Friday, March 29, 2024

TO KILL A TIGER (2024) - ஹிந்தி /தமிழ் - சினிமா விமர்சனம் ( டாகுமெண்ட்ரி ட்ராமா ) @ நெட் ஃபிளிக்ஸ்

     

    2024 ஆம்  ஆண்டு  ஆஸ்கார்  விருதுக்காக  பரிந்துரைக்கப்பட்டு  நூலிழையில்   விருதை  தவற  விட்ட  படம் . இது   டாகுமெண்ட்ரி  படம்  ஆக  இருந்தாலும்  2013  ஆம்  ஆண்டு  நடந்த  உண்மை  சம்பவம்  என்பதால்  பார்ப்பவர்  நெஞ்சை  பதை  பதைக்க  வைக்கும்  தன்மை  கொண்ட  படம்.இந்தப்படத்தை எடுக்க  9  வருடங்கள்  போராடியதாக  இயக்குநர் நிஷா  பஹூஜா  கூறூகிறார். கனடா  நாட்டு  நிறூவனத்துடன்  இணைந்து  நெட்  ஃபிளிக்ஸ்  தயாரிப்பாக  மார்ச்  10 , 2024  அண்று  முதல்  காணக்கிடைக்கிறது


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஜார்க்கெண்ட்  டில் உள்ள  ஒரு  கிராமம் , அங்கே  ரஞ்சித்  என்பவர்  தன்  மனைவி ,மகள் ,  மகனுடன்  வசித்து  வருகிறார்.அவர்    வீட்டுக்குப்பக்கத்து  வீட்டில் அன்று  கல்யாண  விசேஷம்,அதனால் எல்லோரும்  ஆட்டம்,பாட்டம் , கொண்டாட்டமாக  இருந்து  விட்டு  மிட்  நைட்  12  மணிக்கு தான்  வீட்டுக்கு  வருகிறார்கள் , ஆனால்  அப்போது  13  வயதான  அவரது  மகள்  மட்டும்  இன்னும்  வரவில்லை 

 சரி , அவள்  வயது சிறுமிகளோடு  விளையாடிக்கொண்டு  இருப்பார்  என  அசால்ட்டாக  விட்டு  விடுகிறார்  அப்பா,மிட்  நைட்  1  மணிக்குத்தான்  அந்த  சிறுமி  வருகிறார். வரும்போதே  தடுமாற்றத்துடன்  அழுது  கொண்டெ  தான்  வருகிறார். வந்ததும்  மயங்கி  விழுகிறார்


 பின்  விசாரித்த  பின்  தான்  தனது மகள்  மூன்று  நபர்களால்  பாலியல் வன்கொடுமைக்கு  ஆளாக்கப்பட்டிருக்கிறார்    என்பது  தெரிய  வருகிறது. இக்கொடுமையைச்செய்தவர்களை  சட்டத்தின்  பிடியில்  சிக்க  வைக்க  வேண்டும்  என  அப்பா  முடிவெடுக்கிறார்


 அடுத்த  நாள்  காலை விடிந்ததும்  கிராம  மக்கள்   ஒன்று  கூடிப்பேச  ஆரம்பிக்கிறார்கள் . யார்  உன்  பெண்ணைக்கெடுத்தார்களோ  அந்த  மூவரில்  ஒருவனை  கல்யாணம்  செய்து  கொள்ளச்சொல்லலாம்.  என்று  சொல்ல  அபா  மறுக்கிறார்.   குற்றவாளிகளுக்கு  தண்டனை  வாங்கித்தர  வேண்டும்  என்கிறார்.


கொடுமையைச்செய்த  மூன்று  நபர்களில்  ஒருவன்  இவர்கள்  தூரத்து  சொந்தக்காரன். அந்த  3  வாலிபர்களின்  பெற்றோர்களும்  தங்கள்  மகன்  செய்த  தப்பை  மறைக்க  அந்த  சிறுமி  மீது  குற்றப்பத்திரிக்கை  வாசிக்கிறார்கள் . இரவு  நேரத்தில்  பெண்ணுக்கு  அங்கே  என்ன    வேலை ?  அவள்  மேலும்  தப்பு  இருக்கு  என்கிறார்கள் 


 இந்த  ஊர்ப்பிரச்சனையை  ஊருக்குள்ளேயே  பேசி  முடிவெடுப்போம், போலீஸ்  , கோர்ட்  என்று  போக  வேண்டாம்  என்கின்றனர் .ஆனால்  அப்பாவும், மகளும்  தங்கள்  முடிவில்  கடைசி  வரை  உறுதியாக  இருக்கிறார்கள் 


இதற்குப்பின்  நடந்த  சம்பவங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


இது இந்தியாவையே  உலுக்கி  எடுத்த  ஒரு உண்மை  சம்பவ வழக்கு .குற்றவாளிகள்  மூவருக்கும்  தலா  25  ஆண்டுகள் சிறைதண்டனை  வ்ழங்கி  தீர்ப்பு  வந்தது .மேல் முறையீடு  செய்திருக்கிறார்கள் 


 இந்த  டாக்குமெண்ட்டிரியில் பாதிக்கப்பட்ட சிறுமி   மற்றும்  அவர்  குடும்பத்தினரே  பேட்டி கொடுத்திருக்கிறார்கள் . அந்த  ஊர்  மக்களே  நடித்திருக்கிறார்கள் . கோர்ட்டுக்கு  உள்ளே  நடந்தது  மட்டும்  காட்டப்படவில்லை   


சபாஷ்  டைரக்டர்


1  ஒரு  அப்பா  தன்  மகளூக்கு  நடந்த  சம்பவத்தை  பேப்பரில்  எழுகிக்கொடுத்து  மனப்பாடம்  செய்யச்சொல்லி  இதை  அப்படியே  சத்தமாக  கோர்ட்டில்  சொல்ல  வேண்டும்  என  சொல்லிக்கொடுக்கும்  காட்சி  காண்போர்  மனதை  என்னமோ  செய்யும்  காட்சி 


2  சம்பவம்  நடந்த  அடுத்த  நாள்  ஊர்  மக்கள்  எல்லோரும்  சிறுமியின்  குடும்பத்தைத்தான்  டார்கெட்  பண்ணி  அவதூறு  பேசுகிறார்களே  தவிர  குற்றவாளிகளுக்கு  எதிராக  எதுவும்  சொல்லாத  அவலத்தை  காட்சிப்படுத்திய  விதம் 


3  பலரது  கொலை  மிரட்டலுக்கு  ஆளான  பின்னும்,   அப்பாவும்  மகளூம்  தங்கள்  முடிவில்  உறுதியாக  இருப்பதைக்காட்டிய  விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1   ஒரு  கிரிமினல்  கேஸ்ல  பஞ்சாயத்துத்தலைவர்  முடிவு  எடுக்க  முடியாது 


2  எல்லாப்பிரச்சனைகளையும்  உங்க  வீட்லயே  , உங்க  ஊர்லயே  சரி  பண்ணிட  முடியாது 


3   போராட்டம்  இல்லாம  நீதியை  அடைய  முடியாது 


4 கறை  என்பது   பாதுக்கப்பட்ட  பெண்  மீது  படியலை ,   தப்பு  செஞ்ச  ஆண்கள்  மீது தான்  படிஞ்சிருக்கு , அவங்க  தான்  வெட்கப்படனும் 


5  இந்தியாவில்  மகள்களுக்கு  ஆதரவாக  இருக்கும்  அப்பாக்கள்  குறைவு 


6   எங்க  வீட்டில்  நடந்த  கொடுமைகளால்  இனி  அக்கம்  பக்கம்  இது  போலக்கொடுமைகள்  நடக்காது  என்பது ஒரு  வகையில்  திருப்தி .  அது  என்  மகள்  செய்த  தியாகம் . தியாகத்தை  விடப்பெரியது  இந்த  உலகில்  எதுவும்  இல்லை 


7  நேர்மையான  உள்ளத்துடன்  நாம்  செய்யும்  எதுவும்   எந்தக்காரியமும்  வெற்றியே  பெறும் 


8  புலியை  வேட்டையாட  அல்லது  கொல்ல ஒரு  தனி நப்ரால் முடியாது என  சொல்கிறார்கள் . நான்  காட்றேன், எப்படி  வேட்டையாடுவது  என


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   பாதிக்கப்பட்ட  சிறுமி  கோர்ட்டுக்கு  வாக்கு  மூலம்  கொடுக்கப்போகும்போது  மட்டும்  லிப்ஸ்டிக்  போட்டு  ஸ்லீவ்லெஸ்  சுடி தார்  உடன்  செல்வது  எதுக்கு ? ரெகுலராகவே  அப்படி  உடை உடுத்துபவராகக்காட்டி  இருந்தால் ஓக்கே .அந்த  ஒரு  சீனில்  மட்டும் அப்படிக்காட்டுவது  ஏன்?


2   பாதிக்கபப்ட்ட  சிறுமியின்  புகைப்படமோ , பெயரோ  வெளி வரக்கூடாது  என  சட்டம்  சொல்கிறது . இவங்க  ஒரு  படத்தையே  எடுத்து  வெச்சிருக்காங்க. எப்படி ? குற்றவாளிகள்  முகத்தைகக்டைசி  வரை  க்ளோசப்பில்  காட்டவே  இல்லை 


3  படம்  முழுக்க  அந்த  சிறுமியின்  அப்பாவின்  பார்வையிலேயே  சொல்லப்படுகிறது  , ஓக்கே , ஆனால்  தீர்ப்பு  வந்த  பின்னாவது  குற்றவாளிகள்  கருத்தை காட்டி  இருக்க  வேண்டாமா? அல்லது  அவர்களது  பெற்றோர்  மூவரையும்  காட்ட  வேண்டாமா? பாதிக்கப்பட்ட  பெற்றோரை  மட்டும்  காட்டலாமா? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ , சம்பவங்கள்  வார்த்தைகளால்  சொல்லப்படுவதோடு சரி , விஷூவலாக  எதுவும்  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பெண்  குழந்தைகளைப்பெற்றவர்களூக்கு  ஒரு  விழிப்புணர்வுப்பட,மாக  இருக்கும். மற்றவர்களுக்கு  இது  போர்  அடிக்கும்  படமாக  இருக்கலாம் . ரேட்டிங்  2.75 / 5 

0 comments: