ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனின் அப்பா ஒரு சேட்டு கிட்டே கணக்குப்பிள்ளையா வேலை பார்த்தவர். அந்த சேட்டு கிட்டே அடியாட்களா இருந்த 3 ரவுடிகள் சேட்டையே போட்டுத்தள்ளிட்டு கொலைப்பழியை நாயகனின் அப்பா மேல் போட்டு மாட்டி விட்டுட்டு அவங்க மூன்று பேரும் கடத்தல் தொழிலை செய்றாங்க . நாயகன் அந்த மூன்று பேரையும் எப்படிப்பழி வாங்கினான் என்பதுதான் மீதிக்கதை
நாயகன் ஆக சதீஷ்.காமெடியன்கள் நாயகன் ஆக வரும்போது சந்திக்கும் அதே பிரச்சனை சதீஷ்க்கும் ஏற்பட்டிருக்கிறது. காமெடி வரவில்லை , அல்லது ஒர்க் அவுட் ஆகவில்லை
நாயகி ஆக சிம்ரன் குப்தா ஓபனிங் எல்லாம் செம பில்டப்ப்பாக வந்து பின் காணாமல் போகிறார். டூயட் ஏதும் இல்லை
வில்லன்கள் ஆக ஆனந்த்ராஜ் , மது சூதனன் , சுபரமணியம் சிவா மூவரில் முதலாமவர் மட்டும் பாஸ் மார்க் வாங்குகிறார்
விபிஆர் இசையில் இரண்டு பாடல்கள் குட் . பிஜிஎம் பரவாயில்லை ரகம் .யுவா கார்த்திக் ஒளிப்பதிவு , ஓக்கே ரகம்
எடிட்டர் படத்தை இரண்டு மணி நேரம் நான்கு நிமிடங்கள் வருமாறு ட்ரிம் பண்ணி இருக்கிறார், ஆனால் படம் மூன்று மணி நேரம் ஓடுவது போல இழுக்கிறது
சபாஷ் டைரக்டர்
1 நாயகன் வேனில் வரும் ஏ டி எம் கேஷ் பாக்சை கொள்ளை அடிக்கும் காட்சி புத்திசாலித்தனமாக படமாக்கபப்டிருந்தது
2 மூடிய அறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தம்பதியினர் கொலை செய்யப்ப்ட்டிருப்பார்கள் என நாயகன் விளக்கும் விதம் குட்
3 நாயகன் பிஜிஎம் ஒலிக்க ஸ்லோமோஷனில் நடந்து வருவதைப்பார்த்த ஆனந்த ராஜ் அந்த ரெண்டையும் கட் பண்ணுண்ங்கடா என சொல்லி விட்டு பின் அடடா, பார்க்கவே பாவமா இருக்கு , போட்டு விடுங்கடா என கலாய்க்கும் காட்சி
4 டான்ஸ் சீக்வன்சில் வரும் டான்ஸ் மாஸ்டர் ஆன ஜப்பான் குமார் ஓவர் ஆக்டிங் என்றாலும் ரசிக்க முடிகிறது ,அதே போல் ஆனந்த ராஜ் காமெடியும் எடுபடுது
5 ஓப்பனிங் சீனில் நாயகி மெட்ரோ ட்ரெய்னில் மர்ம ஆசாமியைக்கண்டு பிடிக்கும் காட்சி
6 லை டிடெக்டிங் மிஷினை வைத்து ஆனந்த்ராஜ் செய்யும் கலாட்டா காமெடிகள் குட்
சாங்க்ஸ்
1 பட பட
2 முத்துக்கள் வாங்கப்போனேன் , முற்றத்தில் தயங்கி நின்றேன்
ரசித்த வசனங்கள்
1 மேஜிக்னா ஏமாற்றுவது
2 உலகத்துலயே நாம ஏமாற்றப்படுகிறோம் என்பது தெரிந்தும் அதுக்கும் சிரித்துக்காசு தருவது மேஜிக்மேனுக்கு மட்டும் தான்
3 ஏமாறுவதுதான் தப்பு , ஏமாற்றுவது தப்பில்லை
4 இந்தக்கடத்தல் வேலையை செஞ்சா நமக்கு இவ்ளோ லாபம் கிடைக்கும், கிடைக்கும் லாபத்துல ஆளுக்கு 50; 50 ஓக்கே?
இதுல உனக்கு என்ன லாபம்?
அவன் தான் ஃபிஃப்டி ஃபிஃப்டி லாபம்கறானே? அந்த ஃபிஃப்டி தான் லாபம்
அதில்லை , முழுசா லாபத்தை அவனே எடுத்துக்காம நம்மை ஏன் கூட்டு சேர்த்தறான் ?
5 மேடம், ஆட்டோ வேணுமா?
ஃபோர்த் ஃப்ளோர் தான் , லிஃப்ட்லயே போய்டுவேன்
6 என்னை எப்படிக்கண்டு பிடிச்சீங்க?
இந்த உலகத்துல நல்லவங்களைக்கண்டு பிடிக்கறதுதான் கஷ்டம், திருட்டுப்பசங்களைகக்ண்டு பிடிப்பது ஈசி
7 அவன் வர மாட்டான்
அப்போ நான் கிளம்பறேன்
ஐ மீன் ,அவன் வர மாட்டான் , வந்தா வேலையை முடிக்காம போக மாட்டான்
8பிளான் சி யை நான் சொல்றேன்
சரி சொல்லு
பிளான் சி
8 இங்கே இருக்கும் யார் பொண்டாட்டிகூடவாவது டை அப் வெச்சிருக்கீங்களா?
எனக்குன்னு ஒரு டேஸ்ட் இருக்கு
9 அண்ணே , பசங்களை ரெடியா இருக்கச்சொல்லட்டுமா?
எதுக்கு ?
ஏர்போர்ட்ல சமோசா நல்லாருக்கும்
10 வில்லன்கனுங்க கை தட்றது 1980லயே காலாவதி ஆகிடுச்சு , நீ இன்னும் அதைப்பண்ணிட்டு இருக்கே?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயக்னுக்கு தலைல அடிபட்டிருக்கு , பழசெல்லாம் மறந்தாச்சுனு சொல்ராங்க, ஆனா நாயகன் கழுத்துல தான் கட்டுப்போட்டிருக்கார் .நாயகனே எனக்கு தலைல அடிபட்டுதுனு சொல்லும்போதும் கழுத்துக்கடைத்தான் தொட்டுக்காட்றார்
2 ஏர்போர்ட் ஆஃபீசருக்கு அங்கே ஸ்வீப்பர் ஆக ஒர்க் பண்றவரைத்தெரியாதா? ஆள்மாறாட்டத்தைக்கண்டு பிடிக்கவில்லையே?
3 ஏர்போர்ட்டில் க்ளைமாக்ஸ் சீனில் நாயகி நடிப்பு ஓவர் ஆக்டிங்
4 நாயகன் ஒரு மேஜிக் மேன் என சொல்றாங்க, ஆனா ஒரு சீன்ல கூட அப்படி ஒரு சீனே இல்லை ( க்ளைமாக்ஸ் ல போனாப்போகுதுனு ஒரு சீன்
5 காமெடியன் ஆன சதீஷ் ப்டம் முழுக்க ஒரு சீன் கூட காம்டி பண்ணவில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மொக்கைக்காமெடி ரசிகர்கள் டி வி யில் போட்டால் பாதி பார்க்கலாம், ரேட்டிங் 1.75 / 5
0 comments:
Post a Comment