டைட்டிலைப்பார்த்ததும் மதுரையை எரித்த கற்புக்கரசியின் கதையோ என பயந்து ஓடி விட வேண்டாம் . நம் மனதுக்கு நெருக்கமான இரண்டு அழகிய காதல் கதைகள் , திருஷ்டிப்பொட்டு வைத்த மாதிரி சுமாரான இரு கதைகளின் தொகுப்பு தான் இந்தப்படம் .நான்கு தனித்தனி கதைகளை அடுத்தடுத்த காட்சிகளாக கலந்து கட்டி எந்த வித குழப்பமும் இல்லாமல் திரைக்கதை அமைத்தது அபாரம் . 2023 டிசம்பர் 15 அன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆன இப்படம் இப்போது அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது
ஸ்பாய்லர் அலெர்ட்
தர வரிசைப்படி நான்கு கதைகளையும் வரிசைப்படுத்திப்பார்ப்போம்
சிறுகதை 1 - நாயகிக்கு திருமணம் ஆகி விட்டது . ஆனால் கணவன் ஆண்மை இல்லாதவன். அவன் மேல் உள்ள தவறை மறைக்க நாயகி மீது பழி போட்டு டைவர்ஸ் கேட்கிறான். நாயகி எக்காரணம் கொண்டும் டைவர்ஸ் தர மாட்டேன் என அடம் பிடிக்கிறாள் . நாயகியின் சார்பாக வாதாட வரும் வக்கீல் ஒரு கட்டத்தில் நாயகியை விரும்புகிறான். நாயகிக்கும் வக்கீலைப்பிடித்திருக்கிறது . இதனால் கணவனுக்கு டைவர்ஸ் கொடுத்து விடுகிறாள் . ஆனால் வக்கீலுக்கு ஒரு தங்கை இருக்கிறாள் . இதனால் என்ன பிரச்சனை ஏற்படுகிறது? இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பது க்ளைமாக்ஸ்
நாயகி ஆக வித்யா பிரதீப் அழகாக நடித்திருக்கிறார். பெயருக்கு ஏற்றாற்போல அவருக்கு ஸ்ரீவித்யா போல் அகன்ற கண்கள் . வக்கீலாக வெற்றி நடித்திருக்கிறார். சிறப்பு
ஒரு விவாக ரத்து ஆன பெண்ணை இந்த சமூகம் எப்படிப்பார்க்கிறது என்று சொன்ன விதத்தில் இது நான்கில் முதலிடம் பெறுகிறது
சிறுகதை 2 - நாயகியின் அம்மா , அப்பா நாயகிக்கு வரன் பார்க்கிறார்கள் , வரும் வரன்கள் எல்லாரையும் நாயகியின் அம்மா எதோ காரணம் சொல்லி தட்டிக்கழிக்கிறாள் . புருசனை மதிப்பதே இல்லை . மனம் வெறுத்த புருசன் ஒரு கட்டத்தில் இறந்தே விடுகிறான்
பிறகு ஒரு பெரிய இடத்தில் மாப்பிள்ளை அமைகிறது , ஆனால் அவன் ஒரு பொம்பளைப்பொறுக்கி. நாயகியின் தாய் மாமன் மகன் கூட நாயகியைப்பெண் கேட்டு வருகிறார் இறுதியில் நாயகியின் அம்மா எடுத்த முடிவு என்ன ? என்பதுதான் க்ளைமாக்ஸ் \
மொத்தம் உள்ள நான்கு கதைகளில் இந்தக்கதைக்குதான் இயக்குநர் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அதிக காட்சிகளும் இதற்கே .
பல விமர்சனங்கள் இக்கதையைப்பாராட்டி வந்தாலும் ஒரு சாதா கதையை ஜவ்வாக இழுத்து விட்டார்கள் என்பதுதான் என் கருத்து
நாயகியாக அம்மு அபிராமி பாங்குடன் நடித்திருக்கிறார்/. நாயகியின் அம்மாவாக மவுனிகா அனைவர் வெறுப்பையும் சம்பாதிக்கும்படியும், அப்பாவாக மயில் சாமி அனைவர் மனதையும் கவரும்படியும் நடித்திருக்கிறார்
சிறுகதை 3
நாயகன் வாய்ப்புத்தேடும் ஒரு புதுமுக இயக்குநர். ஒருவர் தன் காதலியுடன் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். எதிர்பாராத விதமாக நாயகி கர்ப்பம், நான்கு மாதமாக கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள் , கருவைக்கலைத்தே ஆக வேண்டும் என கங்கணம் கட்டி அலைகிறார்கள் , பல டாக்டர்கள் கை விரித்த நிலையில் அவர்கள் என்ன முடிவு எடுத்தார்கள் என்பது க்ளைமாக்ஸ்
இக்கதையின் ஒரே பிளஸ் நாயகியாக நடித்த கீர்த்தி பாண்டியன் முக அழகு மட்டுமே
சிறுகதை 4
நாயகி பாரதியாருக்கே ஹார்ட் அட்டாக் வர வைக்கும் புதுமைப்பெண். தண்ணி அடிப்பது , கஞ்சா அடிப்பது என எல்லாம் உண்டு .பாய் ஃபிரண்டுடன் லிவ் விங் டுகெதர் வாழ்க்கை வாழ்கிறார். எல்லாவற்றுக்கும் ஓக்கே சொல்லும் இவர் மேரேஜ்க்கு மட்டும் ஓக்கே சொல்லவில்லை . ஆனால் நாயகன் தொடர்ந்து மேரேஜூக்கு வற்புறுத்த கடைசி வரை நாயகி சம்மதிக்கவே இல்லை .
புரட்சிகரமான இந்தக்கேவலமான கதையில் நாயகியாக நடித்த ஷாலின் சோயா நடிப்பு மிரட்டல் ரகம்
ஷான் ரஹ்மான் இசையில் இரண்டு பாடல்கள் சுமார் ரகம், பிஜிஎம் குட் ராம்ஜியின் ஒளிப்பதிவில் ஐந்து நாயகிகளையும் க்ளோசப் ஷாட் , லாங்க் ஷாட்களில் அழகாகப்பார்க்க முடிகிறது
கே சரத்குமாரின் எடிட்டிங்கில் காட்சிகள் குழப்பம் தராமல் நகர்வதே பாராட்டு பெறுகிறது . 157 நிமிடங்கள் படம் ஓடுகிறது
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் யஷ்வந்த் கிஷோர்
சபாஷ் டைரக்டர்
1 தற்கொலைக்கு முயன்ற பாட்டி தன் பேத்தியிடம் அதற்கான காரணத்தைக்கூறுவது அட்டகாசம். மெயின் கதைக்கும் சம்பந்தம் இல்லையென்றாலும் அருமையான தாட் பிராசஸ்
2 வக்கீல் - டைவர்ஸ் கேட்டு வரும் பெண் கதையில் இருவருக்குமான காம்போ காட்சிகள் ரொமாண்டிக்
3 மயில்சாமி ,அம்மு அபிராமி , வித்யா பிரதீப் , மவுனிகா , கீர்த்தி பாண்டியன் நடிப்பு அருமை
ரசித்த வசனங்கள்
1 நீங்க தான் என்னைப்பார்க்கும் முதல் மாப்பிள்ளை
நீங்க தான் நான் பார்க்கும் கடைசிப்பொண்ணு
2 லவ் மேரேஜ் பிடிக்குமா? அரேஞ்ஜ்டு மேரேஜ் பிடிக்குமா?
அய்ய்யே, ரெண்டுமே சுத்தமாப்பிடிக்காது , டீக்குடிக்க யாராவது டீக்க்டையையே வாங்குவாங்களா?
3 ஒரு பூ உனக்குப்பிடிச்சிருக்குன்னா அந்த பூச்செடி இருக்கும் இடத்துக்கே போய் அதுக்குத்தண்ணி ஊத்தி வளர்த்து வாசம் பார்க்கறதுதான் நல்லது , அதை விட்டுட்டு பூ வை பறிச்சு எடுத்துட்டுப்போகனும்னு நினைக்கக்கூடாது
4 போன வாரம் நீ உங்கம்மா வீட்டுக்குப்போய் இருந்தியா?
ஆமா, உனக்கு எப்படி தெரியும் ?
உன் புருசன் எனக்கு மெசேஜ் பண்ணி இருந்தான்
5 ஆயில்ய நட்சத்திரம்னா பொண்ணோட அம்மாவுக்கு ஆகாது , மூல நட்சத்திரம்னாக்கூட பரவாயில்லை , பொண்ணோட அப்பாவுக்குத்தான் ஆபத்து
6 எனக்கு அன்பு வெண்டாம், அங்கீகாரம் மட்டும் போதும்
7 உங்க கிட்டே ஏதாவது ஆதாரம் இருக்கா?
யுவர் ஆனர் , இல்லற வாழ்க்கைக்கு சிசிடி வி வைக்க முடியாது
8 தீர்ப்புதான் உங்களால குடுக்க முடியும், தீர்வு கொடுக்க முடியாது
9 சட்டம் பெண்களுக்கு சாதகமானதுதான், ஆனால் இந்த சமுதாயம் பெண்களுக்குப்பாதகமானது
10 எனக்குக்கடவுள் நம்பிக்கை இல்லை , ஆனா மனுச நம்பிக்கை உண்டு
11 புத்தர் நாட்டைத்துறந்து ஞானி ஆகி விட்டார்னு ஈசியாச்சொல்லிடறோம், ஆனா அவர் போன் பின் எவ்ளோ வலி, எத்தனை கஷ்டம்னு அவர் பொண்டாட்டிக்குத்தான் தெரியும்
12 என் நம்பிக்கை தப்பில்லை , நம்பின ஆள் தான் தப்பு
13 டோனி கூட முதல் மேட்ச்ல தோத்துத்தான் போனார்
14 லவ் , மேரேஜ் எல்லாம் லைஃப் ல வந்தா லைஃபே போர் அடிச்சுப்போயிடும்டா
அப்போ உலகம் பூரா பைத்தியக்காரங்க, நீ மட்டும் தான் புத்திசாலி ?
15 எனக்கே தோணாத எங்கம்மாவோட வலி உனக்கு எபப்டி தோணுச்சு?
ஒரு சபிக்கப்பட்ட ஆத்மாவோட வலி இன்னொரு சபிக்கப்பட்ட ஆத்மாவுக்குத்தான் தெரியும்
16 நீ பிறக்கும்போது என்னை அழ வெச்சே , இன்னும் அழ வெச்சுட்டுதான் இருக்கே
17 உன் சின்னச்சின்ன சந்தோஷங்களை எல்லாம் உன் பேராசையால் இழக்கறே
18 உன்னை என் அம்மா மாதிரி பார்த்துக்கிட்டேன்
ஏன் யாரும் உன்னை உன் அப்பா மாதிரி பார்த்துக்குவேன்னு சொல்றதில்லை ?
19 கல்யாணம் தான் நமக்கு மிகப்பெரிய பாதுகாப்பு . அந்த அங்கீகாரம் கிடைச்சாத்தான் நம் வாழ்க்கைல பூ பூக்கும்
20 எழுதப்படாத வார்த்தைகள் 1000 அர்த்தங்கள் தரும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பொதுவாக இந்துப்பெண்களின் மென்சஸ் தேதி என்ன என்பதை அறிந்து அது முடிந்த 12 வது நாள் தான் திரு்மண முகூர்த்த நாளாகக்குறிப்பார்கள் . லவ் மேரேஜ் , ஓடிப்போய் அவசரமா கல்யாணம் பண்ணிக்கறது போன்றவற்றில் இதை ஃபாலோ பண்ண முடியாது , ஆனால் அரேஞ்ச்டு மேரேஜில் நிச்சய்ம் இதை ஃபாலோ செய்வார்கள் . திருமண நாள் அன்று நாயகிக்கு மென்சஸ் ஆகி விட்டது என்ற ஒரு விஷயத்தை வைத்து காட்சிகள் நகர்வது மனதைத்தொடவில்லை
2 நான்கு வெவ்வேறு சிறுகதைகளாக்காட்டி க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் வைக்கிறேன் பேர்வழி என நான்கு கதைகளுக்கும் ஒரு கனெக்சன் கொடுப்பதாக இயக்குநர் எடுத்த முடிவு மகா சொதப்பல். ஓப்பனிங் எல்லாம் நல்லாதான் இருக்கு , ஃபினிசிங் சரி இல்லை என்பதாய் ஆகி விட்டது
3 முற்போக்கு மாடர்ன் கேர்ள் ஆக வரும் பெண் தன்னை ப்ரப்போஸ் செய்யும் காதலனை அனைவர் முன்னிலையிலும் உதைப்பது , ஆஃபீசில் டேபிளில் காலைத்துக்கி மேலே போடுவது , கஸ்டமரை அவமானப்படுத்துவது என பெண்களை ஓவராக மட்டம் தட்டி இருக்கிறார் இயக்குநர்
4 மாடர்ன் கேர்ள் என்றால் தண்ணி அடிப்பார் , தம் அடிப்பார் , மேரேஜ் பண்ணிக்க விரும்பாமல் மற்றதுக்கு எல்லாம் ஓக்கே சொல்வார் என சித்தரித்தது கொடூரம்
5 லிவ்விங் ரிலேசன் ஷிப்பில் வாழும் ஜோடி நான்கு மாத கர்ப்பம் என ஆன பின் கருவைக்கலைக்க நினைப்பது சுத்தமாக நம்பும்படி இல்லை . மீதி 3 மாதங்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ?
6 க்ளைமாக்சில் வரும் லேடி ரைட்டர் ஐந்து ஆண்களுடன் வாழ்ந்தவர் என்பதால் டைட்டிலாக பாஞ்சாலி என்று வைக்காமல் விட்டது ஏனோ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ //ஏ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பொறுமைசாலிகள் மட்டும் பார்க்கலாம். பெண்களுக்குப்பிடிக்கும் ரேட்டிங் 2.25 / 5
Kannagi |
---|
Theatrical release poster |
Directed by | Yashwanth Kishore |
---|
Written by | Yashwanth Kishore |
---|
Produced by | M Ganesh J Dhanush |
---|
Starring | Keerthi Pandian Ammu Abhirami Vidya Pradeep Shaalin Zoya |
---|
Cinematography | Ramji |
---|
Edited by | K.Sarath Kumar |
---|
Music by | Shaan Rahman |
---|
Production companies | Sky Moon Entertainment and E5 Entertainment |
---|
Distributed by | Sakthi Film Factory |
---|
Release date | 15 December 2023 |
---|
Country | India |
---|
Language | Tamil |
---|