டைட்டிலுக்கான அர்த்தம் முபாரக்கின் கொலை என்பது அல்ல . முபாரக் என்பது பெயர்ச்சொல் அல்ல .ஹிந்தியில் முபாரக் என்றால் வாழ்த்து என்று பொருள் கொலைக்கான வாழ்த்து என்று பொருள் .2021 ஆம் ஆண்டு அனுஜா சவுஹான் எழுதிய க்ளப் யூ டூ டெத் என்ற நாவலைத்தழுவி எடுக்கப்பட்டது . ரைட்டர் அகதா கிறிஸ்டியின் பாத்திரப்படைப்பான ஹெர்குலிஸ் பாய்ரோட்டின் தழுவல் தான் இந்தப்பட நாயகன் ஆன போலீஸ் ஆஃபீசரின் கேரக்டர் டிசைன்
திரை அரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக நெட் ஃபிளிக்ஸில் 15/3/2024 முதல் காணக்கிடைக்கிற்து .க்ளைமாக்சில் வரும் அபாரமான திருப்பங்களை 30 நிமிடங்களில் சொன்ன டீம் அதைக்காண 2 ம்ணி நேரம் நம் பொறுமையை சோதிக்க வைக்கும் ஸ்லோ பர்ன் த்ரில்லராக உருவாக்கி இருக்கிறது
2019ல் ரிலீஸ் ஆன ஹாலிவுட் படமான நைவ்ஸ் அவுட் படத்தின் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்ட படம் இது
ஸ்பாய்லர் அலெர்ட்
ராயல் டெல்லி கிளப் என்ற பெயர் உடைய எலைட் க்ளப்பில் இருக்கும் ஜிம்மில் பணி புரியும் ஜிம் மாஸ்டர் கம் ட்ரெய்னர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக்கிடக்கிறார்.அந்தக்கொலையை விசாரிக்க வரும் போலீஸ் ஆஃபீசர் கிளப்புக்கு ரெகுலராக வருகை தருபவர்களை ஒவ்வொருவராக விசாரிக்க ஆரம்பிக்கிறார்.அப்போது திடுக்கிடும் பல தகவல்கள் கிடைக்கின்றன.அதுவரை வெளி வராத சில கொலைகள் பற்றிய விபரங்களும் கிடைக்கின்றன
ஜிம் மாஸ்டர் ஆக இருந்த அந்த ஆள் கிளப்புக்கு வரும் பெரிய செல்வந்தர்களின் ரகசியங்களை படம் பிடித்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டி இருக்கிறான். அவனால் பாதிக்கப்பட்ட ஒருவர் தான் இந்தக்கொலையை செய்திருக்கக்கூடும் என்று நாயகன் நினைத்து கேசைக்கொண்டு போகிறார்.ஆனால் அது வேறு ஒரு திசைக்கு அவரை அழைத்துச்செல்கிறது .இதில் அவர் சந்தித்த திருப்பங்கள் என்ன ?என்பதுதான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ் ஆக பங்கஜ் த்ரிப்பாதி அட்டகாசம் பண்ணி இருக்கிறார்.இவரது கேரக்டர் டிசைன் காமெடி கலந்த நிதனாமான அணுகுமுறை ஆக சித்தரிக்கப்பட்டுள்ளது புதுமையாக இருந்தது
சாரா அலி கான் விதவை ஆக வருகிறார். இவரது அழகும் நடிப்பும் குட் .விஜய் வர்மா வக்கீலாக வருகிறார். துறுதுறுப்பான நடிப்பு கரிஷ்மா கபூர் , டிம்ப்பிள் கபாடியா போன்ற நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கின்றன. விக்ரம் படத்தில் மீண்டும் மீண்டும் வா பாடலில் ரசித்த டிம்ப்பிள் கபாடியா வை நினைத்து இதில் பார்த்தால் ரசிகர்கள் இதயம் நொறுங்குவது உறுதி . காலம் செய்த கோலம்
சச்சின் ஜிகார் தான் இசை .இரண்டு பாடல்கள் ஓக்கே ரகம் , பின்னணி இசையில் மிகுந்த கவனம் செலுத்தி இருக்கிறார்.நாயகன், நாயகி , வில்லன் , வில்லி என ஒவ்வொருவருக்கும் ஒரு தனி தீம் மியூசிக் போட்டு அசத்தி இருக்கிறார்
அக்சரா பிரபாகர் தான் எடிட்டிங் . 142 நிமிடங்கள் படம் ஓடும்படி கட் செய்து இருக்கிறார். கடைசி அரை மணி நேர எடிட்டிங் அட்டகாசம்.மிக ஷார்ப் ஆக கட் செய்து இருக்கிறார். ஆனால் படம் ஆரம்பித்து ஒன்றரை மணி நேரம் டெட் ஸ்லோவாகத்தான் படம் நகரும்
லினேஷ் தேசாய் தான் ஒளிப்பதிவு .நாயகி , வில்லி ஆகியோரின் க்ளோசப் காட்சிகள் அழகுணர்ச்சியுடன் படமாக்கப்பட்டு இருக்கிறது . ஈஸ்ட்மென் கலர் படங்களில் வருவது போல ஒரு வித ரெட்டிஷ் டோனில் ஃபோட்டோகிராஃபி அமைந்திருப்பது ரசிக்க வைத்தது
காஜல் தாலிவால் , சுப்ரோட்டின் சென்குப்தா ஆகிய இருவரும் திரைக்கதை அமைக்க ஹோமி அடஜோனியா இயக்கி இருக்கிறார்
சபாஷ் டைரக்டர்
1 இயக்குநர் ஒரு வித்தியாசமான பாணியிலான காட்சி அமைப்பை பயன் படுத்தி இருக்கிறார்.அதாவது நாயகன் ஒரு ஆளை விசாரனை செய்யும்போது அந்தக்காட்சியை அங்கேயே கட் செய்து ஃபிளாஸ்பேக்கில் என்ன நடந்தது என்பதை ஆடியன்சுக்கு புரியும்படியாக காட்சியாக விவரித்த விதம் செம
2 விஜய்வர்மா - சாரா அலிகான் இருவருக்குமான கெமிஸ்ட்ரி குட் .
3 கடைசி அரை மணி நேர திருப்பங்கள் கொண்ட திரைக்கதை , எடிட்டிங் அட்டகாசம்
ரசித்த வசனங்கள்
1 இந்த உலகத்தில் புதிரான விஷய்ம் தான் காதல்
2 ஒருவன் வாழ்வில் எவ்வளவு தான் மோசமான நிலைமைக்குப்போனாலும் அவன் வாழ்வில் காதல் என்று ஒன்று வந்து விட்டால் அது தரும் உத்வேகம் ஆனது அவனை வாழ்வின் உச்சத்துக்கு அழைத்துச்செல்லும் வல்லமை கொண்டது
3 ஹய்யோ ராமா , அது க்ளோபல் வார்னிங் இல்லைங்க மேடம், க்ளோபல் வார்மிங்
ம்ம் ஒருவகைல அது வார்னிங் தானே?
4 வாய் விட்டுப்பேசுனாத்தான் வாழ்வில் மறுமலர்ச்சி கிடைக்கும்
5 ஏண்டா டேய் உனக்கு கண் பின்னாலயா இருக்கு?
அப்படி பின்னால இருந்திருந்தா கரெக்டா ரிவர்ஸ் எடுத்திருப்பனே?
6 சாரி சார் , எங்க க்ளப்;ல மர்டர் அலோடு இல்ல
7 கவிஞனுக்கும் , துப்பறிவாளனுக்கும் ஒற்றுமை இருக்கு ., கவிஞன் புதிரா எழுதுவான் , துப்பறீவாளன் புதிரான விஷயங்களை அவிழ்ப்பான்
8 ஏழைகள் தான் இளம் வயதில் இறக்கிறார்கள்
9 உனக்கு எப்படி இவ்ளோ பெரிய மனசு வந்த்து ?
நீ தான் அடிக்கடி என் மனசை சுக்கு நூறா நொறுக்கிடறியே. எல்லாத்தையும் சேர்த்த் வைக்கும்போது பெருசாகிடுச்சு
10 இந்த கிளப்;ல இருக்கறவங்க ரெண்டே விஷயத்துக்குத்தான் பயப்படுவாங்க 1 டிரக்ஸ் 2 லாயர்ஸ்
11 நீ திருடும் பொருளை எனக்குத்திருப்பித்தர்லைன்னா என் பாதி லைஃப் காலி
12 அவரு ஆள் பார்க்கத்தான் அப்படி , ஆனா படுக்கை ல குதிரை
13 ஆண்களோட வீரத்தை இந்த உலகம் அதிகமா தோளில் சுமந்து இருக்கு , அபூர்வமான பெண்கள் வீரத்தை கண்டுக்கலை
14 ஆண்களோட போட்டி போட்டு ஜெயிக்க வேண்டிய நிலை இருக்கு
15 ஏழை , பணக்காரன் இருவர்க்கும் இடையே எப்பவும் ஒரே டீலிங் தான்
16 முதல் தடவை கொலை பண்றப்ப பயமாத்தான் இருக்கும், ஆனா ஒரு தடவை ஒரு கொலையைப்பண்ணிட்டா நாம் வாழ்வில் அதுக்குப்பின் எந்தப்பிரச்சனை வந்தாலும் அதுக்குத்தீர்வு கொலை தான் என முடிவுக்கு வந்துடுவோம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஏ செண்ட்டர் ஆடியன்சின் மனம் கவர்ந்த கமல் ஹாசன் சிங்கார வேலன் படத்தில் சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே பாடலில் சி செண்ட்டர் ரசிகர்களும் முகம் சுளிக்கும் சில சேஷ்டைகளை செய்வார் . அந்த மாதிரி படத்தின் நாயகன் படம் முழுக்கவே சில செய்கைகளை செய்கிறார். கஷ்டகாலம் . என்னதான் காமெடிக்கு என்றாலும் ரசிக்கும் விதமாய் இருக்க வேண்டாமா?
2 ஒருத்தன் அல்லது ஒருத்தி அவசரத்துக்கு ஒரு கொலை பண்ணி அவங்க வீட்டு தோட்டத்துலயே டெட் பாடியை புதைப்பது ஓக்கே. அஞ்சு வருசமா அந்த எலும்புக்கூடு அங்கேயே இருந்தா என்னைக்காவது அது அபாயம் தான் என தெரியாதா?அதை இடம் மாற்ற மாட்டார்களா?
3 பொதுவாக கொலை செய்பவர்கள் டெட் பாடியை புதைக்க மினிமம் 6 அடி ஆவது ஆழம் தோண்டுவார்கள் .இப்படி 3 அடி எல்லாம் தோண்டி புதைப்பது ஆபத்து . பெரிய மழை வந்தாலே காட்டிக்கொடுத்து விடும்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- 18+ காட்சிகள் உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பொறுமைசாலிகள் மட்டும் முழுப்படம் பார்க்க முடியும் கடைசி அரை மணி நேரம் கலக்கலாக இருக்கும், ஆனால் அதை ரசிக்க ஆரம்பம் முதல் பார்க்க வேண்டும் . ரேட்டிங் 2.75 / 5
Murder Mubarak | |
---|---|
Directed by | Homi Adajania |
Written by |
|
Based on | Club You To Death by Anuja Chauhan |
Produced by | Dinesh Vijan |
Starring | |
Cinematography | Linesh Desai |
Edited by | Akshara Prabhakar |
Music by | Sachin–Jigar |
Production company | |
Distributed by | Netflix |
Release date |
|
Running time | 142 minutes[1] |
Country | India |
Language | Hindi |
0 comments:
Post a Comment