2011 ல் ஜீவா நடிப்பில் வெளியான ரவுத்திரம் தான் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் வந்த முதல் படம் பரபரப்பாகப்பேசப்பட்டது , ஆக்சன் மசாலா. 2012ல் .விஜய்சேதுபதி \நடிப்பில் வெளிவந்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா காமெடி ஜர்னரில் உருவானது .2016ல் கார்த்தி யின் நடிப்பில் வெளிவந்த காஷ்மோரா ஹாரர் த்ரில்லர் ஆக அமைந்தது .2019ல் வெளியான மலையாளப்படமான ஹெலன் படத்தின் ரீமேக்காக இவர் உருவாக்கிய அன்பிற்கினியாள் 2021 ல் ரிலீஸ் ஆகி வரவேற்பைப்பெற்றாலும் வசூல் ரீதியாகப்போகவில்லை
தனது ஒவ்வொரு படத்தையும் வேவ்வேறு ஜ்ர்னரில் உருவாக்கும் இவர் இம்முறை மோட்டிவேஷனல் டிராமா ஜர்னரில் இதை உருவாக்கி உள்ளார். கலவையான விமர்சனங்களைப்பெற்றாலும் வசூல் ரீதியாக இது ஒரு வெற்றிப்படமே
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் சிறு வயதில் இருந்தே அவர்கள் சொந்த ஊரில் சிங்கப்பூர் சலூன் வைத்திருந்த சிகை அலங்கார நிபுணர் ஒருவருக்கு பரம விசிறி. அவரைப்போலவே தானும் ஒரு புகழ் பெற்ற ஹேர் டிரஸ்சராக உருவாக வேண்டும் என்பதுதான் அவரது லட்சியம். பொதுவாக பெற்றோர் தங்கள் மகன் ஒரு டாக்டர் ஆக இஞ்சினியர் ஆக ஆசைப்படுவார்களே தவிர இந்த மாதிரி வேலைக்கு எல்லாம் அனுப்ப மாட்டார்கள் . அது அவர்கள் பரம்பரைத்தொழிலும் கிடையாது . நாயகன் தன் கனவுப் பணியை நிறைவேற்றினரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மொத்தக்கதையே
நாயகன் ஆக அர் ஜே பாலாஜி கச்சிதமாக நடித்திருக்கிறார். வழக்கமாக அவர் பேசும் லொட லொட பேச்சு இதில் மிஸ்சிங் என்றாலும் ரசிக்க முடிகிறது
நாயகனின் மனைவியாக மீனாட்சி சவுத்ரி அழகான பொம்மை போல வந்து போகிறார். அதிக வாய்ப்பில்லை . நாயகனின் மாமனார் ஆக சத்யராஜ் , வித்தியாசமான காமெடி ரோல். வெளுத்து வாங்கி இருக்கிறார். பேங்க் பேலன்ஸ் 4 கோடி இருந்தும் கஞ்சப்பிசினாரி ஆக இருக்கும் மாந்தோப்புக்கிளியே சுருளிராஜன் ரோல் அவருக்கு
நாயகனின் இன்ஸ்பிரேஷன் சிகை அலங்கார நிபுணர் ஆக லால் திறம் பட நடித்திருக்கிறார். ஃபிளாஸ்பேக் காட்சிகளில் நாயகனுடன் ஆன பாண்டிங் நன்கு சொல்லப்பட்டிருக்கிறது
ரோபோசங்கர் நாயகனின் சகலையாக வந்து கலகலப்பு ஊட்டுகிறார்.
ஜான் விஜய் , தலைவாசல் விஜய் , இமான் அண்னாச்சி உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் . இத்தனை பேர் கால்ஷீட்டையும் வாங்கி நடிக்க வைப்பது சிரமமான விஷயமே
விவேக்-மெர்வின் இசையில் பாடல்கள் ஓக்கே ரகம் . ஜாவேத் ரியாசின் பின்னணி இசை சிறப்பு
ஆர் கே செல்வா வின் எடிட்டிங்கில் படம் இரண்டரை மணி நேரம் ஓடுகிறது . எஸ் சுகுமாரின் ஒளிப்பதிவு கச்சிதம்
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் கோகுல்
சபாஷ் டைரக்டர்
1 மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் ஃபிளாஸ்பேக் காட்சிகளில் சிறுவனுக்கு சுன்னத் நடக்கும் காட்சிகள் கலகலப்பு . அந்தக்காட்சியில் பலியாடு போல சிறுவன் செல்வதை கவுண்டமணி காமெடி டிராக்கின் தீம் இசையை ,மேட்ச் செய்தது சிறப்பு
2 ஸ்கூலில் லேட்டாக வரும் மாணவர்கள் , ஹோம் ஒர்க் செய்யாத மாணவர்களுக்கு தண்டனையாக அவர்களை அவமானப்படுத்துவதாக நினைத்து மாணவிகள் அருகே அமர வைக்க ஆசிரியர் உத்தரவு போடுவதும் கொண்டாட்டம் ஆன மாணவர்கள் தினசரி ஒரு தப்பு செய்து மாணவிகள் அருகே அமர்வதும் கலக்கல் காமெடி .,நாம் படிக்கும்போது இந்த டெக்னிக் தெரியாமல் வளர்ந்து விட்டோமே என எண்ண வைக்கிறது
3 கஞ்சப்பிசினாரி மாமனாருக்கு சரக்கு வாங்கிக்கொடுத்து 3 கோடி ரூபாய் செக்கில் சைன் வாங்கும் காட்சி கொஞ்சம் நீளம் என்றாலும் ரசிக்க வைத்தது
ரசித்த வசனங்கள்
1 எக்ஸ்பயரி ஆகப்போறவனுக்கு எக்ஸ்பயரி மாத்திரையா?
2 ஒரு அழகான பெண்ணோட அப்பா சிரிச்சு இப்போதான் பார்க்கிறேன்
3 தொழிலை தொழிலாகப்பார்க்காமல் கலையாகப்பார்க்கனும்
4 எதுவும் ப்ரம்பரைத்தொழில் கிடையாது. யாருக்கு என்ன பிடிக்குதோ அந்தத்தொழில் செய்யலாம்
5 படிப்பு வர்லைன்னா இவன் சிரைக்கத்தான் லாயக்குனு சொல்லிடக்கூடாது என்பதற்காகவே படிச்சேன்
6 உன் வேலையில் நீ சின்சியராக இரு, மத்ததெல்லாம் உன்னைத்தேடி வரும்
7 மத்தவங்களைத்திருத்தற வேலை எத்தனை பேருக்குக்கிடைக்கும் ?
8 அடிக்கறதே தண்ணி .. அதுக்கு மிக்சிங்க்கு எதுக்கு தனியா ஒரு தண்ணி ?
9 எப்பவும் சைடு சிஷ் சாப்பிடற மசங்களைக்கூட வெச்சுக்கவே கூடாது
10 சக்சஸ் ஈஸ் நாட் ஏன் ஆப்சன், தட் ஈஸ் மஸ்ட்
11 என்னை மாதிரி ஆளுங்க மேலே வரனும்னா யாராவது என்னை நம்பனும்
12 நாம கீழே இருக்கும் வரை தான் கொண்டாடுவாங்க , மேலே போய்ட்டா அதை சகிச்சுக்க மாட்டாங்க
13 ஒருத்தன் நினைச்சா தன் திறமையை ஒரு லேண்ட் மார்க் ஆக மாற்ற முடியும்
14 கோயிலுக்கு எதிரே இருட்டுக்கடை அல்வா கடை இருக்குனு முதல்ல சொன்னாங்க , இப்போ இருட்டுக்கடை அல்வா கடை க்கு எதிரே கோயில் இருக்குனு சொல்றாங்க ., இதுதான் வளர்ச்சி
15 ஒரு ஹேர் டிரஸ்சர் நினைச்சா ஒருவரை இந்த உலகம் பார்க்கும் பார்வையிலிருந்தே மாற்ற முடியும்
16 அடையாளத்தை யாரும் விற்கவும் மாட்டாங்க , இழக்கவும் மாட்டாங்க
17 எப்பவும் நாமே ஜெயிச்சுட்டு இருக்க முடியாது . நேத்து நாம ஜெயிச்சோம், இன்னைக்கு இவன் ஜெயிக்க்றான் , நாளை அவன் ஜெயிப்பான் ,
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நகை கடனாகக்கொடுக்கும் ந்பர் நைட் டைமில் ஏன் கொடுக்கனும்? காலைல தரலாமே? பேங்க்கில் அடமானம் தானே வைக்கப்போகிறார்?
2 நைட் டைமில் பைக் கவரில் அசால்ட்டாக 5 லட்சம் ரூ மதிப்புள்ள நகைகளை வைத்துக்கொண்டு திருட்டுக்கொடுக்கும் காட்சி நம்ப முடியவில்லை
3 மரத்தை வெட்டும்போது பல கிளிகள் இறப்பது போல சீன். பொதுவாக மரத்த வெட்டும் அதிர்வில் எல்லாக்கிளிகளும் பறந்து தப்பிவிடும். மரம் கீழே விழும் வரை கிளிகள் வெயிட் பண்ணிட்டு இருக்குமா?
4 பஞ்சு மிட்டாய் சாப்பிடும் சீன் வரும்போது அபாய அறிவிப்பு போட்டிருக்கலாம்
5 சுன்னத் காமெடி டிராக் கல கல தான், ஆனால் கொஞ்சம் ட்ரிம் பண்ணி இருக்கலாம்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சுய தொழில் செய்பவர்களுக்கு மோட்டிவேஷன் தரக்கூடிய படம் தான், பார்க்கலாம், ரேட்டிங் 2.5 / 5
சிங்கப்பூர் சலூன் | |
---|---|
இயக்கம் | கோகுல் |
எழுதியவர் | கோகுல் |
உற்பத்தி | ஐசரி கே. கணேஷ் |
நடிக்கிறார்கள் | |
ஒளிப்பதிவு | எம்.சுகுமார் |
திருத்தியவர் | செல்வா ஆர்.கே |
இசை | பாடல்கள்: விவேக்–மெர்வின் ஸ்கோர்: ஜாவேத் ரியாஸ் |
தயாரிப்பு நிறுவனம் | வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் |
மூலம் விநியோகிக்கப்பட்டது | ரெட் ஜெயண்ட் திரைப்படங்கள் |
வெளிவரும் தேதி |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
0 comments:
Post a Comment