ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் , வில்லன் , நாயகி மூவரும் சின்ன வயதில் ஒன்றாகப்படித்தவர்கள் . அப்போதே நாயகியின் காதலைப்பெற இருவரும் அடித்துக்கொண்டவர்கள் தான். நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஸ்கூல் ரீயுனியன் நடக்கும்போது நாயகனும் , வில்லனும் ஆரம்பத்தில் விரோதமாகப்பார்த்துக்கொண்டாலும் ஒரு கட்டத்தில் இருவரும் நண்பர்கள் ஆகி விடுகிறார்கள்
வில்லன் பர்சனாலிட்டியாக இருக்க , பர்சனாலிட்டியாகதெரிய நாயகன் உதவுகிறான். வில்லன் நாயகியை எதேச்சையாக சந்திக்கிறான். நாயகியிடம் எப்படி காதலை வெளிப்படுத்துவது ? எப்படி டெவலப் செய்வது என நாயகனிடம் ஐடியா கேட்கிறான்.
ஒரு சமயம் நாயகன் , நாயகி , வில்லன் மூவரும் சந்திக்கிறார்கள் ,. அப்போதுதான் ஒரு ட்விஸ்ட் ஓப்பன் ஆகிறது. நாயகி நாயகனின் முன்னாள் மனைவி .
இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் தான் மீதி திரைக்கதை . நாயகி யாரை தேர்வு செய்கிறார் என்பது க்ளைமாக்ஸ்
நாயகன் ஆக அசோக் செல்வன் நாயகன் கமல் கெட்டப்பில் மீசை இல்லாமல் பிரமாதமாக இருக்கிறார். அவரது நடிப்பில் அனுபவம் பளிச்சிடுகிறது . ஸ்மார்ட் ஆக நடித்து ரசிகைகளின் மனம் கவர்கிறார்
ஐஸ்வர்யா லட்சுமி கண்ணியமான உடை , கவுரவமான தோற்றம், இயல்பான நடிப்பு , மயங்க வைக்கும் சிரிப்புடன் களம் இறங்கி இருக்கிறார்
வில்லன் ஆக வசந்த் ரவி ஜோதிகாவுக்கு அண்ணன் போல ஓவர் ஆக்டிங் செய்கிறார் , அவரது உடல் மொழி , வசன உச்சரிப்பு , சிரிப்பு எல்லாவற்றிலும் ஓவர் செயற்கை
நடிகை சச்சு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக வருகிறார். கச்சிதம்
நாயகனின் அக்கா , தங்கைகளாக வருபவர்கள் கூட ஓவர் ஆக்டிங் தான். தேவை இல்லாத கதாபாத்திரங்கள்
சதீஷின் எடிட்டிங்கில் படம் இரண்டு மணி நேரம் தான் ஓடுகிறது , ஆனால் 3 மணி நேரம் ஓட்ஃபுவது போல பிரமை
யுவன் சஙகர் ராஜா இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான் பிஜிஎம் கூட சராசரி தரம் தான்
பகத்தின் ஒளிப்பதிவு குட்
ரீமா ரவி உடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் வி ப்ரியா
சபாஷ் டைரக்டர்
1 1996 ல் ரிலீஸ் ஆன காதல் தேசம் கதையைத்தான் பட்டி டிங்கரிங் பண்ணி இருக்கிறார் என்பது தெரியாத வண்ணம் அட்லீ ஒர்க் செய்த சாமார்த்தியம் அருமை
2 நாயகன் - நாயகி கெமிஸ்ட்ரி ஒர்க் ஆவுட் ஆன விதம்
3 அசோக் செல்வனின் அனுபவம் மிக்க நடிப்பு , ஐஸ்வர்யா லட்சுமியின் இளமை
ரசித்த வசனங்கள்
லொட லொட என எல்லாரும் படம் பூரா பேசிட்டே இருக்காங்க . ஆனா ஒரு டயலாக் கூட உருப்படி இல்லை , அடுத்த படத்திலாவது இயக்குநர் ப்ரியா - பிகேபி , சுபா மாதிரி சரக்கு உள்ள ரைட்டரை டயலாக் ரைட்டர் ஆக நியமிப்பது நல்லது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகிக்கு பெற்றோர் வைத்த பெயர் சுந்தரி. அந்த அழகான பெயர் பலர் வாயில் நுழையவே இல்லை , உச்சரிக்க சிரமப்படுகிறார்கள் என நாயகியே தன் பெயரை சாண்டி என மாற்றிக்கொள்கிறார். இந்த டாப்பிக் படம் முழுக்க ஆங்காங்கே அலசப்படுகிறது .எதற்கு ? என தெரியவில்லை . நாயகி அதைப்பற்றிப்பேசும்போதெல்லாம் எரிச்சல் வருகிறது
2 நாயகன் வில்லனின் ஹேர் ஸ்டைல் , அப்பியரன்ஸ் எல்லாவற்றையும் மாற்றிய பின் அனைவரும் வில்லனின் தோற்றத்தை சிலாகிக்கிறார்கள் . ஆனால் எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை . அப்போதும் தாடி , பரட்டைத்தலை என கேவலமாக இருக்கும் வில்லன் கெட்டப் சேஞ்ச் நடந்த பின்னும் அதே கேவலமான தாடியுடன் தான் , பரட்டையாகத்தான் இருக்கிறான்
3 படத்தில் எல்லோரும் லொட லொட என பேசிக்கொண்டே இருக்கிஒரார்கள் . இயக்குநர் ஒரு பெண் என்பதால் அபப்டி இருக்கலாம். அட்லீஸ்ட் பிஜிஎம் மையாவது சைலண்ட் மோடில் வைத்திருக்கலாம். ஒரே இரைச்சல் . கொஞ்சம் அமைதியாத்தான் இரேன்பா என கத்த வைக்கிறது
4 பொதுவாக இந்த மாதிரி படங்களில் தம்பதி ஆக இருந்தவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்று காரணம் சொல்வதில் அழுத்தம் இருக்காது . ஆனால் இதில் விஷூவலாக என்ன காரணத்தால் பிரிந்தார்கள் என சொல்லவே இல்லை . நாயகிக்கு சமைக்கத்தெரியாது என்பதுதான் நாயகன் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு . இப்போ இருக்கும் பெண்களில் யாருக்குமே திருமணமே ஆகாது, இதெல்லாம் ஒரு காரணமா? இந்தக்காலத்தில் ஆண்களே சமைக்கிறார்கள் . பொண்ணு கிடைச்சா போதும்னு அவனவன் அலையறான்
6 நாயகனின் கற்பனையில் வில்லனும் நாயகியும் டீயட் பாடுவது , வில்லனின் கற்பனையில் நாயகனும் நாயகியும் டூயட் பாடுவது அபத்தம்
7 நாயகியின் கேரக்டர் டிசைனில் தெ:ளிவில்லை . செம பர்சனாலிட்டியாக இருக்கும் நாயகனைப்பிரிகிறார். பஞ்சப்பரதேசி மாதிரி கஞ்சா கேஸ் மாதிரி இருக்கும் தாடிக்காரன் ஆன வில்லனை விரும்புகிறார்
8 வில்லனின் கேரக்டர் ஸ்கெட்ச் சரி இல்லை . நாயகன் டாக்டர் ஆக இருக்கிறார் , சரி , வில்லன் என்ன செய்கிறார்? எப்போப்பாடு நாயகி பின்னால் சுத்திட்டு தான் இருக்கார் . வேலை வெட்டிக்கே போவதில்லை
9 ஐந்து வருட மணவாழ்க்கைக்குப்பின் பிரியும் நாயகனும் நாயகியும் மீண்டும் சந்திக்கும்போது பரஸ்பரம் ஃபோன் நெம்பர் என்ன எனகேட்டு ஷேர் பண்ணிக்கறாங்க. ஒரு டாக்டராக இருப்பவர் அடிக்கடி ஃபோன் நெம்பரை மாற்றிக்கொண்டா இருப்பார் ? ஒரு மெடிக்கல் ஸ்டூடண்ட் ஆன நாயகி ஏன் ஃபோன் நெம்பர் மாற்றுகிறார் ?
10 நாயகன் , நாயகி இருவருக்கும் டைவர்ஸ் ஆச்சா? இல்லையா? என்பதில் ஒரு தெளிவு இல்லை
11 லெஜெண்ட் டைரக்டர் ஆக மணிரத்னம் திருடா திருடா பட க்ளைமாக்ஸில் ஒரு முட்டாள் தனம் செய்திருப்பார். ராசாத்தி என்னுசுரு என்னுது இல்லை என பாட்டுப்பாடிய பிரசாந்த்தும், ஆனந்தும் க்ளைமாக்சில் ராசாத்தி உனக்கு புதையல் எனக்கு என மாறி மாறி கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணும் காட்சி வரும், சீரியசான காதலை காமெடி மாதிரி ஆக்கினால் கடுப்புதான் வரும் , இந்தப்பட க்ளைமாக்சும் அதுவே
12 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் என நாயகன், வில்லன் இருவருக்குமான க்ரஸ் க்ளாஸ்மேட் நாயகி அல்ல இன்னொரு பெண் என காட்டுவது பயங்கர சொதப்பல்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - அசோக் செல்வன் ரசிகைகள் , ஐஸ்வர்யா லட்சுமி ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம். காதல் தேசம் பார்க்காதவர்கள் பார்க்கலாம் . ரேட்டிங் 2/ 5
Pon Ondru Kanden | |
---|---|
Directed by | V. Priya |
Written by | V. Priya |
Screenplay by | V. Priya Reema Ravichander |
Produced by | Jyoti Deshpande Yuvan Shankar Raja |
Starring | Ashok Selvan Aishwarya Lekshmi Vasanth Ravi |
Cinematography | AT Bagath |
Edited by | Sathish Suriya |
Music by | Yuvan Shankar Raja |
Production companies | Jio Studios YSR Films |
Distributed by | JioCinema |
Release date |
|
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment