சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை வென்ற படம் இது .6 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு 35 மில்லியன் டாலர் பாக்ஸ் ஆஃபீசில் வசூல் செய்த படம் . 2023 மே மாதம் முதல் 2024 மார்ச் மாதம் வரை பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு இதுவரை 47 விருதுகளை வென்ற படம் இது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகியின் கணவர் ஒரு ரைட்டர் . இருவரும் காதல் திருமணம்.அவர் தான் முதலில் ப்ரப்போஸ் செய்தார். 13 வயதில் ஒரு மகன் இருக்கிறான். தன் கணவனின் எழுத்துத் துறமையைப்பார்த்து நாயகியும் ஒரு ரைட்டர் ஆக மாறுகிறார். வாழ்க்கை நன்றாகப்போய்க்கொண்டு இருக்கும்போது மகனுக்கு ஒரு சாலை விபத்து நிகழ்கிறது . அதில் அவனது பார்வை பறிபோகிறது.
இந்த விபத்துக்குக்காரணம் நாயகியின் கணவர் தான் என்பதால் அது பற்றி இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடக்கிறது .மருத்துவச்செலவு கூடிக்கொண்டே போகிறது .இதனால் எழுதுவதை ஓரம் கட்டி விட்டு வேலைக்கு போய் சம்பாதிக்கும் வழியைப்பாருங்கள் என நாயகி சொல்லி விடுகிறாள்
இதனால் நாயகியின் கணவன் கோபம் கொள்கிறான் . இதனால் அடிகக்டி இருவரும் வாக்குவாதம் செய்வது , சண்டை போடுவது என இருக்கிறார்கள்
ஒரு நாள் மகன் தன் செல்ல நாயுடன் வாக்கிங் போய் விட்டு வீடு திரும்புபோது தன் அப்பா கீழே விழுந்து அடிபட்டுக்கிடப்பதைக்கையால் தடவி உணர்ந்து அம்மாவை அழைக்கிறான். நாயகி உடனே மாடியில் இருந்து கீழே வந்து ஆம்புலன்சை அழைக்கிறாள்
இது போலீஸ் கேஸ் ஆகிறது . நாயகியின் கணவன் தன் மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்ட சம்பவங்களை செல் ஃபோனில் எதற்காகவோ ரெக்கார்டு செய்து வைத்திருக்கிறான். இதனால் போலீசின் சந்தேகம் நாயகி மீது திரும்புகிறது நாயகியின் கணவன் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்தானா? நாயகி கணவனை அடித்து கீழே தள்ளிக்கொலை செய்தாரா? என்பதை கோர்ட் ரூம் டிராமா வாக மீதி திரைக்கதை சொல்கிறது
நாயகியாக ஜெர்மன் நடிகை சாண்ட்ரா ஹல்லர் பிரமாதமாக நடித்திருக்கிறார். அவர் நல்லவரா? கெட்டவரா?சராசரி பெண்ணா? என்பதை கடைசி வரை சஸ்பென்ஸாகவே நகர்த்திக்கொண்டு போனது அருமை
தமிழ்ப்படம் போல 152 நிமிடங்கள் படம் ஓடுகிறது. கோர்ட் சீன் காட்சிகளி;ல் சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தமாய் இருந்தது சிறப்பு
ஒளிப்பதிவு சைமன் அருமையாக பணி ஆற்றி இருக்கிறார்.
ஆர்தர் ஹராரி என்பவருடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ஜஸ்டின் டிரையட்
சபாஷ் டைரக்டர்
1 லீகல் டிராமா வில் பொதுவாக கோர்ட் சீன்கள் ஓவர் ஆக்டிங் அல்லது ஓவர் எமோஷனலாக வக்கீல்கள் வாதாடுவது போல இருக்கும்,இது அப்படி எல்லாம் இல்லாமல் யதார்த்தமாக , லைவாக இருந்தது
2 க்ளைமாக்ஸ் காட்சியில் அந்த சிறுவன் நாய்க்கு ஆஸ்பிரின் மருந்து கொடுத்து டெஸ்ட் செய்து அதை கோர்ட்டில் வாக்கு மூலமாக அளிக்கும் காட்சி
3 குற்றம் சாட்டப்பட்ட நாயகி , சாட்சி ஆன மகன் ஆகிய இருவரும் ஒரே வீட்டில் வசிக்கக்கூடாது என கோர்ட்டில் ஒரு பெண்ணை அனுப்பி கேஸ் முடியும் வரை அம்மா =- மகன் கேஸ் சம்பந்தமாக எதுவும் பேசிக்கொள்ளக்கூடாது என கண்காணிக்க ஆர்டர் போடுவது
4 நாயகி தன் கணவர் எழுதிய 27 பக்க கான்செப்ட்டை வைத்து அதை எடுத்தாண்டு ஒரு 400 பக்க மெகா ஹிட் நாவலை உருவாக்கியது குறித்து கோர்ட்டில் எழும் வாத விவாதங்கள்
5 ஓப்பனிங் சீனில் நாயகியைப்பேட்டி எடுக்க வந்த லேடி பிரஸ் ரிப்போர்ட்டரை வைத்து அரசாங்க வக்கீல் கேசை நாயகிக்கு எதிராக திருப்பும் சாமார்த்தியம்
6 சிபிஐ டைரி குறிப்பு படத்தில் ஒரு பொம்மையை கீழே போட்டு அது விழும் நிலை கண்டு அது தற்கொலையா? கொலையா ?என கண்டு பிடிக்க முயல்வது போல மூன்றாவது மாடியில் இருந்து ஒரு டம்மி பொம்மையை வீசி டெமோ காட்டும் காட்சி
ரசித்த வசனங்கள்
1 ஒரு எழுத்தாளர் தன்னோட எல்லா எழுத்துக்களையும் நிஜ வாழ்வில் அனுபவித்ததைத்தான் எழுதனும்னு அவசியம் இல்லை
2 சட்டம் என்பது யாருக்கும் நண்பன் அல்ல, யாராவது நண்பன் ஆகனும்னு நினைச்சாலும் அதுவும் முடியாது
3 ஒருத்தரோட கண்ணைப்பார்க்காம அவரோட இண்ட்டென்சன் என்ன?னு நாம முடிவு பண்ண முடியாது
4 ஒருத்தரோட கோபம் அவரோட உடல் வலிமையை அதிகரிக்க வாய்ப்பிருக்கு
5 தற்கொலை முயற்சியில் ஒருவர் வெற்றி பெற்றாலும்,தோல்வி அடைந்தாலும் அது தற்கொலை முயற்சி என்று தான் சொல்லப்படுகிறது . இது ஒரு வினோதம்
6 ஒரு பேஷண்ட் என்ன சொன்னாலும் அதை உண்மைனு ஒரு சைக்கலாஜிக்கல் டாக்டர் நம்பனும்னு அவசியம் இல்லை
7 நீங்க நாய் மாதிரி அழகா இருக்கீங்க மேடம்
ஒருத்தரை ஏதோ ஒரு விலங்கா பார்க்காதவரை நம்ப முடியாது . எல்லாரும் அவங்களுக்கு[பிடிச்ச நபரை ஏதோ ஒரு விலங்கோட , பறவையோட கம்ப்பேர் பண்ணிக்குவாங்க
8 நீ யாரைப்பார்த்து சிரிச்சதே இல்லையே?
அதனாலதானே என்னை நீங்க லவ் பண்ணுனீங்க? உங்க ஃபிரண்ட்ஸைப்பார்த்து சிரிச்சிருந்தா அதை ஏத்துக்க முடியுமா உங்களால?
9 ஒரு எழுத்தாளரால அவரோட எண்ணத்தை அவர் எழுதும் கதைல வர்ற கேரக்டர் மூலமாவும் சொல்லலாமே?
சொல்லலாம், ஆனால் எல்லா கேரக்டர்களுமவர் எண்ணத்தைபிரதிபலிக்கும்னு வாதம் பண்ண முடியாது
10 பணம் நமக்கு எல்லா சந்தோஷத்தையும் கொடுத்துடாதுனு யாரோ சொல்லி இருக்காங்க, ஆனா தெருவில் நின்னு அழுவதை விட இந்த காருக்குள் இருந்து அழுவது எனக்கு பிடிச்சிருக்கு
11 எப்பவுமே நாம முடிவெடுக்க எந்த வித எவிடென்சும் இல்லாதப்ப நம்ம மனசுதான் முடிவெடுக்கும்
12 ஒரு ரைட்டர் தன் புருசனை கொலை பண்ணிட்டாங்க என்று சொல்வதை விட ஒரு டீச்சர் தற்கொலை பண்ணிட்டாங்க என்று சொல்வதில் சுவராஸ்யம் கம்மியா இருக்குனு மீடியாக்கள் நினைக்கலாம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகியை இண்டர்வ்யூ எடுக்க வந்த பெண்ணிடம் நாயகி பேசும்போது மேலே மாடியில் இருக்கும் கணவன் சத்தமாக இசை கேட்டுக்கொண்டு இருந்ததால் இன்னொரு நாள் இண்ட்டர்வ்யூ வெச்சுக்கலாம்னு கிளம்பறாங்க. பெட்ரொமாக்ஸ் லைட்டே தான் வேணுமா என்பது போல வீட்டுக்குள்ளேயே தான் கேள்விகள் கேட்கனுமா?வீட்டுக்கு வெளில வாக் போய்க்கிட்டே பேசி இருக்கலாமே? கோர்ட்டில் குறுக்கு விசாரணை பண்ணும்போதும் யாரும் இந்த பாய்ண்ட்டை மென்சன் பண்ணவில்லையே?
2 நாயகியின் கணவன் பல சமயங்களில் நாயகியோடு தனிமையில் நடக்கும் விவாத உரையாடல்களை ரெக்கார்வு பண்ணி இருக்கிறார். இது எதற்கு? என்பதை கோர்ட்டில் யாருமே கேள்வி எழுப்பவில்லை . அப்போ முன் கூட்டியே திட்டமிட்டுத்தானே அவர் அதை செய்திருக்க வேண்டும் என்ற பாயிண்ட்டை நாயகியின் வக்கீல் முன் வைக்கவில்லையே?
3 பொதுவாக மனிதனை விட விலங்குகளுக்கு மோப்ப சக்தி அதிகம். அந்த சிறூவனின் நாய் அவனது அப்பா எடுத்த வாந்தியை வாந்தியில் இருந்த மாத்திரை , மருந்தை நாய் சாப்பிட்டது என ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறான். வசதியான வீட்டில் வளரும் நாய் , வேளா வேளைக்கு நல்ல உணவு கிடைக்கும் நாய் எதற்கு தெரு நாய் போல் அப்படி சாப்பிட்டது ? அது நம்ப முடியலை
4 க்ளைமாக்சில் கேசுக்கு முக்கியமான தீர்ப்பை லைவாக கோர்ட்டில் காட்டாமல் குறிப்பால் உணர்த்துவது ஏன் ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஆஸ்கார் அவார்டு உட்பட பல விருதுகளை வென்ற படம் திரைப்பட விழாக்களில் மட்டுமே காண முடிகிற படம் ஓடிடி யில் காண்பது அபூர்வம் . ரேட்டிங் 3.25 / 5
Anatomy of a Fall | |
---|---|
French | Anatomie d'une chute |
Directed by | Justine Triet |
Written by |
|
Produced by | |
Starring |
|
Cinematography | Simon Beaufils |
Edited by | Laurent Sénéchal |
Production companies |
|
Distributed by | Le Pacte[1] |
Release dates | |
Running time | 152 minutes[4] |
Country | France[5] |
Languages | |
Budget | €6.2 million[8] (US$6.7 million) |
Box office | US$34.8 million[9] |
0 comments:
Post a Comment