மம்முட்டியின் சொந்தப்படமான இது பற்றி சில சுவராஸ்யமான தகவல்கள் உண்டு . கண்ணூர் எஸ் பி ஸ்ரீ ஜித் ஐ பி எஸ் வாழ்வில் நிகழ்ந்த உண்மை சம்பவம் இது .30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 100 கோடி ரூபாய் வசூல் செய்த படம். தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் திரைக்கதை போலவே இதிலும் டீட்டெய்லிங்க் பக்காவாக இருக்கும்.
2019ல் மம்முட்டி நடிப்பில் வெளியான உண்டா , 2022ல்ஆசிஃப் அலி நடிப்பில் வெளியான குட்டவும் சிக்ஷாவும் , 2017ல் கார்த்தி நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவான தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய மூன்று படங்களின் சாயலும் இதில் இருக்கும், ஆனாலும் தரமான படம்
2015 மற்றும் 2017 ஆகிய இரு வருடங்களில் துப்பறியப்பட்ட இரு வேறு கேஸ் டீட்டெய்ல்ஸ் தான் படம். இதில் முதல் கேஸ் 30 நிமிடங்களில் முடிகிறது . இது வழக்கமாக ஹீரோ படங்களில் ஓப்பனிங் ஃபைட் சீன் போலவோ, ஓப்பனிங் டிடெக்டிவ் ஸ்டோரியாகவோ எடுத்துக்கொள்ளலாம், இரண்டாவது கதை தான் மெயின் கதை
ஸ்பாய்லர் அலெர்ட்
கண்ணூரில் இருக்கும் மிகப்பெரிய கோடீஸ்வரர் வீட்டில் வில்லன் ஒரு வே;லையாகப்போகிறான். அப்போது எதேச்சையாக ஹாலில் இருக்கும் டி வி யில் சிசிடிவி க்ளிப்பிங்க்ஸ் காட்சிகளைப்பார்க்கிறான். அதில் அந்த பங்களா ஓனர் பெட்ரூமில் ஒரு சூட்கேசில் கட்டுக்கட்டாக பணத்தை பீரோவில் அடுக்கி வைக்கும் காட்சி
வில்லனின் நண்பர்கள் இருவர் ஒரு பிஸ்னெஸ் தொடங்க வேண்டும், அதற்கு ஏராளமான பணம் தேவைப்படுகிறது என சொல்லி இருந்தது நினைவு வர அவர்களிடம் இந்த மேட்டரை வில்லன் சொல்கிறான். உடனே அவர்கள் வட நாட்டில் இருந்து இரு கிரிமினல்சை வரவழைக்கிறார்கள்
வில்லன், வில்லனின் நண்பர்கள் இருவர் , அவர்களின் நணபர்கள் இருவர் ஆக மொத்தம் ஐந்து பேரும் சேர்ந்து அந்த பங்களாவை ஒரு இரவு நேரத்தில் ஆக்ரமித்து பணம் கொள்ளை அடிக்க திட்டம் .
ஆனால் எதிர்பாராத விதமாக அந்த பங்களா ஓனரின் மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள் . ஓனர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்
இந்தக்கேசை டீல் செய்யும் நாயகன் அண்ட் கோ எப்படி அந்த கொலைகாரர்களை பிடிக்கிறார்கள் என்பதே மீதி திரைக்கதை
நாயகன் ஆக மம்முட்டி அடக்கி வாசித்து இருக்கிறார். ஆனாலும் மசாலா சினிமாவின் தலை எழுத்தான நம்ப முடியாத ஃபைட் சீன்கள் , ஆக்சன் சீக்வன்ஸ் இதிலும் உண்டு . சொந்தப்படம் எடுத்து அது கூட இல்லைன்னா எப்படி ?
ரோனி டேவிட் ராஜ் , அஜீஸ் நெடுமங்காடு , சபரீஸ் வர்மா, ஆகிய மூவரும் நாயகனின் டீம் ஆட்கள் ஆக வந்து கச்சிதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள் ., இதில் ரோனி டேவிட் ராஜ் திரைக்கதை எழுதியவர்களில் ஒருவர்
இவர்களுக்கு ஹையர் ஆஃபிசர் ஆக கிஷோர் பட்டையைக்கிளப்பும் கம்பீர நடிப்பை தந்திருக்கிறார்
161 நிமிடங்கள் படம் ஓடும்படி ட்ரிம் செய்திருக்கிறார் எடிட்டர் பிரவீன் பிரபாகர் .சுசின் ஷாம் இசையில் த்ரில்லர் படத்துக்கே உரித்தான உயிரோட்டமான பிஜிஎம் மை தந்திருக்கிறார். முகமது ரஹீல் ஒளிப்பதிவில் ரயில், பஸ் , காடு மேடு என பயணப்பட்டு காட்சிகளைப்பதிவு செய்திருக்கிறார்
முகமக்த் சஃபியின் கதைக்கு முகமக்த் சஃபி,ரோனி டேவிட் ராஜ் ஆகிய இருவரும் திரைக்கதை எழுத ரோபி வர்கீஸ் ராஜ் இயக்கி இருக்கிறார்
சபாஷ் டைரக்டர் (ரோபி வர்கீஸ் ராஜ் )
1 கேஸ் விஷய்மாக மும்பை போன நாயகன் அண்ட் டீம்க்கு அங்கே இருக்கும் போலீஸ் டிஃபன் வாங்கித்தரும்போது நம்ம ஊர் போலீஸ் ஒரு டீ வாங்கித்தந்திருப்பாங்களா? என ஒருவர் அங்கலாய்க்க மும்பை போலீஸ் சார் பில் 450 ரூபா என வசூலிக்கும் காட்சி
2 நாயகனின் டீமில் ஒருவர் வேறு கேசில் வேறு ஒருவரிடம் லஞ்சம் வாங்கிய வீடியோ கிளிப் வெளியாவதும் , அதனால் இந்தக்கேசில் ஏற்படும் பிரச்சனைகளும் சொல்லப்பட்ட விதமும் ., டீமில் அதனால் நிகழும் குழப்பங்களும் யதார்த்தம்
3 கேசில் சம்பந்தப்பட்ட ஒரு டிரைவரை விசாரிக்கப்போன இடத்தில் ஊர் மக்கள் ஒன்று கூடி தாக்குவதும் , லாவகமாக தப்பித்து அந்த டிரைவரை அரெஸ்ட் செய்யும் காட்சியும் திக் திக் திகிலோடு படமாக்கப்பட்ட விதம்
4 நாயகனின் டீமில் இருவர் ரயிலில் வர நாயகன் ஜீப்பில் ஆர்டர் தரத்தர அதை ஃபாலோ செய்யும் காட்சிகள் பரபரப்பானவை
ரசித்த வசனங்கள்
1 யுத்தம்னு ஒண்ணு இருந்தா அதில் ராஜா , மந்திரி எல்லாரும் திட்டம் போட்டு வியூகம் வகுப்பங்க, ஆனால் படைத்தளபதிதான் அதை சக்சஸ்ஃபுல்லா முடிப்பார்
2 ஒரே ஒரு படைத்தளபதி போதும் ஒரு போரை வெற்றிகரமாக முடிக்க
3 என் 20 வருட சர்வீசில் 2 விதமான போலீசை நான் பார்த்திருக்கிறேன்.
1 . அதில் 80% பேர் வாட்சைப்பார்த்து டைம் படி வேலை செய்பவர்கள்
2 மீதி 20% பேர் வாட்சைப்பார்க்காமல் , உணவு , உறக்கம் பாராமல் வேலையை முடிக்கனும்னு ஈடுபாட்டோடு செய்பவர்கள். இவர்களால் தான் நாட்டில் இருக்கும் போலீஸ்க்கு மரியாதை கிடைகிறது
4 போலீஸ்காரன் கைதியின் விலங்கை இரண்டே தருணங்களில் தான் கழட்டி விடுவான்
1 கோர்ட்டில் கேஸ்க்கு ஆஜர்படுத்தும்போது
2 என்கவுண்ட்டர்ல போட்டுத்தள்ளும்போது
5 எனக்குக்கிடைத்த மேலிட பிரசரை நான் உனக்குத்தரலை . அதுதான் என்னோட மரியாதை
6 ஜண்டு லால் அவன் பேரு
என்னது? ஜந்து லாலா?
7 நாங்க எஸ் பி ஆஃபீஸ்ல இருந்து வர்றோம்
என் ஃபிரண்ட் கூட எஸ் ஐ தான். எஸ் ஐ என்பது எஸ்பி யை விட பெருசு தானே?
8 க்ரைம் பண்றவன் கம்மியான டைம் ல தான் ஃபோன்ல பேசுவான்
9 குற்றவாளி புத்திசாலியா இருந்தா போலீஸ் அவனை விடப்பெரிய புத்திசாலியா இருக்கனும், அப்போதானே அவனைப்பிடிக்க முடியும் ?
10 ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல ஏகப்பட்ட கேஸ்ங்க டெய்லி வரும், எல்லாத்தையும் உடனே முடிக்க மேன் பவர் பத்தாது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ / ஏ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ட்விஸ்ட் எதுவும் இல்லாத ஆனால் விறுவிறுப்பான க்ரைம் டிராமா இது . அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம் . ரேட்டிங் 3/ 5
Kannur Squad | |
---|---|
Directed by | Roby Varghese Raj |
Screenplay by |
|
Story by | Muhammed Shafi |
Produced by | Mammootty |
Starring |
|
Cinematography | Muhammed Rahil |
Edited by | Praveen Prabhakar |
Music by | Sushin Shyam |
Production company | Mammootty Kampany |
Distributed by |
|
Release date |
|
Running time | 161 minutes[2] |
Country | India |
Language | Malayalam |
Budget | est. ₹30–32 crore[3] |
Box office | est. ₹100 crore[4][5] |
0 comments:
Post a Comment