தெலுங்கு ஹீரோவான வெங்கடேஷ் டபுள் ஆக்டில் நடிக்க இந்தப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி வைத்துள்ளார். காலம் காலமாக நாம் எம் ஜி ஆர் , சிவாஜி , ரஜினி , கமல் படங்களில் பார்த்த ஆள்மாறாட்டக்காமெடி ஆக்சன் படம் தான் இது .ஆனால் நாம் பார்த்ததெல்லாம் ஒரே ஹீரோ டபுள் ரோல் பண்ணி இருப்பார்.ஆனால் இந்தப்படத்தில் இரு வேறு ஹீரோக்கள் பண்ணி இருக்காங்க
2012ல் ரிலீஸ் ஆன ஜப்பானிஷ் படமான கீ ஆஃப் லைஃப் என்னும் படத்தின் அஃபிஷியல் ரீ மேக் இது. லோ பட்ஜெட் படமான இது 48 மில்லியன் டால்ர் வசூல் செய்து நம்ம ஊர் உள்ளத்தை அள்ளித்தா போல அங்கே மெகா ஹிட் ஆன படம் கொரியன் திரைப்பட விழாக்களில் பங்கேற்று சிறந்த நடிகர் உட்பட நான்கு விருதுகளை வென்றுள்ளது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு கேங்கஸ்டர். யாரையாவது கொலை செய்ய வேண்டும் என அவருக்கு டார்கெட் கொடுத்தால் பார்ட்டியிடம் பணம் வாங்கிக்கொண்டு கொலை செய்ய வேண்டிய ஆளைக்கொலை செய்யாமல் அவனிடம் விஷயத்தை சொல்லி நீ எங்காவது எஸ் ஆகி விடு என வேறு இடம் / நகரம்/நாடு என அனுப்பி வைப்பவர்
காமெடியன் சினிமா வாய்ப்புக்காக காத்திருக்கும் ஒரு துணை நடிகன். ஆனால் வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை . வீட்டு வாடகை கூட கட்ட முடியாத வறுமை . தற்கொலை முயற்சி கூட செய்து பார்த்து அதிலும் தோல்வி கண்டவன்
ஒரு பப்ளிக் பாத்ரூமில் நாயகன் , காமெடியன் இருவரும் குளிக்க வருகிறார்கள் . அங்கே எல்லாம் டவல் , டிரஸ் , பணம் வைக்க லாக்கர் கொடுத்திருப்பார்கள். சோப் காலில் பட்டு கீழே விழுந்த நாயகன் மயக்கம் அடைகிறான். அவனது லாக்கர் கீ காமெடியனிடம் சிக்குகிறது . இதுதான் சாக்கு என காமெடியன் தன் லாக்கர் கீயை அவன் பாக்கெட்டில் போட்டு விடுகிறான்
தலையில் அடிபட்டதால் நாயகனுக்கு பழைய நினைவுகள் எதுவும் வரவில்லை அவன் தன் பாக்கெட்டில் இருக்கும் கீ யை வைத்து காமெடியன் வீட்டுக்குப்போய் அவனது வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறான்
நாயகி தான் நாயகன் மருத்துவச்செலவுக்கு உதவியவள். அவளது அம்மா நடத்தும் ஹோட்டலில் சமையல் மாஸ்டர் ஆக நாயகன் சேர்ந்து விடுகிறான். பிரமாதமாக கஸ்டமர்களைக்கவர்கிறான். பார்ட் டைம் ஜாப் ஆக சினிமா ஷூட்டிங்க்கிலும் கலந்து கொள்கிறான்
தாவணிக்கனவுகள் கே பாக்யராஜ் போல நாயகன் சினிமாவில் பிரபலம் ஆகி விடுகிறான்
காமெடியன் ராஜ போக வாழ்க்கை வாழ்ந்து வருகிறான். இவனுக்கும் ஒரு ஜோடி கிடைக்கிறது
நாயகனுக்கு ஒரு கட்டத்தில் நினைவு திரும்புகிறது . அவன் தன் இருப்பிடத்துக்கு வருகிறான். அங்கே காமெடியன் இருக்கிறான் .இதற்குப்பின் நிகழும் காமெடி கலாட்டாக்களே மீதி சம்பவங்கள்
நாயகன் ஆக யூ ஹாய் ஜின் பிரமாதமாக நடித்திருக்கிறார்.ஆரம்பத்தில் இவரது முகம்,உதடுகள் பார்க்கவே பிடிக்கவில்லை .பவர் ஸ்டார் மாதிரி இருக்கிறாரே? என நினைத்தேன், ஆனால் போகப்போக தன் நடிப்பால் பார்ப்பவர் மனம் கவர்ந்து விட்டார் .
காமெடியன் ஆக லி ஜூன் க்ச்சிதமாக நடித்திருக்கிறார்.இவரது சாக்லெட் பாய் தோற்றம் இவரது பெரிய பிளஸ் . காதலியிடம் பின்னாலேயே சுற்றுவது , பம்முவது என சராசரி தமிழ் நாயகன் போலவே ஸ்டாக்கிங் செய்கிறார்
நாயகி ஆக லிம் ஜி லியான் அ ழகாக நடித்திருக்கிறார்.க்ளைமாக்ஸ் காட்சியில் காமெடியிலும் கலக்கி இருக்கிறார்
காமெடியனுக்கு ஜோடியாக ஜோ யூ ஹீன் நடித்திருக்கிறார். அமைதியான தோற்றம்.கச்சிதமான நடிப்பு
112 நிமிடங்கள் ஓடும்படி ஷார்ப் ஆக கட் செய்து இருக்கிறார் எடிட்டர் பேங்க் ஜன் இசையில் படம் கலகலப்பாக நகர்கிறது . ஆக்சன் காட்சிகளில் பிஜிஎம் கச்சிதம்
ஜேங்க் யூ மீ எழுதிய திரைக்கதையை இயக்கி இருப்பவர் லீ கே பியோக்
சபாஷ் டைரக்டர்
1 சாதா மனிதன் சினிமாவில் பெரிய ஆள் ஆவது ஒரு சுவராஸ்யமான நமக்குப்பழக்கமான விஷயம் தான், அதைக்காட்சிப்படுத்திய விதமும், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் காமெடிகளும் அருமை
2 நாயகன் சமையல் கலை நிபுணர் ஆக டெக்ரேட் செய்வது, உணவை பிரசண்ட் செய்வது எல்லாமே ரசிக்கும்படியான காட்சிகள் . நாயகியின் குடும்பத்துடன் அவர் ஒன்றி விடுவது அருமை
3 காமெடியன் சிசிடிவி கேமராவில் தன் ஜோடிப்பெண்ணைப்பார்த்து அவள் இருக்கும் இடம் தேடி அலையும் காட்சிகள் அருமை . அந்தப்பெண் தற்கொலைக்கு முயல்வதாக இவராக நினைத்துச்செயுயும் சேஷ்டைகள் காமெடி
4 வில்லன்களை ஏமாற்ற நாயகன் போடும் திட்டமும் அதை எக்ஸ்க்யூட் பண்ணப் போராடுவதும் , நாயகி வந்து சொதப்புவதும் சுவராஸ்யம்
5 படத்தில் 2 செட் ஜோடிகள் இருந்தும் விரசமான காட்சிகள் இல்லாமல் காதல் காட்சிகளை , கண்ணியமாக கையாண்ட விதம்
ரசித்த வசனங்கள்
1 இவன் டிரஸ்சிங் ரூம் என் வீட்டை விடப்பெருசா இருக்கு
2 இந்த டி வி வித்தியாசமா இருக்கே? ஒருவேளை சிசிடிவியோ ?
3 எல்லா வேலைகளும் சின்ன வேலையாதான் ஆரம்பிக்கும்
4 சார் நான் ராணுவத்துல இருந்திருக்கேன்
சரி நீ அங்கேயே இருந்துக்க
5 இந்த ராத்திரி நேரத்துல இவ்ளோ இருட்டுல இவன் எதுக்கு கூலிங் கிளாஸ் போட்டிருக்கான் ?
6 மிஸ்,என்ன பிரச்சனை ?
டைரக்டர் சார் , இவர் என் முகத்தைத்தவிர மத்த எல்லா இடத்தையும் பார்த்துப்பேசிட்டு இருக்காரு
7 தன்னோட கனவு பலிக்கனும்கறதுக்கால பலர் தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்கின்றனர்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 முன் பின் பழக்கமே இல்லாத நபருக்கு நாயகி 900 டாலர் ஹாஸ்பிடல் சார்ஜ் கட்டும் காட்சி நம்பவே முடியலை
2 க்ளைமாக்ஸ் காட்சி டிராமா பார்ப்பது போல நம்ப முடியாமல் இருக்கிறது . வில்லன்கள் அவ்வளவு எளிதில் ஏமாறுவார்களா?
3 25 வயதான நாயகி 45 வயதான அங்க்கிள் ஆன நாயகனை விரும்புவதை அவர் வீட்டில் எதிர்க்கவே இல்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - காமெடி ப்ரியர்கள் , ஆக்சன் த்ரில்லர் ரசிகர்கள் என அனைவரும் பார்க்கலாம் , இந்தப்படம் தெலுங்குப்பதிப்பில் எப்படி எல்லாம் சொதப்பப்போகிறார்கள் என்பதை அறிய இப்போதே ஒரிஜினல் வெர்சனை பார்த்து வைத்துக்கொள்ளலாம் . ரேட்டிங் 3.25 / 5
Luck Key | |
---|---|
Directed by | Lee Gae-byok |
Written by | Jang Yoon-mi |
Based on | Key of Life by Kenji Uchida |
Produced by | Jung Hee-soon |
Starring | |
Edited by | Yang Jin-mo |
Music by | Bang Jun-seok |
Production company | Yong Film |
Distributed by | Showbox |
Release date |
|
Running time | 112 minutes |
Country | South Korea |
Language | Korean |
Box office | US$47.4 million |
0 comments:
Post a Comment