Friday, December 20, 2024

CARRY ON (2024 ) -அமெரிக்கன் மூவி - ஆங்கிலம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் ) @ நெட் பிளிக்ஸ்

         

        இயக்குனர் ஜாம் கலேட்  சாரா  வின் படங்கள்  எப்போதும்  ஸீட் எட்ஜ்  த்ரில்லராகத்தான்  இருக்கும்  ORPHAN (2009) ,UNKNOWN (2011) ,NONSTOP (2014), RUN ALL NIGHT (2015)  உட்பட  அவர் இயக்கிய 13  படங்களுமே  செம  விறுவிறுப்பானவை     CARRY ON படம் நெட் பிளிக்ஸ் க்காக  தயாரிக்கப்பட்டு  13/12/2024  முதல் நெட் பிளிக்ஸ் ஓ டி டி யில் காணக்கிடைக்கிறது .தமிழ்  டப்பிங்கில்  இருக்கு   


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  விமான நிலையத்தில் செக்கிங்க் செக்சனில்  வேலை பார்ப்பவர் .பயணிகளின்  லக்கேஜ்களை  மானிட் ட ர்  செய்து கிளியர் பண்ணி விடும் வேலை . இவருக்கு  ஒரு போலீஸ் ஆபீசர் ஆக வேண்டும் என்பதுதான் லட்சியம் . பல  வருடங்களாக  நன்றாக  வேலை பார்த்தும்  பிரமோஷன்  கிடைக்கவில்லையே என்ற  ஆதங்கம்  இவருக்கு உண்டு . இவருக்கு  ஒரு காதலி உண்டு . லிவ்விங்க்  டுகெதர்  வாழ்வில்  இப்போது அவர் கர்ப்பமாகஇருக்கிறார் . காதலியும்  அதே  விமான நிலையத்தில்  வேறு செக்சனில்  வேலை பார்ப்பவர் .


ஒரு நாள்  வில்லன்  நாயகனுக்கு   கால்  பண்ணி  இப்போ  ஒரு லக்கேஜ்  வரும், அதைக்கண்டுக்காம விட்டுடு . என் ஆள்   சிவப்புக்கலரில்  தொப்பி போட்டிருப்பான் . என் பேச்சை  மீறி  நீ ஏதாவது  செய்ய நினைத்தால்  உன் காதலி காலி  என  மிரட்டுகிறான் . நாயகன்  வில்லன் கண்ணில்  மண்ணைத்தூவி  விட்டு ஹையர் ஆபீசர்சை  எச்சரிக்க முயற்சிக்கிறான் , ஆனால்  அது  நடக்கவில்லை . வில்லன் நாயகனை கேமரா  மூலம் கண்காணிக்கிறான் .எதுவும்  செய்ய முடியாத சூழல் . இப்படி  இருக்கும்போது  நாயகன்   அந்த சூட்கேசில்  டைம் பாம் இருப்பதைக்கண்டு பிடிக்கிறான் . இதற்குப்பின்  அவன்  மேற்கொள்ளும்  சாகசங்கள்  தான் மொத்தத்திரைக்கதையுமே 

டாரூன் எஜ்ர்டடன்   தான்  நாயகன் .படம் முழுக்க  அவரது ஆதிக்கம் தான் .கலக்கி இருக்கிறார்  நடிப்பில் . ஆக்சன்  சீக்வன்சில் .நாயகி ஆக சோபியா கர்சன்  அழகாக  வந்து போகிறார் 


டேனியல் டெட்லியர்  ஏர் போர்ட் ஸ்பேஷல்  ஆபீசர்   ஆக  வருகிறார் .  ஜேசன் பேட்மான் தான் வில்லன் .கடுப்பேற்றும்  வில்லத்தனம் 


லைல்  வின்செண்ட்டி ன்  ஒளிப்பதிவு  கலக்கல்  ரகம் . லாரன்  பெல்லீவின் பின்னணி இசை விறுவிறுப்பு . எடிட்டிங்க்  காண கச்சிதம் 119 நிமிடங்கள்  ஓடுகின்றன . ஒரு சீன கூட போர் அடிக்கவில்லை 


சபாஷ்  டைரக்டர்


1  ஓடும் காருக்குள்  ஒரு தள்ளு முள்ளு பைட்  சீன்  செமையாக படமாக்கப்பட்டவிதம் . இதற்கு முன் எந்தப் படத்திலும் வராத சீன் 


2  கமலின்  குருதிப்புனலி ல்   வில்லனால் மிரட் டப்பட்டு  நாயகன்  வேறு  வழி இல்லாமல் வில்லன் சொன்னபடி  கைப்பாவையாக மாறுவதும் , பின்   சாகசம்  செய்வதுமான ஒன்  லைன் தான் இதுவும் என்றாலும் மாறுபட திரைக்கதை 


3  டைம் பாம்  இருக்கும்  விமானத்தை நிறுத்தினால்  வில்லன்  பாமை வெடிக்க வைத்தது விடுவான் . அப்போ ஏர்போர்ட்டில் சேதம் அதிகமாகும், .இந்த சூழலை நாயகன் கையாளும்  விதம் கை  தட்ட வைக்கும் 


  ரசித்த  வசனங்கள் 


1   கர்ப்பிணிப்பெண்கள்  காபி குடித்தால் கருவுக்கு /பிறக்கப்போகும் குழந்தைக்கு ஆபத்து .அவங்க  ஐ க்யூ பாதிக்கபப்டும் 


2  பொறுமைன்னா  என்ன?ன்னே  தெரியாத  2 லட் சம்  கஸ்டமர்ஸை சமாளிக்கணும் 


3 மீட்டிங்க்கு கேடடா  வந்துட்டு பிரமோஷன் வேற வேணுமாக்கும் ? 


4  ஒரு விஷயத்தை முயற்சி  பண்ணாமயே  ஒதுக்குவது தப்பு 


5  நீ  என்ன செய்யணும்? தெரியுமா?  நீ பண்ண வேண்டிய எதையுமே பண்ணாமல் இருக்கனும் 


 6   உலகம்  உன்னைத்தோற்கடிக்க நினைச்சா நீ தோத்துடுவியா ?


7  இந்த உலகம்  எப்படி இயங்குது தெரியுமா?   கட்டுப்படுத்தறவங்க  இருப்பாங்க .அவங்களுக்குகட்டுப்படுபவர்கள் இருப்பாங்க . இந்த  இரு தரப்புகள் தான் மொத்த உலகத்தையும் இயக்குது 


8   காரியம்  பெருசா  இருந்தா  அதை செயல்படுத்துபவர்கள்  இந்த  உலகத்துல கம்மியாத்தான் இருப்பாங்க 


9 இந்த  உலகத்துல  யார் கிட் டயாவது  மனம்  விட்டுப்பேசலாம்னா அது இந்த  உலகத்துக்குப்பிடிக்காது போல 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வில்லனுக்கு  ஏகப்பட்ட  வேலைகள்  இருக்கு .தப்பிக்கணும் .டைம் பாமை வெடிக்க வைக்கநும் .இதை எல்லாம் விட்டுட்டு  நாயகியைத்துரத்தி கொலை செய்ய முயற்சிப்பது லாஜிக்கே இல்லை


2  நாயகன்  யூனிபார்ம் போட்டிருக்கிறான் .ஏர்போர்ட்டில்  அனைவர் முன்னும்  செக்கிங்க் லைனைத்தாண்டி  ஓடுகிறான் .ஹையர் ஆபீஸரஸ் க்கு எதோ  விபரீதம் என்பது தெரியாதா?  




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - விறுவிறுப்பான  ஆக்சன் படம் பார்க்க  விரும்பும் அனைவரும்  பார்க்கலாம் . ரேட்டிங்  3 / 5 


Carry-On
Release poster
Directed byJaume Collet-Serra
Written byT.J. Fixman
Produced byDylan Clark
Starring
CinematographyLyle Vincent
Edited by
Music byLorne Balfe
Production
companies
Distributed byNetflix
Release date
  • December 13, 2024
Running time
119 minutes
CountryUnited States
LanguageEnglish
Budget$47 millio

Thursday, December 19, 2024

SAPTHA KANDAM (2024) -மலையாளம் /சப்த காண்டம் - தமிழ் - சினிமா விமர்சனம் ( கில்மா டிராமா ) 18+

     

                   

கே பாக்யராஜ்  நடிப்பில் /இயக்கத்தில்  வெளிவந்த  சுந்தர காண்டம் (1992) ஏ, பி சி  3 சென்ட்டர் களில்   செம ஹிட் , தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில்  வெளிவந்த  ஆரண்ய   காண்டம் (2011)  ஏ சென்ட்டர் ஹிட் ஆசீப் அலி   நடிப்பில்  வெளிவந்த     கிஷ்கிந்தா  காண்டம்  (2024)  கேரளாவில்  செம ஹிட் . இங்கே ஒ  டி டி யில்  ரிலீஸ் ஆனதும்  கொண்டாடினார்கள் .இந்த  சப்த காண்டம் சி சென்ட்டர்  தர லோக்கல்  டிக்கெட்களுக்கான படம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் , நாயகி  இருவரும்  புதிதாகத்திருமணம்  ஆன தம்பதி . ஒரு பங்களாவில்  குடி வருகிறார்கள் . நாயகன்  காலை ல  ஆபீசுக்குப் போகும்  முன்  வீடு கூட்டுவது , வாசலில்  கோலம் போடுவது , சமையல் செய்வது , தோட்டக்கார  வேலை எல்லா வேலைகளையும்  முடித்து  விட்டுக் கிளம்புகிறான் . . மாலை 6 மணிக்கு  வீட்டுக்கு வந்ததும்   டயர்டாகப்படுத்துத்தூங்கி விடுகிறான் . நைட்  டின்னரும்  நாயகன் தான் ரெடி  பன்றான் .


உலக நடப்புத்தெரியாமல் யாரும்  நாயகி  எந்த வேலையும்  செய்யாதா? எனக்கேட்க வேண்டாம் . மாடர்ன் கேர்ள்ஸ் அப்படித்தான் இருப்பாங்க . 3  நாட்கள்  மேலே  சொன்னவை  ரிப்பீட் ஆகுது . 


 இப்போ  வில்லன் எண்ட்ரி . நாயகனின்  மாமா  வர்றான்.நான்  கொடுத்த  80 லட் ச  ரூபாய் கடன் என்ன ஆச்சு ?எனக்கேட்கிறான் . ஒரு வாரத்தில்  தந்து  விடுகிறேன்   என்கிறான்  நாயகன் உடனே  வில்லன் அங்கேயே தங்கி விடுகிறான் .நாயகன்   கடனைக்கட்டினானா?  இல்லையா?       என்பதுதான்  மீதிக்கதை . சொன்ன  நம்ப மாட் டீ ங்க .இவ்ளோ  தான் கதை   

நாயகனும்  தாடி  வெச்ச  பிச்சைக்காரன் மாதிரி  இருக்கான் . வில்லனும்  தாடி , பெரிய  மீசை  வெச்ச  வசதியான    பிச்சைக்காரன் மாதிரி  இருக்கான். நாயகி  ஓரளவு  பரவாயில்லை      


சபாஷ்  டைரக்டர்

1   ஒரு பங்களா , 2  பிச்சைக்காரனுங்க , ஒரு பொண்ணு  அவ்ளோ தான்  ஆர்ட்டிஸ்ட் .அனேகமா  வில்லன் தான்  தயாரிப்பாளரா  இருக்கனும் 


2  இந்த  மெயின்  கதை  கேவலமா  இருக்குனு  யாராவது  சொல்லிட் டா   என்ன  பண்றது?ன்னு  ஒரு புராண  காலக்கதையை  இட்டுக்கட்டி  விட்ட விதம் 



  ரசித்த  வசனங்கள் 



 வசனமாடா முக்கியம் படத்தைப்பார்றா மொமெண்ட் 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வில்லன்  நாயகி யிடம் " உன் புருசனுக்கு போன் பண்ணி  " உங்க மாமா மாதவன்  வந்திருக்காரு"  என சொல்லு என்கிறான் . நாயகன்  வில்லனை  அண்ணன்   என்று தான் படம் முழுக்க அழைக்கிறான் 

2  நாயகனுக்கு  அதிகபட்சம்  மாத சம்பளமே  ரூ  4000  தான் வரும் போல .அவனை நம்பி  இவன்  80 லட்ச  ரூபாய்  கடன் தந்தது எப்படி ? 


3  நாயகி  வில்லனிடம் என் கிட் டே  50 பவுன்  நகை  இருக்கு , அதை வேணா  தரவா? என கே ட்கிறாள் . வில்லன்  அது 10 அல்லது  15 லட்ச ம் தான் போகும் என்கிறான் . ஒரு பவுன்  விலை 57,000  ரூபாய் .செய் கூலி , சேதாரம் போக  பழைய  நகை என்றாலும் 48000ரூபாய்க்கு  போனாலும் 24  லட்ச  ரூபாய்  வருதே? 


4  நாயகன்  வேலைக்குப்போன  பின்  நாயகி  கேட் டை  சாத்தி விட்டு  பாத்ரூ,மில்  தாழ  போட்டு விட்டுத்தான் குளிக்கிறாள் . ஆனா டர்க்கி டவல்  கட்டிட்டுதான் குளிக்கிறா.  இது எதனால்? அஞ்சரைக்குள்ள வண்டி  பட  காலத்துல இருந்தே  இப்படித்தான் .சென்சாருக்கு பயந்துன்னா காமரா கோணத்தை சோல்டர் வரை வெச்சாப்போதுமே? 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+  



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - இது பெண்களுக்கான படம் அல்ல .காலைக்காட்சி  ரசிகர்களுக்கான  படம் , ஆனா  அவர்களுக்கும் ஏமாற்றம் தான் .ரேட்டிங்  1 / 5 


டிஸ்கி -  சப்த காண்டம் என்றால்  ஏழு  காண்டம்  என்று பொருள் .சப்தம்  போடும் { சவுண்ட் கொடுக்கும் ) காண்டமா? என மொக்கை ஜோக் அடிக்க வேண்டாம் 

Wednesday, December 18, 2024

8 A.M .METRO (2023)- ஹிந்தி - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா ) @ ஜீ 5 , யு ட்யூப்

           


            தெலுங்கு  எழுத்தாளர் மல்லாடி  வேங்கட கிருஷ்ணமூர்த்தி  எழுதிய தெலுங்கு நாவல் ஆன அந்தமைன   ஜீவிதம் (அழகான வாழ்க்கை )  என்ற  நாவலைத்தழுவி  திரைக்கதை அமைக்கப்பட்ட   ஹிந்திப் படம் இது .4 கோடி  ரூபாய் பட்ஜெட்டில்    எடுக்கப்பட்ட  லோ பட்ஜெட்  படம் இது . மென்மையான   இதயங்களுக்கான  மெலோ டிராமா 

19/5/2023   அன்று  திரை  அரங்குகளில்  வெளியாகி வெற்றி பெற்ற  இப்படம்  இப்போது  ஜீ  5 , யூ டுயூப்   ஓ டி டி களில் காணக்கிடைக்கிறது 60% படக்காட்சிகள்  ஹைதராபாத் மெட்ரொ ரயில் ல படமாக்கப்பட்டது . ரிலீஸ்  ஆன டைமில்  மன ரீதியாக  பாதிக்கப்பட்டவர்களுக்கான தெரபி செஷன் இது  என விமர்சகர்களால்  பாராட்டுப்பெற்ற படம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  29 வயதான  திருமணம்  ஆன ஒரு பெண்  கணவன் , இரு குழந்தைகள்  என சந்தோஷமான  வாழ்வு வாழ்ந்து வருகிறாள் . நாயகியின்  தங்கை நிறைமாத கர்ப்பிணி .ஹைதராபாத்தில் இருக்கிறாள் .கணவன்  வெளி நாட்டில் இருப்பதால்  தனியாகத்த்தான்  ஹாஸ்ப்பிடலில்  இருக்கிறாள் . அவளைக்கவனிக்க , அருகில் இருந்து  பார்த்துக்கொள்ள  நாயகி  தனியாகக்கிளம்பிப்போகிறாள் 



 நாயகியின்  தஃகை  வீட்டில்  தங்கி சமையல் செய்து  ஹாஸ்பிடலுக்குப்போய் தினமும் கவனித்து விட்டு பின் மீண்டும்  வீடு திரும்புவது  ரெகுலர் ஆகி விட்டது . பஸ்ஸில் போனால்  3 மணி நேரம் ஆகும், டாக்சியில் போனால் சார்ஜ் அதிகம் ஆகும் என்பதால் மெட்ரொ ரயிலில் தினமும் போய் வருகிறாள் 


ரயிலில்  நாயகிக்கு  நாயகனின் அறிமுகம்  கிடைக்கிறது , நாயகனும் நாயகியைப்போலவே திருமணம் ஆனவன்  தான் . இரு குழந்தைகள் உண்டு 


 நாயகன் , நாயகி  இருவருக்குமான  பொதுவான அம்சங்கள் இருவரும் புத்தக வாசிப்பாளர்கள் . மன பதட் ட நோய்க்கு ஆளானவர்கள் . இவர்கள்  இருவருக்கும் நெருக்கமான நட்பு   உண்டாகிறது .இதற்குப்பின் நனடந்தது என்ன?என்பது  மீதி  திரைக்கதை 


நாயகன் ஆக குல்சான்  தேவய்யா  பிரமாதமாக நடித்திருக்கிறார் , நம்ம ஊர் மோகன் , சரத்பாபு  போல  மென்மையான முக சாயலில் உள்ளவர .நாயகி ஆக ஷயாமி கேர்  அற்புதமாக நடித்திருக்கிறார் . நாயகனின் மனைவி ஆக கல்பிகா  கணேஷ்  கெஸ்ட்  ரோலில்  வருகிறார் .அழகான தோற்றம், நல்ல நடிப்பு . இவர்கள் போக  நாயகியின் தங்கை , தங்கையின்  கணவன்   என எல்லோரும்  நல்ல நடிப்பை  வழங்கி  இருக்கிறார்கள் 


உருதுக்கவிஞர்   குல்சாரின்  எழுத்தில்  7 பாட்டுக்கள் , இசை மார்க் கே  ராபின் . பின்னணி  இசை தென்றலாய் தாலாட்டுகிறது ஒளிப்பதிவு சன்னி குறபடி  பிரமாதமாக  ஒளிப்பதிவு  செய்திருக்கிறார் .எடிட்டிங்க் அணில் ஆலயம் .2   மணி  நேரம் டைம் டியூரேஷன் . கடைசி  20 நிமிடங்கள்  கண் கலங்க  வைக்கும்  காட் சிகள் 

திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ராஜ் ராஜகோண்டா 


சபாஷ்  டைரக்டர்


1   மெட்ரொ  ரயிலில்  வரும் அனைத்துக்காட்சிகளும் கவிதை . நாயகன் - நாயகி  இருவருக்குமான கண்ணியமான நட்பு  அழகு 


2  க்ளைமாக்சில்  நாயகனின்  மனைவி பற்றிய  டிவிஸ்ட்  எதிர்பாராதது 


3  சைக்காலஜி  படித்த  டாகடர்  எழுதியது போல  பிரமாதமான  வசனங்கள்  படத்தின் பிளஸ் 


  ரசித்த  வசனங்கள் 


1   பேஸ்புக் , ட்வீட்டர்  வந்த பின்  புத்தக  வாசிப்பு   குறைந்து விட்ட்து 



2   என்  பெயரை முதன் முதலாக சரியாக உச்சரித்தது நீங்க தான் 


3   ஸ்ட்ரெஸ்  இருக்கும்போது  எதையாவது வரையனும் 


4  தனிமையில்  இருந்தாலும்  நீ  தனி இல்லை 


5  பில்டர்  காபி தயாரிப்பது ஒரு கலை 


நீங்க  அதை விவரிக்கும் விதமே  ஒரு கவிதை + கலை நயம் 



6   அந்த தம்பதியைப்பாருங்க , எப்போப்பாரு சண்டை போட்டுக்கறாங்க , ஆனா சோசியல் மீடியாக்களில் அவங்க ரெண்டு பெரும் அந்நியோன்யமாயிருப்பது போலக்காட்டிக்கறாங்க 



7   அடுத்தவங்க   பிரச்சனைகளை உங்க தலைல ஏத்திக்காதீங்க 


8  மத்தவங்களை  ஜட்ஜ்  பண்ண  நாம யாரு ?


 சரி , உங்களை நீங்களே ஜட்ஜ் பண்ணி சொல்லுங்க 


9   சில  வரிகளைப்படிக்கும்போது அந்த  ரைடடர்  நமக்காகவே  அதை  எழுதியது போலத்தோன்றும் 


10  இதயத்தில் இருந்து எழுந்து வரும் வார்த்தைகளைப்புரித்து கொள்ள  மூளை கொஞ்சம டைம் எடுத்துக்கும் 


11   உலகத்தைப்பற்றி நீ இன்னும் புரிஞ்ச்சுக்கலை  , ஆள் இருக்கும்போது ஒரு மாதிரியும், ஆள் இல்லாதப்ப வேற மாதிரியும் பேசுவாங்க 


12   சாப்பாடு ஊட்டிய  கையாள எப்படி  சிதையூயூட்டுவது ? ( பிணத்துக்கு நெருப்பு வைப்பது ? ) 


13   பேனிக்  அட் டாக்  , ஹார்ட் அட் டாக்   இரண்டுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கு .மனப்பதட் டம் ,   மன அழுத்தம் இரண்டும் முக்கியக்காரணங்கள் 


14   மனதில்  இருக்கும் எல்லாவற்றையும் எல்லார் கிட் டேயும் சொல்லிடமுடியாது 


15   மனப்பதடட நோய்க்கு ஆளானவங்க  பதட் டமான  சூழலில்  மூச்சை நல்லா உள்ளே  இழுத்து  1,2,3,4   என எண்ணி  ஒரு  நொடி  மூச்சை நிறுத்தி  மீ ண்டும் 1,2,3,4    என  வெளியே  விட வேண்டும் .பதடடம்  குறையும் 



16 புதுசா  எதையாவது  சாப்பிடும்போதுதான் இத்தனை நாட்களாக இதை மிஸ் பண்ணிடடமேனு தோணும் 


17  தற்கொலை  செயுது கொள்பவர்கள் சாகும் முன்  கடைசியா  என்ன நினைப்பாங்க ? 


18 தவறு செய்யாத மனிதர்கள் உலகில் யாராவது இருக்காங்களா? 


19   ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கங்கள் பிடிக்கவில்லை என்றால் நமக்குப்பிடித்த ஒரு புத்தகத்தை நாம் தூக்கிப்போட்டுடறோமா? இல்லை . அப்படி  இருக்கும்போது  நமக்குப்பிடித்த  நபரை  பிடிக்காத ஒரு சில விஷயத்துக்காக எதனால வெறுக்கணும் ?


20  உறவுகளை நாம் மதிப்பது  கடைசியா  அவங்க கூட இருந்த மொமெண்ட்ஸ் நினைவில் வைத்தே 


21  இனிமையான  அனுபவங்களோடு  சில கசப்பான அனுபவங்களும் கலந்திருக்கும் .உடனே  நாம உறவை முறித்துக்கொள்கிறோம் 


22  நீ என்னுடன் இருக்கும் வரை உன் அருமை எனக்குத்தெரியலை , நீ இல்லாதப் போ உன்னை மிஸ் பண்ணினதை உணர்கிறேன் 


23  மனிதர்களும் , புத்தகங்களும் நட் பு பாராடடத்தக்கவை 


24   நம்ம  உறவு இதுவரை அழகான உறவா  இருந்தது , இனிமேலும் அது அப்படியே தொடரணும்னு நினைக்கிறேன் 


25   மகிழ்ச்சி  என்பது வேறுபட் ட மனிதர்களின் வாழ்வில்  வேறு வேறானவை . .ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் மகிழ்ச்சி 


26    மிக எளிதாகக்கிடைக்கும் பொருள்  என்பதால் பலருக்கும் அதன் மதிப்பு தெரிவதில்லை 


27  சில  உறவுகளுக்குப் பெயர்  இல்லை . ஆனால் அந்த உறவுகள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும் 


28  எதை நீ அதிகம் விரும்புகிறாயோ அதை நிச்சயம் ஒரு நாள் இழப்பாய் 


29  உண்மையான அன்பு நீ எங்கே இருந்தாலும் உன்னைத்தேடி வரும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நிறைமாத கர்ப்பிணியைக்கவனிக்கத்தான்  நாயகி  அங்கே  வருகிறாள் .வந்தவள்  அருகில் இருந்து கவனிக்கவில்லை . ஹாஸ்ப்பிடலில் கேண்ட்டீனில்   சாப்பிட்டுட்டு  அங்கேயே  இருக்க வேண்டியதுதானே?  காலை  8 டு   மாலை 5  வீட்டில் என்ன  வேலை ?  ( அப்போதானே  ரயில்  பிரயாணம்  நடக்கும்?) 


2 நாயகி  கணவனுடன்  இருக்கும்போதே  அவன் ஏக  பிசி . தனிமையில்  இரண்டு குழந்தைகளை  கவனித்துக்கொண்டு எப்படி ஆபீஸ்  போகிறான் ? 


3  நாயகியின்  கணவன்  தகவல் சொல்லாமல்  திடீர்  என ஹைதராபாத்  வருவது  நம்பும்படி இல்லை .குழந்தைகளை யார் பார்த்துக்குவாங்க ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - IS LOVE ENOUGH SIR  (2020)  படம் பிடித்தவர்களுக்கு  , பெண்களுக்கு  இது மிகவும் பிடிக்கும் .கமர்ஷியல் ஆக்சன் மசாலா  படங்களை விரும்பிப்பார்ப்பவர்கள்   ஒன  ஸ்டெப்  பேக் . ரேட்டிங்  3 / 5 


8 A.M. Metro
Theatrical release poster
Directed byRaj Rachakonda
Written byRaj Rachakonda
Based onAndamina Jeevitam by Malladi Venkata Krishna Murthy
Produced by
  • Raj Rachakonda
  • Kishore Ganji
Starring
CinematographySunny Kurapati
Edited byAnil Aalayam
Music byMark K. Robin
Production
company
Studio 99
Distributed byPlatoon Distribution
Release date
  • 19 May 2023
CountryIndia
LanguageHindi
Budgetest.₹4 crore[1]

Tuesday, December 17, 2024

ONCE UPON A TIME IN MADRAS (2024) -ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹைப்பர் லிங்க் த்ரில்லர் )

   


   ஹைப்பர்  லிங்க் ஸ்டோரி நாவல்  படிக்க  புத்திசாலித்தனம் , பொறுமை , ஞாபக சக்தி  இவை மூன்றும் 

 வேண்டும் ,இவை மூன்றுமே  எனக்கு  இல்லாததால்  அந்த மாதிரி  நாவல்  படிக்கும்போது ஒரு குறுக்கு வழியைக் கையாண்டேன் .1,2,3,4  ஆகிய  முதல்  நான்கு அத்தியாயங்களை  நெம்பர்  போட்டுக்கொள்வேன் 5,6,7,8  பின் 9,10,11,12  பிறகு 1,5,9      , 2,6,10  ,  3,7,11  , 4,8,12 இப்படி  ஜோடி சேர்த்துப்படிக்கும்போது சுலபமாகக்கதை புரியும் .நினைவாற்றல்  தேவை இல்லை . ஆனால்  சினிமாவில்  அப்படி வந்தால்  புரிந்து கொள்ள மிக சிரமம் . நான்கு  வெவ்வேறு சிறுகதைகள் நான்கு  தனித்தனி கதைகளாக சொல்லாமல்  முதல்  காட் சி  முதல்  சிறுகதை , அடுத்த  காட்சி  இரண்டாம் சிறுகதை , மூன்றாம்   காட் சி  மூன்றாம் சிறுகதை, நான்காம் காட்சி  நான்காவது சிறுகதை  என  அடுக்கிக்கொண்டே  சென்றால்  எப்படி  சாமான்யன் அதைப்புரிந்துகொள்வான் ? ஆனாலும்  இது ஒரு நல்ல படம்    

25 மில்லியன்  டாலர்  செலவில்  எடுக்கப்பட்டு  135 மில்லியன்  டாலர்  வசூல் சாதனை செய்த படமான  BABEL பாபேல் (2006) சைக்கலாஜிக்கல்  டிராமாவாக  வந்த படத்தில்  இருந்து இன்ஸ்பயர் ஆகி இதை எடுத்திருக்கிறார்கள்               


ஸ்பாய்லர்  அலெர்ட்


கதை 1 -  நாயகன்  ஒரு முன்னாள்  ரவுடி . அவரது  மனைவிக்கு  கிட்னி  பிராப்ளம் .15 லட்சம்  ரூபாய்  பணம்  தேவை .அந்தப்பணத்துக்காக என்ன  வேண்டுமானாலும் செய்யத்தயாராய் இருக்கிறார் . ஒரு கொலை  செய்ய  அசைன்மெண்ட்  தரப்படுகிறது .செய்கிறார் .  கடைசியில்  பார்த்தால்  அவரது மனைவிக்கு கிட்னி தானம் செய்யத்தயாராய் இருந்தவர் அவர் . இதற்குப்பின்  நாயகன் என்ன செய்தற்? என்பது மீதிக்கதை 


 கதை 2  -  நாயகி  ஒரு துப்புரவுத்தொழிலாளர் . அவருக்கு ஒரு மகன் உண்டு .அவன் இப்போது  திருநங்கை ஆகி விடுகிறான் . அவனை  டாக்டருக்குப்படிக்க வைக்க வேண்டும் என்பது நாயகியின் லடசியம் . ஆனால் 50,00 ரூபாய் கடன் இருக்கிறது ,கடன் கொடுத்தவன்  மிரட்டுகிறான் . நாயகி வீட்டில்  இல்லாதபோது  மகளை /மகனை  பாலியல்  வன்கொடுமை  செய்து  விடுகிறான்  வில்லன் . நாயகி என்ன செய்தாள்  என்பது மீதிக்கதை 


 கதை 3    நாயகி  புதிதாகத்திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு வருகிறாள் .கணவன்  ஒரு ஹோமோ   என்பதும் . நாயகிக்கு  மயக்க மருந்து கொடுத்து  மாமனார்  பாலியல்  வன்கொடுமை செய்து விடுகிறார்  என்பதும் . நாயகிக்குததெரியாது .கர்ப்பம் ஆகிறார் .உண்மை   தெரிந்த  பின் அவர்  என்ன முடிவு எடுக்கிறார் என்பது க்ளைமாக்ஸ் 


 கதை 4  - வில்லன் ஒரு ஜாதி வெறியர் . அவரது  மகள் காதல்  திருமணம்  செய்ய  இருக்கிறாள் என்ற தகவல் கிடைத்து  காரில் போகிறார் .  வழியில்  மகளின்    காதலன் என  தவறாக நினைத்து வேறு ஒரு ஆளைக்கொலை செய்து விடுகிறார் . உண்மை  தெரிந்த  பின் என்ன செய்தார் என்பது க்ளைமாக்ஸ் 

நான்கு  கதைகளிலும் தலா  ஒரு கொலை நடக்கிறது . அனைத்துக்கொலைகளும் ஒரே  துப்பாக்கியால்  தான் நடக்கிறது .அது எப்படி ? என்பதுதான் சுவாரஸ்யமான முடிச்சு 


முதல்  கதையில் ரவுடியாக  பரத்  , இரண்டாவது  கதையில் நாயகி ஆக அபிராமி ,மூன்றாவது  கதையில் நாயகி ஆக  அஞ்சலிநாயர் ,நான்காவது  கதையில் வில்லனாக தலை வாசல் விஜய் , அவரது மகளாக பவித்ரா  ஆகியோர் நடித்திருக்கிறார்கள்,அனைவர் நடிப்பும் சிறப்பு 

இயக்கம்      பிரசாத்    முருகன் 

சபாஷ்  டைரக்டர்


1  நான்கு  கதைகளிலும்  வரும்  ஒவ்வொரு  டிவிஸ்ட்டும்   அருமை . நான்கையும்  இணைக்கும்  விதமும்  அழகு 


2   இது  ஒரு லோ பட்ஜெட்  படம் என்றாலும்  அது திரையில்  தெரியாமல் பார்த்துக்கொண்ட விதம் 


3   பரத் , அபிராமி  உட்பட  அனைவரின் நடிப்பும் அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1  எல்லா  வயசுலயும் பெண்ணுக்குப் பால் சுரந்தா  இந்த உலகத்துல நோயே இருக்காது  ( தாய்ப்பாலுக்கு நிகரான   மருந்து இல்லை ) 


2  என் பொண்ணுன்னா எனக்கு ரொம்பப்பிடிக்கும், ஆனா என் பொண்ணு செய்யும்  எல்லா செயல்களும் எனக்குப்பிடிக்கணும்னு அவசியம் இல்லை 


3   அன்பா  இருக்கீங்க ன்னு சொல்லுங்க, ஆனா நேர்மையா இருக்கறதா சொல்லாதீங்க , ஜாதி தான் உங்க நேர்மையா? 


4  கொஞ்ச்ம  டைம்  கொடு , கடனைத்தீர்த்துடறேன்


ஒரு மணி நேரம் டைம் போதுமா? 


5   சிறுநீரக  நோய்  வந்துட் டா  தண்ணீர்  கூட அளந்து  அளந்து  தான் குடிக்கணும் . இந்த நோய்  யாருக்கும் வந்துடக்கூடாது 


6  போலீஸ்  என்னைக்கு  இல்லாதவனுக்கு உதவி பண்ணி  இருக்கு ? 


7    அது  வீடில்லை , சிங்கிள்  பெட் ரூம் ஜெயில் 


8  தேவைகள் தான்  அறத்தைத்தீர்மானிக்கும் 


9   இந்த உலகத்துலயே  கடவுளா  இருப்பதுதான் ரொம்பக்கொடுமையானது , சிலர் திட்டுவாங்க, சிலர் துதி பாடுவாங்க 


10  அதிகாரத்துக்கு எதிரான ஆயுதமே நமது அழுத்தமான  பேச்சும் எழுத்தும் தான் 



11   நம்மைப்புனிதப்படுத்தும் எதுவும் நமக்குத்தேவை இல்லை 



12   வாழ்க்கை  என்பது நிலையானது அல்ல, கடந்து போயிடனும் , கர்வம் இல்லாம வழனும் 


13  படித்து விட்டோம் என்பது கர்வம் இல்ல.கவ்ரவம் 


14  தம்  அடிச்சு எனக்குப்பழக்கம் இல்லை 


ஓஹோ , ஆளுங்களை  அடிச்சுத்தான் பழக்கமோ? 


15  செய்யற  வேலையை விட செய்ய வைக்கும் மூளை தான் தேவை 


16   வாழ்க்கை  என்னும்  ரேஸ் ல ஜெயிச்சுட் டா  பாடமா  இருக்கும் . கஷ்டப்பட்டு ஜெயிச்சுட் டா  பாலமா  இருக்கும் 



17   தமிழில்  ஜாதி என்ற  வார்த்தையே கிடையாது . ஜாதி பார்ப்பவன்  தமிழனே கிடையாது 


18 சனிதோஷம் ,   சுயம்  இந்த  ரெண்டையும்  உன் கிட் டே  இருந்து  யார்   பறிக்கவும்  விடாதே 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   ஒரு ரவுடி  , வேலை  வெட்டி  இல்லாதவன்  15 லடசம்  ரூபாய்  கடன் கேட்பது  எப்படி ?அதுவும்  போனில் ? நேரில்  போய்க்  கேட் டா லே மதிக்க மாடடாங்க 


2   அபிராமி  கதையில்  மகள்   என்றே  காட்டி  இருக்கலாம் /. திருநங்கை  என்பது  திணிப்பு . ரயில்களில்  அவர்கள் செய்யும்  அட்டூழியங்களைப்பார்த்து கோபம் தான் வரும் , பரிதாபம் வராது 


3   அஞ்சலிநாயர் கதையில்  நாயகிக்கு  தாம்பத்யமே  நடக்கலை  என்ற போதே   சந்தேகம் வராதது எதனால்? தன அப்பாவுக்கு     தகவல்  சொல்லாதது   எதனால்?

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - சிறுகதைகள் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள்  பார்க்கலாம் . ஒரு முழுக்கதை  தான்  புல்  மீல்ஸ்  சாப்பி ட் டது போல்  எனநினைப்பவர்கள் தவிர்க்கவும் . விகடன்  மார்க் - 41 குமுதம்  ரேங்க்கிங்க்  - ஓகே , ரேட்டிங்  2.5 /5 


Once Upon A Time in Madras
Theatrical release poster
Directed byPrasadh Murugan
Written byPrasadh Murugan
Produced by
  • Captain MP Anand
Starring
Cinematography
  • K S Kalidoss
  • R Kannan
Edited bySan Lokesh
Music byJose Franklin
Production
company
  • Friday Film Factory
Release date
  • 13 December 2024
Running time
120 minutes[1]
CountryIndia
LanguageTamil

Monday, December 16, 2024

RUDHIRAM (2024) -மலையாளம் - சினிமா விமர்சனம் ( சைக்கோ க்ரைம் த்ரில்லர் )

                         




கன்னட நடிகர் ஆன ராஜ் பி ஷெட்டி   நம்ம ஊரு  கே பாக்யராஜ் , டி ஆர்   போல  திரைக்கதை  ஆசிரியர் கம்  டயலாக் ரைட் டர்  கம்  டைரக்டர் . சுவாதி முத்தின மலே  ஹனியே   என்ற  மாறுபட்ட  மெலோ  டிராமாவிலும்  ஷைன் செய்தார் .டோபி என்ற அதகள ஆக்சன்  டிராமாவிலும்  பின்னிப்  பெடல் எடுத்தார் .கன்னட ப்பட உலகின்  சிறந்த படங்களுள் ஒன்றான கருட காமனா  விருஷப வாகனா  செம  கமர்ஷியல் ஹிட்  மூவி . இவர் நடிப்பில் லேட் டஸ்ட் ஆக  வந்திருக்கும் மலையாளப் படம் தான் இது 


ஒரு ரெண்டாம் வகுப்பு யாத்ரா (2015)  என்னும்  மலையாளப் படம்  மூலம்  அறிமுகம் ஆன  அபர்ணா  பாலா முரளி மகேஷிண்டே பிரதிகாரம் (2016) மூலம் செம ஹிட் ஆனார் . தமிழில்  எட்டு தோட் டாக்கள் ( 2017) சர்வம்  தாள மயம் (2019) ,      சூரரைப்போற்று (2020) ,  நித்தம்  ஒரு வானம்  (2022) , ராயன் ( 2023)  உட்பட  பல 

 படங்களில்நடித்தவர் . இவரது லேடடஸ்ட்  ஹிட் கிஷ்கிந்தா காண்டம் .சூரரைப்போற்று ப படத்தில்  நடித்ததற்கு தேசிய விருது பெற்றார் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  ஒரு வீட்டின்  அறையில்  அடைத்து  வைக்கப்பட்டிருக்கிறார் .ஓல்டு  பாய் (2003) கொரியன்  மூவி  யில் வருவது போல  வில்லன்  நாயகியை வேண்டுமென்றே  அடைத்து   வைத்து  சித்ரவதை செய்கிறான் . நாயகியைத்தொடக்கூட இல்லை . ஆனால் மனோ ரீதியாக    சித்ரவதை செய்கிறான்  வில்லன் . நாயகி இதற்கு முன் வில்லனைப்  பார்த்தது கூட இல்லை .. நாயகிக்கு  இப்போது  வில்லனிடம்  இருந்து  தப்பிக்க வேண்டும் , என்ன காரணத்துக்காக தன்னை அடைத்து வைத்திருக்கிறான் என்பதைக்கண்டு பிடிக்க வேண்டும் .


 நாயகன்  ஒரு டாக் டர் . இனிமையான  சுபாவம்  கொண்டவர் . தன்னிடம்  வரும் பேஷண்ட்களைக்கனிவாகக்கவனித்துக்கொள்கிறார் .


நாயகியை அடைத்து வைத்திருக்கும் அதே  வீட்டில் வேறு ஒரு அறையில்   வில்லன்  இன்னொரு ஆணை  அடைத்து  வைத்திருக்கிறான் .அவனையும் சித்திரவதை செய்கிறான் 



நாயகன் , நாயகி , வில்லன் , இன்னொரு ஆள்  இந்த  நால்வருக்கும்   என்ன  தொடர்பு ? க்ளைமாக்சில்  என்ன ஆனது ? என்பது  மீதி திரைக்கதை 


நாயகன் ஆக ராஜ் பி ஷெட்டி   தனது நடிப்பால் பார்ப்பவர் மனதைக்கவர்கிறார் . நாயகி ஆக அபர்ணா பாலமுரளி  விஜய  சாந்தி மாதிரி ஆக்சன் அவதாரம் எடுத்து இருக்கிறார்  , செமயான நடிப்பு .இவரது துணிவும், தைரியமும்  பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் 


ஜோசப்  கிரன் ஜார்ஜ் என்பவருடன் இணைந்து  திரைக்கதை எழுதி இருக்கிறார் ஜிஷோ  லான் ஆண்டனி ஜோமன் கே ஜோசப் , கிருஷ் தாமஸ் மேவலி ,ஜிஷோ  லான் ஆண்டனி   ஆகிய  மூவரும்  இணைந்து  இயக்கி இருக்கிறார்கள் 


ஒலிப்பகிவு ,ஒளிப்பகிவு , ஆர்ட்  டைரக்ஷன்  போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்   ஓக்கே ரகம் .பின்னணி இசை  அருமை . எடிட்டிங்க்  கச்சிதம் . 122 நிமிடங்கள்  டைம் ட்யுயூரேஷன் 

சபாஷ்  டைரக்டர்

1  குமுதம்  இதழில்  ஒரு பக்கக்கதையாக  வெளியிட் டால்  கூட  பாதி பக்கம் தான் வரும் . அத்துளியூண்டு கதையை  2  மணி நேரபபடமாகக்கொடுத்த சாமார்த்தியம் 


2  வில்லன்  நாயகியை  கடத்தியதற்கான காரணத்தை  படத்தின்  கடைசி  5 நிமிடத்தில்  ஓப்பன் செய்த விதம் 


3  வில்லனுக்கும்  , போலீஸ் ஆபீஸருக்கும்  நிகழும்  தத்ரூபமான சண்டைக்காட் சி யைப்படமாக்கிய விதம் 


4  நாயகி அந்த அறையில்  இருந்து  தப்பிக்க  எலியை  யூஸ்  பண்ணும் ஐடியா


  ரசித்த  வசனங்கள் 

1    நம்ம  உணர்ச்சிகளை  நம்ம கட்டுப்பாட்டில்  வைக்கணும் . இல்லைன்னா காலம் முழுக்க தனிமையில் கழிக்க நேரிடும் 


2  உன்னை எதற்காகககடத்தினேன்  என்பது  இவனுக்குத்தெரியும், ஆனா  நீ கேடடாலும் அவன் சொல்ல மாடடான் .சொல்லமுடியாது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 மிஸ்ஸிங்க்  கேஸ் பற்றி  விசாரிக்க  வில்லன் வீட்டுக்கு வரும் போலீஸ் ஆபிசர்  துப்பாக்கி இல்லாமல் , கூட ஆட்கள் இல்லாமல் தனியாக வந்து  மாட்டுவது நம்பும்படி இல்லை  


2  ஒருவரை   ரூமில்  அ டைத்து   வைத்தால்  கதவைத்திறக்கும்போது  அவர் கதவுக்குப்பின்னால்  மறைந்திருந்து  தாக்குவார் என்பது வில்லனுக்குத்தெரியாதா?2 முறை இரூவரிடமும் ஏமாறுகிறார் 


3   வில்லன்  தனுஷுக்குத்தம்பி மாதிரி இருக்கிறார் . நாயகி  ஆஜானுபாவகமாக  நமீதாவுக்கு அக்கா மாதிரி இருக்கிறார் . இதனால்  இருவருக்கும் இடையில்   நிகழும்  ஆக்சன்  ஸீக்வன்ஸ்   சுவராஸ் யமாய் இல்லை . வில்லனின்  உடல்  எடை  அதிகபட்சம்  45 கிலோ  இருக்கும் . நாயகியின் உ டல் எடை 85 கிலோ  இருக்கும் . நாயகி தான் ஜெயிப்பார் என்பது ஈஸியா தெரிந்து விடுது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் .மிக சாதாரண  கதை , நல்ல  திரைக்கதை . ரேட்டிங்  2.75 / 5 

டிஸ்கி 

இந்தப்படம்  பார்க்க மொழி அவசியம் இல்லை .எனவே  சப் டைட்டில்  இருக்கா?   தமிழ்  டப்பிங்கில் இருக்கா? என யாரும் கேட்க வேண்டாம் .மணிரத்னம் இயக்கிய படங்களில்  மிகக்குறைவான  வசனங்கள்  கொண்ட படம் அஞ்சலி . அதன் வசனத்தில்  பாதி கூட இல்லை  ஓ டி டி  யில் இருக்கா?  எனக்கேட்க வேண்டாம் , படமே இப்போதான் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி இருக்கு. ஓ டி டி  யில்  வர  25 நாட்கள்  ஆகும் 

Sunday, December 15, 2024

மிஸ் யூ (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா )

         


   ஷங்கரின் பாய்ஸ் (2003) படம்  மூலம்  அறிமுகம் ஆன சித்தார்த்  சமீபத்தில்  தந்த  ஹிட் படம்  சித்தா (2023) .விமல்  நடிப்பில்  வெளிவந்த  மாப்ள சிங்கம் (2016) , அருள் நிதி , ஜீவா நடிப்பில்  வெளிவந்த  களத்தில் சந்திப்போம் (2021)  ஆகிய  இப்படங்களை  இயக்கிய  இயக்குனர் என்  ராஜசேகர்  தனது ஆஸ்தான வசனகர்த்தா  ஆர் அசோக் உடன் இணைந்து  இயக்கி  இருக்கும் படம் தான் இது 


நிஜத்தில்  46 வயதான  சித்தார்த்  படத்தில் பார்க்கும்போது   30 வயது இளைஞராக  தெரிவதும் , நிஜத்தில்  28 வயதான   நாயகி ஆஷிகா    படத்தில் பார்க்கும்போது 36  வயது  போல தெரிவதும் ஆச்சர்யமான  உண்மைகள் . கன்னட  நடிகையான ஆஷிகா கிரேசி பாய் (2016) படத்துக்காக  சிறந்த  நடிகை  விருது வாங்கியவர்            


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  முதன் முதலாக  ஒரு பஸ்ஸில்  நாயகியை சந்திக்கிறான் . முதல் சந்திப்பிலேயே  மோ தல் . அடுத்த சந்திப்பில்  நாயகன்  நாயகியின் அப்பா மீது காரில் மோதி விடுகிறான் .அப்பவும்  இருவருக்கும் சண்டை .நாயகனின் அப்பா , நாயகியின் அப்பா இருவரும் நண்பர்கள்  என்பதால்  இரு குடும்பத்தாரின் முடிவுப்படி வேறு  வழி  இல்லாமல்  நாயகன்  நாயகியைத் திருமணம்  செய்து கொள்கிறான் .ஆனால் இருவருக்கும் ஒத்துப்போவதில்லை . சின்ன  சின்ன  விஷயத்துக்கு எல்லாம் சண்டை . நாயகன்  நாயகியைப்பிரிய  முடியுவ் எடுக்கிறான் 


 இப்போ  மேலே  சொன்னவை எல்லாம்  பிளாஸ் பேக் 


 நாயகன்   ஒரு நாள் திடீர்  நண்பனுடன்  பெங்களூர் வர  அங்கே  ஒரு பெண்ணை சந்திக்கிறான் .பார்த்ததும் அவனுக்கு அவளைப்பிடித்து  விடுகிறது . ஆனால் அவள் நாயகனைக்கண்டுகொள்ளவே இல்லை . அவளை போட்டோ  எடுத்து  தன்  அம்மாணவிடம் காட்டி  இவளை எனக்குப்பிடிச்சிருக்கு என்கிறான்  . அந்த போட்டோ  வைப்பார்த்த அம்மாவுக்கு அதிர்ச்சி . அவள்  தான்  நாயகனின்  மனைவி 


  ஒரு கார் விபத்தில்  நாயகனுக்கு தலையில்  அடிபட் ட தில்   பழைய  நினைவுகள்  மறந்து விடுகின்றன .


