வேறு மூன்று நண்பர்கள் வேற எக்ஸ்ட்ரா லக்கேஜ்
நாயகன் ஒரு இழவு வீட்டில் நாயகியைக்கண்டதும் காதலில் விழுகிறார்.. பெற்றோர் அதே பெண்ணை தங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்
திருமணம் செய்யும் ஐடியாவே இல்லாத நாயகி வேறு வழி இல்லாமல் அதை ஏற்கிறார்.. திருமணம் முடிந்ததும் நாயகனிடம் தன் லட்சியத்தைக்கூறி நாம் டைவர்ஸ் பண்ணிக்கலாம் என்கிறார்
அதிர்ச்சி ஆன நாயகன் உன்னை நான் நடிகை ஆக்குகிறேன் என சொந்தப்படம் எடுக்கத்துணிகிறார். அவர் தான் நாயகன், அவர் மனைவி தான் நாயகி
ஷூட்டிங் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க இன்னொரு பக்கம் நாயகன் ஃபேக் ஐ டி ஓப்பன் பண்ணி வேறு ஒரு பெயரில் தன் மனைவியுடன் நட்புக்கொள்கிறார்
நாயகியின் லட்சியம் நிறைவேறியதா? தாலி கட்டிய சொந்த சம்சாரத்தையே லவ் பண்ண துடிக்கும் நாயகனின் விருப்பம் நடந்ததா? என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக விஜய் ஆண்ட்டனி . இவர் முகத்துக்கு சைக்கோ த்ரில்லர் மூவி அல்லது போலீஸ் கேரக்டர் தான் சரியாக இருக்கும். இவர் ஏன் காமெடி கேரக்டர் செலக்ட் செய்தார் என்பது தெரியவில்லை இவருக்கு நல்ல நாள்லயே நடிப்பு வராது . காமெடி கேரக்டர் வேற . சமாளிக்கிறார்
நாயகி ஆக மிருணாளினி. சுமாரான அழகு , வெகு சுமாரான நடிப்பு .
விடிவி கணேஷ் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். யோகி பாபு கேரக்டர் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட கேரக்டர். ஒட்டவில்லை . அவர் பேசுவதில் காமெடி என்பது இல்லை
இளவரசு , தலை வாசல் விஜய் பொன்ற நல்ல கலைஞர்கள் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்
146 நிமிடங்கள் ஓடும்படி எடிட் செய்து இருக்கிறார் எடிட்டர் விஜய் ஆண்ட்டனி.
பரத் தனசேகர் , ரவி ரோய்ஸ்டார் ஆகிய இருவரும் தான் இசை எட்டு பாடல்கள் . இரண்டு பாடல்கள் ஹிட் ஆகி இருக்கின்றன
ஃபரூக் ஜெ பாஷா தான் ஒளிப்பதிவு , நாயகியை ஒரு ஷாட்டில் கூட க்ளோசப்பில் அழகாகக்காட்ட அவர் மெனக்கெடவில்லை .மாறாக தயாரிப்பாளர் கம் எடிட்டர் கம் ஹீரோ விஜய் ஆண்ட்டனிக்கு ஏகபப்ட்ட க்ளோசப் ஷாட்கள் . ஷப்பா முடியல
திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் வினாயக் வைத்திய நாதன்
சபாஷ் டைரக்டர்
1 ரோமியோ” (2024) பட்டி டிங்கரிங் அட்லீ வெர்சன் ஆஃப் நெஞ்சத்தை கிள்ளாதே(1980) மவுன ராகம் (1986) + ராஜா ராணி (2013) என்பதை உணர விடாமல் சாமார்த்தியமாக திரைக்கதை அமைத்தது
2 நாயகியின் கேரக்டர் டிசைனை அவரது காட்சிகளை தாவணிக்கனவுகள் கே பாக்யராஜ் போல அமைத்தது
3 தயாரிப்பாளர் மனம் குளிரும்படி அவருக்கு மட்டும் 768 க்ளோசப் ஷாட்ஸ் வைத்தது
4 போஸ்டர் டிசைனில் நாயகி சரக்கு அடிப்பது போல சென்சேஷனல் மேட்டர் டச் செய்தது
5 மெயின் கதைக்கு சம்பந்தமே இல்லை என்றாலும் நாயகனை டி ஆர் மாதிரி தங்கை செண்ட்டிமெண்ட் ஃபிளாஸ்பேக் வைத்து தாய்க்குலங்களின் ஆதரவைப்பெற நினைத்தது
ரசித்த வசனங்கள்
1 வாழ்க்கைல நாம யார்?னே நமக்குத்தெரியாதப்ப நம்மை அடையாளம் காட்ட ஒருவர் நம் வாழ்க்கையில் வருவார்
2 எந்த மாதிரி ஆணை பெண்ணுக்குப்பிடிக்கும்? என்பதை விட பெண்ணுக்கு என்ன எல்லாம் பிடிக்கும் என்பதைத்தெரிந்து வைத்திருக்கும் ஆண் அப்பெண்ணின் மனம் கவருவான்
3 நீ எல்லாம் ஒரு ஆம்பளையா?னு கேட்டிருக்கா,. ஓங்கி அறையலாமில்ல? \
ஓங்கி அறைஞ்சுட்டா அவன் ஆம்பளை ஆகிடுவானா?
4 நீ ஏன் இவ்ளோ நல்லவனா இருக்கே? பெண்களுக்கு இவ்ளோ நல்லவனைப்பிடிக்காது
5 ஒரு விஷயம் வேணும்னா அதை நாம் 200% நம்பனும், அப்படி நம்பினா இந்த உலகம் நமக்கு அதை முடிச்சுக்கொடுக்கும்
6 கனவுன்னு ஒண்ணு வரக்கூடாது , அப்படி வந்தா அது சீக்கிரம் நடக்கனும்
7 சந்தோஷம் இருக்கும்போது வாழ நல்லாருக்கும், ஆனா கஷ்டம் வரும்போதுதான் நமக்கு வாழக்கத்துத்தரும்
8 பெண்கள் தாலி கட்டும் வைபவம் நடக்கும்போது அழுவாங்க , ஆனா அதுக்குப்பின் ஆண்கள் தான் காலம் பூரா அழனும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஐ டி கம்பெனியில் வேலை செய்வதாக நாயகி வீட்டில் பொய் சொல்லி விட்டு நகரத்தில் சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறார்.. நான்கு வருடங்களாக அவர் சம்பளம் என்ன ஆனது ? எங்கே வேலை செய்கிறார்? எங்கு தங்குகிறார் என்றெல்லாம் கவலைப்படாத பெற்றோர் இருப்பார்களா?
2 பெண் பார்க்கும் படலம், வழித்தடம் பார்த்தல் , நிச்சயதார்த்தம், என எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து திருமனம் நடக்க 8 மாதங்கள் முதல் ஒரு வருடம், வரை ஆகும். ஆனால் சினிமாக்களில் மட்டும் ஒரு வாரத்திலேயே நடக்கிறது
3 திருமண மண்டபம் புக் பண்ணனும்னா மினிமம் 5 மாதங்களுக்கு முன்பே அட்வான்ஸ் கட்டி புக் பண்ணனும் . ஒரே வாரத்தில் மணடபம் எப்படிக்கிடைக்கும் ?
4 இந்து திருமண சட்டப்படி திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆன பின் தான் டைவர்ஸ் அப்ளை பண்ண முடியும். ஒரே வாரத்தில் எப்படி அப்ளை பண்றாங்க ?
5 சினிமா நடிகை ஆக விரும்பும் அனைத்துப்பெண்களும் சந்திக்க இருக்கும் பிரச்சனை பாலியல் ரீதியான முறைகேடுகள் தான். ஒரு தயாரிப்பாளர் நாயகியை படுக்கைக்கு அழைக்கிறார் என்றதும் நாயகன் வீரம் கொண்டு அடித்து வீழ்த்துவது பெரிய இம்ப்பேக்ட்டைத்தரவில்லை .
6 இந்தக்கதைக்கும் தங்கை செண்ட்டிமெண்ட் ஃபிளாஸ்பேக் கதைக்கும் சம்பந்தமே இல்லை . வீண் திணிப்பு
7 7 நாயகிக்குத்தெரியாமல் ஃபேக் ஐடி ஆரம்பிக்கும் நாயகன் அந்த ஃபேக் ஐடி ஃபோன் நெம்பரை எப்போதும் ஆன் ல வைப்பாரா? திடீர் என மனைவி கால் பண்ணினா காட்டிக்கொடுக்கும் என தெரியாதா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பெண்களுக்கு ஒருவேளை பிடிக்கலாம், ஆண்கள் கடுப்பாக வாய்ப்பு உண்டு . ரேட்டிங் 2.25 / 5
Romeo | |
---|---|
Directed by | Vinayak Vaithianathan |
Written by | Vinayak Vaithianathan |
Produced by | Meera Vijay Antony |
Starring | Vijay Antony Mirnalini Ravi |
Cinematography | Farook J. Basha |
Edited by | Vijay Antony |
Music by | Barath Dhanasekar Ravi Royster |
Production company | Vijay Antony Film Corporation |
Distributed by | Red Giant Movies Ayngaran International A & P Groups |
Release date |
|
Running time | 146 minutes |
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment