Friday, December 15, 2023

THE ANGEL MAKER (2023) - ஆங்கிலம்/தமிழ் - சினிமா விமர்சனம் ( சைக்கோ க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

 


பெண்களைக்குறி  வைத்துத்தாக்கும்  சீரியல்  கில்லர்  சம்பந்தப்பட்ட  படங்கள்  தொடர்ந்து  ஹிட்  ஆகி  வருகின்றன. ராட்சசன் , போர்த்தொழில்  வரிசையில்  ஹாலிவுட்டிலிருந்து  இன்னும்  ஒரு  சைக்கோ  கிரைம்  த்ரில்லர்  படம். 90  நிமிடங்கள்  மட்டுமே  ஓடும்  படம்  என்பதால்  இதை  ஒரு  குயிக்  வாட்ச்  மூவி  ஆக வே  பார்த்து  முடித்து  விடலாம்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  டிடெக்டிவ்.  சைபர்  க்ரைம்  டிபார்மெண்ட்டில்  பணி  புரிபவர் . இவர்  உடல்  நிலை  சரி  இல்லாத  காரணத்தால்  மெடிக்கல்  லீவில்  இருக்கிறார்.இவருக்கு  ஒரு  கணவர்  உண்டு . ஒரு  குழந்தை  பிறக்கும்  தருணத்தில்  அபார்ஷன்  ஆகி  அதனால்  மெண்ட்டல்  டிப்ரஷனில்  இருப்பவர் . 


நாயகன் ஒரு  போலீஸ்  ஆஃபீசர் . இவருக்குத்திருமணம்  ஆகி  மனைவியுடன்  வசித்து  வருகிறார், மனைவி  இப்போது  கர்ப்பம்  ஆக  இருக்கிறார்


நகரில்  ஒரு  பெண்  கொலை  செய்யப்பட்டு  கிடக்கிறாள் . அவள்   உடலில்  ஒரு  மெமரி  கார்டு  கொலைகாரனால்  வைக்கப்பட்டு  இருக்கிறது. அந்த  மெமரி  கார்டை  ரன்  பண்ண  விடுப்பில்  இருக்கும்  நாயகி  அழைத்து  வரப்படுகிறாள் .அப்படியே  இந்த  கொலைக்கேசில்  நாயகனுடன்  இணைந்து  பணியாற்ற அவருக்கு  அறிவுறுத்தப்படுகிறது 


கொலை  செய்யப்பட்ட  பெண்ணின்  வீட்டைக்கண்டு  பிடித்து  அவள்  ரூமை  செக்  செய்தால்  சில  அதிர்ச்சித்தடயங்கள்  சிக்குகின்றன. நம்ம  ஊரில்  ட்விட்டர் , ஃபேஸ் புக்  போல  அங்கே  இருக்கும்  ஒரு  சமூக  ஊடகத்தில்  அவள்  ஏராளமான  ஃபாலோயர்ஸ்  வைத்திருக்கிறாள் .  ஒரு  செலிபிரிட்டி  ஆக  வலம்  வர  அவள்  சில  சட்ட  விரோத   காரியங்களை  செய்திருக்கிறாள் 


இவளைப்பற்றி  விசாரித்துக்கொண்டு  இருக்கும்போதே  நகரில்  அடுத்தடுத்து  இரண்டு  கொலைகள்  நடக்கின்றன.  கொலை நடந்ததும்  கொலைகாரன்  ஒரு  லைவ்  ஃபுட்டேஜ்  விட்டுச்செல்கிறான், அதில்  அவன்  கொலை செய்த  விதம்  குறித்து  டீட்டெய்ல்டு  வீடியோ  க்ளிப் இருக்கிறது 


மேலே  சொன்ன  மூன்று  கொலைகளுக்கும்  பொதுவான  ஒற்றுமைகள் 

 1  மூன்றும் பெண்கள்  2   இள்ம்பெண்கள் . திருமணம்  ஆகும்  முன்னே  காதலனுடன்  அல்லது  பாய்  ஃபிரண்டுடன்  நெருக்கமாக  இருந்ததால்  கர்ப்பம்  ஆகி  அபார்சன்  செய்தவர்கள் 


இந்த  கேசை  டீல்  செய்யும்  நாயகியும்  அபார்சன்  ஆனவர்  தான்.  இதனால்  ஒரு  பரபரப்பு  தொற்றிக்கொள்கிறது . நாயகனும், நாயகியும்  இணைந்து  சைக்கோ  கில்லரை  எப்படி  கைது  செய்கிறார்கள்  என்பது  மீதி  திரைக்கதை


நாயகன்  ஆக  ரோலண்ட்  மெல்லர்  அடக்கி  வாசித்து  இருக்கிறார். ஆக்சன்  காட்சிகள்  அதிகம்  இல்லை  என்றாலும்  ஹீரோயிசம்  அதிகம்  காட்டாத  ஒரு  ஹீரோ  ரோல்


 நாயகி  ஆக ஜூ;லி  ஆர்  ஒலகார்ட்   நாயகனை  விட  அதிக  காட்சிகள்  இவருக்கு . ஹேக்  பண்ணுவதில்  நிபுணி  என  கேரக்டர்  டிசைன்  செய்யப்பட்டிருப்பதால்   இவருக்கு  அதிக  காட்சிகள் . 


வில்லன்  ஆக  சைக்கோ  கில்லர்  ஆக   மார்க்   ஹார்ப்சோ  மிரட்டி  இருக்கிறார்

. படம்  முழுக்க  மாஸ்க்  போட்டு  முகத்தை  மூடி  இருக்கும்  வரை  பயபப்டுத்துபவர்  முகத்தை  காட்டியதும்  பெரிய  அளவில்  பயமுறுத்த  வில்லை 


 வில்லனை  விட  வில்லனின்  அம்மா  செம  ஹைட்.  மிரட்டல்  ஆன  நடிப்பு , க்ளைமாக்சில்  கடைசி  10  நிமிடங்கள்  அவர்  செய்யும்  ஆக்ச்ன்  சீக்வன்ஸ்  மெயின்  கதைக்கு  சம்பந்தம் இல்லை  என்றாலும்  ரசிக்க  வைத்தது 


ஜூ;லி  ஆர்  ஒலகார்ட்  எஸ்பன்  டான்சன்  இருவரும்  இணைந்து  இயக்கி  இருக்கிறார்கள் . தயாரிப்பு ஜூ;லி  ஆர்  ஒலகார்ட்

சபாஷ்  டைரக்டர்


1   வில்லன்   மூன்று  கொலைகளையும்  ஒரே  பேட்டர்னில்  பிளாஸ்டிக்  கவரால்  முகத்தை  அடைத்துத்தான்  கொல்கிறான்  என்றாலும்  மூன்று  கொலைகளையும்  மாறுபடுத்திக்காட்டிய  விதம்  குட் 


2  தயாரிப்பாளர் , இயக்குநர் , நாயகி  என  மூன்று  பொறுப்புகளில்  இருப்பதால்  நானே  ராணி  நானே  மந்திரி   கான்செப்ட்டில்  நாயகி  பணி  புரிந்திருப்பது  சிறப்பு 


3   நாயகி மன  பிரமையில்  மனக்கண்  முன்  தோன்றும்  சில  காட்சிகள்  பேய்ப்படங்களில்  வரும்  ஜம்ப்ஸ்கேர்  காட்சிகளுக்கு  நிகரான  ஜெர்க்கைத்தந்தன 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   கொலை  செய்யும்  காட்சிகள்  மிக  கொடூரமாகப்படம்  ஆக்கபப்ட்டுள்ளன . அட்டென்சன்  சிக்கிங்க்கிற்காக  இப்படி  வன்முறைப்படங்கள்  வருவது  ஆபத்து 


2   மூன்று  கொடூரமான  கொலைகளை  செய்த  வில்லனை  வில்லனின்  அம்மா  அவன்  இருக்கும்  இடம்  சொல்றேன் , அவனைக்காப்பாத்துவீங்களா? என  அப்பாவியாகக்கேட்பது  எப்படி ? 


3  ஒவ்வொரு  கொலைக்கேசிலும்  போலீஸ்  தவறான  பாதையில்  சென்று  மீண்டும் சரியான  பாதைக்கு  வருவது  வழக்கம்  தான்  என்றாலும்  முதல்  கொலை  ஆனதும்  அந்தப்பெண்ணின்   சோசியல்  மீடியா  ஃபாலோயரை   போலீஸ்  மிரட்டும்  காட்சிகள்  தேவை  இல்லாதது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - ஓவர்  வயலன்ஸ் , 18+  காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஒரு சராசரி  ஆன  சைக்கோ  க்ரைம்  த்ரில்லர் தான். சூப்பர்  என  கொண்டாடவும்  முடியவில்லை , குப்பை  என  ஒதுக்கவும்  முடியவில்லை , ஆவரேஜ்  வாட்ச் . ரேட்டிங்  2.25 /. 5 

0 comments: