நான் பத்தாவது படிக்கும்போது பால்யகால நண்பன் ஆன குமராபுரி அய்யப்பன் உடைய நண்பன் ஆன ஜெகதீஷின் தம்பி நந்தா ஈரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் நந்தா ஆர்ட்ஸ் என கடை வைத்திருந்தார். தத்ரூபமாக நடிகர், நடிகைகளை வரைவதில் விற்பன்னர் . அவரைப்போலவே ஓவியர் ஆன கதையின் நாயகனின் போராட்டம் தான் கதை என்பதால் என் மனதுக்கு நெருக்கமாக அமைந்த படம் , ஆனால் பொது ரசிகர்களுக்கு எந்த அளவு பிடிக்கும் என சொல்ல முடியாது . சொந்தத்தொழில் செய்ய போராடுபவர்கள் , தனித்திறமையால் முன்னுக்கு வந்தவர்களூக்கு இந்தப்படம் பிடிக்கலாம்.,.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் சிறந்த ஓவியன் . ஆனால் வசதி வாய்ப்புகள் இல்லை . அவருக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறது . ஆனால் மணப்பெண் திருமணத்துக்கு முந்தின தினம் வேறு ஒருவருடன் ஓடிப்போய் விடுகிறார்
இதனால் நாயகன் உறவினர்களின் கேலிக்கு ஆளாகிறார் . நாயகனுக்கு அந்தப்பெண் ஓடிப்போனதை விட பெரிய வருத்தம் என்ன எனில் அவள் எழுதி வைத்த கடிதம் தான் . நீ ஓவியம் வரைந்து சம்பாதிக்கும் பணம் என் மேக்கப் செலவுக்குக்கூடப்பத்தாது என்று சொன்னதுதான்
அதனால் சொந்தத்தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறார். ஒரு ஆப்செட் பிரிண்ட்டிங் பிரஸ் வைக்கலாம் என முடிவெடுக்கிறார். ஆனால் அவருக்கு ஃபோட்டோ ஷாப் ஒர்க் தெரியாது. அதனால் அந்த வேலை தெரிந்த நாயகியின் உதவியை நாடுகிறார்
ஆக்சுவலாக நாயகிக்கும் ஃபோட்டோஷாப் ஒர்க் தெரியாது . ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக பொய் சொல்லி நாயகி நாயகனிடம் பணிக்கு சேர்கிறார்
ஒரு கட்டத்தில் நாயகனுக்கு நாயகி ஒரு டுபாக்கூர் என்பது தெரிய வருகிறது . ஆனாலும் நாயகனுக்கு நாயகியைப்பிடித்து இருப்பதால் இருவரும் சேர்ந்து வில்லனிடம் ஃபோட்டோஷாப் கற்க செல்கின்றனர் . வில்லனும் பிரிண்ட்டிங் பிரஸ் வைத்து முன்னேற நினைப்பவன் .அவனும் நாயகிக்கு ரூட் விடுகிறான். இப்போது நாயகன் வில்லன் இருவருக்கும் தொழில் போட்டி , காதல் போட்டி இரண்டும் உருவாகிறது . இறுதியில் யார் தொழிலிலும், காதலிலும் வெற்றி பெற்றார்கள் என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக அபினவ் கோமதம் இயல்பாக நடித்திருக்கிறார். முக சாயலில் தமிழ்ப்படம் புகழ் மிர்ச்சி சிவா + 7 ஜி ரெயின்போ காலனி ரவி கிருஷ்ணா கூட்டு சாயலில் இருக்கிறார். டயலாக் டெலிவரியில் இன்னும் கவனம் தேவை
வில்லன் ஆக அலி ரேசா பிரமாதப்படுத்தி இருக்கிறார். இவர் முக சாயலில் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தின் வசனகர்த்தா அவினாசி ராஜன் போல இருக்கிறார். இவரது டிரஸ்சிங் சென்ஸ் , உடல் மொழி அபாரம்
நாயகி ஆக வைஷாலி ராஜ் நடித்திருக்கிறார் . இவர் கீர்த்தி சுரேஷ் + கோகுலத்தில் சீதை சுவலட்சுமி இருவரையும் கலந்து கட்டிய கலவையாக இருக்கிறார். நடிப்பு குட்
லாவண்யா ரெட்டி கெஸ்ட் ரோல் ., ஓக்கே ரகம்
இரண்டரை மணி நேரம் ஓடும்படி எடிட்டர் கட் செய்து இருக்கிறார்
ஒளிப்பதிவு , இசை போன்ற டெக்னிக்கல் மசங்கள் சராசரி தரம்
சபாஷ் டைரக்டர்
1 சூரியவம்சம், அண்ணாமலை படங்களில் காட்டியது போல நாயகன் ஒரே பாடலில் பெரிய ஆள் ஆவது போல காட்டாமல் யதார்த்தமாக காட்சிகளை அமைத்தது
2 வில்லனுக்கான ஆடை வடிவமைப்பு
ரசித்த வசனங்கள்
1 மிமிக்ரில ரஜினி வாய்ஸ் ட்ரை பண்ணினேன்\\
அப்போ முதல் பரிசு உனக்குத்தான் ?
எங்கே? நெக்ஸ்ட் டைம் ரஜினி வாய்ஸ் கரெக்ட்டா ட்ரை பண்ணுனு சொல்லிட்டாங்க
2 பணக்காரப்பொண்ணுங்க எல்லாம் ஐ லவ் யூசொல்வதற்கு முன் ஐ லைக் யூ தான் சொல்வாங்க
3 இங்க்லீஷ் நாலெட்ஜை விட டேலண்ட் தான் முக்கியம்
4 எல்லாப்பெண்களூக்கும் கலர்ஃபுல்லான லைஃப் தேவை , ஆனால் யாருக்கும் ஒரு ஓவியன் ஜோடியா தேவை இல்லை ?
5 வாங்க தம்பி , உக்காருங்க
உமாவைப்பார்க்க வந்தேன்
ஓ. டீ சாப்பிடறீங்களா?
நோ
காஃபி ?
நோ\
பாதாம் பால்?
வேணாம்ங்க
ஆனா , எனக்கு வேணும்,, பக்கத்துல தான் கடை , போய் ரெண்டு பேருக்கும் வாங்கிட்டு வந்துடறீங்களா?
6 காதல் என்பது ஃபிரிட்ஜ் ல வெச்சிருக்கும் கூல்ஃபிரிங்க் மாதிரி , சில்னெஸ் போபதற்குள் குடிச்சிடனும்
7 ஒருத்தன் பணக்காரன் ஆகும்போது ஆளாளுக்கு அவனை சொந்தம் கொண்டாடுவாங்க
8 பயப்படறதுக்கு ஒண்ணுமில்ல , மிஷின்ல சின்ன ரிப்பேர் தான் ,
ஓஹோ எவ்ளோ செலவு ஆகும் ?
5 லட்சம் ரூபா
அய்யோ
9 ஹாஸ்பிடலில் அவன் இவ்ளோ நேரம் என்ன பண்றான் ?
பிரெக்னென்சி டெஸ்ட் தவிர எல்லா டெஸ்ட்டும் எடுத்துட்டான்
10 வில்லன் கிட்டே என்னதான் கோபம் இருந்தாலும் அவனை அடிக்கலாம், உதைக்கலாம், ஆனால் அவன் திறமையை அவன் கிட்டே இருந்து பிடுங்க முடியாது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் தான் புதிதாக ஓப்பன் பண்ணப்போகும் ஃபோட்டோ ஷாப் கடைக்கு தன் மாமாவிடம் ஒரு லட்சம் அட்வான்ஸ் கொடுத்து விட்டு இந்த விஷயம் வில்லனுக்குத்தெரியக்கூடாது என உறுதி மொழி வாங்கிக்கொள்கிறார். அடுத்த சீனில் நாயகனே அந்த விஷயத்தை வில்லனிடம் ஓப்பன் செய்கிறார்
2 ஒரு லட்சம் ரூபா அட்வான்ஸ் கொடுக்கும்போது ரிசீப்ட் வாங்கிக்கொள்ளவில்லை . வாடகை ஒப்பந்தப்பத்திரமும் ரெடி செய்து கொள்ளவில்லை
3 வில்லன் நாயகனிடம் தான் நாயகியுடன் தனிமையில் இருக்கப்போவதாக தவளை மாதிரி உளறுகிறான். அதை நாயகன் நாயகியிடம் சொல்லி விட்டால் தன் இமேஜ் டேமேஜ் ஆகும் என்பதை உணர மாட்டானா?
4 ஃபோட்டோஷாப் ஒர்க்கே தெரியாத பெண்ணை வேலைக்கு எடுக்கும் நாயகனுக்கு அவளுக்கு அது தெரியாது என்பதைக்கண்டு பிடிக்கவே 17 நாட்கள் ஆகின்றன
5 நாயகனை விட வில்லன் பர்சனாலிட்டி , அழகு , உயரம், டிரஸ்சிங் சென்ஸ் எல்லாவற்றிலும் ஒரு படி மேலாக இருக்கிறான். ஆடியன்சுக்கு நாயகி வில்லன் கூடவே ஜோடி சேர்ந்தால் என்ன என்ற எண்ணம் தான் தோன்றும்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ரொம்ப ஸ்லோவான திரைக்கதை . பொறுமை உள்ளவர்கள் பார்க்கலாம், ரேட்டிங் 2 / 5
0 comments:
Post a Comment