1985ல் ஸ்ரீதர் இயக்கத்தில் மோகன் - ஜெயஸ்ரீ நடிப்பில் வெளியான தென்றலே என்னைத்தொடு பாடல்களுக்காகவே ஓடிய முக்கியமான ரொமாண்டிக் சப்ஜெக்ட் படம்.1987ல் பிரேமலோகா என்ற கன்னடப்படம் ரிலீஸ் ஆனது. அதன் தமிழ் டப்பிங்க் வெர்சன் பருவராகம்., படத்தில் எட்டு பாடல்கள். எல்லாம் ஹிட். பாடல்கள் ,ரொமான்ஸ்க்காகவே ஓடிய படம் இது . இதே ஃபார்முலாவில் டீன் ஏஜ் ரசிகர்களைக்குறி வைத்து பாடல்கள் , டான்ஸ் , கதாநாயகிகளின் இளமை இவற்றை முதலீடாகக்கொண்டு 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நெட் ஃபிளிக்சில் நேரடியாக ரிலீஸ் ஆன படம் இது
ஸ்ரீதேவியின் மகளான குஷி கபூர் , ஷாரூக்கானின் மகளான சுஹானா கான் இருவரும் நாயகிகளாக நடித்த படம் . பாய்ஸ் படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சிகள் , ரொமான்ஸ் காட்சிகள் இயக்குநர்க்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கக்கூடும்
கதை என்று பார்க்கப்போனால் விஜய் சேதுபதி , நயன் தாரா , சமந்தா நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படக்கதை தான். ஒரே நாயகன் ஒரே சமயத்தில் இரு நாயகிகளை மனதாரக்காதலிக்கும் கதை. ஆனால் இப்படிக்கதை சொன்னால் விமர்சனம் வரும் என நில ஆக்ரமிப்பு , பசுமைத்தோட்டம் பாதுகாப்பு என ஜல்லி அடித்து சமாளித்திருக்கிறார்கள்
ஸ்பாய்லர் அலெர்ட்
1960ல் கதை நடக்கிறது . ரிவர்டேல் என்ற் இடத்தில் உள்ள க்ரீன் பார்க் தான் கதைக்களம். இங்கே ஒரு பெரும்பணக்காரர் அந்த பார்க்கை ஆக்ரமித்து ஒரு ஹோட்டல் கட்ட திட்டம் இடுகிறார். அங்கே வசிக்கும் ஸ்டூடண்ட்ஸ் அதை தடுக்க திட்டம் இடுகிறார்கள் . யார் வெற்றி பெற்றார்கள் என்பது மீதி திரைக்கதை
இது போக இன்னொரு கதையும் உண்டு . நாயகன் இரு வேறு பெண்களை ஒரே சமயத்தில் காதலிக்கிறான். யாரையும் ஏமாற்றும் எண்ணம் இல்லை . ஆரம்பத்தில் தன்னை மட்டுமே காதலிப்பதாக நினைக்கும் இரு நாயகிகளுக்கும் ஒரு கட்டத்தில் உண்மை தெரிய வர என்ன முடிவு எடுத்தார்கள் என்பது தான் க்ளை மாக்ஸ்
நாயகன் ஆக அகஸ்தியா நந்தா துள்ளலான இளமையுடன் நடித்திருக்கிறார். சித்தார்த்தின் முக சாயலில் இருக்கிறார்.
நாயகிகள் ஆக குஷி கபூர் , சுஹானா கான் இருவரும் சம அளவில் நடித்திருக்கிறார்கள் . ஸ்ரீதேவியின் முகத்தோடு , நடிப்போடு ஒப்பீடு செய்யாமல் பார்த்தால் ஜஸ்ட் பாஸ் லிஸ்ட்டில் வருவார்
படத்தின் மிகப்பெரிய பலம் ஆர்ட் டைரக்சன் , இசை , டான்ஸ் கொரியோகிராஃபி
10 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு பாடல் வருகிறது . டான்ஸ் , லவ் களேபரம் தான்
144 நிமிடங்கள் படம் ஓடும்படி ட்ரிம் செய்திருக்கிறார்கள் பாடலக்ளுக்கான இசையை நால்வரும் , பின்னணி இசையை இருவரும் செய்திருக்கிறார்கள் . ஒளிப்பதிவு நிகோஸ் ஆண்ட்டிரிக்சகிஸ் பிரமாதப்படுத்தி இருக்கிறார்
அனைவரின் ஆடை வடிவமைப்பு , ஹேர் ஸ்டைலஸ் எல்லாவற்றையும் 1960 கால கட்டம் போல காட்டி இருப்பது சிரமமான பணி
ஆர்ச்சி காமிக்ஸ்ல வர்ற கேரக்டர்சை தழுவி ஐவருடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ஜோயா அக்தர். இவருடைய மற்ற படைப்புகளோடு ஒப்பிடுகையில் இது ஒரு சராசரிப்படம் தான்
சபாஷ் டைரக்டர் (ஜோயா அக்தர். )
1 காட்சிகளில் ரிச்னெஸ் கண்கூடாகத்தெரிகிறது. ஒவ்வொரு காட்சியையும் நட்சத்திரப்பட்டாளத்துடன் பிரம்மாண்டமாக காட்டி இருக்கிறார்
2 இரு ஸ்டார்களின் மகள்களையும் நாயகிகளாக புக் செய்திருந்தாலும் ஒரு சீன் கூட கூடக்குறைய இல்லாமல் சம அளவு பகிர்ந்தளித்த சாமார்த்தியம்
3 படம் முழுக்க எண்ட்டர்டெய்ன்மெண்ட் செய்யும் பாடல் , இசை , நடனம்
ரசித்த வசனங்கள்
1 பாட்டில் மூடியைத்திறந்தவன் அதை அவ்ளவ் சீக்கிரம் கீழே வைக்க மாட்டான்
2 ஒரு கலையைப்பறிக்க உனக்கு உள்ளே தேடனும், வெளியே அல்ல
3 நாம மாறலைன்னா எதுவுமே மாறாது
4 ஆண்கள் நாய் வால் மாதிரி , குணத்தை மாற்றவே முடியாது
5 உன்க்கு யாரையாவது பார்த்தா ஜாலியா தோணுதுன்னா உன் காமன் சென்ஸ் உன்னை விட்டுப்போகுதுனு அர்த்தம்
6 சில நேரங்கள் நமக்கு ரொம்பவே ஸ்பெஷலாக இருக்கும்
7 நான் பெரிய தத்துவாதினு நினைக்கிறயா?
இல்லை , முட்டாள்னு நினைக்கிறேன்
8 பிராமிஸ் பண்றதே அதை மீறத்தான்
9 டேய் , ஃபோட்டோ எடுக்காதே , அப்றம் நான் உன் கூட தான் வந்திருக்கேன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடும்
ஏன்? உன் கூட தானே வந்திருக்கேன் ? தெர்ஞ்சா என்ன?
நம்ம காதலை உலகம் பூரா டமாரம் அடிக்க எனக்கு விருப்பம் இல்லை
10 என்னைப்புகழ்ந்துட்டா மட்டும் என் அன்பு உனக்கு கிடைச்சிடாது , ஆனா நீ புகழ்ந்துட்டே இரு, ஏன்னா அது எனக்கு பிடிச்சிருக்கு
11 ஒரு பிஸ்னெஸ்னு வந்துட்டா ஃபீலிங்க்ஸ்க்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடாது
12 பிராஃபிட்டைபற்றி மட்டுமே எப்பவும் சிந்திச்சுட்டு இருக்கக்கூடாது
13 எல்லாருமே ஒரே பெண்ணை கால ம் பூரா எப்படி லவ் பண்ணிட்டு இருக்காங்கனு எனக்கு ஆச்சரியமா இருக்கு ?
14 யாராவது நமக்கு ஐ லவ் யூ சொன்னா அதை எப்படி ஏத்துக்காம இருக்க முடியும் ?
15 நீங்க மத்தவங்களுக்கு எப்படித்தெரியறீங்க? என்பது முக்கியம் இல்லை . நீங்க அதை எப்படி ஃபீல் பண்றீங்க என்பதுதான் முக்கியம்
16 ஆயிரம் முறை தோற்றாலும் 1001 வது முறையும் முயற்சிக்கனும், போரடனும் , அப்போதான் ஜெயிக்க முடியும்
17 ஒரு கலையை உருவாக்கனும்னா நமக்குள்ளே தேடனும்
18 சிலது ஜெயிக்கனும்னா சிலது தோக்கனும்
19 ஆயிரம் பேருடன் போட்டி இட்டாலும் நீ ஆயிரத்தில் ஒருவனா இருக்கனும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் இரு நாயகிகளையும் காதலிப்பது நாயகிகளுக்கு முக்கால் வாசி படம் வரை தெரியவில்லை என்பதை நம்ப முடியவில்லை . மூவருமே ஒரே இடத்தில் படிப்பு . பார்ட்டி . செலிபிரேசன், டான்ஸ் எல்லாம் பண்றாங்க. எப்படி தெரியாமல் இருக்கும் ?
2 நாயகன் - நாயகி காதலில் அழுத்தம் இல்லை . அதனால் ஆடியன்ஸ் மனசில் யாருடன் சேரப்போகிறார் என்ற சஸ்பென்ஸ் , எதிர்பார்ப்பு எதுவும் இல்லை
3 எல்லோருமே பணக்காரர்களாக இருக்கிறார்கள் . அதனால் எப்படியும் பணக்காரன் ஆன வில்லனை ஈசியா ஜெயிச்சுடுவாங்க என்பது முன் கூட்டியே தெரிகிறது
4 வாக்கெடுப்பு நடத்திய சீட்களை பீரோவின் மேலே மறைத்து வைக்கும் வில்லன் அதன் மேல் ஒரு வெயிட் வைக்க மாட்டானா? ஃபேன் போட்டால் பறக்கும் என்பதை யூகிக்க மாட்டானா?
5 படத்தில் மெயின் கதை எது ? கிளைக்கதை எது? என்பதை பிரித்துப்பார்க்க முடியவில்லை , இரண்டுமே ஏனோதானோ என அழுத்தம் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - இரு காட்சிகளில் லிப் லாக் சீன் உண்டு . மற்றபடி யூ தான்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - டீன் ஏஜ் ரசிகர்கள் கொண்டாட்டமாகப்பார்ப்பார்கள் , மற்றவர்கள் ஒன் ஸ்டெப் பேக் . ரேட்டிங்
2 / 5
The Archies | |
---|---|
Directed by | Zoya Akhtar |
Written by |
|
Based on | Characters by Archie Comics |
Produced by |
|
Starring |
|
Cinematography | Nikos Andritsakis |
Music by | Songs: Shankar–Ehsaan–Loy Ankur Tewari The Islanders Aditi "Dot" Saigal Background score: Shankar–Ehsaan–Loy Jim Satya |
Production companies | |
Distributed by | Netflix |
Release dates |
|
Running time | 144 minutes[1] |
Country | India |
Language | Hindi |
Budget | est. ₹40 crore (US$5.0 million)[2] |
0 comments:
Post a Comment