Thursday, January 18, 2024

காதல் தி கோர் (2023) - மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்

 


நெட்டிசன்களால்  ஆஹா  ஓஹோ  அபாரம்  பரிமளா  ரேஞ்சுக்குக்கொண்டாடப்பட்ட  ஒரு  படம்  இது . நடிகர்கள் , நடிகைகளின்  தரமான  நடிப்பு  இருந்தாலும் , கதைக்கரு , திரைக்கதை  அமைப்பு   ஆகியவற்றில்  நம்பகத்தன்மையே  இல்லாத  ஒரு  படமாகவே  நான்  இதைப்பார்க்கிறேன். 


தென்னிந்திய  மொழிகளில்  இது  மாதிரி  ஒரு  கேரக்டரை  ஏற்று  நடிக்கும்  துணிச்சல்  2013ல் மும்பை  போலீஸ்  எனும்  மலையாளப்படத்தில்  நடித்த  பிருத்விராஜ்க்கு  இருந்தது . இப்போது  மம்முட்டிக்கு  வந்திருக்கிறது . மம்முட்டியின்  சொந்தப்படம்  இது .. 54 வதுஇந்திய  பனோரமா  பிரிவில்  இடம்  பெற்ற  படம் இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  தன்  65  வயதான  அப்பா , 40  வயதான  மனைவி , 18  வயதான  மகள்  இவர்களுடன்  ஒரு  வீட்டில்  வசித்து  வருகிறார். இவர்   ஒரு  கட்சியில்  உறுப்பினராக  இருக்கிறார். ஊரில்  நாயகனுக்கு  நல்ல பெயர்  இருப்பதாலும் , கட்சியில்  அவரது  பணி  மெச்சத்தக்கதாகவும்   இருப்பதால்  பஞ்சாயத்துத்தேர்தலில்  கட்சி  சார்பாக  வார்டு  கவுன்சிலர்  ஆக  நிற்க  கட்சி  அவருக்கு  ஒரு  வாய்ப்பளிக்கிறது 


இந்த  சமயத்தில்  தான்  நாயகனுக்கு  ஒரு  அதிர்ச்சி  செய்தி  காத்திருக்கிறது . நாயகனின் மனைவி  விவாக  ரத்து  கேட்டு  நோட்டீஸ்  அனுப்பி  இருக்கிறார். கோர்ட்டில்  கேஸ்  நடக்கிறது . ஊரில்   நாயகனுக்குக்கெட்ட  பெயர்  ஏற்படுமோ  என  நாயகன்  பயப்படுகிறான்.மனைவியை  சமாதானப்படுத்த  நினைக்கிறான்


இதற்குப்பின்  கதையில்  நடந்த  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை . நாயகிக்கு  விவாக  ரத்து  கிடைத்ததா?  நாயகன்  தேர்தலில்  வெற்றி  பெற்றானா? என்பது  க்ளைமாக்ஸ் 


  நாயகன்  ஆக  மம்முட்டி  அபாரமான  நடிப்பு . இதுவரை  காட்டாத  சில  முக பாவனைகளால்  கவர்கிறார்.அதிகம்  யாரிடமும்  பேசாத  ரிசர்வ்  டைப்  ஆக  அவர்  தன்னைக்காட்டிக்கொள்வது  குட் 


 நாயகி  ஆக  ஜோதிகா. தரமான  நடிப்பு. வழக்கமாக  ஓவர்  ஆக்டிங்  செய்யும்  நடிகை  ஆன  இவர்  இதில்  அடக்கி  வாசித்து  இருக்கிறார் 


நாயகனின்  அப்பாவாக  ஆர்  எஸ்  பணிக்கர்  சிறந்த  குணச்சித்திர  நடிப்பை  வெளிப்படுத்துகிறார் 


நாயகனின்  மகளாக  அனகா  மாயா  ரவி  சில  காட்சிகளே  வ்ந்தாலும்  சீரான  நடிப்பு 


114  நிமிடங்கள்  மட்டும்  ஓடும்படி  ஷார்ப்  ஆக  கட்  செய்து  இருக்கிறார்  எடிட்டர்  பிரான்சிச்  லூயிஸ் 


மாத்யூஸ்  புலிக்கன்  இசையில்  அடக்கி  வாசித்து  இருக்கிறார். பின்னணி  இசையில்  பல  இடங்களில்  மவுனமே  கதை  சொல்கிறது 


சாலு  கே  தாமஸ்  ஒளிப்பதிவு  செய்திருக்கிறார். கச்சிதம் 


ஆதர்ஸ்  சுகுமாரன்  பால்சன்  ஸ்கரியோர்  ஆகியோர்  எழுதிய  திரைக்கதைக்கு  ஜியோ  பேபி  உயிர்  ஊட்டி  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர் (ஜியோ  பேபி) 


1  கதைக்கரு  ஒரு  மார்க்கமாக  இருந்தாலும்  காட்சி  ரீதியாக  கண்ணியமாக  வடிவமைத்த  இயக்குநரின்  சாமார்த்தியம், 

2    செலவே   இல்லாமல்  ஒரே  வீட்டு  லொக்கேஷனில்  முழுப்படத்தையும்  முடித்த  லாவகம் 


  ரசித்த  வசனங்கள் 

1  வேண்டாதவங்களா  இருந்தாலும்  முகத்துக்கு  நேராகத்தான் எதுவா  இருந்தாலும்  சொல்வாங்க 


2   அப்பா , உங்க  கூட பேசாம  இருந்தது  கோபத்தால்  அல்ல , சங்கடத்தால் 


3   நான்  எடுத்த  முடிவில்  இருந்து  பின்  வாங்கினா  அது  எனக்கு  நானே  செய்து  கொள்ளும்  துரோகம் 


4   நம்மை  நேசிக்கறவங்க  நம்மை  விட்டுப்போய்டுவாங்களோ? என்ற பயம்  எல்லோருக்கும்  இருக்கும் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  இருபது  வருடங்களாக  நாயகன் - நாயகி  உறவு  நான்கே  முறை  தான்  நடந்து  என  கோர்ட்டில்   தெரிவிக்கும்  தகவல்  அதிர்ச்சி  அளித்தது  என்றாலும்  இப்போ  எடுத்த  முடிவை  அப்போதே  ஏன்  எடுக்கவில்லை?  என்ற  கேள்விக்கு  பதில்  இல்லை 


2  நாயகன்  நாயகியின்  வாழ்க்கையையே  சீரழுத்து  விட்டு  ரொம்ப  கூலாக  சாரி  என்று  சொல்வது  ஏற்றுக்கொள்ளும்படி  இல்லை 


3  நாயகன்  ஒரு  ஹோமோ  என்று  தெரிய  வந்ததும்  அதிர்ச்சியும், அருவெறுப்பும்  அடைந்த  நாயகி  ஒரு  கட்டத்தில்  இன்று  ஒரு  நாளாவது  என்  கூட  இதே  பெட்ரூமில்  இருக்க  முடியுமா? என்று  கேட்பது  கஷ்ட காலம்


4  ஊர் மக்கள் நாயகன்  ஹோமோ  மேட்டர்  தெரிந்தும்  அதை  சாதாரணமாக  எடுத்துக்கொள்வதாகவும், அது  அவர்  பர்சனல்  மேட்டர்  என்று  சொல்வதாகவும்  காட்டி  இருப்பது  காதில்  பூ 


5   கோர்ட்டில்  நாயகனுக்கு  எந்த  தண்டனையும்  வழங்காதது  ஏன்?   


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - மம்முட்டியின்  மாறுபட்ட  நடிப்பு  மட்டுமே  பிளஸ் , மற்றபடி  சின்ன  வயதில்  காது  குத்தல்  விழா  நடத்தாதவர்கள்  பார்க்கலாம் . ரேட்டிங் 2 / 5 


Kaathal – The Core
Theatrical release poster
Directed byJeo Baby
Written by
  • Adarsh Sukumaran
  • Paulson Skaria
Produced byMammootty
Starring
CinematographySalu K. Thomas
Edited byFrancies Louis
Music byMathews Pulickan
Production
company
Mammootty Kampany
Distributed byWayfarer Films
Release date
  • 23 November 2023
Running time
114 minutes
CountryIndia
LanguageMalayalam
Box officeest. ₹14.5

0 comments: