2021 ல் டிக்கிலோனா என்ற சயின்ஸ் ஃபிக்சன் காமெடி டிராமா படம் எடுத்த இயக்குநர் கார்த்திக் யோகி எடுத்த அடுத்த காமெடிப்படம் தான் இது.
சந்தானம் ஒரு கால கட்டத்தில் காமெடி டிராக்கில் கலக்கி ஒரு நாள் சம்பளம் ரூ 10 லட்சம் என பட்டையைக்கிளப்பிக்கொண்டு இருந்தார் .அவர் மனசுக்குள் ஹீரோ ஆசை வந்ததுமே அவரது காமெடி முத்திரை காணாமல் போய் விட்டது . அவர் நாயகனாக நடித்த பல படங்கள் சுமார் ரகம் , வெகு சுமார் ரகம் தான்/ ஹிட் ஆன படங்கள் பட்டியல் பார்த்தால் தில்லுக்கு துட்டு பாகம் 1 பாகம் 2 ஆகிய இரு படங்கள் தான்.
இந்தப்படத்தில் முதல் பாதி மொக்கைக்காமெடி ஆகவும் பின் பாதியில் கடைசி அரை மணி நேரம் கலக்கலான காமெடிப்படம் ஆகவும் வந்திருக்கிரது . 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் கமர்ஷியல் ஆக ஹிட் தான்
ஸ்பாய்லர் அலெர்ட்
கதை நடக்கும் கால கட்டம் 1974 .கதைக்களம் வட தமிழகத்தில் உள்ள ஒரு கிராமம்- வடக்குப்பட்டி
நாயகன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் .அவரது நிலத்தில் கோயில்கட்டி மக்களின் மூட நம்பிக்கையைப்பயன்படுத்தி சம்பாதித்து வருபவர் . ஊருக்கு ;புதுசாக வரும் தாசில் தாரர் கோயில் நிலத்தை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாம் என ஐடியா கொடுக்கிறார். அதில் தனக்கு கமிஷனும் வேண்டும் என்கிறார். இதற்கு நாயகன் உடன் படாததால் தாசில் தார் சதித்திட்டம் போட்டு கோயிலை மூட வைக்கிறார்
நாயகன் நகரில் மெட்ராஸ் ஐ என்னும் வியாதி பரவுவதைக்கண்டு கோயில் பூசாரியை நகரத்துக்கு அழைத்துப்போய் மெட்ராஸ் ஐ நோயை அவருக்கு ஒட்ட வைத்து அவரை கிராமத்துக்கு அழைத்து வந்து ஊர் மக்களுக்கு பரப்புகிறார். அப்பாவி ஜனங்கள் அதை கண்ணாத்தாவின் கோபம் என நினைத்து கோயிலைத்திறக்க முன் வருகின்றனர் , இதற்குப்பின் நிகழும் காமெடி களேபரங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக சந்தானம்.காமெடியனாக நடிக்கும்போது அவர் முகத்தில் எகத்தாளம் தாண்டவம் ஆடும். ஆனால் ஹீரோ ஆன பின் தன்னை அறிவு ஜீவியாக , பர்சனாலிட்டி உள்ளவராகக்காட்டிக்கொள்ள அவர் படாத பாடு படுவதால் வழக்கமான தமிழ் சினிமா ஹீரோ மாதிரி பத்தோடு பதினொன்று ஆகிறார். சில இடங்களில் அவரது ஒன் லைனர்கள் ஒர்க் அவுட் ஆகின்றன
க்ளைமாக்சில் வந்தாலும் மொட்டை ராஜேந்திரன் கலக்கல் காமெடி . கண்ணி வெடி காமெடி யில் பின்னி எடுத்து விட்டார் . சிறிது நேரமே வந்தாலும் படம் ம்ழுக்க வரும் ஹீரோவை ஈசியாக ஓவர் டேக் செய்கிறார்
லொள்ளு சபா மாறன் மிக்த்திறமையான ரைட்டர். அவர் திறமைக்கு அடைந்திருக்க வேண்டிய உயரம் அதிகம், ஆனால் அடைந்த உயரம் கு\றைவுதான்.இதில் அவரது ரசிகர்களை கை தட்ட வைக்கிறார்
ஜான் விஜய் , ரவி மரியா இருவரின் காம்பினேஷன் காட்சிகள் மொக்கைக்காமெடி ரகம் என்றாலும் ரசிக்க முடிகிறது. இவர்களின் வாரிசுகள் காதலர்கள் என்பதும் அதை வைத்து கிளைக்காமெடி டிராக் ஓட்டுவதும் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதவை
மன நிலை பாதிக்கப்பட்ட ராணுவ மேஜர் ஆக நிழல்கள் ரவி எதிர்பாராத இன்ப அதிர்ச்சி . அந்தக்காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது
இவர்கள் போக லொள்ளு சபா சேஷூ , எம் எஸ் பாஸ்கர் உட்பட ஏராளமான நட்சத்திரப்பட்டாளங்கள் உண்டு. எல்லோரும் அவரவ்ர் வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்
நாயகி ஆக மேகா ஆகாஷ் சும்மா வந்து போகிறார். அதிக வாய்ப்பில்லை
சிவாநந்தீஸ்வரரின் எடிட்டிங்கில் படம் 140 நிமிடங்கள் ஓடுகின்றன . கடைசி 30 நிமிடங்கள் அசத்தல் காமெடி
தீபக்கின் ஒளிப்பதிவு கச்சிதம் விக்னேஷ் பாபு , விக்னேஷ் வேணுகோபால் இருவரும் திரைக்கதை எழுதி இருக்கிறார்கள்
சீன் ரோல்டன் இசை அமைத்து இருக்கிறார்.பாடல்கள் சுமார் ரகம், பின்னணி இசை குட்
சபாஷ் டைரக்டர்
1 மதர்லேண்ட் பிக்சர்ஸ் வழங்கும் கோவைத்தம்பியின் உதயகீதம் (1985) படத்தில் வரும் கவுண்டமணி காமெடி டிராக்கில் உள்ள சின்ன கான்செப்ட்டை வைத்து டெவலப் செய்து திரைக்கதை எழுதிய விதம் அருமை
2 கடைசி 30 நிமிடங்கள் காமெடி சரவெடி
3 மொட்டை ராஜேந்திரனின் கண்ணி வெடிக்காமெடி கலக்கல் ரகம்
ரசித்த வசனங்கள்
1 சாமி விஷயத்துல காசு கணக்குப்பார்க்கக்கூடாது
காசு இருந்தாதான் சாமியையே பக்கத்துல போய் பார்க்க முடியும்
2 காலாகாலத்துல அவனுக்கு ஒரு கால் கட்டு போடனும்
அவனைக்கட்டிக்கப்போறவளுக்கு நாடிக்கட்டு நீ போடுவியா?
3 இவனா மாப்ளை ? ஊர்ல பாதிக்கிழவிங்க ஜாக்கெட் போடக்காரணமே இவன் தான் , ஐ மீன் அவங்களுக்கு ஜாக்கெட் பிட் எடுத்துத்தந்தவன்னு சொல்ல வந்தேன்
4 பொண்ணு நீ குடுத்த பூவை தூக்கி எறிஞ்சுட்டுப்போகுது ? நீ சிரிக்கறே?
இதுக்கு முன்னால இதே பொண்ணு செருப்பு , துடைப்பக்கட்டை எல்லாம் தூக்கிப்போட்டிருக்கு , அப்பவே இவன் சிரிச்சுட்டுதான் இருந்தான்
5 இவனாவது இந்த ஜென்மத்துல தான் பைத்தியமா இருக்கான், அவன் போன ஜென்மத்துலயே பைத்தியம் தான்
6 பீடி குடிச்சா உதடு கறுக்கும், ஓவரா சரக்கு அடிச்சா கண் சிவக்கும்
7 அவன் பாலிடாயில் குடிச்சுட்டான்
மெட்ராஸ் ஐன்னு சொன்னியே?
அதுக்கு பயந்து இதைக்குடிச்சுட்டான்
8 இப்படி நாறுதே? பசுவோடதா?
பசுபதியோடது
9 இந்த க்ளோப் ல ( உலக உருண்டை) இந்தியாவைக்காணோமே?
அடேய் , அது பேப்பர் வெயிட்டுடா
10 அடிச்சுப்போட்ட மாதிரி தூங்கறியே?
என்னைக்கு சரக்கு அடிச்சே?
11 ஆத்தா , என் ஊனக்கண்ணை மூடின பின் ஞானக்கண்ணை திறந்துட்டேன்
12 மாசுபட்ட இந்த உலகத்தை காசுபோட்ட ஆள் தான் காப்பாத்தனும்
13 ஒரு ரூபாய்க்கே இவ்ளோ நடிக்கறியே? ஐம்பது பைசா தந்திருந்தா?
14 பாம்பும் , கீரியும் மாதிரி அடிச்சுக்கிட்டு இருந்தவங்க இப்போ பூரியும் ,கிழங்கும் மாதிரி .....
ஓக்கே இதுல பூரி யாரு ? கிழங்கு யாரு ?
15 நான் சொன்ன அவன் இவன் இல்லை
ஆமா, இவன் தான் அவன்னு நினைச்சுட்டோம்
நீங்க சொன்ன அவனை விட நாங்க காரியத்தைக்கச்சிதமா முடிச்சுடுவோம்
ஓ, என்ன காரியம் ?
அது தெரியாது
16 எவன் ஒருத்தன் தன்னைப்பற்றிப்பெருமையாப்பேசிக்கறானோ அவன் வேலைக்கு ஆக மாட்டான்
17 சரக்கு தேன் மாதிரி இருக்கே?
தேன் கூட்டில் இருந்து எடுத்தது
18 உன் கண்ல பயம் தெரியலையே?
கண் பார்வையே தெரியல , இதுல பயம் எப்படித்தெரியும் ?
19 காமெடி பண்றதுக்கே கடப்பால இருந்து வந்தவன் மாதிரி ஒரு மூஞ்சி
20 அந்த ஆட்டம் ?
பித்தலாட்டம் தான்
21 கிரானைட் இருக்கா?
சயனைட் வேணா இருக்கு , சாப்புட்டு செத்துப்போயிடறியா?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் ஏன் நாத்திகவாதி என்பதற்கான காரணங்கள் அழுத்தமாக இல்லை
2 நிழல்கள் ரவி ஏன் அந்த கிராமத்திற்கு வருகிறார் என்ற விளக்கம் இல்லை
3 ஜான் விஜய் - ரவி மரியா வாரிசுகள் லவ் போர்சன் மெயின் கதைக்கு தேவை இல்லாதவை
4 ஒரு கிராமத்தில் எல்லோருமே முட்டாள்களாக இருப்பார்களா? வெளியூர் அல்லது நகரம் போய் வந்தவர் யாரும் இல்லையா? மெட்ராஸ் ஐ பற்றி யாருக்குமே தெரியாமல் போகுமா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - கடைசி அரை மணி நேரக்காமெடிக்காட்சிகளுக்காக அவசியம் பார்க்கலாம் , ரேட்டிங் - 2.75 / 5
Vadakkupatti Ramasamy | |
---|---|
Directed by | Karthik Yogi |
Written by | Karthik Yogi |
Screenplay by | Vignesh Babu Vignesh Venugopal (Additional Screenplay) |
Produced by | T. G. Vishwa Prasad Vivek Kuchibotla |
Starring | Santhanam Megha Akash |
Cinematography | Deepak |
Edited by | T. Shivanandeeswaran |
Music by | Sean Roldan |
Production company | People Media Factory |
Distributed by | Red Giant Movies Trident Arts Romeo Pictures |
Release date |
|
Running time | 140 minutes |
Country | India |
Language | Tamil |
Budget | ₹12 crore |
0 comments:
Post a Comment