Friday, February 23, 2024

பிளட் பிரஷர் செக் செய்யும்போது கவனிக்க வேண்டியவை


 பொதுவாக  இரத்த  அழுத்தம்  நார்மல்  அளவு 120 / 80   என  இருக்க  வேண்டும்  வயதானவர்களுக்கு  140 / 90  இருக்கலாம்,  இதற்கு  மேல்  இருந்தால்  ஹைப்பர்  டென்ஷன்  அல்லது  பிளட்  பிரஷர்  இருக்கிறது  என  அர்த்தம் . இரத்த  அழுத்தம்  எப்போது  எப்படி  செக்  செய்ய  வேண்டும் ? 


1    காலை  நேரத்தில்   செக்  செய்வது  நல்லது  . ஏன்  எனில்  நாம்  ஆஃபீஸ்  டைம்  முடிந்த  பின்  அலுவலகத்தில்  நடந்த  பல  பிரச்சனைகள்  நம் மனதில்  அழுத்தத்தை  ஏற்படுத்தி  பிரஷர்  அளவில்  மாற்றம்  இருக்கலாம்,  பிளாங்க்காக  மனம்  இருக்கும்போதே  பார்க்க  வேண்டும் 


2  எப்போதும் இடது  கையில்  தான்  பிளட்  பிரஷர்  பார்க்க  வேண்டும் . இது  மருத்துவர்கள்  அட்வைஸ் , ஆனால்  இப்போதும்  பல  நர்ஸ்கள்  அதை  ஃபாலோ  பண்ணுவதே  இல்லை .பலருக்கும்  இந்த தகவலே  தெரிவதில்லை 


3  ரெகுலராக  பிரஷருக்கு  மாத்திரை  சாப்பிடுபவராக  இருந்தால்  காலை  உணவுக்குப்பின்  மாத்திரை  எடுத்துக்கொண்ட  பின்  2  மணி  நேரம்  கழித்து  பிரசர்  செக்  செய்வது  நல்லது ., அப்போதுதான்  மாத்திரை  சாப்பிட்ட  பின்  பிரஷர்  எந்த  அளவு  கண்ட்ரோலாக  இருக்கும்  என்பது  தெரியும் 


4     வேகமாக  நடந்து  வந்த  பின்னோ , சைக்கிள்  ஓட்டி  வந்த  பின்னோ  உடனே  பி பி  செக்  செய்யக்கூடாது , அப்போது  பிரசர்  அதிகமாக  இருக்கும், பயணம்  முடிந்து  ஹாஸ்பிடல்  வந்து 15  நிமிடங்கள்  ரிலாக்ஸ்  ஆக  இருந்த  பின்  பி  பி  செக்  செய்ய  வேண்டும் 


5  சிலருக்கு  ஹாஸ்பிடலோ போபியா  இருக்கும், அதாவது  ஹாஸ்பிடல்  படி  ஏறினதுமே  ஒரு  பயம்  உள்ளூர  தோன்றும் . மனம்  பட  பட  என  அடித்துக்கொள்ளும்  , இப்படிப்பட்டவர்கள்  பி பி  மிஷின்  ஒன்று  வாங்கி  வீட்டில்  வைத்து  அவர்களாகவே  செக்  செய்து  கொள்ளலாம். அல்லது  மெடிக்கல்  ஷாப் , இரத்த  பரிசோதனை  நிலையம்  ஆகியவற்றில்  பி பி  செக்  செய்து  கொள்ளலாம் 

0 comments: