Friday, February 16, 2024

BHAKSHAK (2024) - ஹிந்தி - வேட்டை மிருகம் - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்

 


பக்சக்  என்ற  ஹிந்தி  சொல்லுக்கு  உணவு  உண்பவர்  என்று  அர்த்தம். ஆனால்  தமிழ்  டப்பிங்கில்  வேட்டை  மிருகம்  என  மொழி  பெயர்த்து  இருக்கிறார்கள் . இது  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகாமல்  நேரடியாக  ஓடிடி  ரிலீசுக்காக  எடுக்கப்பட்ட  படம்  என்பதால்  நெட்  ஃபிளிக்சில் 9/2/2024  அன்று  ரிலீஸ்  ஆனது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  சொந்தமாக  ஒரு  சேனல்  நடத்தி  வருகிறார். திருமணம்  ஆகி 6  ஆண்டுகள்  ஆகியும்  ஒரு  நல்ல  பொசிசனுக்கு  வந்த  பின் தான்  குழந்தை  என  எண்ணி  வாழ்பவர். கணவன் ஒரு  அர்சாங்க  ஊழியர். மாமியார் , கணவன்  உடன்  வாழ்ந்து  வருகிறார். இவர்  நடத்தி  வரும்  டி வி  சேனலுக்கு  அதிக  பார்வையாளர்கள்  இல்லை . இன்னும்  ஹிட்  ஆகவில்லை , அதற்காக  கடுமையாக  உழைத்துக்கொண்டிருக்கிறார்


 போலீஸ்க்கு  இன்ஃபார்மர்  இருப்பது  போல  மீடியாக்களுக்கு  தகவல்  தர  ஆட்கள்  உண்டு . எதாவது  பரபரப்பான  நியூசுக்கான்  தகவலை   தந்து  விட்டு  அதற்கான சன்மானம்  பெற்றுக்கொள்வார்கள் . அப்படி  ஒரு  நபர்  நாயகிக்கு  ஒரு  பரபரப்பான  தகவலை  தருகிறான்

ஒரு  அனாதை  விடுதியில்  சட்டத்துக்கு  விரோதமான  செயல்கள்  நடப்பதாக  தகவல் . அங்கே  இருக்கும்  பெண்கள் , சிறுமிகள்  பாலியல்  வன்கொடுமைக்கு  ஆளாக்கப்படுகிறார்கள் . அந்த  விடுதியை  நடத்துபவன்  ஒரு  அரசியல் செல்வாக்கு  உள்ள  ஆள் . அதனால்  போலீஸ் அவன்  மேல்  கை  வைக்கத்தயஙுகிறது 


 நாயகி  அந்த  விடுதியில்  வேலை  பார்த்த  ஒரு  சமையல்காரப்பெண்ணைக்கண்டுபிடிக்கிறாள் .  அவளிடம்  ஸ்டேட்மெண்ட்  வாங்குகிறாள் .  அந்த  விடுதியில்  நடக்கும்  அக்கிரமங்களை  வெளிச்சம்  போட்டுக்காட்டுகிறாள் 


 இதனால்  வில்லன்  கடுப்பாகிறான். நாயகிக்கு  டார்ச்சர்  கொடுக்கிறான். இதனால்  நாயகி  குடும்பத்தில் பிரச்சனை . இந்தப்பிரச்சனைகளை  எல்லாம்  கடந்து  நாயகி   தன்  லட்சியத்தை  அடைந்தாளா? அந்த  விடுதியின்    ரகசியங்கள்  வெளிவந்ததா?  வில்லனுக்கு  தண்டனை கிடைத்ததா? என்பது  மீதிக்கதை 


 நாயகி  ஆக  பூமி பெட்னாகர். தமனா  மாதிரி  நல்ல  கலர். இளமையான  தோற்றம், ஆனால்  நடிப்பில்  இன்னும்  கவனம் செலுத்த  வேண்டும்.  கொடுத்த  வசனத்தை  ஒப்பிப்பது  போல  சில  இடங்களில்  தெரிகிறது . கணவனுடன்  வாக்குவாதம்  செய்யும்  காட்சியில்  ஓவர்  ஆக்டிங். அவரது  கேரக்டர்  டிசைனிலும்  சில  தவறுகள் 


விடுதியில்  சமையல்காரப்பெண்ணாக  வரும் பெண்  அட்டகாசமாக  நடித்திருக்கிறார். முகத்துல  பயம் . ஆர்வம்  எல்லாம்  கச்சிதமாக  வெளிப்படுத்துகிறார். நாயகியை விடக்குறைவான  நேரம்  தான்  வருகிறார். ஆனால் நாயகியை  விட  நிறைவான  நடிப்பைத்த்ந்திருக்கிறார். தானிஷா  மேத்தா  என  நினைக்கிறேன்


 அதே  போல்  விடுதியின் இன்சார்ஜ்  ஆக வரும்  பெண்ணும் பிரமாதப்படுத்தி இருக்கிறார். வில்லி  ரோலில்  பெயர்  வாங்குவது  சாதாரண  விஷயம்  அல்ல 


போலீஸ்  ஆஃபீசர்  ஆக  வரும்  சாய்  தமனாகர்  கச்சிதமான  போலீஸ்  கம்பீரத்தைக்காட்டி  இருந்தாலும்  க்ளைமாக்சில்  ஓவர்  ஆக்டிங்  செய்திருக்கிறர்,


நாயகியின்  உதவியாளர்  ஆக  வரும்  சஞ்சய்  மிஸ்ரா  அடக்கி  வாசித்து  இருக்கிறார். அனுபவம்  பேசுகிறது /


வில்லன்  ஆக  வரும்  ஆதித்யாஸ்ரீவஸ்தவா  கச்சிதமான  கம்பீரம்  காட்டி  இருக்கிறார். போறவன்  எல்லாம்  கிளம்புங்க , போலீஸ்  வரும்போது  நான்  இங்கே  தான்  இருப்பேன்  என  கெத்து  காட்டுவது  செம 


பாடலகளுக்கான  இசையை அனுராக்  சைக்கியா ,அனுஜ் கார்க்  இருவரும், பின்னணி  இசையை  வேறு  இருவரும் ( க்ளிண்ட்டன்  செர்ஜோ,பையாங்க்கா  கோம்ஸ் )  கவனித்து  இருக்கிறார்கள் , முன்று  பாடல்களில்  இரண்டு  சுமார்  ரகம். பிஜிஎம்  கச்சிதம் 


குமார்  சவுரப்பின்  ஒளிப்பதிவு  இருட்டான  காட்சிகளில்  பளிச் .சமையல்  காரப்பெண்ணுக்கான  க்ளோசப்  காட்சிகள்  அருமை 

ஜூபின்  ஷேக்கின்  எடிட்டிங்கில்  படம்   135  நிமிடங்கள்  ஓடுகின்றன.  ரொம்ப  ச்லோவாக  திரைக்கதை  நகர்வதால்  இரண்டே  கால் மணி  நேரப்படம் இர்ண்டே  முக்கால் மணி  நேரப்படமாகத்தெரிகிறது 


ஜ்யோத்சனா  நாத்  என்பவருடன்  இணைந்து  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்  புல்கிட் 

சபாஷ்  டைரக்டர்

1 எடுத்துக்கொண்ட  சப்ஜெக்ட்  ஏ  ஆக  இருந்தாலும்  காட்சிகளில்  கண்ணியம்  காட்டிய  விதம் 


2  நாயகியைத்தவிர  அனைத்து  கேரக்டர்களிடமும்  இயல்பான  நடிப்பை  வெளிப்படுத்த  வைத்த  விதம் 


3  டாக்குமெண்ட்ரிஸ்டைலில்  படம்  ஸ்லோவாக  நகர்ந்தாலும்  பொறுமையாகப்பார்க்க  வைக்கும்  விதத்தில்  காட்சிகளை  நகர்த்தியது 


  ரசித்த  வசனங்கள் 


1  ஒரு  மாற்றத்தைக்கொண்டு வர  அரசாங்கத்துக்கு  மட்டும்  அஞ்சு  வருசம்  டைம்  கொடுக்கறீங்க , ஆனா  என்னை  மாதிரி  சாமான்யன்  கிட்டே  மூணு  வருசத்துலயே  எல்லாம்  எதிர்பார்த்தா  எப்படி / கொஞ்சம்  டைம்  கொடுங்க 


2 அரசாங்கத்தை  எதிர்க்கக்கூடாது , ஆபத்து  வரக்கூடாதுனா  எதுக்கு  பத்திரிக்கை  நடத்தனும் ? பானிபூரிக்கடை  வைக்கலாமே? 


