1934 ல் ரிலீஸ் ஆன ஹாலிவுட் படமான இட் ஹேப்பண்ட் ஒன் நைட் படத்தின் இன்ஸ்பிரேஷனில் எடுக்கப்பட்ட படம் தான் இந்தப்படம் .ஒரிஜினல் படத்தைப்பார்த்து விட்டு ரீமேக் படத்தைப்பார்த்தால் ஒரு ஹாலிவுட் படத்தை தமிழ் ரசிகர்கள் ரசனைக்கு ஏற்றபடி எப்படி பட்டி டிங்கரிங் செய்வது ? செண்ட்டிமெண்ட் காட்சிகளை எந்த விகிதத்தில் சேர்ப்பது என்பதை அறியலாம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு ஜமீன் தாரரின் மகள் . மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்ட அவருக்கு பருவ வயது வந்ததும் திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடக்கின்றது. அது பிடிக்காமல் நாயகி வீட்டை விட்டு வெளியே போகிறார். அந்த நேரம் நாயகியைப்பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டாரை சமாளிக்க ஜமீன் தாரர் அவர் வீட்டுப்பணிப்பெண்ணை தன் மகள் என பொய் சொல்லி பெண் பார்க்கும் படலத்தை நடத்துகிறார்,இதில் என்ன ஒரு ட்விஸ்ட் எனில் அந்த மாப்பிள்ளை தான் அந்த பணிப்பெண்ணை பாலியன் வன்கொடுமை செய்தவர்
வில்லன் ஒரு பிரபல பத்திரிக்கையின் முதலாளி. இவர் வாலிப வயதில் ஒரு பெண்ணை ஆசை காட்டி மோசம் செய்தவர். அவர் மூலம் பிறந்த குழந்தையை அந்த அபலை இன்னொரு தம்பதிக்கு தத்து கொடுத்து விட்டு இப்போது ஜமீன் தாரரிடம் பணிப்பெண்ணாக இருக்கிறார்
நாயகன் வில்லனின் பத்திரிக்கையில் ரிப்போர்ட்டர் ஆகப்பணி புரிபவர். வீட்டை விட்டு ஓடி வந்த நாயகியை மீட்டு அவர் அப்பாவிடம் சேர்க்க நினைப்பவர் , நாயகன் நாயகி இடையே காதல் மலர்கிறது
இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக எம் ஜி ஆர். அவரது வழக்கமான அம்மா செண்ட்டிமெண்ட் இதில் இல்லை , மாறாக தங்கை செண்ட்டிமெண்ட் இருக்கிறது . வழக்கம் போல் தத்துவப்பாட்டுப்பாடுகிறார். வில்லனுக்கு அட்வைஸ் செய்கிறார். சேலை கட்டிய பெண் தான் நல்லவர். அவரைத்தான் பிடிக்கும், மாடர்ன் டிரஸ் போட்ட பெண்ணைப்பிடிக்காது என்கிறார். எம் ஜி ஆர் ரசிகர்கள் என்ன எல்லாம் எதிர்பார்ப்பார்களோ அந்த ஃபார்முலாப்படி அவரது கேரக்டர் டிசைன் இருக்கிறது
நாயகி ஆக ஜெ . ஜமீன் தாரர் பெண்ணுக்கான உடல் மொழி அவரிடம் இயர்ஐயாகவே இருப்பதால் அசால்ட் ஆக நடிக்கிறார்
ஜமீன் தாரர் ஆக அசோகன் கச்சிதமான நடிப்பு . மெயின் வில்லன் எடிட்டர் ஆக எம் ஆர் ராதா கலக்குகிறார். சைடு வில்லனாக எம் என் நம்பியார் அசத்துகிறார்
காமெடி டிராக் பை நாகேஷ் + மனோரமா . சுமார் தான்
சபாஷ் டைரக்டர்
1 ஒரிஜினல் கதையான ஒரு ரொமாண்டிக் ஸ்டோரியில் ஃபேமிலி செண்ட்டிமெண்ட்ஸ் , வில்லன் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் எல்லாவற்றையும் கச்சிதமாக மிக்சிங் செய்தது
2 மூன்று மாபெரும் வில்லன்களை புக் செய்தது , கச்சிதமாக அவர்களிடம் வேலை வாங்கியது
3 எம் ஜி ஆர் ஃபார்முலாவில் பாடல்களை உருவாக்கியது
செம ஹிட் சாங்க்ஸ்
1 புதியதோர் உலகம் செய்வோம் ( டைட்டில் சாங்க் )
2 புத்தன் காந்தி ஏசு பிறந்தது பூமியில் எதற்காக? ஏழைகள் நமக்காக
3 கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்
4 காசிக்குப்போகும் சன்யாசி உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
5 எங்கிருந்தோ ஆசைகள்
6 சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
ரசித்த வசனங்கள்
1 பெண்களூக்குப்பஞ்சம் இல்லை , பெண்களின் உரிமைக்குத்தான் பஞ்சம்
2 யாரை நீ எதிர்க்கிறே தெரியுமா?
எதிரி எனக்கு சம பலம் இல்லாதவனா இருந்தா அவனை ஒரு பொருட்டாகவே மதிக்காதவன் நான்
3 வாழ்க்கைல முன்னுக்கு வரனும்னு நினைக்கறது தப்பில்லை , ஆனா குறுக்கு வழில அடைய நினைப்பதுதான் தப்பு
4 எதேது? வம்பை விலை கொடுத்து வாங்கிட்டேன் போலயே?
நீங்க எங்கே விலை கொடுத்தீங்க ? நானே தானே உங்க கூட வந்தேன் ?
5 சரி , சாப்பிட என்ன வேணும் ?
இட்லி , தோசை , பூரி , பொங்கல்’
ஒண்ணு விட்ராத . உலகில் உணவுப்பஞ்சம் ஏன் வராது ? நான் ஹோட்டல் வெச்சா நடத்தறேன் ?
6 சந்தேகம் தான் மனிதனை சுறுசுறுப்பா வெச்சிருக்குது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நிருபராக இருக்கும் நாயகன் தந்த செய்தியை வில்லனான சீஃப் எடிட்டர் தவறாக பிரசுரிக்க அந்தப்பெண்ணின் அப்பா தற்கொலை செய்து கொள்கிறார். அந்தத்தவறான செய்தியைப்பிரசுரித்த பத்திரிக்கையின் செய்தியை நாயகன் அதுவரை பார்க்கவே இல்லை. அவர் பணி புரியும் பத்திரிக்கையின் செய்தியைக்கூட அவர் பார்க்க மாட்டாரா?
2 நாயகன் தன் ஹீரோ இமேஜை வளர்த்திக்கொள்ள வரும் ஓப்பனிங் சாங்கில் பல குழந்தைகளுடன் மழையில் நனைந்தபடி அட்வைஸ் பண்ணுவது போல் ஒரு காட்சி. இவர் இமேஜை வளர்த்த தேவை இல்லாமல் அத்தனை குழந்தைகளை மழையில் நனைய வைக்க வேண்டுமா?
3 நாயகி வில்லனான சீஃப் எடிட்டருக்கு லேண்ட் லைன் ஃபோன் போட்டுப்பேசும்போது நிருபர் ஆன நாயகன் அந்த ஃபோன் காலை அட்டெண்ட் செய்வது எப்படி? ரிஷப்சனிஷ்ட்டோ, சீஃப் எடிட்டரோ தானே காலை அட்டெண்ட் பண்ணனும் ?
4 நாயகன் வில்லனான தன் ஓனரை அடிக்கடி மிரட்டுகிறார். அது எப்படி ? வேலை பிடிக்கலைன்னா ரிசைன் பண்ணிட்டுப்போக வேண்டியதுதானே?
5 ஜமீன் தாரர் தன் மகளை திடீர் என வெறுப்பதற்குக்காரணம் சொல்லப்படவே இல்லை
6 பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார் வீட்டுக்குள்ளே அமர்ந்திருக்கிறார்கள் . வெளியே கேட்டில் மகள் நிற்க அப்பா தாராளமாக மகளிடம் உண்மை சொல்லி இப்போ போய்ட்டு அப்றம் வா என சொல்லி அனுப்பி இருக்கலாம், அதை விட்டுட்டு மகளைத்துரத்தி விட்டுட்டு அப்றம் ஆள் அனுப்பி தேடச்சொல்வது வேண்டாத வேலை
7 அந்தக்காலத்தில் நிருபர் ஜிப்பா தான் போட்டிருப்பார். ஆனா ல் நாயகன் சேட்டு வீட்டுப்பையன் போல டிப் டாப் டிரஸ் போட்டிருப்பது எப்படி ?
8 அறிமுகம் இல்லாத வில்லன் கையைப்பிடித்ததும் தாம் தூம் எனக்குதிக்கும் நாயகி அறிமுகம் இல்லாத நாயகன் இடுப்பைப்பிடிக்கும்போதும் சும்மா இருப்பது ஏன் ? ( காதலும் இல்லை )
9 ஜமீன் தாரர் மகளை கவனித்துக்கொள்ளும் ஆயா பாயில் படுக்க மாட்டாரா? அவருக்கு ஜமீன் வாரிசுக்கு நிகரான படுக்கை , மெத்தை வசதி
10 நாயகி மாடர்ன் டிரஸ் மட்டுமே போட்டு வளர்ந்தவர். நாயகன் பரிசாக சேலை கொண்டு வர அப்போதுதான் முதன் முதலாக நாயகி சேலை கட்டுகிறார். அப்போது மேட்சிங் பிளவுஸ் ஏது ?
11 நாயகிக்கு உதவியாக எட்டு பெண்கள் இருக்காங்க . அவர்கள் பணி என்ன?
12 சைடு வில்லன் ஆன நம்பியார் தான் கெடுத்த ஏழைப்பெண் தான் ஜமீன் தார் வீட்டில் பெண் பார்த்த நபர் என்பதை அறிந்தும் எதற்காக மேரேஜ்க்கு சம்மதம் சொல்கிறார் ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சுமாரான கதை தான் . ஆனால் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த டைம் பாஸ் படம் . ரேட்டிங் 2.25 / 5
Chandrodayam | |
---|---|
Directed by | K. Shankar |
Based on | It Happened One Night |
Produced by | G. N. Velumani |
Starring | M. G. Ramachandran J. Jayalalithaa |
Cinematography | Thambu |
Edited by | K. Narayanan |
Music by | M. S. Viswanathan |
Production company | Saravana Films |
Release date |
|
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment