குங்கப்பூவே கொஞ்சும் புறாவே செம ஹிட் பாட்டை யாரும் மறந்திருக்க மாட்டோம், அந்த வரியில் டைட்டிலாக கொண்டு ஒரு படமே சமீபத்தில் வெளியானது . கருங்குயில் குன்றத்துக்கொலை என்னும் நாவலைத்தழுவி திரைக்கதை எழுதியவர் வீணை எஸ் பாலச்சந்தர் . நல்ல திரைக்கதையாக அமைந்தும் வெளி வந்த கால கட்டத்தில் கமர்ஷியலாக இது வெற்றி பெறவில்லை
( என விக்கி பீடியா கூறுகிறது )
ஸ்பாய்லர் அலெர்ட்
சம்பவம் 1 - வில்லன் ஒரு கொள்ளைக்காரன், அவனைத்துரத்திக்கொண்டு போலீஸ் கூட்டம் வந்த போது அவன் ஒளிந்திருக்கும் இடம் தெரிந்தும் போலீசில் காட்டிக்கொடுக்காமல் நாயகி காப்பாற்றியதற்காக வில்லன் உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் , எப்போது வேண்டுமானாலும் கேள் நிறைவேற்றுகிறேன் என வாக்குக்கொடுக்கிறான்
சம்பவம் 2 - நாயகன் ஒரு ஜமீன் வாரிசு. குதிரையில் நண்பனுடன் உலா வரும்போது வீரப்பன் ராஜ்குமாரை பணயக்கைதியாகப்பிடித்து வைத்துக்கொண்டது போல நாயகனைப்பிடித்து வைத்துக்கொண்டு ஜமீனுக்கு பணம் கேட்டுத்தூது விடுகிறான். அப்போது அங்கே வந்த நாயகி நாயகனை விடுவிக்குமாறு வில்லனிடம் கூறுகிறாள் . தன் வாக்கை வில்லன் நிறைவேற்றுகிறான்
சம்பவம் 3 - நாயகியின் வீட்டில் தங்கி நாயகன் இளைப்பாறுகிறான். இருவருக்கும் காதல். நாயகியின் அப்பாவிடம் காதல் விஷயத்தைச்சொல்லி திருமணத்துக்கு சம்மதம் கேட்கிறான். ஆனால் அவர் மறுக்கிறார். நீங்கள் அரசகுலம், என் மகள் தீண்டத்தகாதவள் என்கிறார்
சம்பவம் 4 .- இது 16 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஃபிளாஸ்பேக். கருங்குயில் குன்றம் என்ற ஜமீனுக்கு ராஜாவாக இருந்தவர் உடல் ஊனமுற்றவர். அதனால் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை . தன் தம்பிக்கு திருமணம் செய்து வைத்து ஜமீனுக்கு ராஜா ஆக்குகிறார். ஒரு கட்டத்தில் தம்பிக்கு சம்பந்தம் செய்த இடத்தில் அதாவது தம்பியின் மனைவியின் அப்பாவுக்கும் , ஜமீன் ராஜாவுக்கும் தீரா பகை ஏற்படுகிறது. அதனால் உன் மனைவியை விவாகரத்து செய் என ராஜா கூற தம்பி மறுக்கிறான். அதனால் கோபம் அடைந்த ராஜா அப்போ ஜமீனை விட்டு வெளியேறு என்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த தம்பி என்னை துரத்தும் உன்னைக்கொலை செய்யாமல் விட மாட்டேன் என கூறுகிறார். அன்று இரவே ஜமீன் ராஜா கொலை செய்யப்பட தம்பி கைதாகிறார். கோர்ட்டில் வழக்கு நடக்கிறது . சந்தர்ப்பங்கள் , சாட்சியங்கள் தம்பிக்கு எதிராக இருக்கின்றன . சிறை தண்டனை விதிக்கப்படுகிறது . சிறையில் இருந்து தப்பிய தம்பி தன் மனைவியைப்பார்க்கப்போகிறான். அவளுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை . தன் மகளைக்காண்கிறான். அவளைத்துக்கிக்கொண்டு தப்பி விடுகிறான். அந்த தம்பி தான் நாயகியின் அப்பா , ஜமீன் ராணி ஆக வேண்டியவர் தான் நாயகி . நாயகியின் அம்மாவின் தம்பி தான் நாயகன், அதாவது நாயகனின் அக்கா மகள் தான் நாயகி , கட்டிக்கும் முறைப்பெண்
நாயகி ஜமீன் மாளிகைக்குப்போகிறாள் . அம்மாவுக்கு நாயகி தான் தன் மகள் என்பது தெரியாது . இதற்குப்பின் உண்மையான கொலையாளியை எப்படிக்கண்டுபிடித்தார் நாயகி என்பதே மீதி திரைக்கதை
நாயகன் ஆக சிவாஜி கணேசன் கச்சிதமான நடிப்பு. முதல் பாதியில் ஓவர் ஆக்டிங் எந்த இடத்திலும் இல்லை .
நாயகி ஆக நாட்டியப்பெரொளி பத்மினி நடிப்பு செம , பாடல் காட்சிகளுக்கான நடனங்கள் நளினம்
டி எஸ் பாலைய்யா நடிப்பு குட் . நாயகியின் அம்மாவாக சந்தியா ( இவர் தான் ஜெ வின் அம்மா என நினைக்கிறேன் )
காமெடிக்கு சந்திரபாபு.ஒரு பாட்டுக்கு அவரது நடனம் அட்டகாசம்
203 நிமிட்ங்கள் என விக்கிப்பீடியா கூறுகிறது , ஆனால் யூ ட்யூப் வெர்சனில் 150 நிமிடங்கள் எடிடட் வெர்சன் தான் கிடைக்கிறது
எஸ் எம் சுப்பையா வின் இசையில் ஏழு பாடல்கள், அவற்றில் மூன்று சூப்பர் டூப்பர் ஹிட்
சைலென் பொஸ் தான் ஒளிப்பதிவு . ஓக்கே ரகம்
டிஎஸ்டி சாமி என்பவர் தான் நாவல் ஆசிரியர் . நாவலை திரைக்கதை ஆக்கி வசனம் எழுதியவர் முரசொலி மாறன் . இயக்கம் எஸ் எம் ஸ்ரீ ராமுலு நாயுடு
, சபாஷ் டைரக்டர்
1 தெளிவான திரைக்கதை . குழப்பம் ஏற்படுத்தும் சம்பவங்கள் ஏதும் இல்லாமல் ஆல் செண்ட்டர் ஆடியன்சுக்கும் புரியும் வண்ணம் கதை சொன்ன விதம்
2 கதைப்படி நாயகிக்குத்தான் காட்சிகள் அதிகம், நாயகன் ஆக சிவாஜியை நடிக்க வைத்த சாமார்த்தியம் குட்
3 ஏழு பாடல்களில் மூன்று பாடல்கள் செம ஹிட் . பாடலைப்படமாக்கிய விதம் அழகு
4 பத்மினியின் ஆடை அலங்காரங்கள் , நாயகி- நாயகன் கெமிஸ்ட்ரி , நாயகியின் நடனம் அனைத்தும் அருமை
செம ஹிட் சாங்க்ஸ்
1 பாலும் நீரும் போல்
2 மாலை மயங்குகின்ற நேரம்
3 கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
4 பச்சைக்கிளி போல பவளச்சரம் போல பருவ அழகு ஜொலி ஜொலிக்க
5 ஆடினாள் நடனம் ஆடினாள் அமுதத்தமிழ் மொழியில்
6 குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே
7 காவிரி பாயும்
ரசித்த வசனங்கள்
1 இவள் தீண்டத்தகாதவளா? ஆம், என்னைத்தவிர வேறு யாரும் தீண்டத்தகாதவள்
2 உன்னை நம்பாவிட்டால் இந்த உலகத்தில் நம்பிக்கை என்ற வார்த்தைக்கே அர்த்தம் இருக்காது
3 பதினாறு வருடங்களுக்கு முன் கவர்னருக்கு என் அப்பா செய்த சமையல் இது , அதை அப்படியே பத்திரமா வெச்சிருந்து உனக்குத்தர்றேன்
4 என்னை கழுதை வேணும்னாலும் கூப்பிடு ஆனா அண்ணா என்று மட்டும் கூப்பிட்றாதே!
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகி வீட்டில் பணிப்பெண்ணாக இருப்பவர் கழுத்தில் ஒரு நெக்லஸ் , செயின் , கையில் வளையல்கள் என தக தக தங்கமாக ஜொலிக்கிறதே? வசதியாக இருந்தாலும் வேலைக்கு வந்த இடத்தில் இப்படி ஆபரணங்களை அணிவார்களா? ( இதுல காமெடி என்னன்னா நாயகி எந்த விதமான நகையும் அணியவில்லை )
2 கடற்கரையில் ஒதுங்கிய நாயகி கடல் நீரில் நனைந்து இருக்கிறாள் , அவளைக்காப்பாற்றிய பெண் நாயகியின் ஈர உடைகளை மாற்ற ஏற்பாடு செய்யாமல் ஒரு போர்வையை மட்டும் போர்த்தி விடுகிறார்
3 நாயகியின் அப்பா நாயகிக்கு எழுதிய கடிதத்தை நாயகியிடம் நாயகியின் அம்மா தான் தருகிறார். தன் கணவனின் கையெழுத்தே அவருக்கு பார்த்த ஞாபகம் இருக்காதா? சந்தேகமாக இதை எங்கேயோ பார்த்தது போல் இருக்கே ? என்கிறார்
4 நாயகியின் அம்மா உண்மையான கொலையாளி யார்? என்பதை இந்த உலகத்துக்குச்சொல்வேன் , கண்டுபிடிப்பேன் என்கிறார். 16 வருடங்களாக என்ன செய்து கொண்டுஇருந்தார் ?
5 நாயகியின் அப்பா ஒரு கட்டத்தில் தன் மகள் ஆன நாயகியிடம் இந்த அரணமனையில் யாருக்கும் தெரியாத ரகசிய வழிகள் எனக்குத்தா தெரியும் என்கிறார். ஆனால் வில்லன் ரக்சியமாக பொற்காசுகளை வைத்த குகை இருக்குகிடம் தெரியவில்லை ?
6 மெயின் வில்லனைப்பின் தொடர்ந்து நாயகி ரகசியக்குகைக்குள் போகும்போது தலையில் பூச்சூடி இருக்கிறார். அந்தப்பூ வாசம் வில்லனுக்குத்தெரியவில்லையா? பூவாசம் தன்னைக்காட்டிக்கொடுத்து விடும் என நாயகிக்குத்தெரியாதா?
7 பிஞ்சகன் 16 வருடங்களாக மன்னனின் வைரங்களை ஒரு குகையில் பாதுகாத்து ஏன் வைக்க வேண்டும் ? டெய்லி அல்லது அப்பப்ப வந்து பார்த்துட்டுப்போக அது என்ன அத்தை பெண்ணா? அதை எடுத்துக்கொண்டு எங்காவது ஓடி இருக்கலாமே?
8 நாயகன் நாயகியின் அப்பா போல மாறு வேடம் அணிந்து வருகிறார். அவர் தான் தன் அப்பா என நினைத்து சில ரக்சியங்களை நாயகி கூறுகிறார். பொதுவாக பெண்களுக்கு அறிவு , புத்திக்கூர்மை அதிகம், தன் சொந்த அப்பாவுக்கும், மாறு வேடம் போட்ட தன் காதலனுக்கும் வித்தியாசம் தெரியாதா? உடல் மொழி , வியர்வை வாசம் காட்டிக்கொடுக்காதா?
9 ஜமீன் வாரிசான நாயகன் ஒரே ஒரு கட்டை மீசையை ஒட்டு மீசையாக வைத்துக்கொண்டு ஒரு வீட்டில் வேலை பார்க்கும்போது யாருக்குமே அவரை அடையாளம் தெரியவில்லை என்பது பூச்சுற்றல்
10 கொலைகாரன் அடியாளுக்கு எழுதிய கடிதத்தில் கொலை பற்றி விபரமாக எழுதி இருக்கிறது. இருவருமே ஒரே இடத்தில் தான் இருக்கிறார்கள்? எதற்கு கடிதம் எழுதி சாலிட் எவிடென்சை உருவாக்கி சிக்கிக்கொள்ள வேண்டும் ?
11 சிவாஜி யின் கடைசி 30 நிமிட நடிப்பு ஓவர் ஆக்டிங்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஜாலியாக்ஜப்போகும் ரொமாண்டிக் டிராவாகப்பார்க்கலாம், க்ரைம் த்ரில்லர் என விளம்பரபபடுத்தினாலும் த்ரில்லிங்க் எலிமெண்ட்ஸ் அதிகம் இல்லை , சிவாஜி - பத்மினி கெமிஸ்ட்ரிக்காக, பாட்டுக்காக பார்க்கலாம் . ரேட்டிங் 2.5 /5
0 comments:
Post a Comment