லாஸ் ஏஞ்சலில்நடைபெற்ற திரைப்பட விழாவில் விருது பெற்ற படம் இது 2023லேயே பல திரைபட விழாக்களில் பங்கெடுத்தாலும் தியேட்டர்களில் 5/1/2024 ல் தான் ரிலீஸ் ஆனது .பாசிட்டிவ் விமர்சனங்களைப்பெற்று கமர்ஷியல் ஆகவும் ஹிட் ஆனது
1957ல் ரிலீஸ் ஆன ஹாலிவுட் படமான 12 ஆங்க்ரிமென் என்ற படத்தின் சாயலில் வந்திருக்கும் இப்படத்தின் இயக்குநருக்கு இது முதல் படம், ஆனால் அறிமுக இயக்குநர் என்ற தடுமாற்றமே இல்லாமல் திரைக்கதை , கேரக்டர் டிசைன் , க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் என எல்லாவற்றையும் பிரமாதமாக அமைத்து ஒரு படத்துக்கு ஹீரோ முக்கியம் இல்லை , திரைக்கதை ஆசிரியர் தான் முக்கியம் என்பதை நிரூபித்திருக்கும் இன்னும் ஒரு படம் இது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு நாடக நடிகை . அந்த நாடகக்குழுவில் அவரோடு சேர்த்து 12 பேர் இருக்கிறார்கள் .நாயகி அந்த நாடகக்குழுவில் உள்ள ஒருவனைக்காதலிக்கிறாள் . இருவரும் கடந்த ஒரு வருடமாக லிவ்விங் ரிலேசன்ஷிப்பில் திருமணம் ஆகாமல் இணைந்து வாழ்கிறார்கள் . இந்த இருவரது இந்த உறவு நாடகக்குழுவில் இருக்கும் மற்றவர்களுக்குத்தெரியாது
நாடகத்தில் நாயகி படத்தின் நாயகி தான் . ஆனால் அவருக்கு ஜோடியாக நாயகனாக நாடகத்தில் நடிப்பது படத்தின் நாயகன் அல்ல. படத்தின் வில்லன். கொஞ்சம் குழப்பமா இருக்குதா? அதாவது நாயகியின் காதலனுக்கு நாடகத்தில் நாயகன் ஆக நடிக்க ஆசை , ஆனால் அந்த வாய்ப்பு அவனுக்குக்கிடைக்கவில்லை . வேறு ஒருவன் தான் நாடகத்தின் நாயகன்
இப்படி இருக்கும்போது ஒரு முறை நாடகம் நடந்து முடிந்த பின் ஒரு ஃபாரீன் ஜோடி அந்த நாடகக்குழுவுக்கு பார்ட்டி வைக்கிறார்கள் . ஒரு இரவில் பார்ட்டி . பார்ட்டி முடிந்ததும் எல்லோரும் அங்கேயே தங்கி விட்டுக்காலையில் அவரவர் வீட்டுக்கு செல்வதாக பிளான்
நாயகி அந்த பார்ட்டியில் சரக்கு அடிக்கிறாள் . குழுவினருடன் ஜாலியாக சிரித்துப்பேசுகிறாள் .அன்று இரவு நாயகிக்கு ஒதுக்கப்பட்ட அறையில் படுத்து உறங்குகிறாள் . அறைக்கதவு மூடப்பட்டு இருக்கிறது. ஜன்னல் திறந்து இருக்கிறது . யாரோ ஒரு நபர் நாயகியின் மார்பை இரவு 2.30 மணிக்கு அழுத்தி விட்டு ஓடி விடுகிறான் . அது படத்தின் வில்லனும் நாடகத்தில் நாயகனாக நடிப்பவனும் ஆன ஆள் தான் என நாயகி சந்தேகிக்கிறாள் . காரணம் வில்லன் ரெகுலராக அடிக்கும் செண்ட் வாசம் தான் சாட்சி . நாயகி நேருக்கு நேர் அந்த ஆளைப்பார்க்கவில்லை
அடுத்த நாள் காலை நாயகி யாரிடமும் எதுவும் சொல்லாமல் கிளம்பி விடுகிறாள் . ஒரு வாரம் கழித்து நாயகி தன் காதலனிடம் இந்த விஷயத்தை சொல்கிறாள்
நாயகியின் காதலன் நாடகக்குழுவிடம் இந்த விஷயத்தை சொல்லுகிறான். எல்லோரும் கூடி ஒரு முடிவு எடுக்கிறார்கள் . நாடகத்தில் நாயகன் ஆக நடிப்பவனை குழுவை விட்டு தள்ளி வைப்பது என முடிவு ஆகிறது .இந்த முடிவு எடுக்கும்போது வில்லன் அங்கே இல்லை .
திடீர் என நாடகத்தில் நாயகனாக நடிப்பவன் நாடகக்குழு தலைவர் வீட்டுக்கு வந்து அந்த பார்ட்டி கொடுத்த ஃபாரீன் ஜோடி ஸ்பான்சரில் நம் குழுவுக்கு 90 நாட்கள் ஃபாரீன் டூர் மற்றும் நாடக ஷோ நடத்த வாய்ப்பு என்று சொல்கிறான்
அந்த ஆஃபர் மூலம் குழுவில் இருக்கும் அனைவருக்கும் ஆளுக்கு ரூ 12 லட்சம் பணமும் 90 நாட்கள் ஃபாரீன் ட்ரிப் யோகமும் கிடைக்கும்
இப்போது குழுவின் மனதில் குழப்பம் , நாயகிக்கு நடந்த அக்கிரமத்துக்கு தண்டனையாக வில்லனை நாடகக்குழுவை விட்டு விலக்குவதா? அல்லது நாயகியிடம் மன்னிப்புக்கேட்க வைத்து குழுவில் அனைவரும் ஃபாரீன் போவதா?
இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகி ஆக ஜரீன் சிஹாப் பிரமாதமாக நடித்திருக்கிறார். தான் தண்ணி அடிப்பதை , கிளாமர் ஆக டிரஸ் பண்ணுவதை குழுவில் இருப்பவர்களே விமர்சிக்கும்போது சீறி எழுகையில் புலி மாதிரி கர்ஜிக்கிறார். தன் காதலனே சுயநலமாக நடந்து கொள்வதைப்பார்த்து மனம் வெதும்பும்போது கண் கலங்க வைக்கிறார். குழுவின் மீட்டிங்கில் ஆளாளுக்கு கேட்கும் கேள்விகளை லெஃப்ட் ஹேண்டில் டீல் பண்ணும் காட்சிகள் அபாரம்
நாயகியின் காதலன் ஆக படத்தின் நாயகன் ஆக வினய் ஃபோர்ட் அனாயசமாக நடித்திருக்கிரார். சில இடங்களில் அவர் டென்சன் ஆகும்போது நமக்கும் பி பி ஏறுவது அவரது கேரக்டர் டிசைனுக்குக்கிடைத்த வெற்றி
நாடகத்தின் நாயகன் ஆக படத்தின் வில்லன் ஆக கலாபவன் ஷாஜன் கலக்கி இருக்கிறார்.மொத்தப்படத்தில் அவர் வரும் காட்சிகள் அரை மணி நேரம் தான் , ஆனால் அட்டகாசமான நடிப்பு
மீதி அனைத்துக்கதாபாத்திரங்களும் புது முகங்கள் என்றாலும் கச்சிதமான நடிப்பு .
மகேஷ் புவனேந்த் தான் எடிட்டிங்க்.139 நிமிடங்கள் ஓடும்படி ட்ரிம் பண்ணி இருக்கிறார். முதல் 18 நிமிடங்கள் ஸ்லோவாகச்செல்லும் திரைக்கதை பிறகு நெருப்பு மாதிரி பற்றிக்கொள்கிறது
அனுரூத் அனீஸ் தான் ஒளிப்பதிவு. மொத்தப்படமும் ஒரே ஒரு வீட்டின் அறையில் என்பதால் சவாலான வேலை .மாறுபட்ட கோணங்களில் ஒரே வீட்டை அதே ஆட்களை சலிப்பு இல்லாமல் காட்சிப்படுத்த வேண்டும் .
சி ஜே பசீலின் பின்னணி இசை அருமை
திரைக்கதை அமைத்து இயக்கி இருப்பவர் ஆனந்த் ஏகர்ஷி
சபாஷ் டைரக்டர்
1 நாயகன் வாய்ப்புக்காக நாயகன் தான் வில்லன் அணியும் உடைகளை அணிந்து வில்லனின் செண்ட் போட்டு வந்து அப்படி செய்து அவனுக்குக்கெட்ட பேரை உண்டாக்கி குழுவை விட்டு அகற்ற வைத்து தான் நாயகன் ஆகி விடலாம் என நினைக்கிறானோ என எண்ண வைக்கும் காட்சிகள் அபாரம்
2 அதே போல் நாயகி தன் காதலனுக்கு நாயகன் சான்ஸ் வர இப்படி வில்லன் மீது பழி போட்டு டிராமா பண்ணுகிறாளோ என எண்ண வைத்ததும் நல்ல உத்தி
3 வில்லன் சொல்லும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் உண்மை யாரும் எதிர்பாராதது
4 இன்னொரு க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஆக இயக்குநர் வைத்திருக்க்கும் காட்சி சித்ரா லட்சுமணனின் சினிமாவுக்குள் ஒரு சினிமா டைட்டிலையும், விண்னைத்தாண்டி வருவாயா? க்ளைமாக்ஸ் சீனையும் நினைவு படுத்தியது
ரசித்த வசனங்கள்
1 அசைவம் சாப்பிடுபவர்களுக்கு உடல் வெப்பம் அதிகமாக இருக்கும், அதனால் கொசுக்கள் அவர்களை அதிகமாகக்கடிக்கும்
2 அஸ்கா சர்க்கரையை தவிர்த்தாலே ரெண்டே மாசத்துல தொப்பை குறையும்
3 ஆண்களுக்கு சமமா ஒரு பெண் அவங்க கூட சேர்ந்து தண்ணி அடிச்சா அவன் மனசில் தப்பான எண்ணம் வரத்தானே செய்யும் ?
ஓஹோ, அப்போ ஒரு தப்பு நடந்தா அதுக்கு பெண் அணிந்திருக்கும் உடையும் அவ சரக்கு அடிப்பதும் ஒரு முக்கிய காரணம் ? ஆண் செய்தது தப்பில்லை ?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 க்ளைமாக்ஸ் காட்சியில் அவ்வளவு சீரியசான விஷயம் பேசிக்கொண்டிருக்கும்போது நாயகி வாய் விட்டு மீண்டும் மீண்டும் சிரிப்பது படு செயற்கை .கே பாலச்சந்தர் படங்களிலும் , கமல் படங்களிலும் இந்த மாதிரி ஓவர் ஆக்டிங் இருக்கும்
2 ஒரு நாடகக்குழுவில் 12 பேர் ஒன்றாக இருக்கும்போது நாயகி தன் காதலனுடன் அவ்வப்போது நெருக்கமாக இருந்தும் குழுவில் இருக்கும் யாருக்குமே ஒரு வருடமாக விஷயம் தெரியாது என்பது நம்பும்படி இல்லை .ஒரு சின்ன பார்வை போதும் நம்ம ஆளுங்க கண்டு பிடிச்சிடுவாங்க
3 ஆல்ரெடி மேரேஜ் ஆகி டைவர்ஸ்க்காக காத்திருக்கும் நாயகன் டைவர்ஸ் கிடைக்கும் முன்பே இப்படி ரகசிய உறவில் இருப்பது சட்டப்படி தவறு
4 படத்தின் வில்லன் நாடகத்தில் நாயகன் . நாயகி கூட நெருக்கமான காதல் காட்சிகளில் நடிப்பவன், அவனுக்கு நாயகியிடம் அப்படி மிஸ்பிகேவ் பண்ண தேவையே இல்லை . அது நம்பும்படி இல்லை
5 முக்கிய திருப்பம் ஆக வரும் ஒரு காட்சியில் ஒரு ஆள் தன் மனைவியுடன் வீடியோ கால் பேசியதாக சொல்கிறான். பின் எதற்காக அந்த ஸ்க்ரீன் ஷாட் எடுத்தான் ?மனைவியிடம் காட்ட என்கிறான். வீடியோ காலிலெயே பேக் கிரவுண்ட் பார்க்கலாமே?
6 இந்தக்காலத்தில் திருவிழாக்கூட்டங்களில் ,பஸ் நெரிசலான இடத்தில் பெண்களை ஆண்கள் தவறாக கையாள்வது கண்கூடாகப்பார்க்கிறோம் , அப்படி இருக்கும்போது மிட் நைட் 2.30 மணிக்கு வில்லன் அப்படி ஒரு ரிஸ்க் ஆன செயலை செய்ய முயல்வது தேவை இல்லாதது . சிசிடிவி கேமரா காட்டிக்கொடுக்கும் ரிஸ்க் இருப்பதால் யோசிப்பான் . நாடக ரிகர்சல் நடக்கும்போது கூட தெரியாமல் அப்படி செய்து விட்டேன் என சமாளிக்க வாய்ப்பு இருக்கு . அதை எல்லாம் விட்டு விட்டு இப்படி ஒரு ரிஸ்க் எடுப்பானா? என்பது கேள்விக்குறி தான்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ. ஆனா லிப் லாக் காட்சிகள் இரண்டு முறை வருகிறது .படத்தின் மையக்கருவான நாயகியிடம் வில்லன் மிஸ்பிகேவ் செய்யும் காட்சி வசனமாகத்தான் சொல்லப்படுகிறது . காட்சியாக இல்லை
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மாறுபட்ட திரைக்கதை உள்ள படம் , படம் பூரா பேசிட்டே இருப்பாங்க ., சிலருக்கு அது பிடிக்காமல் போகலாம் . மற்றபடி பெண்களும் ரசித்துப்பார்க்க ஒரு நல்ல படம் , ரேட்டிங் 3.5 / 5
Aattam | |
---|---|
Directed by | Anand Ekarshi |
Written by | Anand Ekarshi |
Produced by | Dr. Ajith Joy |
Starring |
|
Cinematography | Anurudh Aneesh |
Edited by | Mahesh Bhuvanend |
Music by | Basil C J |
Production company | Joy Movie Productions |
Release date |
|
Running time | 139 minutes |
Country | India |
Language | Malayalam |
0 comments:
Post a Comment