இந்தப்படம் 1989ல் இதே டைட்டிலில் ரிலீஸ் ஆன படத்தின் ரீ க்ரியேஷன் தான். திரைப்பட விருது விழாக்களில் கலந்து கொண்ட இப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் முன் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி யில் ரிலீஸ் ஆகி இருக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
ரோடு ஹவுஸ் என்பது ஒரு கிளப் . நம்ம ஊர்ல டாஸ்மாக் பார் மாதிரி கிளப் ல பார் அட்டாச் ஆகி இருக்கு. பாருக்கு யாரு வருவாங்க ?பொறுக்கிகள் , குடிகாரர்கள் தானே வருவாங்க ? வந்தவங்க சும்மா போறதில்லை .ஒரே அலப்பறை பண்ணி எதுனா தகறாரு பண்ணி அந்த கிளப்பை நாசம் பண்றாங்க
க்ளப்போட ஓனர் ஒரு லேடி .அந்த லேடி இந்த கிளப்பைப்பாதுக்காக்க ஒரு பவுன்சர் வேண்டும் என நினைக்கிறாள் . பிரபலமான பாக்சர் பற்றிக்கேள்விப்பட்டு அங்கே போறா.அங்கே போனா யாரைத்தேடி அவ வந்தாளோ அந்த ஆளைப்பிளந்து கட்டிட்டு இருக்கான் ஒரு ஆளு .அவன் தான் படத்தோட நாயகன். அவனையே வேலைக்கு அமர்த்திடலாம்னு அந்த லேடி நினைக்கறா
ஆரம்பத்தில் மறுத்த நாயகன் பின் அந்த கிளப்ல வேலைக்கு சேருகிறான். இப்போ நாயகன் முன் எந்த ரவுடிகளும் அந்த கிளப்ல வாலாட்டுவதில்லை அடி வெளுத்து விடுகிறான். அப்பப்ப நாயகனுக்கு காயம் ஆகும், அதை சரி பண்ண ஹாஸ்பிடல் போறப்ப ஒரு லேடி டாக்டரை சந்திக்கிறான்.அவளுக்கு நாயகன் மீது கண்டதும் காதல். நாயகன் எஸ் , நோ எதுவும் சொல்லலை .அவன் பாட்டுக்கு சிவனேன்னுதான் இருக்கான்
ஆனா நாயகியோட அப்பா ஒரு போலீஸ் ஆஃபீசர் . நாயகனை அந்த தீவை விட்டு கிளம்ப சொல்றார். அந்தத்தீவிலேயே பெரிய பணக்காரன் ஒருத்தன் அந்த ரோடு ஹவுஸ் எனும் கிளப்பை ஆட்டையைப்போட நினைக்கிறான். அந்த வில்லனுக்கு நாயகன் தடையா இருக்கான். இவங்க எல்லா,ம் பத்தாதுனு இன்னொரு கடோத்கஜ சைக்கோ வில்லன் செம ஃபைட்டர் ஒருத்தன் வர்றான்
இவங்களை எல்லாம் நாயகன் எப்படி சமாளித்தான் என்பதுதான் படத்தோட மொத்தக்கதையே
நாயகன் ஆக ஜேக் கில்லன் ஹால் அதகளப்படுத்தி இருக்கிறார்.எதற்குமே அலட்டிக்கொள்ளாத சிரித்த முகத்துடன் அவர் போடும் ஃபைட்கள் எல்லாம் பிரமாதம் . ஒரு முன்னாள் யு எஃப் சி ஃபைட்டர் உடல் மொழி எப்படி இருக்குமோ அதை அப்படியே கண் முன் நிறுத்துகிறார்.
வில்லன் ஆக கோனார் மெக் கிரேகர் அசத்தி இருக்கிறார்.ஜிம் பாடி மட்டுமல அவரது தாக்குதலை கடைசி வரை நாயகனால் சமாளிக்க முடியாமல் திணறுகிறார். குறிப்பாக க்ளைமாக்ஸ் ஃபைட் சீனில் நாயகன் - வில்லன் ஒன் டூ ஒன் ஃபைட் செம
நாயகி ஆக டேனியலா மெல்காயிர் நடித்திருக்கிறார்.கவனிக்க வைக்கும் அழகு
படம் முழுக்க ஆறு இடங்களீல் ஆக்சன் சீக்வன்ஸ் பொறி பறக்கிறது . கடலில் படகு சேசிங் சீனும் உண்டு
121 நிமிடங்கள்படம் ஓடும்படி எடிட் செய்திருக்கிறார் எடிட்டர் டாக்கிராட்சர்
ஹென்றி பிராஹம் ஒளிப்பதிவு அருமை ., குறிப்பாக நாயகி நாயகனை நடுக்கடலுக்கு அழைத்துச்சென்று டேட்டிங் போகும் இடம் லொக்கேஷன் செலக்சன் செம.,கிறிஸ்டோஃபெ பெக் கின் பின்னணி இசை அமர்க்களம்.ஃபைட் சீன்கள் எல்லாம் தெறிக்க பிஜிஎம் முக்கியப்பங்கு வகிக்கிறது
டக் லிமான் தான் இயக்கி இருக்கிறார்.ஆக்சன் பிரியர்களுக்கு விருந்து
சபாஷ் டைரக்டர்
1 கிளப்பின் ஓனர் , கிளப்பில் பணி புரியும் பெண் , லைப்ரரி ஓனரான ஒரு பெண் , லேடி டாக்டர் என நான்கு பெண் கதாபாத்திரங்களுமே நாயகன் மேல் ஒரு சாஃப்ட் கார்னர் வைத்திருப்பதை கவிதையாகச்சொன்ன விதம், நால்வரில் யாரை ஜோடியாக நாயகன் தேர்ந்தெடுக்கப்போகிறான் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விதம்
2 மெயின் வில்லனின் உடல் மொழி , ஜிம் பாடி , ஃபைட் சீன் எல்லாம் அற்புதம் , கடைசி வரை வெல்ல முடியாதவான ஸ்ட்ராங்காக கேரக்டரை வடிவமைத்த விதம் அருமை
3 நான்கு பெண் கதாபாத்திரங்கள் இருந்தும், தேவை இல்லாத காட்சிகள் எதுவும் வைக்காமல் குடும்பத்துடன் பார்க்கும் விதமாக கண்ணியமாக காட்சிகளை வடிவமைத்த விதம்
ரசித்த வசனங்கள்
1 சண்டையை ஆரம்பிக்கும் முன் ஒண்ணே ஒண்ணு கேட்டுக்கறேன், உங்களுக்கெல்லாம் இன்சூரன்ஸ் இருக்கா?
2 சண்டைல யாரும் ஜெயிக்க மாட்டாங்க
3 எந்த மரமண்டை அந்த ஐடியா கொடுத்தது?
நீங்க தான் பாஸ்
4 உன்னை போட்டுத்தள்ளத்தான் ஸ்பெஷலா என்னை அனுப்பி இருக்காங்க, இன்றோடு நீ தொலைந்தாய்
தனியா வராம எதுக்கு இத்தனை ஆளுங்களைக்கூட்டிட்டு வந்திருக்கே?பயமா?
ஷோ பார்க்க ஆடியன்ஸ் வேண்டாமா?
5 எனக்குக்கோபம் வந்தா என்னை நானே கண்ட்ரோல்பண்ண முடியாது , அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ / ஏ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஃபைட் பிரியர்கள் , ஆக்சன் பட விரும்பிகள் அவசியம் பார்க்க வேண்டிய படம் . ரேட்டிங் 2.75 / 5
Road House | |
---|---|
Directed by | Doug Liman |
Screenplay by |
|
Story by |
|
Based on | Road House by
|
Produced by | Joel Silver |
Starring | |
Cinematography | Henry Braham |
Edited by | Doc Crotzer |
Music by | Christophe Beck |
Production companies | |
Distributed by | Amazon MGM Studios |
Release dates |
|
Running time | 121 minutes[1] |
Country | United States |
Language | English |
0 comments:
Post a Comment