சிறந்த இயக்குநர் , சிறந்த படம் , சிறந்த நடிகர் என 3 தேசிய விருதுகளை வென்ற படம் இது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் 80 வ்யதான ஒரு விவசாயி. சிறு துண்டு நிலத்தை சொந்தமாக வைத்திருப்பவர்.அதில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வருபவர். அந்த கிராமத்தில் உள்ள அனைத்து விளை நிலங்களையும் சில ஆசாமிகள் வலுக்கட்டாயமாக வாங்கி பட்டா போட்டு பிளாட் ஆக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள் . கடைசியில் மிஞ்சி இருப்பது நாயகனின் நிலம் மட்டும் தான்.அதையும் விலை பேச முயற்சித்தும் நாயகன் அந்த நிலத்தை விற்க மறுக்கிறார்
நாயகனின் கிராமத்தில் மழை இல்லை . இதற்குக்காரணம் குல தெய்வத்தின் கோபம் தான். சில வருடங்களாக குல தெய்வ பூஜையே நிகழவில்லை ,அதன் காரணமாகத்தான் இப்படி என கிராம மக்கள் நினைக்கிறார்கள் . குல தெய்வ பூஜைக்கு விளை நெல் தேவை. அதற்கு நாயகனிடம் உதவி கேட்கிறார்கள் . நாயகனும் சம்மதிக்கிறார்
நிலத்தை வாங்க நினைத்து ஏமாந்த வில்லன் கூட்டம் நாயகனை ஒரு பொய்க்கேசில் சிக்க வைத்து கோர்ட்டுக்கு இழுக்கிறார்கள் . இதற்குப்பின் நிகழும் சுவராஸ்யமான சம்பவங்களே மீதி திரைக்கதை
நாயகன் ஆக அமரர் நல்லாண்டி பிரமாதப்படுத்தி இருக்கிறார். நிஜ விவசாயி ஆன இவரை விவசாயி ஆகவே வாழவிட்டு படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள் . ஒரு காட்சி கூட ஓவர் ஆக்டிங் இல்லை . ஒரு காட்சியில் கூட நடிப்பு போல தோன்றவில்லை
கிராமத்தில் வாழும் மற்ற மனிதர்களாக பெரும்பாலும் புதுமுகங்களையே நடிக்க வைத்திருப்பது சிறப்பு
கோர்ட்டில் ஜட்ஜ் ஆக வரும் ரேய்ச்சல் ரெபேக்கோ கண் கலங்க வைக்கும் நடிப்பு .. பொய்க்கேஸ் போட்ட போலீஸ் மீது காட்டும் கோபம் ஆகட்டும், நாயகனுக்கு நேர்ந்த கதியைக்கண்டு கலங்குவதாகட்டும் அபாரமான நடிப்பு . சமீப கால படங்களில் ஜட்ஜ் கேரக்டர் டிசைன் அதகளம் செய்கிறார்கள், இன்னும் சில காட்சிகள் ஜட்ஜ் வரமாட்டாரா? என ஏங்க வைக்கும் அளவு அந்த பாத்திரப்படைப்பும், அவரது நடிப்பும் மின்னுகிறது
மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் ஓரளவு சம்பந்தப்படுத்தி விஜய் சேதுபதி , யோகிபாபு கேரக்டர்கள் திணிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வேறு வழி இல்லை . இந்த மாதிரி தரமான படத்துக்கு வணிக ரீதியாக ஏதாவது அட்ராக்சன் வேண்டும், ஸ்டார் வேல்யூ தேவை என்பதால் அதை விட்டு விடலாம்
ஆனாலும் அந்த மனநலன் பாதிக்கபப்ட்ட கேரக்டரில் கூட விஜய் சேதுபதி முத்திரை பதிக்கிறார்.
வழக்கமாக ஓவராக சலம்பல் செய்யும் யோகிபாபு இதில் அடக்கி வாசித்து இருக்கிறார்.
போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் அந்த கண்ணாடிக்காரர் நடிப்பு யதார்த்தம், அவரும் இப்போது இறந்து விட்டார் என நினைக்கிறேன்
பி அஜித் குமாரின் எடிட்டிங்கில் படம் இரண்டரை மணி நேரம் ஓடுகிறது . ஒரு கலைப்படைப்பாக இருந்தாலும் கமர்ஷியல் படம் போல சுவராஸ்யமாகக்காட்சிகள் நகர்வது படத்தின் பெரிய பலம்
ஒளிப்பதிவும் இயக்குநர் மணி கண்டன் தான் .கிராமிய அழகை மிக யதார்த்தமாகப்பதிவு செய்து இருக்கிறார். இசை சந்தோஷ் நாராயணன் , ரிச்சர்டு ஹார்வே . பின்னணி இசை அருமை .இரண்டு பாடலக்ள் ரம்மியமாகப்படம் ஆக்கப்பட்டுள்ளன
சபாஷ் டைரக்டர்
1 கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டிருக்கும்போது நாயகன் அசால்ட் ஆக ஜட்ஜ் அம்மாவிடம் நீங்க பாட்டுக்குப்பேசிட்டு இருங்க , நான் வயக்காட்டுக்குப்போய் நெல்லுக்குத்தண்ணீர் பாய்ச்சிட்டு வந்துடறேன் என பேசுவது குபீர் சிரிப்பு . அவரது வெள்ளந்தித்தனம் , மனிதாபிமானம் ,விவசாயக்கடமை அனைத்தையும் உணர்ந்து ஜட்ஜ் கொடுக்கும் ரீ ஆக்சன் அட்டகாசம்
2 மயில்களைக்கொன்னு புதைச்சாரா? புதைச்சாரா? என அழுத்தம் திருத்தமாக ஜட்ஜ் கேட்க சாட்சி தடுமாறி போலீசைப்பார்த்தபடி உண்மையை உளறும் காட்சி அருமை
3 ஜட்ஜ் ஆக வரும் ரேய்ச்சல் ரெபோக்கோவின் உடல் மொழி பிரமாதம். ஜட்ஜ் ஆக கண்டிப்புக்காட்டாமல் ஒரு மனுஷி ஆக நாயகன் மேல் அவர் காட்டும் பரிவு வியக்க வைக்கிறது . தொடர்ந்து தெனாவெட்டான நீதிபதிகளையே சினிமாக்களில் பார்த்த நமக்கு இது புதுசு . வித்தியாசமான அனுபவம்
4 கோர்ட் காட்சிகளை வடிவமைப்பதில் இயக்குநர் மணிகண்டன் ஒரு விற்பன்னர் . இதை ஏற்கனவே ஆண்டவன் கட்டளை யில் நிரூபித்திருந்தார் . இதிலும் மாறுபட்ட யதார்த்தமான கோர்ட் காட்சிகள் அப்ளாஸ் அள்ளுகின்றன
5 கோர்ட் வாசலில் நாயகன் பேச்சு மூச்சில்லாமல் படுத்துக்கிடக்க ஜட்ஜ் பதறி ஆம்புலன்சை கூப்பிடுங்க என்று ஆர்டர் போடுவதும் அதைத்தொடர்ந்து வரும் பரப்ரப்பான காட்சிகளும் கம்ர்ஷியல் த்ரில்லர் படங்களுக்கு இணையானவை
ரசித்த வசனங்கள்
1 விதை இல்லாம பழங்கள் கண்டு பிடிச்சிருக்கானே அமெரிக்காக்காரன் ( வெளிநாட்டுக்காரன் ) அவனுக்கு ஆண் குழந்தை விதைக்கொட்டை இல்லாம பிறந்தா அந்தக்கஷ்டம் தெரியும்
2 மாட்டுக்குப்போடப்போகும் புண்ணாக்கை மனுசன் நீ ஏன்யா சாப்பிட்டுப்பார்த்து வாங்கறே?
பின்னே? நீங்க பாட்டுக்குக்கண்டதையும் கொடுத்துட்டா? மண்ணு மாதிரி இருக்கு
3 குல தெய்வத்துக்கு உருவம் கிடையாது
4 நிலம் தான் எனக்கு வேணும், நீங்க தரும் ஏழு லட்சம் பணம் வேண்டாம் , அதை தலைமாட்டுல வெச்சுக்கிட்டா படுக்க முடியும் ?
5 அவரு அந்தக்கால ஆளா இருக்காரு , எதைச்சொல்லியும் ஏமாற்ற முடியல
6 தப்புப்பண்ணினவங்களைப்பிடிக்க முடியலைன்னா நல்லவங்களைப்பிடிச்சு உள்ளே வைப்பதா?
7 நாட்டு நடப்புத்தெரியுமா? நம்ம தமிழ் நாட்டை யார் ஆட்சி பண்றா?
நம்ம முருகன் தானே? அவன் தானே எப்பவும் ஆண்டுக்கிட்டு இருக்கான் ?
8 நாங்க பக்கத்து ஊருல இருந்து வர்றோம், பெரியவங்களைப்பார்த்து ஒரு விஷய்ம் பேசனும்
சரி , பெரியவங்களைக்கூட்டிட்டு வாங்க . பெரியவங்களும் ,பெரியவங்களும் கூடிப்பேசிக்கிடட்டும்
9 சார். நீங்க கொடுத்த உர மருந்து எக்ஸ்பயரி ஆகிடுச்சே?
அ தனால என்ன? மருந்து விஷம் ஆகவா மாறும் ? பவர் ஜாஸ்தியா தான் ஆகும்
செம ஹிட் சாங்க்ஸ்
1 என்னைக்கோ ஏர் பிடிச்சானே நம் முன்னோரு
2 பம்பர பூமி பந்துக்குள்ளே
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ . இரண்டு இடங்களில் மட்டும் கிராமப்பேச்சு வழக்கில் வரும் கெட்ட வார்த்தைப்பிரயோகம் உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - உலக சினிமா ரசிகர்கள் , மாறுபட்ட கலைப்படைப்பை ரசிக்கும் மக்கள் , விவசாயிகள் அவசியம் காண வேண்டிய படம் , ரேட்டிங் 4 / 5
கடைசி விவசாயி | |
---|---|
இயக்கம் | மு. மணிகண்டன் |
எழுதியவர் | மு. மணிகண்டன் |
உற்பத்தி | மு. மணிகண்டன் |
நடிக்கிறார்கள் | நல்லாண்டி |
ஒளிப்பதிவு | மு. மணிகண்டன் |
திருத்தியவர் | பி.அஜித்குமார் |
இசை | சந்தோஷ் நாராயணன் ரிச்சர்ட் ஹார்வி |
தயாரிப்பு நிறுவனம் | பழங்குடியினர் கலை தயாரிப்பு |
மூலம் விநியோகிக்கப்பட்டது | விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் 7Cs என்டர்டெயின்மென்ட் |
வெளிவரும் தேதி |
|
நேரம் இயங்கும் | 144 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
0 comments:
Post a Comment