த்ரிஷ்யம் , த்ரிஷ்யம் 2 , பாபநாசம் படங்களின் இயக்குநர் ஜீத்து ஜோசஃப் உடன் மோகன் லால் இணையும் படம் இது ., தியேட்டர்களில் 21/12/2023 அன்று ரிலீஸ் ஆகி ஒ டி டி யில் 21 /1/2024 அன்று வெளியாக இருக்கும் படம் . இப்படம் உலகம் முழுவதும் இதுவரை 21/12/2023 முதல் 6/1/2024 வரை 34 கோடி ரூபாய் வசூல் செய்து ஹிட் ஆன படம் . ஜீத்து ஜோசஃபின் இயக்கத்துக்காக பலரும் பாராட்டி இருந்தாலும் என் பார்வையில் திரைக்கதையில் மிக பலவீனமானதாக அமைந்த படம் ஆகவே பார்க்கிறேன்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி விழி ஒளி இழந்தவர். 12 வயதில் இருந்து அவருக்கு பார்வை தெரியாது . ஆனால் வளர்ப்புத்தந்தை கற்றுக்கொடுத்த சிற்பக்கலையை 11 வயதிலேயே கற்றவர் . ஒருவரின் முகத்தை கை விரல்களால் தடவிப்பார்த்தே தத்ரூபமாக சிலையாக வடிவமைக்க அவரால் முடியும்
வில்லன் ஒரு பொறம்பாக்கு . அரசியல்வாதியின் மகன் .இவனுக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறது . திருமணப்பத்திரிக்கை வைப்பதற்காக நண்பரின் வீட்டுக்கு வ்ருகிறான். அந்த வீட்டுக்கு அருகில் நாயகியின் வீடு இருக்கிறது
அடுத்த நாள் நாயகியின் வளர்ப்புத்தந்தை , அம்மா இருவரும் வெளியே போகிறார்கள் , நாயகி தனியாகத்தான் இருப்பார் என்பதைத்தெரிந்து கொண்டு அந்த சமயத்தில் அங்கே வந்து நாயகியை பாலியல் வன் கொடுமை செய்து விடுகிறான்
நாயகி போலீசில் புகார் கொடுக்கிறார். கோர்ட்டில் கேஸ் நடக்கிறது . நாயகி தரப்பில் ஆஜர் ஆன வக்கீல் வில்லனிடம் விலை போனதால் கேஸ் சரியாக நடக்கவில்லை
அப்போதுதான் நாயகனிடம் இந்தக்கேஸ் வருகிறது . அவர் எப்படி சாமார்த்தியம் ஆக வாதாடி கேசை செயிக்கிறார் என்பதுதான் மீதிக்கதை
நாயகி ஆக அனஸ்வரா ராஜன் விழி ஒளி இழந்த சிற்பி ஆக கச்சிதமாக நடித்திருக்கிறார். கோர்ட்டில் அவர் லாவகமாகப்பேசும்போது கைதட்டல்களை அள்ளுகிறார்
நாயகன் ஆக மோகன் லால் . ஓவர் வெயிட் போட்டு விட்டார் . நடிப்பில் குறை இல்லை
வக்கீல் ஆக சித்திக் பிரமாதப்படுத்தி இருக்கிறார். அவரது மகளாக வரும் பிரியாமணி சப்ஸ்ட்டியூட் வக்கீல் ஆக வாதாடுகிறார்
நாயகனின் ஜூனியர் வக்கீல் ஆக சாந்தி மாயாதேவி அதிக வாய்ப்பில்லை .நாயகியின் வளர்ப்புத்தந்தை ஆக ஜெகதீஷ் அற்புத நடிப்பு
ஜட்ஜ் ஆக வரும் மேத்யூ வர்கீஸ் ஓக்கே ரகம்
152 நிமிடங்கல் டைம் டியூரேஷன் வரும்படி எடிட் செய்து இருக்கிறார் வினாயக் .இசை விஷ்ணு ஷியாம் . பின்னணி இசையில் பரபர;ப்பை ஊட்டுகிறார்
சதீஷ் குரூப்பின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது
சாந்தி மாயாதேவி உடன் இணைந்து திரைக்கதை எழுதீருக்கும் ஜீத்து ஜோசஃப் படத்தை இயக்கி இருக்கிறார்
சபாஷ் டைரக்டர்
1 எதிர்க்கட்சி வக்கீல்களாக அப்பா , மகள் என இருவ்ரும் மாறி மாறி வாதிடும் ஐடியா குட்
2 இதுவரை கோர்ட் ரூம் டிராமாக்களில் எல்லாம் பார்க்காத ஒரு காட்சி இருக்கிறது, கூண்டில் ஏறும் சாட்சிகள் வக்கீல் கேட்கும் கேள்விக்கு அவரைப்பார்த்து பதில் சொல்ல ஜட்ஜைப்பார்த்து பதில் சொல்லவும் என சைகையால் வக்கீல் ஒவ்வொரு முறையும் நாசூக்காக உணர்த்துவது ஃபிரெஷ் ஆன காட்சி
3 நாயகியிடம் நாயகன் கோர்ட்டில் எப்படிப்பேசவேண்டும் என பயிற்சி தருவதும் அதன்படி அட்சர சுத்தமாக நாயகி நடந்து கொள்வதும் அருமை . நாயகனின் திட்டம் நிறைவேறியதும் எதிர்க்கட்சி வக்கீல் அந்த தந்திரத்தை உணர்வதும் அருமை
ரசித்த வசனங்கள்
1 க்ராஸ் எக்சாமினெஷன் ஈஸ் நாட் எ கேரக்டர் அசாசினேஷன்
2 சோசியல் மீடியாவில் இந்த கேசைப்பற்றி பரபரப்பா பேச் விடலாமா?
ஆனா அது கோர்ட் நடவடிக்கையை பாதிக்காது
3 அறிமுகம் இல்லாத எதிராளியை விட நன்கு தெரிந்த எதிராளி ஆபத்தானவன்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 விழி ஒளி இழந்த நாயகியை பெற்றோர் வீட்டில் தனியாக விட்டுச்செல்வது நம்பும்படி இல்லை . வேலைக்காரப்பெண்ணும் ஏன் கிளம்பிச்செல்கிறார்? அவர்கள் வரும் வரை துணைக்கு இருக்கலாமே?
2 ரேப்பை நேரில் பார்த்த சாட்சி இல்லை . சிற்பத்தை வடிவமைத்தது நாயகி தான் என்பதற்கு ஆதாரம் இல்லை , நாயகியின் அப்பா கூட அதை வடிவமைத்திருக்கலாம் என்ற வாதம் வரும்போது அப்போதே ஆன் த ஸ்பாட் நாயகி யாரோ ஒருவரின் முகத்தை ஜட்ஜ் முன்னால் தடவி சிற்பம் செய்து காட்டி இருந்தால் அப்பவே படம் ஓவர் . அந்த சீனை க்ளைமாக்ஸ் வரை இழுக்க வேண்டுமா?
3 எதிர்க்கட்சி வக்கீலை நாயகிய்டன் தனிமையில் இருக்க ஜட்ஜ் எப்படி ஒப்புக்கொள்கிறார்?
4 நாயகியை ரேப் செய்த வில்லன் மீண்டும் நாயகி வீட்டுக்கே வந்து மிரட்டுவது ஓவர். நம்பும்படி இல்லை. ஆள் வைத்து மிரட்டி இருக்கலாம்
5 எதிர்க்கட்சி வக்கீல் ஃபேக் ஆன சிசிடிவி ஃபுட்டேஜை ரெடி செய்ய ஐடியா கொடுப்பதை வீடியோ எடுத்து வைத்துக்கொள்ளும் காட்சியும் ஏற்கும்படி இல்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- யூ / ஏ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஜீத்து ஜோசஃப் + மோகன் லால் ரசிகர்கள் பார்க்கலாம். பிரமாதம் என்றெல்லாம் சொல்லி விட முடியாது . ரேட்டிங் 2/.5 / 5
Neru | |
---|---|
Directed by | Jeethu Joseph |
Written by |
|
Produced by | Antony Perumbavoor |
Starring | Mohanlal |
Cinematography | Satheesh Kurup |
Edited by | V. S. Vinayak |
Music by | Vishnu Shyam |
Production company | |
Distributed by |
|
Release date |
|
Running time | 152 minutes |
Country | India |
Language | Malayalam |
Box office | ₹ 32.6 Crore[1] |
0 comments:
Post a Comment