 அதவாது  தன முன்னாள் மனைவி என்பது தெரியாமல்  அவளைக்காதலிக்கும்  கணவன் , இதற்குப்பின் என்ன ஆனது என்பது மீதி திரைக்கதை 


நாயகன் ஆக  சித்தார்த்  அருமையான நடிப்பு . ஆக்சன் , வெட்டு , குத்து , ரத்தம் என  குப்பைப் படங்களை , ஆக்சன் மசாலாக்களைத்தொடந்து  பார்த்து  இது போல  காதல் சப்ஜெக்ட் கதை பார்க்க ஆறுதல் ஆக இருக்கிறது 


 நாயகி ஆக ஆஷிகா .கண்ணியமான  தோற்ற,ம் .இவரது முகச்சாயல்  கோகுலத்தில் சீதை  சுவ லடசுமி  போலவும்  மனிதன்  ரூபிணி  போலவும்  கலந்து கட்டி  இருக்கிறது . கண்ணியமான  உடையில்  வளம்  வருவது ஆறுதல் அளிக்கிறது 



நாயகனின்  நண்பர்களாக  கருணாகரன் , லொள்ளு சபா  மாறன் , பால சரவணன்  மூவரும்  காமெடி  நடிப்பில்   சைன்  செய்கிறார்கள் .லொள்ளு சபா  மாறன் திறமைக்கு  சந்தானம்  மாதிரி  பெரிய  இடம் அடைந்திருக்கணும் ஏனோ மிஸ்டு 


பொன்வண்ணன் , ஜெயப்பிரகாஷ் , ஆடுகளம்  நரேன்  போன்ற அனுபவம் மிக்க  நடிகர்கள்  கச்சிதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள் 


ஜிப்ரானின்  இசையில்  நான்கு பாடல்கள்   சுமார் ரகம்  தான் . பின்னணி  இசையம் சராசரி தரம் . கே ஜி  வேங்கடேஷின் ஒளிப்பதிவு  அழகு . நாயகிக்கு  வைத்த க்ளோசப்  ஷாட்களில்  இன்னும்  கவனம் செலுத்தி  இருக்கலாம் , தினேஷ் பொ ன்ராஜின்  எடிட்டிங்கில்  படம்  125 நிமிடங்கள்  ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்

1   சமீபத்தில்  நாளிதழில்  ஒரு செய்தி   வந்தது . அம்னீஷியா   பேஷண்ட்டான  ஒரு ஆள்  தனது முன்னாள்  மனைவி  என்பது  தெரியாமல்    பிரப்போஸ் செய்கிறான் . இந்தக்கதைக்கருவை  வைத்து  திரைக்கதை  அமைத்த  சாமர்த்தியம் 


2    நேரடியாக கதை    சொல்லி  இருந்தால் அந்த அளவு  சுவாரசியம்  இருக்காது என்பதை உணர்ந்து  நான் லீனியர்  கட்டில்  நிகழ்காலம் ,  கடந்த  காலம் என மாறி மாறி  காட் சிகளை   அடுக்கிய விதம் 


3   நீண்ட  இடைவெளிக்குப்பின்  தமிழ்  சினிமா உலகில்  ஒரு காதல்  சப்ஜெக்ட்  தர முன் வந்தது 

 4  படத்தின்  பெரிய பிளஸ்  அருமையான  வசனங்கள் , ரொமாண்டிக் போர்சன் ,காமெடி போர்சன்  இரண்டிலுமே ஷைன்செய்து இருக்கிறார் அசோக் 


  ரசித்த  வசனங்கள்  (ஆர் அசோக்) 


1   மறதியால்  கஷ்டப்படறவங்களை  விட  நினைவுகளால் கஷ்டப்படறவங்கதான்  அதிகம் 


2  ஒரு கெட்ட விஷயம்  நமக்கு  நடக்கக்கூடாதுன்னா  அது அடுத்தவங்களுக்கு நடக்கும்போது நடக்க விடாம நாம அதைத்தடுக்கணும் 


3   வெறுப்போட  உச்சக்கட்டம்  சத்தம் போடறதோ , கத்தறதோ  இல்லை .     கண்டுக்காம  போவது 


4  வாழ்க்கைல  நம்மை ஒருவர்  ரிஜெக்ட்  பண்றது எவ்ளோ பெரிய வலி தெரியுமா? 


5 ஒரு பூ  மலர்வதைப்பார்க்க  ரொம்ப   நேரம் காத்திருக்கணும் . அது மாதிரி  தான்  காதல் மலர்வதம் 


6   தெரிந்துகொள்வதற்கும்  , உணர்வதற்கும் வித்தியாசம் இருக்கு 


7  வாழ்க்கைல  அடஜஸ்ட்  பண்ணலாம் , ஆனா வாழ்க்கை  பூரா   அடஜஸ்ட்  பண்ண  முடியாது 


8  வாழ்க்கைல   பிடிக்காத  விஷயத்தை  மறக்கணும்னு  எல்லாரும் நினைப்பாங்க, ஆனால் யாராலும் அது முடியாது 



9 நமக்குப்பிடிச்ச  விஷயத்துக்காக   நம்மால  முடிஞ்ச்ச  வரை போராடுவோம் .அதுக்கும் மேல கிடைக்கலைன்னா அது நம்ம தப்பில்லை , 


10   அவனவன்  பொண்டாட்டியை மறக்க வேற யார் கிட் டயாவது போவான் , இவன் என்னடான்னா இவனோட பொண்டாட்டியை மறக்க இவனோட பொண்டாட்டி கிட் டேயே  போய் இருக்கான் 


11   சார் , பார் க்ளோஸ்   பண்ணணும் 


 நல்லா இருக்கற பாறை ஏன் க்ளோஸ்   பண்ணணும் ?


 சார் , க்ளோசிங்க்  டைம்  ஆகிடுச்சு 


 சரி ,    நான்  வேணா  உங்க   ஓனர் கிட் ட  பேசறேன் 


நான் தான் சார் ஓனர்


12    இது  ஹாரர்  த்ரில்லர்  நான் தேடச்சொன்னது  லவ் ஸ் டோரி 


 நம்ம  வாழ்க்கைல ரெண்டும் ஒன்னு தானே? 


13  பொண்டாட்டியை மறக்கறது  எவ்ளோ  பெரிய  வரம் தெரியமா? 


14  உன்    மனசுக்குப்பிடிச்ச  மாதிரி  பெண்ணை ஆர்டர் பண்ணி  செஞ்சு  கொண்டு  வர முடியாது 


15  வடக்கே   தலை வெச்சுப்படுத்தா  மூளை மழுங்கிடும்ன்னு சொல்வாங்க 


16  நீ  போடடோ ல காட்டுன ப்ப  இந்தப்பொண்ணு தான்  வேணாம்னேன் . இந்த மாதிரி தான் எல்லாப்பொண்ணும் இருக்கும்னா எனக்கு கல்யாணமே வேணாம் 


17   நான்  எந்த மாதிரி  பொண்ணு  வேணும் என யார் கிட் டேயோ  கேட்டு , அவங்க எனக்குன்னு செஞ்சு  அனுப்புனா மாதிரி இருக்கு 


18  பெங்களூ ர்ல  அமைதியான இயற்கையான  இடமா? அப்படி ஒண்ணே  கிடையாதே? 


19   நாம  எல்லாப்பக்கமும் தேடுனோமே? வீட்ல  தேடுனோமா? நான் கூட சின்னப்பையனா  இருக்கும்போது கட்டிலுக்கு அடில ஒளிந்து விளையாடுனேன்  


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  அமைச்சரின்  மகன்  ஒரு கொலை செய்வது , அதை பார்க்கும்  நாயகி சாட் சியாக  ஆவது  , நாயகன்  பைட்  போடுவது  இவை எல்லாம்  ரொமாண்டிக்  டிராமாவில் ஒட்டவில்லை 



2  அப்போது தான் அறிமுகம் ஆன நாயகனை  திடீர்  நண்பன்  தனது  காபி  ஷாப்பில்  கல்லாவில்  உட்கார  வைப்பது 


3  காபி ஷாப்  வைத்திருக்கும்  நண்பனுக்கே  தெரியாத   தொழில்  நுணுக்கங்கள்   வெட்டாபீஸ்  ஆன நாயகனுக்குத்தெரிவது 


4  நாயகியின்  அப்பா  கொஞ்சம்  கூட   பொறுப்பில்லாமல்  தன மகளை வாழா வெட்டி ஆக்க முனைவது 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  காதலர்கள் , தம்பதிகள்  பார்க்கலாம் . புஷ்பா 2 மாதிரி  டப்பாப்படங்களை  ரசிக்கும்  மசாலா  ரசிகர்கள்  தவிர்க்கவும் . இது கண்ணியமான  ரசனை கொண்ட  ரசிகர்கள் , பெண்களுக்கான படம் . ரேட்டிங்  2.5 / 5 . விகடன் மார்க்  42 . குமுதம்  ரேட்டிங்  - ஓகே 



Friday, December 13, 2024

BAGHEERA (2024) - கன்னடம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா )@ நெட் பிளிக்ஸ்

                 


       31/10 /2024 தீபாவளிக்கு  ரிலீஸ்  ஆகி  29 கோடி ரூபாய் வசூலித்து  இந்த ஆண்டின்   அதிக வசூல் படைத்த கன்னடப்  படம்    என்ற  பெருமையைப்பெற்றது .இது ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்  படம் . பிரபுதேவாவின்  கேரியர் ஓர்ஸ்ட் படமான  பகீரா (2023)என்ற  டப்பாப்  படத்தின்  கதைக்கும் , இதற்கும்  சம்பந்தம் இல்லை 



ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  சிறுவனாக  இருந்தபோதே  ஸ்பைடர் மேன் , சூப்பர் மேன்  டைப்  படங்களின்  ரசிகனாக இருக்கிறான் . தானும் அதே போல் ஆக வேண்டும் என நினைக்கிறான் . அவனது அம்மா அவனுக்கு  புது ஐடியா  தருகிறாள் .. அவனது அப்பா போல போலீஸ் ஆபீசர் ஆகி விடடால்  நிஜவாழ்வில் சூப்பர் மேன்  ஆகி விடலாம் என்பதே அது . 


 நாயகனும்  பெரியவன் ஆகி ஐ பி எஸ் ஆபீசர் ஆகிறான் .சிங்கம் , சாமி , மூன்று முகம்  படங்களின்  ஹீரோக்கள் போல  ரவுடிகளை பந்தாடுகிறார் . முதல்  50 நிமிடப்படம்  மாமூல் மசாலா  டெம்ப்ளேட்டில்  போகிறது . ஒரு கட்டத்தில்  ஹையர் ஆபீசர்  நாயகனுக்கு ஸ்பீடு  பிரேக்கர்  போடுகிறார் . இனிமேல் பெரிய  இடத்து விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்கிறார் . நாயகனின்  அப்பாவும்  நாயகனை க்கண்டிக்கிறார் . இது நாயகனுக்கு பெரிய  அதிர்ச்சியாக இருக்கிறது . அதை விடப்பெரிய  அதிர்ச்சி  அப்பா  நேர்மையானவர் இல்லை , லஞ்ச்ம  வாங்குபவர் என்ற  கசப்பான  உண்மை தெரிய  வருகிறது 

நாயகனால்  இனி நேர்மையான  போலீஸ் ஆபீசர் ஆக  இருக்க முடியாது .அதே சமயம்  கொடுமைகளுக்குத்துணை போகவும் முடியாது . ஒரே  வழி  பகலில்  சாதா போலீஸ் , இரவில்  சூப்பர்  மேன்   பகீரா அவதாரம் . இதனால்  அவரது   ஏரியாவில்  ரவுடிகளின்  அட்டகாசம்  குறைகிறது . .

சிபிஐ  பகீரா  யார் ? என்பதை கண்டுபிடிக்க  ஒரு டீமை அனுப்புகிறது . இதற்குப்பின்  என்ன ஆனது ? என்பது  மீதிக்கதை 


நாயகன் ஆக ஸ்ரீ முரளி  நடித்திருக்கிறார் . ஆக்சன்  ஹீரோவுக்கான எல்லா வேலைகளும் செய்கிறார் . பின் 

பாதியில்   தாடி  கெட்டப்  எடுபடவில்லை . நாயகி  ஆக ருக்மணி  வசந்த்  கண்ணியமான உடைகளில் வருகிறார் , நடிப்பும் நல்லாருக்கு . சிபி ஐ  ஆபீசர் ஆக  பிரகாஷ்  ராஜ்  கடைசியில்  பின் பாதியில் வருகிறார் . மற்ற  அனைவர் நடிப்பும் ஓகே ரகம் 

பி அஜனீஷ்  லோக்நாத்  இசையில்  5 பாடல்கள் . 3 சுமார் ரகம் . பின்னணி  இசை பரவாயில்லை அர்ஜூன்  ஷெட்டியின் ஒளிப்பதிவில்  காட் சிகள்  பிரமாண்டம் . பிரசாந்த்  நீல்  என்பவரின்  கதைக்கு திரைக்கதை  எழுதி  இயக்கி இருக்கிறார்  டாக்டர்   சூரி 

சபாஷ்  டைரக்டர்


1  முதல்  பாதி  மாமூலான போலீஸ்  கதை டெம்ப்லேட்டில்  இருந்தாலும்  கமர்ஷியலாக  விறுவிறுப்பாகக்காட் சிகள் அமைத்தது 


2  பின்  பாதி  சூப்பர்  ஹீரோ  கான்செப்ட்டில்   யூகிக்கும்படியான காட் சிகள்  என்றாலும்   சுவராஸ்யமானதாக இருந்தது 


  ரசித்த  வசனங்கள் 


1  இந்த  உலகத்துல எல்லாரும் எதோ ஒரு காரணத்துக்காகத்தான் பிறக்கறாங்க , ஆனா  பலர்   அந்தக்காரணம்  தெரியாமயே  செத்துடறாங்க 


2  தனக்காக  வாழாமல்  மற்றவர்களுக்காக  வாழும் எல்லாருமே சூப்பர் மேன் தான் 



3  போலீஸ்  யூனிபார்ம்ல  இருக்கும்போது  சரக்குக்குடிச்சா  அது தப்பா ?


  ஆமா, அது க்ரைம் 



4 கடவுள்  ரொம்ப  மோசம் . எல்லா  வலிகளையும்  பெண்களுக்கே தந்திருக்கார் 


5    முகமூடி  போட்டு  வாழக்கத்துக்கோ 


6  உலகம்  பூரா  என்ன சிஸ்ட்டம்  பாலோ பண்ணுதோ  அதையே   நீயும்  பாலோ பண்ணு , எதிர்த்து  நின்னா   எதுவும் பண்ணமுடியாது 


7 நியாயத்தைக்காப்பாத்த காக்கிச்சடடை தான் போடணும்னு அவசியம் இல்லை , காப்பாத்தற  மனசு இருந்தாப் போதும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1  நாயகன்  சிறுவனாக  இருக்கும்போது  அவன் அம்மா அவனுக்கு பிறந்த நாள் பரிசா  போலீஸ்  யூனிபார்ம் கிப்ட் பேக்கிங்க்ல  தர்றாங்க . புது  டிரஸ் .  அதை எடுக்கும்போது  அயர்ன் பண்ணிதான்  போடணும்கறாங்க . புது டிரஸ்  நீதிடாதான் இருக்கு .அதை  எதுக்கு அயர்ன் பண்ணனும் ? 


2  நாயகன்  பகீராவா  இருக்கும்போது  ஒரு கர்ச்சீப்பை முகத்துல  கட்டிக்கறான் .ஒரு பொண்ணு  செல்பி எடுத்துடுது . மீடியாக்களில் போட்டோ  வருது . கண்கள் , தலை , ஹேர் ஸ் டைல்   எல்லாம்  நல்லாத்தெரியுது . ஆனா யாருக்கும் டவுட்  வரலை .குறிப்பா சி பி ஐ .. ஐயோ பாவம்   


3   நாயகன்  பகலில்  போலீஸ் .இரவில்  பகீரா . எப்போ  தூங்குவாரு ?  டெய்லி  நைட்  வெளில  போகும்போது  அப்பாவுக்கு டவுட்  வராதா? 


4     நாயகனின்  உயிருக்கு ஆபத்து எனில்  நாயகியை  வெறுப்பது போல  நடிப்பார் . இது வாழ்வே  மாயம் , பயணங்கள் முடிவதில்லை கால கட்டங்களிலேயே வந்துடுச்சு  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பல  படங்களில்  பார்த்த  மாமூல் டெம்ப்லேட்  தான் . போர்  அடிக்காமல் போகுது . பார்க்கலாம் . ரேட்டிங் 2.25 / 5 


பகீரா
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கியவர்டாக்டர் சூரி
மூலம் திரைக்கதைடாக்டர் சூரி
மூலம் உரையாடல்கள்டாக்டர் சூரி
மூலம் கதைபிரசாந்த் நீல்
தயாரித்ததுவிஜய் கிரகந்தூர்
நடிக்கிறார்கள்ஸ்ரீமுரளி
ருக்மணி வசந்த்
பிரகாஷ் ராஜ்
அச்யுத் குமார்
ரங்கயான ரகு
கருடா ராம்
பிரமோத் ஷெட்டி
சுதா ராணி
ஷரத் லோஹிதாஷ்வா
ஒளிப்பதிவுஅர்ஜுன் ஷெட்டி
திருத்தியதுபிரணவ் ஸ்ரீ பிரசாத்
இசைபி. அஜனீஷ் லோக்நாத்
தயாரிப்பு
நிறுவனம்
வெளியீட்டு தேதி
  • 31 அக்டோபர் 2024
இயங்கும் நேரம்
158 நிமிடங்கள் [ 1 ]
நாடுஇந்தியா
மொழிகன்னடம்
பாக்ஸ் ஆபிஸ் 29 கோடி [ 2 ]