3 இந்த  உலகமே கொத்து  பரோட்டா  மாதிரி  தான்  ஆகி  இருக்கு 


4  சிறார் வன்கொடுமைகள்  எல்லாம்  சோசியல்  வெல்ஃபேர்  டிபார்ட்மெண்ட்  கீழே  தான்  வருது . அவங்களுக்குத்தெரியாமயா  இவை  எல்லாம்  நடந்திருக்கும் ? 


5  இந்த  உலகத்துல  ஒவ்வொருத்தனும்  செய்யற  வேலை  அவன்  பார்வைல  சரியாத்தான்  இருக்கும், அதை  நீங்க  எப்படி  தப்பு?னு  சொல்வீங்க ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  அவ்ளோ  கெடுபுடியாக  இருக்கும்  அனாதை  விடுதியில்  இருந்து  அந்த  சமையல்  காரப்பெண்  தப்பித்து  வெளியேறும்  காட்சியில்  நம்பகத்தன்மையே  இல்லை 


2  நாயகி  லேட்டாக  நைட்  11  மணிக்கு  வரும்போது  புருசன்  பசியுடன்  இருக்கிறான். தப்பு  நாயகி  மேல்  ஆனால்    புருசன்  மீது  எரிந்து  விழுகிறார். பசிச்சா   சமையல்  பண்ணி  சாப்பிட  என்ன  கேடு? என்கிறார். லேட்டாகும்  எனில்  இவர்  தானே  புருசனுக்கு  ஃபோன்  பண்ணி  லேட்  ஆகும், எனக்காக  வெயிட்  பண்ண  வேண்டாம். சாப்பிடு என  சொல்லி  இருக்க  வேண்டும் ? 


3   நாயகி  மீது  கோபப்பட்டு  இனிமே  என்  காரை  எடுக்காதே  என  எரிந்து  விழும்  புருசன்   திடீட்  என  மனைவியிடம்  அக்கறையாகப்பேசுவது  ஏன் ?


4  வெல்ஃபேர்  டிபார்ட்மெண்ட்டில்  முக்கியமான  ஆஃபீசசரையே  கொலை  செய்யும்  வில்லன்  நாயகி  மீது  எந்த  தாக்குதலும்  நடத்தாதது  ஏன் ?

5   வில்லன்  இடத்துக்கே  வந்து  நாயகியின்  உதவியாளர்  டபுள்  கேம்  ஆடுவது  நம்பும்படி  இல்லை 


6  போலீஸ்  வரப்போறாங்க  என  தெரிந்த  பின்னும்  வில்லன்  எஸ்  ஆகாமல்  அங்கேயே  இருப்பதும், அபலைப்பெண்களை  எந்த  இடத்துக்கும் ,மாற்றாமல்  வைத்திருந்து  வாண்டடாக  மாட்டிக்கொள்வது  ஏன்  என்றும்  தெரியவில்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  உண்மை  சம்பவம்  என  சொல்கிறார்கள் . அது  உண்மையாக  இருந்தால்  ஓக்கே .  சுமாரான  க்ரைம்  த்ரில்லர் . ரேட்டிங்  2.25  / 5 

டிஸ்கி -  இந்தக்கதை  பீகாரில்  நடந்த  ஒரு  உண்மை  சம்பவம். நாயகியிடம்  கதை  சொன்ன  போது  பிறகு  பார்க்கலாம்  என்று  கூறியவர்  ஆறு  மாதங்கள்  கழித்து  இயக்குநரை  அழைத்து  அந்தக்கேரக்டர் , கதை  என்னை  டிஸ்டர்ப்  பண்ணிட்டே  இருக்கு , வேற  எதிலும்  கான்செண்ட்ரேட்  செய்ய  முடியலை , நாம  உடனே  இந்தப்படம்  பண்ணுவோம்  என்றாராம். வில்லன்  ஆக  நடித்தவருக்கும்  அவரது  கேரக்டர்  டிசைன்  மிகவும்  பிடித்ததாகவும் ஆர்வத்தோடு  காத்திருப்பதாகவும்  தெரிவித்தாராம்


Bhakshak
Official release poster
Directed byPulkit
Written byJyotsana Nath
Pulkit
Produced by
StarringBhumi Pednekar
Sanjay Mishra
Sai Tamhankar
Aditya Srivastava
CinematographyKumar Sourabh
Edited byZubin Sheikh
Music bySongs:
Anurag Saikia
Anuj Garg
Background Score:
Clinton Cerejo
Bianca Gomes
Production
company
Distributed byNetflix
Release date
  • 9 February 2024
Running time
135 minutes[1]
CountryIndia
LanguageHindi

0 comments: