இந்தப்படத்தைப்பற்றிய விபரங்களை விக்கிபீடியாவில் தேடிய போது இது ஒரு ஹாரர் த்ரில்லர் என கதை விட்டிருக்கிறார்கள் . இது ஒரு கள்ளக்காதல் கதை. முதல் பாதி பூரா தெளிவா இருந்திட்டு பின் பாதியில் சைக்காலஜிக்கல் த்ரில்லர் , ஹாரர் த்ரில்லர் என இயக்குநர் குழப்பி அடித்திருக்கிறார்.
டி ராஜேந்தர் பூக்கள் விடும் தூது என்ற வெளியார் படத்துக்கு இசை அமைத்த போது அவர் பாட்டுக்கு சிவனே என அவர் வேலையைப்பார்த்தார். ஆனால் இந்தப்படத்தில் பாடல்கள் எழுதி இசை அமைத்த இயக்குநர் மிஷ்கின் க்கு சம்பளம் தருவதற்குப்பதில் அவரைப்பற்றிய ப்ரமோக்களை படம் முழுக்க அள்ளித்தெளித்திருக்கிறார்கள் , ஓவர் டோஸ்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி காரில் பயணம் செய்து கொண்டு இருக்கும்போது எதிர்பாராத விதமாக நாயகன் ஓட்டிச்செல்லும் பைக் மீது இடித்து விடுகிறார். நாயகனுக்கு இடது கையில் சரியான அடி. ஹாஸ்பிடலில் அவரை சேர்த்து சிகிச்சை அளித்து மன்னிப்பும் கேட்கிறார். நாயகன் , நாயகி சந்திப்பு தொடர்கிறது.இவர் வீட்டுக்கு அவர் வருவதும் அவர் வீட்டுக்கு இவர் போவதும் ஒரே ரொமான்ஸ் தான்
முதல் அரை மணி நேரம் ஜாலியான ரொமாண்டிக் டிராமாவாக படம் கவிதையாகபோய்க்கொண்டிருந்தபோது தான் ஒரு திருப்பம். நாயகி நைட் லேட்டாக வீட்டுக்கு வரும்போது அங்கே நாயகியின் கணவன் ஐ ஆம் வெயிட்டிங் என்பது போல் அமர்ந்திருக்கிறார்
அங்கே கட் பண்ணி ஒரு ஃபிளாஸ்பேக்
நாயகியைப்பெண் பார்க்க வருபவருடன் ஓக்கே ஆகி திருமணம் ஆகிறது . ஆனால் நாயகியின் கணவன் அவரது அலுவலகத்தில் பணி புரியும் செகரட்டரி கூட சீக்ரெட்டரியாக ஒரு ரிலேசன் ஷிப்பில் இருக்கிறார். மனைவியை தவிர்க்கிறார். ஒரு கட்டத்துல நாயகிக்கு தன் கணவனின் சுய ரூபம் தெரிகிறது . கணவனின் ஆஃபிஸ் போனபோது அங்கே நேரில் கணவன் - செகரட்டரி லீலையைப்பார்த்து விடுகிறார். அந்த அதிர்ச்சியான சம்பவத்துக்குப்பின் ஏதோ யோசனையில் காரில் வந்தபோது தான் முதல் பேராவில் நிகழ்ந்த சம்பவங்கள்
இப்போ நாயகியின் கள்ளக்காதலன் நாயகியின் வீட்டுக்கே வருகிறான். நாயகன் , கணவன் இருவரும் மோதிக்கொள்கிறார்கள் . இதற்குப்பின் நிகழ்ந்தது என்ன ? என்பது தான் மீதி திரைக்கதை
நாயகி ஆக பூரணா பரிபூரணமான அழகு, அமைதி , குடும்பப்பாங்கான பெண்ணாக அடக்க ஒழுக்கமாக வந்து போகிறார். படம் முழுக்க இவருக்குத்தான் அதிக ஸ்கோப் , நாயகன், வில்லன் இருவரை விட இவருக்கே அதிக காட்சிகள் .
நாயகியின் கணவன் ஆக விதார்த் . இவரது கேரக்டர் டிசைனில் ஏகப்பட்ட குழப்பங்கள் . அவற்றை எல்லாம் லிஸ்ட் போட்டு லாஜிக் மிஸ்டேக்ஸ் கேட்டகிரியில் ரோஸ்ட் போடுவோம்
நாயகியின் கள்ளக்காதலன் ஆக நாயகன் ஆக திர்க்குன் நடித்திருக்கிறார். சுமார் நடிப்பு மோசமில்லை இவரது கேரக்டர் டிசைனிலும் குழப்பங்கள்
நாயகியின் கணவனின் கள்ளக்காதலி ஆக சுபா ஸ்ரீ. தெலுங்கு டப்பிங்க் படங்களில் ஒரு குத்து சாங்குக்கு மட்டும் ஆடிப்போகிறவர் போல ஒரு கண்ணியமான தோற்றம். முடியலை ஷப்ப்பா
எஸ் இளையராஜா வின் எடிட்டிங்கில் படம் இரண்டு மணி நேரம் ஓடுகிறது . ரொம்ப நேரம் இழுப்பது போல ஒரு சலிப்பு ஏற்படுகிறது
இசை மிஷ்கின் அவரது இசையைக்கூட தாங்கிக்கொள்ளலாம். படம் முழுக்க அவரது வீரப்பிரதாபங்களை படத்தின் கேரக்டர்கள் சிலாகிப்பது எல்லாம் ஓவர்
திரைக்கதை எழுதி நம்மைக்குழப்பி இருப்ப வர் ஆதித்யா . இவரே இயக்கம்
சபாஷ் டைரக்டர்
1 நான்கே கேரக்டர்களை வைத்து ஒரு கதை பண்ணி , படமாக எடுத்தது சாமார்த்தியம் தான்
2 மிஷ்கினிடம் ஓசியில் இசை , பாடல்கள் எல்லாம் வாங்கி விட்டு படம் பூரா அவரைப்புகழ்ந்து தள்ளியே சம்பளத்தை கழித்த டெக்னிக் அபாரம்
ரசித்த வசனங்கள்
1 உங்க அம்மா மேல் இருந்த அன்பை நீங்க என் கிட்டே காட்டினீங்க
2 நான் ஒரு கடல் மீன், கரைக்கு வர ஆசைப்படக்கூடாது , மீண்டும் கடலுக்கே போயிடறேன்
3 உன் பொண்டாட்டி என்ன பொருளா? ஃபிரிட்ஜில் வைக்க ?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பொதுவா நம்ம ஃபோன் மிஸ் ஆனா முதல்ல அந்த நெம்பர்க்கு கால் பண்ணிப்பார்ப்போம், நாயகன் நாயகி வீட்ல ஃபோனை வெச்சுட்டு வந்துடறான். நாயகி கொண்டு வந்து தரும்போது லூஸ் மாதிரி அடடா, உங்க வீட்ல வெச்ட்டு வந்துட்டேனா? வீட்டில் தேடிட்டே இருந்தேன்கறான்
2 ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ல மேகி 20 பாக்கெட் 100 கிராம் 20க்கும்மேல வாங்கி வருவது போல ஒரு சீன். அதுக்குப்பதிலா 2 கிலோ பாக்கெட்டா வாங்கினா ஹோல் சேல் ரேட்டில் 15% குறையுமே?
3 நாயகனைப்பார்க்க நாயகி வீட்டுக்கு வரும்போது நாயகன் ரூமில் கதவை சாத்திட்டு தம் அடிச்சுட்டு இருக்கான். அவ்ளோ பெரிய பங்களா. ஹால்லயோ, வெளீல ஓப்பன் பிளேஸ்ல தானே தம் அடிப்பாங்க?
4 நாயகி கூட நாயகன் செஸ் விளையாடும்போது கேன்சர் பார்ட்டி மாதிரி தம் அடிச்சுட்டே இருக்கான், ஒரு பெண்ணை இம்ப்ரஸ் பண்ண ஐடியா பண்றவன் இப்படித்தான் எதிராளி முகத்துலயே புகை விடுவாங்களா?
5 நாயகியைபெண் பார்க்க வரும் விதார்த் பெண்ணைப்பார்க்காமல் செல் ஃபோனைப்பார்த்துக்கிட்டு இருக்காரு. பொதுவா பெண் பார்க்க வரும்போது பட்டிக்காட்டான் பஞ்சு மிட்டாயைப்பார்ப்பது போல மணப்பெண்ணை வெறித்துப்பார்ப்பதுதானே உலக வழக்கம். விதார்த் என்னடான்னா ஒரு தக்ர டப்பா பார்ட்டியை ஃபோன்ல பார்த்துட்டு இருக்காரு , கஷ்டம்
6 திருமண வைபவத்தின் போது கூட நாயகி தான் விதார்த்தை ஆசையாப்பார்க்கிறார். விதார்த் கண்டுக்கவே இல்லை , மாப்பிள்ளை மீது அப்போதே யாருக்கும் டவுட் வர்லையா?
7 முதல் இரவு அறைக்குப்போகும் மாப்பிள்ளை செல் ஃபோனில் சைலண்ட் மோடு ஆன் பண்ண மாட்டாரா? நைட் 9 மணிக்கு கள்ளக்காதலி அழைத்ததும் மனைவியை அம்போன்னு விட்டுட்டு ஓடிடறாரு
8 விதார்த் நைட் பெட்ல படுக்கும்போது கூட பேண்ட் சர்ட் டக் இன் பண்ணிட்டே தான் நீட்டா படுத்துத்தூங்கறார். லுங்கி , வேட்டி எல்லாம் யூஸ் பண்ணாத ஏ செண்ட்டர் ஆடியன்சோ?
9 ஆஃபீசில் விதார்த்தின் கள்ளக்காதலி வந்து கிஸ் அடிக்கும்போது என் மனைவி வந்திருக்கானு சொல்ல மாட்டாரா? சும்மா பே பே அப்டின்னுட்டு இக்ருக்காரு மாட்றாரு
10 துரோகம் செய்த கணவன் மனைவியிடம் மன்னிப்புக்கேட்டதும் மனைவி டக்னு 10 கிஸ் கொடுக்கறா. எந்த ஊர்ல அப்டி நடக்குது ?
11 கணவனின் ஃபோட்டோ ஃப்ரேமில் தூசி படிந்தால் அழுக்குத்துணி அல்லது டஸ்டர் கொண்டு துடைப்பாங்க . நாயகி பட்டுப்புடவை முந்தானையால் துடைக்கிறார். இந்தக்காலத்துப்பெண்கள் கணவன் ஃபோட்டோவை க்ளீன் பண்ணுவதே அபூர்வம், அதுவும் தன் பட்டுப்புடவையை நாஸ்தி செய்வார்களா? ஓவர் செண்ட்டிமெண்ட் சீன்
12 நாயகன் விதார்த்தை தாக்கும் சுத்தியல் தீபாவளிக்கு கொள்ளுப்பட்டாசு வெடிக்கும் சுத்தியல் மாதிரி இருக்கு , அதனால் ஆளைக்கொலை செய்யும் அளவுக்கு ஒரே அடியில் செய்ய முடியுமா?
13 விஜய் படமோ அஜித் படமோ முதல் நாள் முதல் காட்சி FDFS ஷோ பார்க்கும்போது யாராவது கால் பண்ணி பக்கத்துல வீரா சாமினு டப்பாப்படம் ஓடுது வரயா?னு கேட்டா எந்த மாங்கா மடையனாவது போவானா? விதார்த் தன் முதல் இரவு அன்று கள்ளக்காதலி ஃபோன் பண்ணி அழைத்ததும் போய் விடுகிறார். பல முறை அவரை ருசி பார்த்தவர்
14 விதார்த்தின் கள்ளக்காதலிக்கு இன்னொரு கள்ளக்காதலன் இருக்கான். ஜிம் ட்ரெய்னர். அவன் கூட எசகு பிசகா இருக்கனும்னா புது இடம் போகலாம் அவன் வீட்டுக்கு போகலாம். அதை விட்டுட்டு அந்த பேக்கு விதார்த் வருவான் என தெரிந்துமே அதே வீட்டில் சரசம் பண்ணி மாட்டுகிறார்
15 விதார்த்தின் கள்ளக்காதலி பெட்ரூம் கதவு பாத்ரூம் கதவு வாசல் கதவு மெயின் கேட் எல்லாவற்றையும் பெப்பரப்பே என திறந்து போட்டுட்டா கள்ளக்காதலனுடன் இருப்பாள்< விதார்த் வரும்போது மாட்டுகிறாள்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சிம்ப்ளி சவுத் ரிலீஸ் படம் சிம்ப்ளி வேஸ்ட் , டப்பாப்படம் , ரேட்டிங் மைனஸ் 1 / 5
Devil | |
---|---|
Directed by | Aathityaa |
Written by | Aathityaa |
Produced by | Radhakrishnan Hari |
Starring | |
Cinematography | Karthik Muthukumar |
Edited by | S. Elayaraja |
Music by | Mysskin |
Production companies | Maruti Films H Pictures |
Release date |
|
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment