Monday, March 04, 2024

MANJUMMEL BOYS (2024) -மலையாளம் - சினிமா விமர்சனம் ( சர்வைவல் த்ரில்லர் )

 


 22/2/2024   அன்று  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகி   10  நாட்களிலேயே  75  கோடி  வசூலை  அள்ளிய  படம்  இது . மலையாள  சினிமா வின்  ஆல்  டைம்  பிளாக்  பஸ்டர்  ஹிட்  ஆன  புலி  முருகன்  படத்தின்  வசூல்  சாதனையை  விரைவில்  முறியடிக்கும்  என  பேசிக்கொள்கிறார்கள் . ஹீரோ  வேல்யூ  இல்லாமல் , திரைக்கதை   மற்றும்  டெக்னிக்கல்  அம்சங்களின்  உதவியோடு  ஆடியன்சுக்கு  கனெக்ட்  ஆகும்  விதத்தில்  படம்  எடுத்தால்  வெற்றி  உறுதி  என்பதை  மீண்டும்  ஒரு  முறை  அழுத்தமாகப்பதிவு  செய்திருக்கும்  படம் 


இந்தப்படத்தைப்பார்க்கும்  பெற்றோர்கள்  தங்கள்  வாரிசுகளை  நண்பர்களுடன்  டூர்  போகவே  அனுமதிக்க மாட்டார்கள்  என்பதால்  இது  ஒரு  வகையில்  விழிப்புணர்வுப்பதிவாகவும்  அமைகிறது .கொடைக்கானல்  குகையை  குணா  குகை  என்று  பெயர்  ஏற்படக்காரணமாக  இருந்த  குணா  படம்  ஃபிளாப், ஆனால்  அந்த  குணா  குகையை  மையமாக வைத்து  எடுக்கப்பட்ட  மலையாளப்படம்  மெகா  ஹிட் .  கமல்  மைண்ட்  வாய்ஸ்  என்னவாக  இருக்கும் ?   என்று  க்ற்பனையைத்தட்டி  எழுப்புகிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நண்பர்கள்  கூட்டம்  ஆட்டம் , பாட்டம் , ரக்ளை  என்று  ஜாலியாக  ஒரு   திரும்ண  நிக்ழ்ச்சியில்  கலந்து  கொள்கிறார்கள் . அந்த  நிகழ்ச்சி  முடிந்ததும்  கொடைக்கானல்  டூர்  போக  பிளான்  போடுகிறார்கள் . ஒரு  ஜீப்பில்  நண்பர்கள்  10  பேர்  கொண்ட  குழு  கிளம்புகிறது 


 பழநி  மலையில்  சாமி  தரிசனம்  முடித்து  விட்டு  கொடைக்கானல்  போகும்போது  அங்கே  குணா  குகை  பார்க்கப்போகிறார்கள் .   இந்த  எல்லையை  மீறி  யாரும்  உள்ளே  போகக்கூடாது  என்ற  எச்சரிக்கையை  மீறி  ஆபத்தான  பகுதிக்குச்செல்லும்போது  ஒரு  ஆள்  மட்டும்  கால்  ஸ்லிப்  ஆகி  குழிக்குள்  அதல  பாதாளத்தில்  விழுந்து  விடுகிறான்


போலீஸ்  ,  ஃபாரஸ்ட்  ஆஃபீசர்ஸ்  எல்லோரும்  கை  விரித்து  விடுகிறார்கள் . அந்த  நண்பனை  எப்படிக்காப்பாற்றினார்கள்  என்பதுதான்  மீதி  திரைக்கதை 


நாயகியோ , காதல்  காட்சிகளோ  இல்லாமல்  ஒரு  பிரம்மாண்ட  வெற்றிப்படத்தைக்கொடுக்க  முடியும் என்று  நிரூபித்த  இயக்குநருக்கு  ஒரு  சபாஷ் 


நண்பனை  மீட்கும்  நாயகன்  ஆக  சவுபின்  சாஹிர்  பிரமாதமாக  நடித்திருக்கிறார்.  ஆபத்தில்  சிக்கிய   நண்பன்  ஆக  ஸ்ரீநாத்  பாஷி  அனுதாபத்தை  அள்ளிக்கொள்ளும்  பாத்திரத்தில்  பரிமளிக்கிறார். ,   கைதி புகழ்  மரியம்  ஜார்ஜ்  ஒரு  குணச்சித்திர  ரோலில்  வருகிறார்.  ராம்ஸ்  ஒரு  முக்கிய  ரோலில்  வருகிறார்.  நமக்குத்தெரிந்த  முகங்கள்  இந்த  நான்கு  பேர்  மட்டும்  தான் 


டெக்னிக்கள்  டீம்  மிரட்டி  இருக்கிறது . இசை   சிசின்  ஷியாம்  படம்  முழுக்க ஒரு  பதட்டத்திலேயே  அடியன்சை  வைத்திருக்க பின்னணி  இசை  பெரிதும்  உதவுகிறது . ஒளிப்பதிவாளர்  ஷைஜூ  காலிட்  கலக்கி  இருக்கிறார். குகைக்குள்  அவர்  வைக்கும்  காமரா  கோணங்கள்  பரவ்சத்தின்  உச்சியில்  நம்மை  நிறுத்துகின்றன. . விவேக்  ஹர்சன்  எடிட்டிங்கில்  படம்  2  மணி  நெரம்  7  நிமிடங்கள்  ஓடுகின்றன 


 முதல்  30  நிமிடங்கள்  மலையாளபப்டங்களுக்கே  உரித்தான்  ஸ்லோவான  காட்சிகள் , நண்பர்கள்  அறிமுகப்படலம், 31  வது  நிமிடத்தில்  தான்  கதை  ஆரம்பம்  ஆகிறது .  31வது  நிமிடத்தில்  இருந்து  அடுத்த  90  நிமிடங்கள்  பரபரப்பான  காட்சிகள் 


எது  ஒரிஜினல்  குகை ? எது  செட்டிங்  என்பதை  கண்டுபிடிக்க முடியாமல்  திணறும்  அளவுக்கு  ரசிகர்களை  கட்டிப்போட்டு  இருக்கிறார்  ஆர்ட்  டைரக்டர் .


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  சிதம்பரம்  எஸ்  பொதுவாள்


சபாஷ்  டைரக்டர்


1   நண்பர்கள்  குழு  சின்ன  வயதில்  சிறுவர்களாக  இருக்கும்போது   ஆபத்தில்  சிக்கிய  போது  காப்பாற்றப்படுவதை  நான்  லீனியர்  கட்டில்  டென்சன்  ஆன  திரைக்கதையில்  ஊடாலே  ஆங்காங்கே  ;புகுத்தி  இருப்பது  நல்ல  உத்தி 


2    தமிழர்களே  அதிகம்  பார்க்காத  குணா  படத்தின் பாடலை  ஒரு  மலையாளப்படத்தில்  டைமிங்காக  எப்படி  சேர்க்க  வெண்டும்  என்ற வித்தையை  இயக்குநர்  இறக்கி  இருக்கும்  விதம்  அபாரம் 


3    தன்  மகனைக்காப்பாற்றிய    நண்பனை  ஆரம்பத்தில்  திட்டிய  அம்மா  டி  வி  நியூஸில் , பேப்பர்  கட்டிங்க்  நியூசில்  ஃபோட்டோ  பார்த்து  கிளைமாக்சில்  நன்றி  தெரிவிக்கும்  காட்சி  நல்ல  எமோஷனல்  சீக்வன்ஸ் 


4  நண்பன்  ஒருவன்  பள்ளத்தில்  விழுந்து  விட்டான்  என்றதும்  திக் பிரமை  அடைந்து  பித்துப்பிடித்தவன்  போல்  ஆகும்  ஒருவன்   மீட்புப்படலத்தின்  போது  கயிறு  ஒரு  பாறை  இடுக்கில்  சிக்கிக்கொள்ளும்போது  அங்கே  வந்து  பள்ளத்தைப்பார்ப்பவனைப்பார்த்து  தற்கொலை  செய்யவோ  அல்லது  குதிக்கவோ  போகிறான்  என  எல்லோரும்  பயத்துடன்  பார்க்க  “ லூஸ்  அடிக்குடா”  என்று  ஐடியா  கொடுத்து  காப்பாற்றும்  காட்சி  தியேட்டரில் ஆரவாரக்கூச்சலை  எழுப்பிய  அட்டகாசமான காட்சி 


5 க்ளைமாக்சில்  நண்பர்கள்  குழு  கயிறை  இழுத்துக்காப்பாற்றும்  காட்சியை  நம்பகத்தன்மையை  அதிகப்படுத்த  ஓப்பனிங்  சீனில்  கயிறு  இழுக்கும்  போட்டியில் அவர்கள்  கலந்து  கொள்வதாகக்காட்டி  இருப்பது  நல்ல  டெக்னிக்


  ரசித்த  வசனங்கள் 


1   காசு  கொடுத்தா  என்ன  வேணா  செய்ய்  இந்த  ஊர்ல  ஆள் இருக்காங்க, ஆனா  மனுச  உயிர்  முக்கியம்  இல்லையா? 


2  உண்டியல்ல  போட்ட  காசு  மாதிரி  அவன்  குழில  விழுந்திருக்கான்


3   அவனை  ஏன்  சார்  பயமுறுத்தறீங்க ? குழில  விழுந்தவனைக்காப்பாற்றுவது  உங்களைப்பொறுத்தவரை  வேலை ,ஆனா அவனுக்கு  அப்படி இல்லை


4   சாவைப்பார்த்துட்டுத்திரும்பி  வந்திருக்கும்  நீ கடவுள்     மாதிரி , சாமி.. கும்பிட்டுக்குங்க  எல்லாரும் 


5  போலீஸ்  பணம்  பிடுங்க தான்  பார்ப்பாங்க

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  குணா  குகைக்குள்  ஒருவன்  விழுந்து  விட்டான் என்ற  தகவல்  கிடைத்ததும்மீட்புப்படையினர்  130  மீட்டர்  நீளம்  உள்ள  கயிறூ  தான்  கொண்டு  வருகிறார்கள் .  ஆனால்  டி வி  செய்தியில்  900  அடி  ஆழம்  உள்ள  குழியில்  விழுந்த  ஆள்  என  தகவல்  சொல்கிறார்கள் 


2  ஆக்சிஜன்  மாஸ்க்  இல்லாமல் , பயிற்சி  பெறாத  சாமான்யன்  குழிக்குள்  இறங்குவது  ரிஸ்க் . நண்பனுக்காக  என  செண்ட்டிமெண்ட்  ஆக  சீன்  வைத்தாலும்  பிராக்டிக்கலாக  ஓவர்  ரிஸ்க்  அது 


3  மழைத்தண்ணிர்  குழியில்  விழாமல்  தடுக்கிறோம்  என  நண்பர்கள்  பாதையில்  படுப்பதும் , பின்  மழைத்தண்ணீர்  குழியில்  விழுந்ததால்  ஆக்சிஜன்  லெவல்    போதுமான  அளவில் இருக்கும்  எனவும்  முரண் பட்ட  இரு  வேறு  தகவலகள்   குழப்புகின்றன 


4   ஆபத்தில்  இருந்து  மீண்ட  நண்பனை  எல்லாரும்  கொண்டாடுகிறார்கள் , ஆனால்  காப்பாற்றிய  நண்பனுக்கு  போதுமான  பாராட்டு  கிடைக்கவில்லை . அதை  சரியாகக்காட்சிப்படுத்த  வில்லை . ஒரு  வேளை  காப்பாற்றப்பட்ட  நபர்ன்  அம்மா  நாயகனுக்கு  நன்றி  சொல்லும்  காட்சி  வீரியமாக  இருக்க வேண்டும்  என்று  நினைத்திருக்கலாம் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கேரலாவில்  மட்டும்  இல்லாமல் இந்தியா  முழுக்க  குறிப்பாக  தென்  மாநிலங்களில்  மக்கள்  கொண்டாடித்தீர்க்கும்  படம்  இது , டோண்ட்  மிஸ்  இட் . இது  ஓடிடி  யில்  பார்ப்பதை  விட  தியேட்டரில்  மக்களின்  ஆரவாரங்களுக்கு  இடையே  பார்ப்பது  நல்லது . ரேட்டிங்  3 / 5   


Manjummel Boys
Theatrical release poster
Directed byChidambaram S Poduval
Written byChidambaram S Poduval
Produced bySoubin Shahir
Babu Shahir
Shawn Antony
StarringSoubin Shahir
Sreenath Bhasi
Balu Varghese
Ganapathi S. Poduval
Lal Jr.
Deepak Parambol
Abhiram Radhakrishnan
Arun Kurian
Khalid Rahman
Chandu Salimkumar
Vishnu Reghu
CinematographyShyju Khalid
Edited byVivek Harshan
Music bySushin Shyam
Production
company
Parava Films
Distributed bySree Gokulam Movies through Dream Big Films
Release date
  • 22 February 2024
CountryIndia
LanguageMalayalam
Box office75crore[1]

0 comments: