வன்முறைகள் நிறைந்த மாமூல் மசாலாக்குப்பைகளைப்பார்ப்பதை விட மொக்கைக்காமெடியாக இருந்தாலும் இது மாதிரி காமெடிப்படங்கள் பார்ப்பது நல்லது , தியேட்டர்களில் ரிலீஸ் ஆனபோது கலவையான விமர்சனங்கள் வந்திருந்தாலும் தமிழ் டப்பிங்கில் ஓ டி டி ரிலீஸ் ஆக வந்தபோது பலரின் பாராட்டுதல்களைப்பெற்ற படம் இது . முதல் பாதி காமெடி , பின் பாதி மொக்கைக்காமெடி
. ஆர் பாண்டியராஜன் நடித்த கதா நாயகன் , எஸ் வி சேகர் , மோகன் நடித்த சகாதேவன் மகாதேவன் , ஆர் பார்த்திபன்- கவுண்டமணி நடித்த வீ ஆர் நாட் டாட்டா-பிர்லா ஆகிய படங்கள் உங்களுக்குப்பிடிக்கும் என்றால் இதுவும் பிடிக்கும்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு பேங்க் கேஷிய்ர். பணி புரியும் இடத்தில் 25 ல்ட்சம் ரூபாய் கேஷ் ஷார்ட்டேஜ். உடண்டியாக பணம் ரெடி பண்ண வேண்டும். அவரது மனைவி வீட்டில் இருந்த நகைகளை எல்லாம் ஒரு டுபாக்கூர் பார்ட்டியிடம் கொடுத்து ஏமாறுகிறார். முதல் மகன் அவனது காதலிய்டன் நெருக்கமாக இருந்ததை யாரோ வீடியோ எடுத்து 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுகிறார்கள் . இரண்டாவது மகன் சூதாட்டத்தில் ரூ 15 லட்சம் இழக்கிறான்
மொத்தக்குடும்பத்துக்கும் இப்போது உடனடி பணத்தேவை அதனால் பக்கத்து வீட்டில் திருடப்போவது , கொள்ளை அடிக்கப்போவது என முயற்சி செய்து தோற்கிறார்கள் .
வில்லன் ஒரு தாதா . அரசியல்வாதி ஆக ஆசைப்படுபவன். அவனிடம் ஒரு கடத்தல் சரக்கு இருக்கிறது . அதைக்கைப்பற்ற ரெகுலராக அவனுக்கு வேலை பார்ப்பவர்களை போலீஸ் கண்காணிப்பதால் புது ஆட்கள் தேவைப்படுகிறார்கள் . நாயகனின் குடும்பத்தை யூஸ் பண்ணி செய்யும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக தேவி பிரசாத் கச்சிதமான காமெடியில் கலக்கி இருக்கிறார். அவரது மனைவியாக நடித்தவர் பல இடங்களில் ஓவர் ஆக்டிங்
மூத்த மகனாக நடித்தவர் பரவாயில்லை , இளைய மகனாக நடித்தவர் சுமார் ரக நடிப்பு
இரு மகன்களுக்கும் ஜோடிகளாக வரும் நடிகைகள் இருவருமே ஓக்கே லெவல்
வில்லன் ஆக வருபவர் வில்லத்தனம் அதிகம் செய்யாமல் மொக்கைக்காமெடி செய்வது ஒரு ஆறுதல்
ஸ்ரீஜனா ஆடுஸ்மிலி தான் படத்தின் எடிட்டிங் . 136 நிமிடங்கள் வரும்படி ட்ரிம் செய்து இருக்கிறார். பின் பாதியில் ஜவ்விழுப்புக்காட்சிகள் அதிகம் . இன்னும் ஷார்ப் ஆக ட்ரிம் செய்து இருக்கலாம்
இசையை மூவர் பகிர்ந்து அளித்திருக்கிறார்கள் . இரு பாடல்கள் தேறுகின்றன. பின்னணி இசை பரவாயில்லை ரகம்
ராகுல் ஸ்ரீவத்சவ் தான் ஒளிப்பதிவு . கச்சிதம்
ராஜீவ் கோசானம் தான் வசனம் .பல இடங்களில் கிரேசி மோகன் டைப் வார்த்தை ஜாலக்காமெடிகள் , கவனிக்க வைக்கின்றன.
ரவி கோலி தான் திரைக்கதை முதல் பாதியில் கலகலப்பாகக்கொண்டு போனவர் பின் பாதியில் தடுமாறி இருக்கிறார்
இயக்கம் சின்ன பாப்பிசெட்டி
சபாஷ் டைரக்டர்
1 நாயகனின் மனைவி ஒரு புடவைப்பைத்தியம் என்ற ஒரு வரி மேட்டரை வைத்து படம் நெடுக காமெடி களை கட்ட அதை யூஸ் பண்ணிய விதம் அருமை
2 இளைஞர்களைக்கவர நாயகனின் இரு மகன்களுக்குமான இரு வேறு காதல் டிராக்குகளை சுவராஸ்யமாக அளித்த விதம்
3 மெயின் கதைக்குப்போகும் முன் நாயகன் அண்ட் கோ ஈடுபடும் சில்ல்றைத்திருட்டு முயற்சிகள் கலகல
ரசித்த வசனங்கள்
1 ஆடவே தெரியாத சிலுக்கு இடுப்புல சுளுக்குனு சொன்னாளாம்
2 ஃபோட்டோகிராஃபி கத்துக்கிட்டா பொண்ணுங்க விழுந்திடும்னு எந்தப்பரதேசியோ இந்தப்பரதேசி கிட்டே சொல்லி இருக்கு
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
மொக்கைக்காமெடிப்படத்தில் லாஜிக்ஸ் பார்க்க நினைத்தால் படத்துக்கே போகக்கூடாது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ / ஏ ( காட்சி ரீதியாக 18+ இல்லை ஆனால் வசனத்தில் லைட் க்ரீன் உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மொக்கைக்காமெடிப்பட ரசிகர்கள் தாராளமாகப்பார்க்கலாம் . ரேட்டிங் 2.5 / 5
Narayana & Co | |
---|---|
Directed by | Chinna Papisetty |
Story by | Ravi Goli Dialogue: Rajiv Kosanam |
Produced by | Papisetty Brothers Sudhakar Komakula |
Starring | Sudhakar Komakula Arati Devi Prasad |
Cinematography | Rahul Shrivatsav |
Edited by | Srujana Adusumilli |
Music by | Dr. Josyabhatla Sharma Naga Vamshi Suresh Bobbili |
Production companies | Papisetty Film Productions Sukha Media |
Release date |
|
Running time | 136 minutes |
Country | India |
Language | Telugu |
0 comments:
Post a Comment